செவ்வாய், 29 செப்டம்பர், 2015

நீதி மன்றங்கள் செத்துக் கிடக்கின்றன.!

நீதி மன்றங்கள் செத்துக் கிடக்கின்றன.!

நீதி மன்றங்களும் நீதிபதிகளும் இறைவனால் படைக்கப் பட்டது அல்ல .மனிதர்களால் உருவாக்கப் பட்டது.

மனிதர்களுக்கு இறைவன் படைப்பைப் பற்றித் தெரிந்து கொள்ளும் அறிவும் அருளும் ஆற்றலும் கிடையாது .எனவே அவர்களின் தீர்ப்பு உண்மையான தீர்ப்பாக அமையாது.

நீதிபதிகள் அனைவரும் சாதாரண மனிதர்கள் தான் .அவர்களின் படிப்பும் பதவியும் மனிதர்கள் கொடுப்பதுதான்.மனிதர்களால் உருவாக்கிய சட்டத்தை,திட்டத்தை வைத்துதான் ,அவர்கள் படித்துள்ள  சட்டத்தின் பிரிவுகளை வைத்துத்தான் நீதிபதிகள் அனைவரும் அவரவர்களுக்கு என்ன தெரிந்ததோ,என்ன புரிந்ததோ அதை வைத்து தான்  நீதி மன்ற தீர்ப்புகள்  வழங்குகிறார்கள்

இறைவன் சட்டம் வேறு மனிதன் சட்டம் வேறு.

அவர்கள் வழங்கும் தீர்ப்பானது உண்மையாகாது.உறுதியாகிறது.

உதாரணம் ;--

மதங்களின் பெயரால் சமயங்களின் பெயரால் பண்டிகை காலங்களில் மிருகங்களை பலியிடக் கூடாது என்று, மக்கள் மன்றம் என்ற தொண்டு நிறுவனத்தை சார்ந்த வி,இராதாக்கிருஷ்ணன் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் .தடை சட்டத்தின் பிரிவு 28,ஐ நீக்கக் கோரி மனு தாக்கல் செய்து இருந்தார் .

சமீபத்தில் மிருக நலவாரியம் பக்ரீத் பண்டிகையின் போது ஒட்டகங்களை பலியிடுவதை தடுக்கும் மாறு ,அனைத்து மாநில அரசுகளுக்கும் வெளியிட்ட கடிதம் ஒன்றில் குறிப்பிட்டதும் அந்த மனுவில் மேற்கோள் காட்டப்பட்டு இருந்தது.

மேலும் மதங்களின் பெயரால் அல்லது வேறு எந்த காரணங்களுக்காகவோ மிருகங்களை பலியிடுதல் அரசியல் சட்டத்தின் பிரிவுகள் 14,( சமஉரிமை ) மற்றும் 21,(வாழ்வதற்கான உரிமை ) ஆகியவற்றிற்கு எதிரானது என்றும் குறிப்பிட்டு வழக்கு தொடர்ந்து உள்ளார் .

இவை எந்த அளவிற்கு உயர்ந்த உண்மையான, கருத்து ஆழம் உள்ளது என்பதை வள்ளலார் கொள்கையைப் பின்பற்றும் ஆன்மநேய ஒருமைப் பாட்டு உரிமை உடைய சுத்த சன்மார்க்கிகள் உணர்ந்தவர்கள் ஆவார்கள்.

நீதிபதியின் தீர்ப்பு.--

வி,ராதாக்கிருஷ்ணன் தொடுத்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி,எச்,எல், தத்து மற்றும் நீதிபதி அமுதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது,

நீதிபதிகள் சொல்லியது .

மனுதாரரின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ராஜூ ராமச்சந்திரன் ,இந்த பிரச்சனையை இந்த  வழக்கில் நீதிபதிகள் நடுநிலையுடன் அணுக வேண்டும் என்றும்.

மிருகங்களை பலியிடும் விஷயத்தில் மதம் சார்ந்த விஷயங்களை மீறி மிருகங்கள் பலியிடுவதின் மூலம் சித்ர வதைக்கு ஆளாவது தடுக்கப் படவேண்டும்

எனவே மிருகங்கள் பலியிடுவதை அனுமதிக்கும் சட்டப்பிரிவை மிருகவதை தடை சட்டத்தின் இருந்து நீக்க வேண்டும் என்று வாதிட்டார் .

பாரம்பரிய விஷயங்கள் ;--

இதனை கேட்ட நீதிபதிகள் மிருகவதை தடை சட்டத்திலேயே  மத ரீதியான காரணங்களுக்காக மிருகங்களை பலியிடுவது அனுமதிக்கப் பட்டு உள்ளது பல நூற்று ஆண்டுகளாக மக்களால் கடைப்பிடிக்கப்படும்  பாரம்பரியமான விஷயங்களுக்கு எதிராக கோர்ட்டு செயல்பட முடியாது

இந்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள முடியாது அனைத்து வகையான நம்பிக்கைகளுக்கும் இடையில் சமன் பாடு இருக்க வேண்டும் எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

இதுதான் தீர்ப்பு.;--

அந்த நீதிபதிகள் உயிர்களின் உண்மையும்,ஆன்மாவின் உண்மையும்,உடம்பின் உண்மையும்,அதை தோற்றுவித்தவர் யார் என்ற உண்மையும் தெரிந்து இருந்தால் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கி இருப்பார்களா ?

அவர்கள் மிருகங்களின் மாமிசத்தை உண்பவர்களாக இருப்பார்கள் போலும் . அதனால்தான் அவர்களுக்கு ,அன்பு, தயவு, கருணை, இரக்கம், ஒழுக்கம், நேர்மை உண்மை சத்தியம்,அகிம்சை  என்பது எல்லாம் என்னவென்று விளங்காது.தெரியாது.அவர்கள் சம்பளம் வாங்கும் உழியர்கள்.அவர்களுக்கு உயிர்கள் போனால் என்ன ? இருந்தால் என்ன ? அவர்களுக்கு மாதம் மாதம் சம்பளம் வந்தால் போதும்.

மேலும் பாரம்பரிய மான விஷ்யங்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்க முடியாது என்று சொல்லுகின்ற நீதிபதிகள் எது எது பாரம்பரிய விஷயங்கள் .,என்று அவர்களால் சொல்ல முடியுமா ?

பாரம்பரியமாக எல்லாமே நடந்து கொண்டுதான் உள்ளதா ? அப்படியே நடந்து கொண்டு இருந்தால் .அதற்கு எதற்கு சட்டமன்றம்,பாராளுமன்றம்,நீதி மன்றம்,நீதிபதிகள். இழுத்து மூடிவிட வேண்டியது தானே,

பாரம்பரியமாக .மக்கள் காட்டு மிராண்டிகளாக வாழ்ந்தார்கள், அறிவு இல்லாமல் வாழ்ந்தார்கள்,இந்த நாட்டை மன்னர்கள் .ஆண்டார்கள் ,ராஜாக்கள் ஆண்டார்கள்,ஜமீன்தார்கள் ஆண்டார்கள் ,மொகலாய சாம்ராஜயம் ஆண்டது  ,கிருத்தவர்கள் ஆண்டார்கள்.ஆங்கிலேயர்கள் ஆண்டார்கள்.அவரவர்களும் அவரவர்களுக்குத் தகுந்த மாதிரி  சட்டத்தை திட்டத்தை அவர்களுக்கு சாதகமாக உருவாக்கினார்கள்.

பாரம்பரியம் என்று விட்டுவிட வேண்டியதுதானே .எதற்கு இந்த நாட்டிற்கு சுதந்திரம் .எதற்கு மக்கள் ஆட்சி ,எதற்கு புதிய சட்டம் புதிய திட்டம் ,எதற்கு பாதுகாப்பு,கொஞ்சமேனும் அறிவு வேண்டாமா ? சிந்திக்க வேண்டாமா ?

பாரம்பரியமாக ,ஆண்கள் பெண்களை கற்பழிக்கின்றார்கள்,,கொள்ளை அடிக்கின்றார்கள்,பழி வாங்குகின்றார்கள்,மாற்றான் சொத்தை அபகரிக்கின்றார்கள்,மக்களை கொலை செய்கின்றார்கள்.நாட்டுக்கு நாடு போரிட்டு அழிந்து கொண்டு உள்ளார்கள்,மதக் கலவரங்கள் நடந்து கொண்டே உள்ளது. எல்லாமே பாரமபரியமாகத்தானே நடந்து கொண்டு உள்ளது. விட்டுவிட வேண்டியதுதானே

பாரம்பரியமாக விறகு வைத்துதானே சமையல் செய்தோம்,அரிக்கன் லைட்டை வைத்துதானே வாழ்ந்து கொண்டு இருந்தோம்,சாதாரண குடிசை வீடு கூரை வீட்டில்தானே வாழ்ந்து கொண்டு இருந்தார்கள்.எதற்கு இப்போது  மின்சாரம் ,எதற்கு கேஸ் அடுப்பு,எதற்கு அரண்மனை போல் வீடு,எதற்கு செல் போன்.எதற்கு டிவி,எதற்கு ரேடியோ ,எதற்கு பைக் ,கார்,ரயில்,வானஊர்தி.மேலும் அளவில் அடங்காத வசதிகளைப் பெருக்கிக் கொண்டு வாழ்கிறோம்.எதற்கு அறிவியல்,விஞ்ஞானம்.போன்ற கண்டுபிடிப்புக்கள் பாரம்பரியமாக வாழ வேண்டியதுதானே ..

இதுவெல்லாம் மதங்களா சமயங்களா கண்டு பிடித்தது.பாரம்பரிய பழைய வாழ்க்கையே வாழ வேண்டியதுதானே ?

அறிவு இல்லாத தெளிவு இல்லாத,புத்தி இல்லாத  மதங்கள் செய்யும் கொலை காரியங்களுக்கு துணைபோவதுதான் பாரமபரியமா ? உங்களின் சட்டமா ?உங்களின் தீர்ப்பா ?

உங்களின் மகன் மகள் உயிரை கொலை செய்தால் விட்டு சென்றால்  விடுவீர்களா உங்கள் உரிமை உள்ள உயிர்கள் வேறா ? மிருகங்களின் உயிர்கள் வேறா ?

மனித உயிர்களை கொலை செய்தால் தூக்குத்தண்டனை .வாய் பேசாத உயிர் இனங்களை அதாவது மிருகங்களை கொலை செய்தால்.தண்டனை இல்லையா? ஏன் என்றால் அது பேசாது .அதற்கு சட்டம் தெரியாது,நீதி மன்றம் தெரியாது நீதிபதிகள் தெரியாது வழக்குத் தொடுக்கத் தெரியாது அதுதானே உண்மை .

கேட்டால் மதக்கொள்கை .சமயக்கொள்கை பாரம்பரியம் என்கின்றீர்கள் என்னய்யா விசித்திரம்  இதற்குத்தான் கடவுள் உங்களுக்கு உயர்ந்த அறிவை கொடுத்தாரா ?

மனுநீதி சோழன் வரலாற்றை வள்ளலார் எழுதினார்.

எல்லா உயிர்களும் ஒன்று என்பதைப் போதிக்க வள்ளலார் மனுநீதிச் சோழன் என்ற வரலாற்றை மக்களுக்குத் தந்து உள்ளார் .

மனுநீதிச் சோழனின் மகன் வீதி விடங்கன் என்பவன் கோயில் வழிப்பாட்டிற்கு தேரில் செல்லும் போது தேர்க்காலில் அகப்பட்டு பசுங்கன்று மடிந்து விட்டது.

அதைக் கண்ணுற்ற தாய்ப் பசுவானது நீதிக் கேட்டு ,மனுநீதி சோழனின் அரண்மனையில் உள்ள ஆராய்ச்சி மணியை தம்முடைய கொம்புகளால் அசைத்து,நான் பெற்ற  என்னுடைய கன்றுகுட்டிக்கு பதில் சொல் .என்று நீதிக் கேட்டது .

மனுநீதி தவறாத மன்னன் சொன்னான் ;--.உன்னுடைய இறந்துபோன குழந்தையின் உயிரை   அதாவது கன்றுக்குட்டியை  என்னால் தரமுடியாது.

உயிர் என்பது மனிதர்களால் கொடுக்க முடியாது ,அது இறைவனால் மட்டுமே கொடுக்க முடியும்..இறைவன் கொடுத்த உயிரை அழிக்கும் உரிமை யாருக்கும் கிடையாது என்பது எனக்கு நன்றாகவேத் தெரியும்.

பத்து மாதம் சுமந்து பெற்றக் கன்று குட்டியை, .அந்த இளங் கன்றை இழந்து  வாடும் உன்மனம் எப்படித் துடி துடிக்கும் என்பது எனக்குத் தெளிவாகவேத்  தெரியும்.

உன்மனம் எப்படி துடிக்கின்றதோ அப்படியே என்னுடைய மனமும் துடி துடிக்க வேண்டும் அதுதான் நான் வழங்கும் சரியான தீர்ப்பாகும் என்று மனுநீதி சோழன் என்ன செய்தார் .

உயிருக்கு உயிர் கொடுப்பதுதான் தீர்ப்பு என்று ,தன்னுடைய ஒரே மகன் வீதிவிடங்கனை.அழைத்து சென்று ,இளங்கன்று இறந்த அதே இடத்தில் படுக்க வைத்து தானே தேரில் ஏறி அமர்ந்து தேரை ஒட்டி வீதி விடங்கனின் கழுத்தில் தேரின் சக்கரத்தை ஏற்றி,தன் மகன் துடிதுடிக்க உயிரைக் கொன்றார்.
அதன் பின் நீதி தவாராது ஆட்சி புரிந்த மன்னனின் கண்ணியத்தை உணர்ந்த இறைவன் நேரிலே அவதாரம் செய்து எல்லா உயிர்களையும் எழுப்பித் தந்தார் என்பது வரலாறு .

இது வள்ளல்பெருமான் மக்களுக்கு போதித்த ஆன்மநேய ஒருமைப் பாட்டு உரிமை என்னும் கொள்கைகளாகும்.எல்லா உயிர்களும் ஒன்றுதான் ,பிறப்பின் உருவத்தில் வேறுபாடு உண்டு உயிரில் வேறுபாடு கிடையாது என்றார் எல்லா உயிர்களும் இறைவன் படைப்பு அவற்றை அழிக்கும் உரிமை யாருக்கும் கொடுக்கப் படவில்லை.அவற்றை புரியாமல் தெரியாமல் அழித்தால் உயிர்களை அழித்தால் சண்டாளப் பிறவிக் கொடுக்கப்படும் என்றார் .

இறைவன் சட்டத்தில் இருந்து எவரும் தப்பிக்க முடியாது என்பதை தெளிவாக விளக்கி உள்ளார்.

சாதியின் பெயரால் .சமயத்தின் பெயரால்,மதத்தின் பெயரால் வாய் இருந்தும் .வாய்ப் பேசாத முடியாத உயிர்களைக் கொலை செய்வதும் அதன் புலால், அதாவது மாமிசத்தை உண்பதும் எவ்வளவு மன்னிக்க முடியாத குற்றம் என்பதை அறியாத நீதிபதிகள் எல்லாம் நீதிமான்களா ?

இப்போது நீதி மன்றங்கள்,நீதிபதிகள்  எல்லாம் அரசியல் வாதிகளின் கைக் கூலிகளாக,மதவாதிகளின் ஏஜெண்டுகளாக உள்ளார்கள்.

நீதி மன்றங்கள் அனைத்தும் செத்துப் போய் கிடக்கின்றன.அவற்றை உயிர் பெற்று எழ வைப்பது சுத்த சன்மார்க்கிகளின் கடமையாகும்.

வள்ளலார் போதித்த உண்மை நெறியான சுத்த சன்மார்க்க நெறியை,உலகம் முழுவதும் உள்ள  மனித குலத்திற்கு போதித்து மனிதர்களை  புனிதர்களாக மாற்றுவோம்.

கொல்லா நெறியை உலகம் எல்லாம் கடைபிடிக்க பாடுபடுவோம்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்வதற்கு வழிவகுப்போம்.

சராசர உயிர் தோறும் சாற்றிய பொருள் தோறும்
விராவியுள் விளங்கும் வித்தக மணியே ....என்றும்,

உயிர் எலாம் பொதுவில் உளம் பட பட நோக்குக
செயிரெலாம் விடுக எனச் செப்பிய சிவமே ....என்றும்

பயிர்ப்புறு கரணப் பரிசுகள் பற்பல
உயிர்த் திரள் ஒன்று என உரைத்த மெய்ச்சிவமே ....என்றும்

உயிருள் யாம் எம்முள் உயிர் இவை உணர்ந்தே
உயிர் நலம் பரவுக என்று உரைத்த மெய்ச்சிவமே ....என்றும்

கொல்லா நெறியே குருவருள் நெறி என எனப்
பல்கால் எனக்குப் பகர்ந்த மெய்ச்சிவமே .....என்றும்

உலக உயிர்த் திரள் எலாம் ஒளி நெறி பெற்றிட
இலகும் ஐந்து தொழிலையும் யான் செய்ய தந்தனை ....என்றும்

உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூறு எல்லாம்
விலக நீ அடைத்து விளக்குக மகிழ்க ...என்றும்

இறைவன் வள்ளல் பெருமானுக்கு ஐந்தொழில் வல்லபத்தைக் கொடுத்து உள்ளார் அந்த வல்லபத்தினால் உலக உயிர்களைக் காப்பாற்றிக் கொண்டு உள்ளார்.

உலகியல் சட்டமோ .திட்டமோ,நீதி மன்றமோ மக்களையும் ,உயிர்களையும் காப்பாற்றவே முடியாது.

வள்ளலார் தோற்றுவித்த சாதி,சமயம்,மதம் அற்ற பொது நெறியான சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் வாயிலாக உலக உயிர்களைக் காப்பாற்ற முடியும் .காப்பாற்றுவோம்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் 

சனி, 26 செப்டம்பர், 2015

யாரும் வருத்தப் பட வேண்டாம் !

யாரும் வருத்தப் பட வேண்டாம் !


உண்மையான கடவுள் இருக்கும் இடம் என்றால் .அவை புண்ணிய ஸ்தலம் என்றால் .அவற்றை நம்பி செல்பவர்களுக்கு ஆபத்தோ,துர்மரணமோ வரக் கூடாது.

அப்படி அவருகிறது என்றால் அங்கு கடவுள் இல்லை .அங்கு கடவுளின் அருள் என்பதும் இல்லை என்பதுதான் உண்மை.

மனிதர்கள் உண்மையான அருள் இருக்கும் இடம் என்று நம்பி வருபவர்களுக்கு ,மனித பாது காப்பு தேவையே இல்லை.கடவுள் பாது காப்புத்தான் மிகவும்முக்கியம் அவசியம்.

கடவுள் அருள் இல்லாத வெற்று இடங்களுக்குச் செல்வதால் துன்பம், துயரம் .அச்சம்,பயம்,ஆபத்து, மரணம் வருகின்றது.

நம் உள்ளே இருக்கும் கடவுளைத் தேடாமல்.வெளியில் தேடி எந்த பயனும் இல்லை.

நாம் செய்யும் ஒவ்வொரு தவறான செயல்களுக்கும். நாம் எங்கு சென்றாலும் தண்டனை நிச்சயம் உண்டு.

அவை கடவுள் கொடுப்பதில்லை .என்பதை புரிந்து,தெரிந்து அறிந்து கொண்டு,தவறு செய்யாமல் .பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாமல் .மற்றவர்களுடைய பொருளை அவர்களுக்குத் தெரியாமல் ஏமாற்றி அபகரிக்காமல் வாழ்ந்து பழக வேண்டும்.

நீங்கள் வணங்கும் வழிபடும் கடவுள்கள் எல்லாம் தத்துவங்கள்.,அவை ஜடப்பொருள்கள் அவற்றை வணங்குவதால்,வழிபடுவதால் எந்த பயனும் கிடைக்காது.

கடவுள் கருணை உள்ளவர் அவர் ஒவ்வொரு ஆன்மாவிலும் உள் ஒளியாக உள்ளார் .அவருக்குத் தெரியாமல் நீங்கள் எதையும் செய்து விட முடியாது.

அந்தக் கடவுளைத்தான் வள்ளல்பெருமான் அருட்பெருஞ்ஜோதி என்கின்றார் .

அந்தக் கடவுள் இயற்கை விளக்கமாக ''வடலூரில் சத்திய ஞான சபையில்'' ஒளி வடிவமாக இயங்கிக் கொண்டு உள்ளார்.

இருளைப் போக்கும் ஒளியே கடவுள் ! அவை ஆன்மாவை மறைத்துக் கொண்டும் அஞ்ஞான இருளைப் போக்குவதாகும்.

அந்த பேரொளியை வணங்குங்கள் வழிபடுங்கள் .எல்லா துன்பமும்
தொலைந்து மகிழ்ச்சியுடன் வாழலாம்.

அங்கே சாதி,சமயம்,மதம் என்ற வேறுபாடுகள் கிடையாது.உலகில் உள்ள அனைவருக்கும் உண்மையான பொது வழிப்பாட்டு முறையை வள்ளல்பெருமான் வகுத்துத் தந்துள்ளார்.

வாருங்கள் வடலூருக்கு வந்தால் பெறலாம் நல்ல வரமே.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

வெள்ளி, 25 செப்டம்பர், 2015

ஆண்டவரை தேடிச் சென்றால் புண்ணியம் கிடைக்காது !

ஆண்டவரை தேடிச் சென்றால் புண்ணியம் கிடைக்காது !

ஆண்டவர் உங்களைத் தேடிவந்து புண்ணியம் வழங்க வேண்டும்.

உங்களை ஆண்டவர் தேடி வரும் அளவிற்கு புனிதர்களாக ஒழுக்கம்  உள்ளவர்களாக உயிர்க்கொலை செய்யாதவர்களாக,புலால் உன்னாதவர்களாக  ஜீவ காருண்யம் உள்ளவர்களாக வாழ வேண்டும்.

வள்ளலாரைத் தேடி ஆண்டவர் வந்தார் .

பாதி இரவில் எழுந்தருளிப்
பாவி எனை எழுப்பி அருட்
சோதி அளித்து என் உள்ளகத்தே
சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்
நீதி நடஞ் செய் பேரின்ப
நிதி நான் பெற்ற நெடும் பேற்றை
ஓதி முடியாது என் போல் இவ்
உலகம் பெறுதல் வேண்டுவனே !

அருட்பெருஞ் ஆண்டவர் வள்ளலாரைத் தேடிவந்து அருளை வழங்கி மரணத்தை வெல்லும் வழியைக் காட்டி மரணத்தையும் வெல்ல வைத்தார்.

அப்படி வழங்கியபோதும் எனக்குக் கொடுத்தது போதாது எனக்குக் கொடுத்தது போல் உலகில் உள்ள  எல்லா ஆன்மாக்களுக்கும் கொடுக்க வேண்டும்  என்று ஆண்டவரிடம் வேண்டுகின்றார்.

அவருடைய பெருங்கருணை இவ்வுலகில் எந்த அருளாளர் களுக்கும் கிடையாது.

உண்மையான அருளாளர்களையும்.அவர்களுடைய போதனைகளையும் பின் பற்றுபவர்களுக்கு எக்காலத்திலும் துர்மரணங்கள் வரவே வராது.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

வியாழன், 24 செப்டம்பர், 2015

இன்று இஸ்லாம் மதத்தின் பக்ரீத் திருநாள் !

இன்று இஸ்லாம்  மதத்தின் பக்ரீத் திருநாள் !

வள்ளலார் சொல்லியுள்ள ஒழுக்கங்கள் யாவும்.வழிபாட்டு முறைகள் யாவும், இஸ்லாம் மதம்  பின் பற்றி  வருகின்றது.

ஆனால் முக்கியமான ஒன்றில் எல்லாம் அடைப்பட்டுப் போகின்றது.

உயிர்க்கொலை செய்வதும் அதன் புலால் உண்பதும் தவறானது என்றும் மன்னிக்க முடியாத குற்றம் என்றும் வள்ளலாரின்  சுத்த சன்மார்க்கம் சொல்லுகின்றது.

அவற்றை விட்டுவிட்டால் இஸ்லாம் மதம் புனிதமான சன்மார்க்கமாகும்.

இஸ்லாத்தில் உள்ள  முக்கிய  ஆராய்ச்சி யாளர்கள் வள்ளலார் கொள்கைகளை உணர்ந்து ,வள்ளல்பெருமான் சொல்லியது உண்மையானது தான் என்று ஏற்றுக் கொண்டு வள்ளலார் கொள்கைகளைப் பின்பற்றி வாழ்ந்து கொண்டும் வருகின்றார்கள்.

இறை தூதரான இப்ராகீம் இறைவன் கட்டளையை ஏற்று நீண்ட நாட்களுக்குப் பிறகு பிறந்த தமது மகன் இஸ்மாயிலை பலி கொடுக்க முன் வந்தபோது வான் தூதரை அனுப்பி அதை தடுத்து இறைவன்

மகனுக்குப் பதிலாக ஆட்டை பலிக் கொடுக்கும் படி கூறினார் என்பது வரலாறு ,மேலும் இப்ராமீன் தியாகத்தையும் இறைவன் பாராட்டினார் .

இதை குறிக்கும் வகையில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப் படுகின்றது என்பது வரலாறு .

எல்லா உயிர்களும் ஒன்றே !

உயிர்கள் என்பது இறைவனால் படைக்கப் பட்டது ,அதில் பெரிய உயிர் சிறிய உயிர் என்ற வேறுபாடுகள் கிடையாது .அவற்றை அழிக்கும் உரிமையை இறைவன் யாருக்கும் கொடுக்கவில்லை என்பது வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம் சொல்லுகின்றது.

மனிதனால் படைக்கமுடியாத ,உண்டாக்க  முடியாத எதையும் அழிக்கும் உரிமையை மனிதன் எடுத்துக் கொள்ளக் கூடாது,  கடைபிடிக்க கூடாது என்பது வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கைகளாகும்.

எல்லா உயிர்களும் ஒன்று என்பதை மக்கள் புரிந்து கொள்ள ''மனு முறை கண்ட வாசகம்'' என்ற வரலாற்றை மக்களுக்கு வழங்கி  உள்ளார் வள்ளல்பெருமான்.அதைப் படித்தால் அனைத்து மதத்தினரும் நன்கு புரிந்து கொள்வார்கள்.

கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக !
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

என்பது இறைவன் வாக்கு மூலம் ,வாக்கு மூலம் இறைவன் கட்டளை என்பதை உணர்ந்து இஸ்லாம் அன்பர்கள் சகோதர சகோதரிகள் கடை பிடித்தால் இஸ்லாம் மதம் சிறந்த ,உயர்ந்த மதமாகக் கருதப்படும்,ஏற்றுக் கொள்ளப்படும்.

அன்புடன் வாழ்த்துக்கள் .

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல். .

புதன், 23 செப்டம்பர், 2015

ஆட்சி செய்ய அரசியல்வாதிகள் அலைகின்றார்கள்.!

ஆட்சி செய்ய அரசியல்வாதிகள் அலைகின்றார்கள்.

நீங்கள் வந்து என்ன செய்யப் போகின்றீர்கள் இதற்கு முன்னாடி இருந்தவர்கள் என்ன செய்து விட்டார்கள்.

பல்லாயிரம் ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்கள் என்ன செய்து கிழித்து விட்டார்கள்.

அவர்கள் எல்லாம் இப்போது எங்கே இருக்கின்றார்கள் .என்ன செய்து கொண்டு இருக்கின்றார்கள் என்பதாவது  உங்களுக்குத் தெரியுமா ?

இறைவன் படைத்த  உலகத்தில் யார் ஆட்சி செய்வது, யாரை ஆட்சி செய்ய வைப்பது என்பது இறைவனுக்குத் தெரியாதா ? நீங்கள் ஏன் வீணே அலைந்து கொண்டு உள்ளீர்கள்.

உங்களின் உயிரையோ உடம்பையோ, நோயையோ,துன்பத்தையோ  உங்களால் காப்பாற்ற முடியாத போது மக்களின் துன்பத்தை எப்படி உங்களால் காப்பாற்ற முடியும்.

உங்களால் மழை வரவழைக்க முடியுமா ?மழை வந்தால் நிறுத்த முடியுமா ?

உங்களால் கடலை உருவாக்க முடியுமா ? கடல் கொந்தளிப்போ புயலோ வந்தால் அதை நிறுத்தி விட முடியுமா ?

உங்களால் பூமியை உருவாக்க முடியுமா .பூகம்பம் உண்டானால் அதை தடுத்து நிறுத்தி விட முடியுமா ?

உங்களால் அக்கினியை உருவாக்க முடியுமா ? சூரியன் ,சந்திரன்,நட்சத்திரங்களை உருவாக்க முடியுமா ? அதன் ஒளியை தடுத்து நிறுத்திவிட முடியுமா ?

உங்களால் காற்றை உருவாக்க முடியுமா ? காற்றை உங்களால் நிறுத்திவிட முடியுமா ?

உங்களால் ஆகாயத்தை உருவாக்க முடியுமா ? ஆகாயத்தில் உள்ள அணுக்களை கணக்குப் போட முடியுமா ? அணுக்களைத் தான்  மாற்ற முடியுமா >

உங்களால் எதையும் உருவாக்கவும் முடியாது .உருவாக்கியதை அழிக்காமல் இருந்தால் அதுவே நல்லது.

உங்களால் என்ன செய்து விடமுடியும் .அப்பாவி மக்களை ஏமாற்ற முடியும்.அற்ப ஆசைகளுக்காக மக்களை ஏமாற்றிக் பணத்தை கொள்ளை அடிக்க முடியும்..

நான்தான் தலைவன் என்று ஏசி ரூமில் உட்கார முடியும்.அப்பாவி மக்களை காலில் விழ வைக்க முடியும்.

அழிந்து போகும் மாலை மரியாதைகளைப் பெற முடியும் ,அற்ப புகழை ஏற்றுக் கொள்ள முடியும்.,

ஓசி பணத்தில் உலக நாடுகள் எல்லாம் சுற்றிப் பார்க்க முடியும்.

அப்பாவின் மக்களின் பணத்தை வைத்து திட்டம் தீட்ட முடியும்.ஆதிலே பாதிப் பணத்தைக் கொள்ளை அடிக்க முடியும்.

இறுதியில் மனம் கெட்டு ,உடல் கெட்டு ,நோய் வந்து மாண்டு போவீர்கள் .

உங்களையே உங்களால் காப்பாற்ற முடியாதவர்கள் ,மக்களை எப்படி காப்பாற்றுவீர்கள் .

உலகத்தைப் படைத்த இறைவன் .உயிர்களைப் படைத்த இறைவன் .உயிர்களின் வாழ்க்கையைப் பற்றியும்,அவைகளின் நன்மை தீமைகளையும் அறிந்து காப்பாற்றத் தெரியாதா ?

நீங்கள் வீணாக அலைய  வேண்டாம் எல்லாம் இறைவன்  பார்த்துக் கொள்ளுவார் .

அவரவர்கள் அவரவர்கள் வேலைப் பாருங்கள்.எல்லாம் நல்லதே நடக்கும்.

ஆண்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

மனிதன் மதி கெட்டு வாழ்வதற்குக் காரணம்.!

மனிதன் மதி கெட்டு வாழ்வதற்குக் காரணம்.!

மனத்தினால் வாழ்ந்து கொண்டு உள்ளான் மனிதன்.மனம்  புறத்தைத் தேடும் இயல்பு உடையது.

அகத்தை தேடவேண்டிய மனிதன் புறத்தைத் தேடுவதால் மதி என்னும் அறிவு விளங்காமல் அழிந்து கொண்டு உள்ளான்.

மனத்தை அடக்குபவனே மனிதன் .மனத்தை அகத்தில் திருப்புவனே மனிதன்.

மனத்தை அடக்க முடியாது .மனத்தை திருப்ப முடியும்.

சத்விசாரம் பரோபகாரம்

ஜீவ காருண்யம் என்னும் உயிர் இரக்கத்தால் சத்விசாரம் என்னும் தேடுதல் உண்மை வெளிப்படும்.

ஜீவ காருண்யத்தால் மனம் மாற்றம் அடையும்.

ஜீவ காருண்யம் உண்டாக உண்டாக மனம் சிற்சபையைத் தேடும் .அப்போது மனத்தை ஆன்மாவில் செலுத்த வேண்டும்.

எனவேதான் வள்ளலார் மனத்தை சிற்சபையின் கண் செலுத்துங்கள் என்றார்.

சிற்சபை என்பது ஆன்மாவின் இருப்பிடம் .மனமானது ஆன்மாவைத் தொடர்பு கொண்டால் மனதை ஆன்மா தன்வசமாக மாற்றிக் கொள்ளும்.

மனமானது ஆன்மாவில் ஒடுங்கி விட்டால் அறிவு தானே வெளிப்படும்.அறிவு வெளிப்பட்டால் மனிதன் நல்லதையே செய்வான் .தவறு ஏதும் செய்யமாட்டான்.

மனத்தை மாற்றுபவனே மனிதன் என்பதாகும்.
அதனால்தான் மனிதன் என்று பெயர் வழங்கப் பட்டது.

மனிதன் புனிதனாக மாறுவதற்கு ஜீவ காருண்யமே வழியாகும் .

ஜீவ காருண்யம் விளங்கும் போது அன்பும் அறிவும் தானே விளங்கும் என்பார் வள்ளல்பெருமான்.

மனத்தை அறிந்தவனே மனிதன் .

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

செவ்வாய், 22 செப்டம்பர், 2015

அரசியல் வாதிகள்,அதிகாரிகள் மட்டுமே குற்றவாளிகள் அல்ல !

அரசியல் வாதிகள்,அதிகாரிகள் மட்டுமே குற்றவாளிகள் அல்ல !

உலகத்தில் அனைவருமே குற்றவாளிகள் தான் .

ஒவ்வொரு மனிதரும் அவரவர்களுக்கு முடிந்த குற்றங்கள் செய்து கொண்டே உள்ளார்கள்..

ஒவ்வொருவரும் தங்களுடைய குற்றங்களை உணராமல் மற்றவர்களுடைய குற்றங்களையே பேசிக் கொண்டும் சிந்தித்துக் கொண்டும் உள்ளார்கள்.

குற்றங்கள் தோன்றியது இன்று நேற்று அல்ல ,பல்லாயிரம் ஆண்டுகளாக உலகத்தில் குற்றங்கள் நடந்து கொண்டே உள்ளது.

எல்லா குற்றங்களுக்கும் அடைபடைக்  காரணம் ஆன்மீகம்தான் .

கடவுள்களே ;--போர் செய்பவர்களாக ,களவு செய்பவர்களாக,குடிக்காரர்களாக ,காமம் கொள்பவர்களாக ,கொலை செய்பவர்களாக,கொள்ளை  அடிப்பவர்களாக, பெண்ணை சிறைப்படுத்து பவர்களாக,பெண்ணை மான பங்கம் படுத்துபவர்களாக சூது ஆட்டம் ஆடுபவர்களாக,நாட்டை அழிப்பவர்களாக, ,கன்னிப் பெண்களை கற்பு அழிப்பவர்களாக .லஞ்சம் கொடுத்து நாட்டைப் பிடிப்பவர்களாக ,

காதல் செய்பவர்களாக,கன்னிப் பெண்ணை கற்பழிப்பவர்களாக , திருட்டுத் திருமணம் செய்பவர்களாக ,,குடும்பம் நடத்துபவர்களாக ,குழந்தை குட்டிகளைப் பெற்றுக் கொள்பவர்களாக,மாற்றான் பெண்டாட்டியை சிறை பிடிப்பவர்களாக ,

சூது செய்து நாட்டை பிடித்து ஆள்பவராக... போன்ற குற்றவாளிகளாக படைத்து வைத்து உள்ளார்கள்.

பெண்கள் குளிக்கும்போது மறைவாக இருந்து பார்ப்பவர்களாக ,அவர்களுக்குத் தெரியாமல் துணிகளை தூக்கிக் கொண்டு ஓடுபவர்களாக படைத்து உள்ளார்கள்.

பெண்களை காந்தர்வ மணம் செய்து கொள்வது .

போன்ற கொடுரமான குற்றங்களை செய்யும் கடவுள் நம்முடைய நாட்டிலே நிறைந்து இருக்கின்றன.

மேலும் உயிர்களைப் பழிவாங்கும் கடவுள்,பலி கொடுக்கும் கடவுள்....பலி வாங்கும் கடவுள் என்ன அநியாயம் இது.இப்படியும் கடவுள்களா ?

அவர்களை வழிபாடு செய்பவர்கள் எப்படி இருப்பார்கள் ,அவர்களின் குணம் எப்படி குற்றம் இல்லாமல் இருக்கும்.
.
அவர்களைப் பின்பற்றி வாழோவர்கள் அவர்கள் செய்யும் குற்றங்களை தாங்களும் செய்து கொண்டு வருகின்றார்கள் .

கடவுள் கையில் பாருங்கள்,.வேல் ,கத்தி,கம்பு,கடப்பாரை ,மம்முட்டி .அரிவாள்,  சூலாயுதம்,போன்ற அழிக்கும் கருவிகளே வைத்துள்ளார்கள்.

அவர்களின் வாகனங்களைப் பாருங்கள் ,மிருகங்களின் வாகனங்களாகவே இருக்கும்.

கடவுளை மனிதர்கள் தூக்கிக் கொண்டு மனிதர்கள் ஊர்வலமாக செல்லுவதும் உண்டு,

கடவுள் இப்படி எல்லாமா இருப்பார் .? இப்படி எல்லாமா கடவுளுக்கு பல உருவங்கள் உண்டு.அறிவு உள்ளவர்கள் சிந்திக்க வேண்டாமா !

கொலைக்காரக்  கடவுள்களைப் பாருங்கள்  நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு வெறிப் பிடித்த,பயங்கரமான  காட்சியாக வைத்து இருப்பார்கள்.அதற்கு காவல் தெய்வம் என்று பெயர் வைத்துள்ளார்கள்.

இதுபோன்ற மூட நம்பிக்கைகள் ஒழிந்து தனிமனித ஒழுக்கம் வந்தால்தான் அறிவு தெளிவு உண்டாகும்.அறிவு தெளிவு வந்தால் மட்டுமே குற்றவாளிகள் நாட்டிலே இருக்க மாட்டார்கள்.

உலகில் நடக்கும் குற்றங்களுக்கு அடிப்படையான வேர்
சாதி,சமயம்,மதம் போன்ற பொய்யான கற்பனைக் கதைகள் .அதன் கொள்கைகள் தான் காரணம் .

மனிதன் செய்யும் குற்றங்கள் யாவும் கடவுளின் பெயரால் மறைந்து இருக்கின்றது .அதை விட்டுவிட்டு கிளைகளையும்,தலைகளையும் வெட்டிப் பயன் இல்லை.அதன் ஆணி வேரைப் பிடுங்கி எரிய வேண்டும்.

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்.

கூறுகின்ற சமயம் எல்லாம் மதங்கள் எல்லாம் பிடித்துக்
கூவுகின்றார் பலன் ஒன்றும் கொண்டு அறியார்
நீறுகின்றார் மண்ணாகி நாறுகின்றார் அவர்போல
நீடுலகில் அழிந்துவிட நினைத்தேனோ ....என்கின்றார்.

சாதியும் மதமும் சமயமும் பொய்யென
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் ஜோதி.

சாதியும் மதமும் சமயமும் காணா
ஆதி அனாதியாம அருட்பெருஞ்ஜோதி .

இருட் சாதித் தத்துவ சாத்திரக் குப்பை
இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிக் போட்டு
மருட் சாதி சமயங்கள் மதங்கள் ஆசிரம
வழக்கெல்லாம் குழிக் கொட்டி மண் மூடிபொட்டு

புதைத்து விடுங்கள் என்கின்றார் வள்ளலார் .

இதுபோல் ஆயிரக்கணக்கான பாடல்கள் சமய மதங்களை சாடி எழுதி உள்ளார் .

துன்மார்க்கங்கள் எல்லாம் தொலைந்து வள்ளலார் தோற்றுவித்த சுத்த சன்மார்க்க நெறியை மக்கள் பின் பற்றினால் மட்டுமே குற்றம் செய்யாமல் தனித்தனி மனிதர்கள் அனைவர்களும் புனிதர்களாக வாழ முடியும்.

நாடும் நலம் பெரும் நாட்டை நல்லவர்கள் .ஆட்சி செய்வார்கள்.நல்ல அதிகாரிகள் நிலைத்து இருப்பார்கள்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

திங்கள், 21 செப்டம்பர், 2015

வாழ்க்கை வாழ்வதற்கே !

வாழ்க்கை வாழ்வதற்கே !

எல்லோரும் படிக்கத் தெரிந்து இருக்கின்றார்கள் !

எல்லோரும் பேசத் தெரிந்து இருக்கின்றார்கள் !

பணம் சம்பாதிக்க தெரிந்து இருக்கின்றார்கள்.!

பொருகளை சம்பாதிக்கத் தெரிந்து இருக்கின்றார்கள் !

பதவியை சம்பாதிக்க தெரிந்து இருக்கின்றார்கள் !

புகழை சம்பாதிக்க தெரிந்து இருக்கின்றார்கள் !.

காதல் செய்யத் தெரிந்து இருக்கின்றார்கள்.!

திருமணம் செய்யத் தெரிந்து இருக்கின்றார்கள் !.

குடும்பம் நடத்த தெரிந்து இருக்கின்றார்கள் !

குழந்தையைப் பெற்றுக் கொள்ளத் தெரிந்து இருக்கின்றார்கள்.!

அறிவியலைத் தெரிந்து இருக்கின்றார்கள் !

விஞ்ஞானத்தை தெரிந்து இருக்கின்றார்கள் !

மற்றைய எல்லாம் தெரிந்து இருக்கின்றார்கள் !.

துன்பம் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ தெரிந்து கொள்ளவில்லை !.

ஆன்மீகம் என்றால் என்னவென்று தெரிந்து கொள்ளவில்லை !

உண்மையான கடவுள் யார் என்பதை தெரிந்து கொள்ளவில்லை.!

நம்முடைய வாழ்க்கையின் ரகசியம் என்ன என்பதை தெரிந்து கொள்ளவில்லை.!

நாம் எங்கு இருந்து வந்தோம் ,மீண்டும் எங்கு செல்ல வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளவில்லை.!

அருளைப் பெரும் வழியைத் தெரிந்து கொள்ளவில்லை!.

அருளைக் கொடுப்பவர் யார் என்பதை தெரிந்து கொள்ளவில்லை !.

அருள் என்றால் என்ன ? என்பதை தெரிந்து கொள்ளவில்லை.!

நரை,திரை,மூப்பு ,பயம் ,மரணம் இல்லாமல் வாழும் வழியைத் தெரிந்து கொள்ளவில்லை.!

மரணத்தை வெல்லும் வழியைத் தெரிந்து கொள்ளவில்லை.!

மரணம் இல்லாமல் வாழலாம் என்பதை தெரிந்து கொள்ளவில்லை.!

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் ;--

வையத்தீர் வான் அகத்தீர் மற்றகத்தீர் உமது
வாழ்க்கை எல்லாம் வாழ்க்கை என மதித்து மயங்காதீர்
மையகத்தே உறும் மரண வாதனையைத் தவிர்த்த
வாழ்க்கையதே வாழ்க்கை என மதித்து அதனைப் பெறவே
மெய் அகத்தே விரும்பி இங்கே வந்திடுமின் எனது
மெய்ப் பொருளாம் தனித் தந்தை இத்தருணம் தனிலே
செய் அகத்தே வளர் ஞான சித்திபுரம் தனிலே
சித்தாடல் புரிகின்றார் திண்ணம் இது தானே !

வாழ்க்கை என்பது என்ன ? எப்படி வாழ வேண்டும் என்ற எல்லா உண்மைகளையும் தெரிந்து கொள்ள வேண்டுமானால் கடலூர் மாவட்டம் வடலூர் என்னும், வடலூர் ஞான சித்திபுரம் என்னும் இடத்திற்கு வந்தால் தெரிந்து கொள்ளலாம் என்கின்றார்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

ஆண்டவரை அறியாத மக்கள்.!

ஆண்டவரை அறியாத மக்கள்.!

உண்மையான கடவுள் யார் ? என்று தெரியாமல் கல்லையும்,மண்ணையும் ,பொன்னையும்,மனிதர்களே சிலைகளாக  செய்து வழிப்பட்டு அதையும் அழிக்கின்றார்கள் .என்னே இவர்களின் அறியாமை .

எத்தனை ஆமைகள் அவர்களை கவ்விக் கொண்டு உள்ளது,

அறியாமை,தெரியாமை,புரியாமை,விளங்காமை,தெளிவில்லாமை,அறிவில்லாமை,போன்ற அளவில்லா ஆமைகள் அவர்களைக் பிடித்துக் கொண்டு உள்ளது.

படித்தவர்களில் இருந்து பாமரர்கள் வரைஉயில்  இந்த அறியாமை என்னும் ஆமைகள் பிடித்துக் கொண்டுள்ளது.

இதற்கு எல்லாம் அடிப்படைக் காரணம்,சமய மதங்களின்   கொள்கைகளின் புரிதல் இல்லாமையாகும்.

உதாரணம்.;--

நேற்று சென்னையில் மட்டும் ஐந்து ஆயிரம் விநாயகர் சிலைகளை கடலில் கரைத்து உள்ளார்கள்.

இந்தியா முழுவதும் எத்தனை கோடி விநாயகர் சிலைகளை கரைத்து இருப்பார்கள்.

அவற்றால் இந்தியாவிற்கோ,இந்தியாவில் வாழும் ஏழை எளிய மக்களுக்கோ என்ன லாபம்

சமயங்களின்,மதங்களின் பொய்யான கொள்கையினால் மக்களின் அறியாமையால் எத்தனை கோடி ரூபாய் மதிப்புள்ள  பொருட்கள் அழிவு .

இவற்றைப் பற்றி  ஆன்மீக வாதிகளோ,அரசியல் வாதிகளோ ,அறிவியல் வல்லுனர்களோ ,விஞ்ஞாநிகளோ நீதி அரசர்களோ சிந்தித்தார்களோ.

இறைவன் இப்படியா வழிப்படச்சொன்னார் .கடவுளின் மீது வைத்துள்ள மூட நம்பிக்கைகள், மனித அறிவை எப்படி பாழ் படுத்தி மழுங்க வைத்துள்ளது பாருங்கள்

இதற்காகவா உயர்ந்த அறிவை மனிதர்களுக்கு இறைவன் கொடுத்துள்ளார்  .உயர்ந்த அறிவு இருந்தும் மனிதர்கள் தாழ்ந்த நிலையிலே சென்று கொண்டுள்ளார்கள் என்று நினைந்து வள்ளல்பெருமான் வேதனைப்படுகின்றார் .

கலை உரைத்த கற்பனையை நிலை எனக் கொண்டாடும்
கண்மூடிப் பழக்கம் எல்லாம் மண் மூடிப்போக வேண்டும் என்கின்றார்.

மதம் எனும் பேய் பிடித்து ஆட்ட எல்லோரும் மனம் போனபடி ஆடிக் கொண்டு இருக்கின்றார்கள் என்கின்றார்.

உண்மையான இறைவன் யார் என்று தெரியாமல்,மதவாதிகளும்,சமயவாதிகளும்,குருடர்கள் யானையைக் கண்ட காட்சிபோல் கதைகளைக் கட்டிவிட்டு சென்று விட்டு விட்டார்கள்.

மதம் என்னும் பேய் பிடித்தவர்களும்,சமயம் என்னும் பைத்தியம் பிடித்த குரங்கு போன்றவர்களும் மன்றில் நடம்புரியும் உண்மையான அருட்பெருஞ்ஜோதி இறைவனைக் காண முடியுமா >என்று கேட்கின்றார் வள்ளல்பெருமான்.

சாதி குலம் என்றும் சமயம் மதம் என்றும் உப
நீதி இயல் ஆச்சிரம நீட்டு என்றும் --ஓதுகின்ற
பேயாட்டம் எல்லாம் பிதிர்ந்து ஒழிந்ததுவே பிறர் தம்
வாயாட்டம் தீர்ந்தனவே மற்று.

இனிமேல் சாதி,சமயம் ,மதங்களை எல்லாம் இருக்கும் இடம் தெரியாமல் ஒழித்து விடுவேன்  என்கின்றார்.

ஒழிப்பதற்கு உண்டான அருளையும் ஆற்றலையும் எனக்கு இறைவன் தந்துள்ளார் .

உலக மக்களுக்கு உண்மையைப் போதித்து  உண்மையான சுத்த சன்மார்க்க நெறியில் கொண்டு வந்து அனைவரையும் புனிதர்களாக மாற்றுவதே,இறைவன் எனக்கு இட்ட கட்டளையாகும் அதுவே என்னுடைய தலையாய கடமையாகும்  என்கின்றார் .

ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா
அருட்பெருஞ் சோதி என் உளத்தே
நீதியில் கலந்து நிறைந்தது நானும்
நித்தியன் ஆயினேன் உலகீர்
சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தே
சத்தியச் சுத்த சன்மார்க்க
வீதியில் உமைத்தான் நிறுவுதல் உண்மை
விளம்புனேன் வம்மினோ விரைந்து.!

உயர்ந்த அறிவை சார்ந்த மக்களே இறைவன் யார் ? என்பது தெரியாமல் வீணிலே அலைய வேண்டாம் .

இருக்கும் இடத்தை விட்டு எங்கு எங்கோ அலைவது அறியாமையாகும்.உங்கள் அறிவைப் பயன் படுத்துங்கள். அறியாமை நீங்கும்.

கருணையை கையில் எடுங்கள் கடவுள் உங்கள் இல்லம் தேடி வருவார்.நீங்கள் நிறைவு பெற்ற மனிதர்களாக வாழலாம் .வாழமுடியும்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் சமுகத்திற்கு வந்தனம்.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் சமுகத்திற்கு வந்தனம்.

15-9-2015,அன்று எம் ஜி  ஆர் சமாதி அருகில் சன்மார்க்க சங்கங்களின் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதிப்பேரணி நடத்தி தங்களுக்கு கோரிக்கை மனுவை அனுப்பி வைத்துள்ளோம்

தங்களின் மேலான பார்வைக்கு வந்ததா என்று தெரியவில்லை.

ஐந்து அம்ச கோரிக்கை ;--

திருஅருட்பிரகாச வள்ளலார் அவர்களின் பெயரில் .திரு வள்ளுவருக்கு வள்ளுவர் கோட்டம் அமைத்து இருப்பதுபோல் வள்ளலார் கோட்டம் அமைத்திடவும்,,

சென்னை ஏழு கிணறு வீராசாமி தெருவில் வள்ளலார் 33,ஆண்டுகள் வாழ்ந்த வீட்டை அரசு உடைமையாக்கி நினைவிடமாக மாற்றக் கோரியும்.

வள்ளலார் வருவிக்க உற்ற அதாவது பிறந்த தினமான அக்டோபர் ஐந்தாம் தினத்தன்று தமிழகம் முழுவதும்,மதுக்கடைகளையும்,மாமிசக் கடைகளையும்,அடைத்து அன்றைய தினம் அரசு விடுமுறை தினமாக அறிவிக்கக் கோரியும்,

வள்ளலார் பிறந்த தினமான அக்டோபர் ஐந்தாம் நாளை உலக ஒருமைப் பாட்டு தினமாக ,உயிர்கள் பாது காப்புத் தினமாக ஐநா சபையில் அறிவிக்க மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டியும்..கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகம் தந்த அருளாளர் ,மரணத்தை வென்ற மகான்,ஏழைகளின் பசிப்பிணியை போக்கிய அருள் வள்ளல்,.கடவுள் ஒருவரே அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னும் உண்மைக் கடவுளை உலகுக்கு காட்டிய உத்தமர்.

சாதி,சமயம்,மதம்,அற்ற வழிப்பாட்டு முறையை வடலூரில் சத்திய ஞான சபையில் ஒளி வழிப்பாட்டு முறையைக் கொண்டு வந்தவர்.

ஏழைகளின் பசிப்பிணியைப் போக்க வடலூரில் சத்திய தருமச்சாலை தோற்றுவித்தவர்..இன்னும் அடுப்பு அணையாமல் .ஏழைகளின் பசிப்பிணியை போக்கிக் கொண்டு வருகின்றது.உங்களுக்கும் தெரியும்.

எனவே எங்கள் கோரிக்கையை ஏற்று .தாயியினும் தயவுடைய தாயாக ,தமிழக மக்களைக் காப்பாற்றி வரும் உங்கள் பார்வைக்கு அனுப்பி வைக்கின்றோம் .

தயவு கூர்ந்து எங்கள் கோரிக்கை ஆவன செய்யுமாறு அன்புடனும்,பணிவுடனும் மகிழ்ச்சியுடனும் கேட்டுக் கொள்கிறோம்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
திரு அருட்பா ஆராய்ச்சி மையம்,ஈரோடு.
9865939896,

Kathir Kathல் இத பண்ணுங்க அவசியம் அனைவரும், அறிய வேண்டிய ஒன்று ...... "தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. (http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் புகார்களை அளிக்கலாம். நீங்கள் அளித்துள்ள புகார் சம்பந்தமாக தாங்கள் செய்துள்ள புகார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பற்றியும் நீங்கள் அறிந்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. (http://cmcell.tn.gov.in/login.php) தபால் மூலம் அனுப்பும் புகார்கள்.... Chief Minister's Special Cell , Secretariat, Chennai - 600 009. Phone Number : 044 - 2567 1764 Fax Number : 044 - 2567 6929 E-Mail : cmcell@tn.gov.in [05:11, 07/06/2015] +91 98421 71532: தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் 01.அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் 02.அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி 03.அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி 04.அ.இ.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 05.அ.இ. லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் 06.இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் 07.இந்திய ஜனநாயகக் கட்சி 08.இந்திய தேசிய லீக் 09.இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 10.இந்தியப் பொதுவுடமைக் கட்சி 11.இந்தியா ஜனநாயக கட்சி 12.இந்து மக்கள் கட்சி 13.இந்து முன்னணி 14.இல்லத்தார் முன்னேற்றக் கழகம் 15.காமன்வீல் கட்சி 16.கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 17சென்னை மாகாண சங்கம் 18.ஜனநாயக மக்கள் கூட்டணி 19.ஜனநாயக முற்போக்குக் கூட்டணி 20.தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் 21.தமிழக முன்னேற்ற கழகம் 22.தமிழக முன்னேற்ற முன்னணி 23.தமிழக ராஜீவ் காங்கிரசு 24.தமிழக வாழ்வுரிமை கட்சி 25.தமிழரசுக் கழகம் 26.தமிழ் தேசியக் கட்சி 27.தமிழ் மாநில காங்கிரசு 28.தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி 29.தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி 30.தமிழ்நாடு தேசிய ஆன்மிக மக்கள் கட்சி 31.தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் 32.தாயக மறுமலர்ச்சி கழகம் 33.கொங்குநாடு முன்னேற்றக் கழகம் 34.திராவிட முன்னேற்றக் கழகம் 35.திராவிடர் கழகம் 36.தேசிய முற்போக்கு திராவிட கழகம் 37.தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு 38.கொங்கு இளைஞர் பேரவை 39.நாம் தமிழர் கட்சி 40.பாட்டாளி மக்கள் கட்சி 41.புதிய தமிழகம் கட்சி 42.மக்கள் இயக்கம் (தமிழ்நாடு) 43.மனிதநேய மக்கள் கட்சி 44.மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் 45.முக்குலத்தோர் மக்கள் கட்சி 46.மூவேந்தர் முன்னணிக் கழகம் 47.மூவேந்தர் முன்னேற்றக் கழகம் 48.விடுதலைச் சிறுத்தைகள் 49.தமிழின முன்னேற்ற கழகம் 50.பொது இயக்கங்கள் / கழகங்கள் / கூட்டமைப்புகள் மற்றும் கம்யூனிஸ்ட்கள் [05:11, 07/06/2015] +91 98421 71532: உங்களுக்கான பிரச்சினைகள் தொடர்கிறதா தீர்வு கிடைக்கவில்லையா. கவலை வேண்டாம் இவற்றில் ஏதேனும் ஒன்றிலாவது உங்களுக்கு தீர்வு கிடைக்கலாம்... அவசரதேவைகளுக்கு குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.... TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY GOVERNOR His Excellency Thiru. K. ROSAIAH Office : 044 2567 0099 Intercom : 5618 Residence : 044 2235 1313 CHIEF MINISTER Hon. Selvi J JAYALALITHAA Telephone No : 044 2567 2345 Intercom : 5666 LEADER OF OPPOSITION Thiru. VIJAYKANT Telephone No. : 044 2567 0821, 2567 0271/104 Residence: Telephone No. : 044 2376 4377 SECRETARY Thiru A.M.P. JAMALUDEEN, M.Sc., B.L., Telephone No : 2567 2611, 2567 0271/105 Cell No : 77080 70111 Residence Telephone No : 2615 6146 Kalaignar Karunanidhi FB ADMIN 9941127722 (admin) Kalaignar Arangam +(91)-44-24327261, +(91)-9444221426 All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) +91 – 44 – 2813 07 87 +91 – 44 – 2813 22 66 +91 – 44 – 2813 3510 தமிழக செய்தி ஊடகங்கள் www.dailythanthi.com 044 2538 7731 dinakaran daily newspaper Ph: 91-44-42209191 Extn:21102 Ph: 91-44-42209191 Extn:21240, 21241 To send articles for Dinamani Daily - dinamanimds@dinamani.com +91-44-2345 7601 - 07 The Hindu (Head Office) +(91)-7299911222, 9710011222, 9710929060, 9884024167, 9841725344, 9841810070, 9841245778 +(91)-44-28576300, 28575757, 28589060, 28575711, 28575714, 28410643, 28416250, 28575729, 28576309, 28418297 . +(91)-44-28415325, 28416290 புதிய தலைமுறை - New Generation Media Corporati... +(91)-44-45969500, 45969530 +(91)-8754417308 Puthiya Thagaval The News +(91)-9382222900 Sun Network +(91)-9844154181 Sun TV Network Ltd (Corporate ... +(91)-44-44676767, 42059595 Raj Television Network Ltd +(91)-44-24352926, 24351898, 24334376, 24334150, 24334149, 24334151, 24351307 +(91)-44-24341260, 24336332 Vijay TV +(91)-44-39304050, 28205562, 28316000, 28224722 +(91)-44-28224755 Jaya TV +(91)-44-43960000, 43960144 News 7 Tamil +(91)-7708384077 +(91)-44-40300777, 40777777 Tamil News +(91)-44-28544460, +(91)-9600646353 Tamil News Agency +(91)-44-26156783 தமிழக மனித உரிமை அமைப்புகள் International Human Rights Association +(91)-8807708423 Human Rights Council Of India +(91)-22-28978877, +(91)-9619774060 Human Rights Association Of India +(91)-22-22813876, +(91)-9320111118 Human Rights Foundation +(91)-9321451179, 9819390199 Human Rights Association Of India +(91)-9870731819 Human Right's India +(91)-22-24944704, +(91)-9987876587 HUMAN RIGHTS ORG (Regd.) +(91)-9702820786 ADV SARDAR 👇 sadhu Jothibalaji Siddhivalagam, Vadalour. cell no:- +919629876011 .

[05:11, 07/06/2015] +91 98421 71532: எதை எதையோ ஷேர் பண்றீங்க முதலில் இத பண்ணுங்க
அவசியம் அனைவரும், அறிய வேண்டிய ஒன்று ......
[05:11, 07/06/2015] +91 98421 71532: எதை எதையோ ஷேர் பண்றீங்க முதலில் இத பண்ணுங்க
அவசியம் அனைவரும், அறிய வேண்டிய ஒன்று ......
"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.
(http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் புகார்களை அளிக்கலாம். நீங்கள் அளித்துள்ள
புகார் சம்பந்தமாக
தாங்கள் செய்துள்ள புகார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பற்றியும் நீங்கள் அறிந்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
(http://cmcell.tn.gov.in/login.php)
தபால் மூலம் அனுப்பும் புகார்கள்....
Chief Minister's Special Cell ,
Secretariat, Chennai - 600 009.
Phone Number : 044 - 2567 1764
Fax Number : 044 - 2567 6929
E-Mail : cmcell@tn.gov.in
[05:11, 07/06/2015] +91 98421 71532: தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள்
01.அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ்
02.அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி
03.அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி
04.அ.இ.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
05.அ.இ. லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம்
06.இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்
07.இந்திய ஜனநாயகக் கட்சி
08.இந்திய தேசிய லீக்
09.இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)
10.இந்தியப் பொதுவுடமைக் கட்சி
11.இந்தியா ஜனநாயக கட்சி
12.இந்து மக்கள் கட்சி
13.இந்து முன்னணி
14.இல்லத்தார் முன்னேற்றக் கழகம்
15.காமன்வீல் கட்சி
16.கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி
17சென்னை மாகாண சங்கம்
18.ஜனநாயக மக்கள் கூட்டணி
19.ஜனநாயக முற்போக்குக் கூட்டணி
20.தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்
21.தமிழக முன்னேற்ற கழகம்
22.தமிழக முன்னேற்ற முன்னணி
23.தமிழக ராஜீவ் காங்கிரசு
24.தமிழக வாழ்வுரிமை கட்சி
25.தமிழரசுக் கழகம்
26.தமிழ் தேசியக் கட்சி
27.தமிழ் மாநில காங்கிரசு
28.தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
29.தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி
30.தமிழ்நாடு தேசிய ஆன்மிக மக்கள் கட்சி
31.தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
32.தாயக மறுமலர்ச்சி கழகம்
33.கொங்குநாடு முன்னேற்றக் கழகம்
34.திராவிட முன்னேற்றக் கழகம்
35.திராவிடர் கழகம்
36.தேசிய முற்போக்கு திராவிட கழகம்
37.தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு
38.கொங்கு இளைஞர் பேரவை
39.நாம் தமிழர் கட்சி
40.பாட்டாளி மக்கள் கட்சி
41.புதிய தமிழகம் கட்சி
42.மக்கள் இயக்கம் (தமிழ்நாடு)
43.மனிதநேய மக்கள் கட்சி
44.மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
45.முக்குலத்தோர் மக்கள் கட்சி
46.மூவேந்தர் முன்னணிக் கழகம்
47.மூவேந்தர் முன்னேற்றக் கழகம்
48.விடுதலைச் சிறுத்தைகள்
49.தமிழின முன்னேற்ற கழகம்
50.பொது இயக்கங்கள் / கழகங்கள் / கூட்டமைப்புகள்
மற்றும் கம்யூனிஸ்ட்கள்
[05:11, 07/06/2015] +91 98421 71532: உங்களுக்கான பிரச்சினைகள் தொடர்கிறதா
தீர்வு கிடைக்கவில்லையா.
கவலை வேண்டாம்
இவற்றில் ஏதேனும் ஒன்றிலாவது உங்களுக்கு தீர்வு கிடைக்கலாம்...
அவசரதேவைகளுக்கு
குறித்து வைத்துக்கொள்ளுங்கள்....
TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY GOVERNOR His Excellency Thiru. K. ROSAIAH
Office : 044 2567 0099
Intercom : 5618
Residence : 044 2235 1313
CHIEF MINISTER Hon. Selvi J JAYALALITHAA
Telephone No : 044 2567 2345
Intercom : 5666
LEADER OF OPPOSITION Thiru. VIJAYKANT
Telephone No. : 044 2567 0821, 2567 0271/104
Residence: Telephone No. : 044 2376 4377
SECRETARY Thiru A.M.P. JAMALUDEEN, M.Sc., B.L.,
Telephone No : 2567 2611, 2567 0271/105 Cell No : 77080 70111
Residence Telephone No : 2615 6146
Kalaignar Karunanidhi
FB ADMIN 9941127722 (admin)
Kalaignar Arangam
+(91)-44-24327261, +(91)-9444221426
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
+91 – 44 – 2813 07 87
+91 – 44 – 2813 22 66
+91 – 44 – 2813 3510
தமிழக செய்தி ஊடகங்கள்
www.dailythanthi.com
044 2538 7731
dinakaran daily newspaper
Ph: 91-44-42209191 Extn:21102
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
To send articles for Dinamani Daily -
dinamanimds@dinamani.com
+91-44-2345 7601 - 07
The Hindu (Head Office)
+(91)-7299911222, 9710011222, 9710929060, 9884024167, 9841725344, 9841810070, 9841245778
+(91)-44-28576300, 28575757, 28589060, 28575711, 28575714, 28410643, 28416250, 28575729, 28576309, 28418297 .
+(91)-44-28415325, 28416290
புதிய தலைமுறை - New Generation Media Corporati...
+(91)-44-45969500, 45969530
+(91)-8754417308
Puthiya Thagaval The News
+(91)-9382222900
Sun Network
+(91)-9844154181
Sun TV Network Ltd (Corporate ...
+(91)-44-44676767, 42059595
Raj Television Network Ltd
+(91)-44-24352926, 24351898, 24334376, 24334150, 24334149, 24334151, 24351307
+(91)-44-24341260, 24336332
Vijay TV
+(91)-44-39304050, 28205562, 28316000, 28224722
+(91)-44-28224755
Jaya TV
+(91)-44-43960000, 43960144
News 7 Tamil
+(91)-7708384077
+(91)-44-40300777, 40777777
Tamil News
+(91)-44-28544460, +(91)-9600646353
Tamil News Agency
+(91)-44-26156783
தமிழக மனித உரிமை அமைப்புகள்
International Human Rights Association
+(91)-8807708423
Human Rights Council Of India
+(91)-22-28978877, +(91)-9619774060
Human Rights Association Of India
+(91)-22-22813876, +(91)-9320111118
Human Rights Foundation
+(91)-9321451179, 9819390199
Human Rights Association Of India
+(91)-9870731819
Human Right's India
+(91)-22-24944704, +(91)-9987876587
HUMAN RIGHTS ORG (Regd.)
+(91)-9702820786
ADV SARDAR
👇
sadhu Jothibalaji
Siddhivalagam, Vadalour.
cell no:- +919629876011 .
(http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் புகார்களை அளிக்கலாம். நீங்கள் அளித்துள்ள
புகார் சம்பந்தமாக
தாங்கள் செய்துள்ள புகார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பற்றியும் நீங்கள் அறிந்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
(http://cmcell.tn.gov.in/login.php)
தபால் மூலம் அனுப்பும் புகார்கள்....
Chief Minister's Special Cell ,
Secretariat, Chennai - 600 009.
Phone Number : 044 - 2567 1764
Fax Number : 044 - 2567 6929
E-Mail : cmcell@tn.gov.in
[05:11, 07/06/2015] +91 98421 71532: தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள்
01.அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ்
02.அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி
03.அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி
04.அ.இ.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
05.அ.இ. லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம்
06.இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்
07.இந்திய ஜனநாயகக் கட்சி
08.இந்திய தேசிய லீக்
09.இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)
10.இந்தியப் பொதுவுடமைக் கட்சி
11.இந்தியா ஜனநாயக கட்சி
12.இந்து மக்கள் கட்சி
13.இந்து முன்னணி
14.இல்லத்தார் முன்னேற்றக் கழகம்
15.காமன்வீல் கட்சி
16.கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி
17சென்னை மாகாண சங்கம்
18.ஜனநாயக மக்கள் கூட்டணி
19.ஜனநாயக முற்போக்குக் கூட்டணி
20.தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்
21.தமிழக முன்னேற்ற கழகம்
22.தமிழக முன்னேற்ற முன்னணி
23.தமிழக ராஜீவ் காங்கிரசு
24.தமிழக வாழ்வுரிமை கட்சி
25.தமிழரசுக் கழகம்
26.தமிழ் தேசியக் கட்சி
27.தமிழ் மாநில காங்கிரசு
28.தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
29.தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி
30.தமிழ்நாடு தேசிய ஆன்மிக மக்கள் கட்சி
31.தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
32.தாயக மறுமலர்ச்சி கழகம்
33.கொங்குநாடு முன்னேற்றக் கழகம்
34.திராவிட முன்னேற்றக் கழகம்
35.திராவிடர் கழகம்
36.தேசிய முற்போக்கு திராவிட கழகம்
37.தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு
38.கொங்கு இளைஞர் பேரவை
39.நாம் தமிழர் கட்சி
40.பாட்டாளி மக்கள் கட்சி
41.புதிய தமிழகம் கட்சி
42.மக்கள் இயக்கம் (தமிழ்நாடு)
43.மனிதநேய மக்கள் கட்சி
44.மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
45.முக்குலத்தோர் மக்கள் கட்சி
46.மூவேந்தர் முன்னணிக் கழகம்
47.மூவேந்தர் முன்னேற்றக் கழகம்
48.விடுதலைச் சிறுத்தைகள்
49.தமிழின முன்னேற்ற கழகம்
50.பொது இயக்கங்கள் / கழகங்கள் / கூட்டமைப்புகள்
மற்றும் கம்யூனிஸ்ட்கள்
[05:11, 07/06/2015] +91 98421 71532: உங்களுக்கான பிரச்சினைகள் தொடர்கிறதா
தீர்வு கிடைக்கவில்லையா.
கவலை வேண்டாம்
இவற்றில் ஏதேனும் ஒன்றிலாவது உங்களுக்கு தீர்வு கிடைக்கலாம்...
அவசரதேவைகளுக்கு
குறித்து வைத்துக்கொள்ளுங்கள்....
TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY GOVERNOR His Excellency Thiru. K. ROSAIAH
Office : 044 2567 0099
Intercom : 5618
Residence : 044 2235 1313
CHIEF MINISTER Hon. Selvi J JAYALALITHAA
Telephone No : 044 2567 2345
Intercom : 5666
LEADER OF OPPOSITION Thiru. VIJAYKANT
Telephone No. : 044 2567 0821, 2567 0271/104
Residence: Telephone No. : 044 2376 4377
SECRETARY Thiru A.M.P. JAMALUDEEN, M.Sc., B.L.,
Telephone No : 2567 2611, 2567 0271/105 Cell No : 77080 70111
Residence Telephone No : 2615 6146
Kalaignar Karunanidhi
FB ADMIN 9941127722 (admin)
Kalaignar Arangam
+(91)-44-24327261, +(91)-9444221426
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
+91 – 44 – 2813 07 87
+91 – 44 – 2813 22 66
+91 – 44 – 2813 3510
தமிழக செய்தி ஊடகங்கள்
www.dailythanthi.com
044 2538 7731
dinakaran daily newspaper
Ph: 91-44-42209191 Extn:21102
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
To send articles for Dinamani Daily -
dinamanimds@dinamani.com
+91-44-2345 7601 - 07
The Hindu (Head Office)
+(91)-7299911222, 9710011222, 9710929060, 9884024167, 9841725344, 9841810070, 9841245778
+(91)-44-28576300, 28575757, 28589060, 28575711, 28575714, 28410643, 28416250, 28575729, 28576309, 28418297 .
+(91)-44-28415325, 28416290
புதிய தலைமுறை - New Generation Media Corporati...
+(91)-44-45969500, 45969530
+(91)-8754417308
Puthiya Thagaval The News
+(91)-9382222900
Sun Network
+(91)-9844154181
Sun TV Network Ltd (Corporate ...
+(91)-44-44676767, 42059595
Raj Television Network Ltd
+(91)-44-24352926, 24351898, 24334376, 24334150, 24334149, 24334151, 24351307
+(91)-44-24341260, 24336332
Vijay TV
+(91)-44-39304050, 28205562, 28316000, 28224722
+(91)-44-28224755
Jaya TV
+(91)-44-43960000, 43960144
News 7 Tamil
+(91)-7708384077
+(91)-44-40300777, 40777777
Tamil News
+(91)-44-28544460, +(91)-9600646353
Tamil News Agency
+(91)-44-26156783
தமிழக மனித உரிமை அமைப்புகள்
International Human Rights Association
+(91)-8807708423
Human Rights Council Of India
+(91)-22-28978877, +(91)-9619774060
Human Rights Association Of India
+(91)-22-22813876, +(91)-9320111118
Human Rights Foundation
+(91)-9321451179, 9819390199
Human Rights Association Of India
+(91)-9870731819
Human Right's India
+(91)-22-24944704, +(91)-9987876587
HUMAN RIGHTS ORG (Regd.)
+(91)-9702820786
ADV SARDAR
👇
sadhu Jothibalaji
Siddhivalagam, Vadalour.
cell no:- +919629876011 .

சனி, 19 செப்டம்பர், 2015

இன்பமும் துன்பமும் !

இன்பமும் துன்பமும் !

இந்த உலகம் இன்பமும் துன்பமும் நிறைந்தது தான் வாழ்க்கை என்று, பல அறிவு ஜீவிகள் சொல்லிக் கொண்டு உள்ளார்கள்.அது உண்மை அல்ல

கடவுள் படைத்த இந்த உலகம் முழுவதும் இன்பம் நிறைந்து உள்ளது.

இன்பத்தை தவறாக பயன் படுத்துவதால் துன்பம் வருகின்றது.

துன்பம் வருவதால் இந்த உலகம் துன்பம் நிறைந்தது என்று கருதுகிறார்கள் .

கடவுள் எக்காரணத்தைக் கொண்டும் துன்பம் வருவிக்க உலகத்தைப் படைக்கவில்லை.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்வே ,உலகத்தை இறைவன் படைத்து உள்ளார் .

நாம் இன்பத்தைப் பிடிக்காமல், துன்பத்தைப் பிடித்துக் கொண்டு ,கடவுள் இன்பத்தை தரவில்லை என்று கடவுள் மீது குற்றம் சுமத்துவது அறியாமையிலும் அறியாமை.

மனிதன் இன்பத்தை அனுபவிக்க தவறி விடுகின்றான் இன்பத்தை அவன் வெளியே தேடுகின்றான் அதனால் அவனுக்கு இன்பம் தெரிவதில்லை .

மனிதன் பொருளிலே இன்பத்தைக் காணாலாம் அனுபவிக்கலாம் என்று அறியாமையில் வெளியிலே அலைந்து திரிந்து கொண்டுள்ளான்.

அகத்திலே உள்ள இன்பத்தைத் தேடாமல் புரத்திலே தேடினால் எப்படி இன்பம் கிடைக்கும்.

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடினால் எப்படி இன்பம் கிடைக்கும்.

காரணம்.;--

இதற்கு எல்லாம் அடிப்படைக் காரணம் சமயங்கள் மதங்களின் கொள்கைகளை பிடித்துக் கொண்டு அலைவது தான் காரணம் .

அறிவுள்ள மனிதர்களை அறியாமையில் தள்ளிவிட்டது வேதம் ,ஆகமம்,புராணங்கள்,இதிகாசங்கள், சாத்திரங்கள்.அனைத்தும்

அகத்தைக்  கண்டு தெரிந்து,தெளிந்து  அருளைப் பெற்று இன்பமுடன் வாழ வேண்டிய மனிதர்களை புரத்திலே அலைய விட்டு துன்பத்தைத் தேட அலைய விட்டு விட்டார்கள் .

அறிவுள்ள படித்தவனும் தேடுகிறான், படிக்காதவனும் தேடுகின்றான்.

சித்தனும் தேடுகின்றான் முத்தனும் தேடுகின்றான் .

யோகியும் தேடுகின்றான் ஞானியும் தேடுகின்றான்.

ஆண்டியும் தேடுகின்றான் அரசனும் தேடுகின்றான் .

வெளியில் கிடைக்கும் இன்பமா அவை .

கடவுள் வருகை ;--

அகம் கருத்து புறம் வெளுத்து உள்ள மனிதர்களைத் திருத்தவே எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ,வள்ளலார் என்னும் உருவம் தாங்கி இவ்வுலகிற்கு வந்துள்ளார் .

உலகில் எங்கும் செல்லாமல், முதன் முதலில் உண்மையானக் கடவுள் தமிழ் நாட்டிற்கு 5--10--1823,அன்று வந்துள்ளார் .அவர்தான் திரு அருட்பிரகாச வள்ளலார் .

அவர் வந்து 193-ஆண்டுகள் ஆகின்றது .

அவர் வந்ததின் நோக்கம் பற்றி அவரே தெளிவாக விளக்கி உள்ளார் .

அகத்தே கருத்துப் புறத்தே வெளுத்து இருந்த உலகர் அனைவரையும்.
சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத்து அடைவித்திட அவரும்
இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந்திடுதற்கு என்றே எனை இந்த
யுகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே !

என்கின்றார்.

இன்பம் நிறைந்து மகிழ்ச்சியுடன் வாழ வேண்டிய உலகத்தில் துன்பம் நிறைந்து வாழ்ந்து அழிந்து கொண்டு உள்ளார்கள்.

காரணம்;-- அகம் கருத்து புறம் வெளுத்து உள்ளார்கள். ஆதலால் அவர்களால் இன்பத்தைப் பெற முடியாமல் துன்பத்தையே பெற்றுக் கொண்டு உள்ளார்கள்

உலகில் உள்ள அனைவருக்கும் உண்மையை எடுத்து சொல்லி அவர்களை சுத்த சன்மார்க்க நெறியில் சேர்ந்து இந்த உலகத்திலேயே  பரத்தைப் பெரும் அருள் நெறியை புரிய வைத்து ,துன்பத்தில் இருந்து விளக்கி இன்பத்தை அடைய செய்விப்பதே என்னுடைய முக்கியப்  பணியாகும்.என்கின்றார் வள்ளல்பெருமான்.

இன்பம் புரத்திலே உள்ள பொருளில் இல்லை .

அகத்திலே உள்ள அருளில் உள்ளது .

ஜீவ காருண்யம் என்னும் செய்கையால் பொருளை அருளாக மாற்றி இன்பம் அடைவோம்.

இனிமேல் நாம் துன்பத்தில் இருந்து விலகி இன்பத்தைப் காணுவோம் ,இன்பத்தை அடையும் வழியில் செல்வோம்.

வாருங்கள்! வாருங்கள்! வாருங்கள்!

வடலூருக்கு வந்தால் பெறலாம் நல்ல வரமே !

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

காதல் என்றால் என்ன ?

காதல் என்றால் என்ன ?

இறைவன் படைத்த பொருள்கள் உயிர்கள் அனைத்தும் அழகுதான்.

அழகு இல்லாத உயிர்கள் பொருள்களே இவ்வுலகில் இல்லை

இறைவன் படைப்பில் எத்தனை வண்ணங்கள், வடிவங்கள் .உருவங்கள் அப்பப்பா அளவில் அடங்காது.

மனிதர்கள் மட்டுமே அதை ரசிக்கவும்,நேசிக்கவும் அன்பு செலுத்தவும் முடியும்..மற்ற உயிர் இனங்களுக்கு அவற்றை ரசிக்கும் அறிவு இல்லை.

அதனால்தான் மனிதர்களுக்கு மட்டுமே உயர்ந்த அறிவு வழங்கப் பட்டுள்ளது.

உயர்ந்த அறிவு படைத்த மனிதர்கள் காதல் என்ற பெயரில் பெண்கள் ஆண்கள் மீதும்,ஆண்கள் பெண்கள் மீதும் காதல் கொள்கின்றனர்.

காதல் என்பது புனிதமானது.எல்லாப் பொருள்கள் மீதும் உயிர்கள் மீதும் அன்பு செலுத்துவது தான் உண்மையான காதல்...

அவற்றை அழிப்பது அல்ல .அலங்கோலப் படுத்துவது அல்ல .அசிங்கப் படுத்துவது அல்ல !

அன்பு,அவா .ஆசை,காமம்,மோகம்,வெறி ;---

அன்பு என்பது ஒரு பொருளின் மீது பற்றுதல் வைப்பது அவா !,

அதை அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பது ஆசை,!

அதை அனுபவிக்க வேண்டு என நினைத்துக் கொண்டே இருப்பது காமம்.!

அதை எந்த வழியாலும் எப்படியும் தன் வசப் படுத்துவது மோகம் !

அதை அனுபவிப்பது வெறி !

மனிதர்கள் காதல் என்ற பெயரில் வெறி கொண்டு அலைவது காதல் அல்ல .

எவ்வளவு அழகாக இருந்தாலும் அதன்மேல் அவாவாய் இருக்க வேண்டும் .அன்பு செலுத்த வேண்டும்.அதுதான் காதல்.அப்படி இருந்தால் அவை நீடிக்கும் இல்லையே துண்டிக்கப்படும்.

காதல் என்பது நீட்டிக்க வேண்டும் துண்டிக்க கூடாது .

காதல் என்பது இறுதி வரை நிலைத்து இருக்க வேண்டும் அதுதான் உண்மையான காதல் ,உண்மையான அன்பு என்பதாகும்.

மேலே கண்ட அன்பு,அவா,ஆசை,மோகம் காமம்,வெறி ,அனைத்தையும் ஆண்கள் பெண்கள் அனைவரும் ஆண்டவர் இடத்தில் செலுத்த வேண்டும்.

பெண்கள் ஆண்கள் அனைவரும் ஆண்டவர் இடத்தில் .அவரை அனுபவிக்க வேண்டும் என்ற வெறி இருக்க வேண்டும்..

மனிதர்கள் இடத்தில் காட்டும் அன்பு அவா ,ஆசை,காமம், மோகம்,வெறி, என்பதை ஆண்டவரிடத்தில்  காட்டுங்கள் .
உங்களிடம் இருந்து உங்கள் ஆன்மாவில் இருந்து அருள் என்ற அமுதம் சுரக்கும் .அவை என்றும் அழியாத பேர் இன்பத்தைத் தரும்.அவை நிலையானது .

ஆண்கள்  பெண்கள் இடத்தில் இரண்டு விதமான முக்கிய சுரப்பிகள் உண்டு .

ஒன்று ஆணும் பெண்ணும் சேரும்போது சுரப்பது விந்து என்னும் சுக்கிலமாகும்.

மற்றொன்று .ஆண்டவரும் ஆன்மாவும் சேரும்போது சுரப்பது அமுதம் என்னும் அருளாகும்..

ஆண்டவர் மீது காதல் கொண்டு அருளைப் பெறுங்கள் அதுவே உண்மையானக் காதல்.என்றும் அழியாதக் காதல்.

அழிந்துபோவது காதல் அல்ல .அழியாமல் இருப்பதே காதல்.

நீங்கள் கண்ட கண்ட தெய்வங்களை காதலிக்காதீர்கள் அது உண்மையான காதல் அல்ல !

உலகைப் படைத்த ,உயிர்களைப் படைத்த ,பொருள்களைப் படைத்த மற்றும் அனைத்தையும் படைத்த உண்மையான ஆண்டவர் ஒருவரே !

அவர்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் .அவரைத்தான் உண்மையான அன்பால் நேசத்தால் பாசத்தால் இடைவிடாது  காதலிக்க வேண்டும்.

வள்ளல்பெருமான் அவரைத்தான் காதலித்தார் .அருளைப் பெற்றார்...மரணத்தை வென்றார். பேரின்பத்துடன் வாழ்ந்து கொண்டு உள்ளார்.

மனித குலத்திற்கு உண்மையான இறைவனைக் காதலிக்கும் வழியைக் கண்டு, காதலித்து ,அதன் இன்பத்தை அனுபவித்து மனித குலத்திற்கு காட்டி உள்ளார்.

நான் அப்படித்தான் காதலிக்கிறேன் மகிழ்ச்சியாக உள்ளேன்  நீங்களும் அப்படி காதலியுங்கள் மகிழ்ச்சி பெறுவீர்கள் .

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் 

வெள்ளி, 18 செப்டம்பர், 2015

எமன் நெருங்க மாட்டான் . !

எமன் நெருங்க மாட்டான் . !

எதிரிகள் இல்லாமல் வாழ்பவரை எமன் நெருங்க மாட்டான்.

அன்புடன் வாழ்பவரை ஆண்டவன் கை விட மாட்டான்.

இரக்கம் உள்ளவரை என்றும் துன்பம் நெருங்காது.

கருணை உள்ளவரை கடவுள் காப்பாற்று வார்.

பாசம் உள்ளவர்கள் மோசம் அடைய மாட்டார்கள் .

பற்றை ஒழித்தவரை பார் எல்லாம் போற்றும்.

அருளைப் பெற்றவரை அகிலம் எல்லாம் போற்றும்.

வாழக் கற்றவன் வாழும் வழி அறிவான் .

துன்பத்தை ஒழித்தால் இன்பம் தேடி வரும் .

சாகும் கல்வியை ஒழித்தால் சாகாக் கல்வி வரும்.

சாகாக் கல்வி கற்க சாதனைகள் பல வேண்டும் .

சாதனைகள் வேண்டும் என்றால் தனித்து இருக்க வேண்டும்.

தனித்து இருக்க வேண்டும் என்றால் விழித்து இருக்க வேண்டும்.

விழித்து இருக்க வேண்டும் என்றால் பசித்து  இருக்க வேண்டும்.

பசித்து ,தனித்து,விழித்து இருந்தால் பதவி தேடிவரும்.

பதவி என்பது மண்ணாலும் பதவி அல்ல விண்ணாளும் பதவி .

மனிதனுக்கு கொடுக்கப்பட்ட மாபெரும் வல்லபம் அது .

அறிவுள்ள மனிதனுக்கு அகிலம் எல்லாம் அவன் பிடியில்

அறிவுள்ள மனிதன் அருளைப் பெற்றிடுவான்

அருளைப் பெற்று விட்டால் அவன் அடையாளம் தெரிந்து விடும் .

அடையாளம் தெரிந்து விட்டால் அவனேக்  கடவுள்.


அமரரும் முனிவரும் அதிசயித்திடவே
அருட் பெருஞ்ஜோதியை அன்புடன் அளித்தே
கமமுறு சிவ நெறிக்கே ஏற்றி என் தனையே
காத்து எனது உளத்தினில் கலந்த மெய்ப் பதியே
எமன் எனும் அவன் இனி இல்லை இல்லை மகனே
எய்ப்பற வாழ்க என்று இயம்பிய அரசே
சமரச சன்மார்க்க சங்கத்தின் முதலே
தனி நடராஜ என் சற்குரு மணியே !......வள்ளலார் .

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் 

மனிதன் முன்று பற்று களினால் அழிகின்றான் !

மனிதன் முன்று பற்று களினால் அழிகின்றான் !

மண்ணில் பற்று உள்ளவன் மண்ணினால் அழிகின்றான்.

பணத்தில் பற்றுள்ளவன் பணத்தினால் அழிகின்றான்.

பெண்ணின் மேல் பற்றுள்ளவன் பெண்ணினால் அழிகின்றான்.....

குடி இருக்க வீடு என்னும் இடம் வேண்டும் .

வாழ்க்கைக்கு போதுமான பணம் வேண்டும்,

இன்பம் பெற, படுக்க,அணைக்க, குழந்தைப்  பெற்றுக் கொள்ள  ஒரு பெண் வேண்டும்.( பெண்ணாக இருந்தால் ஆண் வேண்டும் )

இந்த மூன்றும் தேவைக்கு மேல் இருந்தால் துன்பம் அவர்களைத் தேடிவரும்.

அளவிற்கு அழிவில்லை ,அளவுக்கு மீறினால் அழிவு தானே வரும்.

புரிந்து வாழுங்கள் புண்ணியம் பெறுங்கள்,
அறிந்து வாழுங்கள் அன்புடன் வாழுங்கள்.
தெரிந்து வாழுங்கள் தெளிவுடன் வாழுங்கள்
கனிந்து வாழுங்கள் கருணையுடன் வாழுங்கள்
பணிந்து வாழுங்கள் பரமன் துணை இருப்பான் .

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .

வியாழன், 17 செப்டம்பர், 2015

அறிவு உள்ளவர்கள் ! அறிவு இல்லாதவர்கள் !

அறிவு உள்ளவர்கள் ! அறிவு இல்லாதவர்கள் !

அறிவு உள்ளவர்கள் அறிவு இல்லாதவர்கள் என்பதை அவர்கள் வழிபடும் முறையை வைத்து அறிந்து கொள்ளலாம்.

1,விக்கிரங்களை அதாவது தத்துவ பொம்மைகளை வைத்து கடவுளாக நினைந்து வழிபாடு செய்பவர்கள்,பக்தி காண்டிகள் என்று பெயராகும்.

2,அக்கினியை கடவுளாக நினைந்து வழிபாடு செய்கிறவர்கள் கர்ம காண்டிகள் என்று பெயராகும்.

3,இருதயத்தில் கடவுளாக நினைந்து வழிபாடு செய்கிறவர்கள் யோகிகள் என்று பெயராகும்.

4,எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கின்றார் என்று அறிந்து உயிர்களுக்கு உபகாரம் செய்பவர்கள் ஞானிகள் என்று பெயராகும்.

மேலே கண்ட நான்கு வழிப்பாட்டு முறைகளில் அறிவில் உயர்ந்தவர்கள் யார் ? என்றால் எல்லா உயிர்களிலும் கடவுள் இருக்கின்றார் என்பதை அறிந்தவர் ,தெரிந்தவர் அறிவில் உயர்ந்தவராகும்.

ஐம்புலன்கள் என்னும் இந்திரியங்களைக் கொண்டு வழிபாடு செய்பவர்கள் இந்திரிய அறிவு என்னும் நான்காம் அறிவு உடையவர்கள் .

கரணங்கள் என்னும் மனம் புத்தி சித்தம் அகங்காரம் என்னும் கருவிகளைக் கொண்டு வழிபாடு செய்கிறவர்கள் கரண அறிவு என்னும் முன்றாம் அறிவு உடையவர்கள்.

ஜீவன் என்னும் உயிரை நினைந்து வழிபாடு செய்கிறவர்கள் ஜீவ அறிவு என்னும் இரண்டாம் அறிவு உடையவர்கள் .

ஆன்மா என்பது எல்லா உடம்புகளையும்,உயிர்களையும்  இயக்கம் சக்தி வாய்ந்தது,அதுவே கடவுளின் கூறு,.. அதுவே கடவுளின் குழந்தைகள் ,அதுவே முதன்மையானது  என்பதை அறிந்து ஆன்மாவை வழிபாடு செய்கிறவர்கள் முதன்மை அறிவு உடையவர்கள்.

மேலே கண்ட வழிபட்டு முறைக் கொண்டு  அறிவு உள்ளவர்கள் .அறிவு இல்லாதவர்கள் யார் ? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

இதற்கு படித்தவர்கள் படிக்காதவர்கள் என்ற வேறுபாடுகள் இல்லை .

வள்ளலார் பதிவு செய்த பாடல்.;--

கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே
காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே
நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலம் கொடுக்கும் நலமே
எல்லார்க்கும் பொதுவில் நடமிடுகின்ற சிவமே
என்னரசே யான் புகலும் இசையும் அணிந்து அருளே !

படித்தவர்கள் ,படிக்காதவர்கள்,என்ற வேறுபாடுகள் இல்லாமலும் சாதி,சமயம்,மதம் என்ற வேறுபாடுகள் இல்லாமலும் எல்லா உலகத்திற்கும் பொதுவாக இயங்கிக் கொண்டு இருப்பவர்தான் கடவுள்.

அந்தக் கடவுள் எல்லா அண்டங்களையும் எல்லாத் தத்துவங்களையும், எல்லாத் தத்துவிகளையும்,எல்லா கிரகங்களையும்  எல்லா உயிர்களையும் மற்றைய எல்லா வற்றையும் இயக்கிக் கொண்டு உள்ளவர்தான் பொதுவான கடவுள். ஒரேக் கடவுள்...  அவர்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பதாகும் .என்பதை யார் உணர்ந்து வழிபாடு செய்கின்றார்களோ அவர்களே மதி உள்ளவர்கள் அவர்களே அறிவு முழுமைப் பெற்றவர் களாகும் .

அவரே அறிவு உள்ளவர்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

புதன், 16 செப்டம்பர், 2015

விநாயகர் என்பது என்ன ?விநாயகர் என்பது என்ன ?

விநாயகர் என்பது என்ன ?

மனித உடம்பில் குண்டலி பை ஒன்று உண்டு .அதில் குண்டலி வட்ட நரம்பு ஒன்று உண்டு.அதில் மூன்று பிரிவு உண்டு .

மூலாதாரம் முதல் பிரமந்திரம் வரையில் இடம்,வலம்,நடு வென்று கத்திரிக் மாறலாய்ப் பிராண அபானனுக்கு இடங் கொடுத்துக் கொண்டு ஊடுருவி நிற்கும்

உடம்பின் தன்மைக்குத் தகுந்தவாறு உஷ்ணம், பிரகாசம் கொண்டு செல்வதால் அதற்கு சந்திரன்,சூரியன் அக்கினி நாடி என்று பெயர் .அந்தஉஷ்ணப்  பையின் தொடர்புள்ள நரம்புகளின்  வழியாக உடம்பு முழுதும் செல்வதால் உடம்பின் எல்லாப் பகுதிகளும் உணர்வு உள்ளதாக இருக்கின்றது.

விநாயகர் ! முருகன் !

அந்த குண்டலினி வட்ட நரம்பின் அடியில் இரண்டு நரம்புகள்  உண்டு....வலத்தில் ஐந்து கவருடைய தலையாய் ஒன்றும்...ஆறு கவருடைய தலையாய் உடைய நரம்பும் ஒன்றும் உள்ளன.

வலத்தில் உள்ளது கணபதி ( விநாயகர் ) என்றும்,இடத்தில் உள்ளது சுபரமணி (முருகன் ) என்றும் பெயர் வைத்துள்ளார்கள்.

மேற்படி ஐந்து கவருடைய நரம்பு இடைவிடாது அசைந்து கொண்டே இருக்கும்.அந்த அசைவால் 72000,எழுபத்திரண்டு நாடிகளும் அக்கிரமம் இன்றி நிலைப் பெற்று இயங்கிக் கொண்டே இருக்கும் .ஆதலால் அதற்கு சேனாதிபதி என்றும் .கணபதி என்றும்,விநாயகர் என்றும் சொல்லப் படுகின்றது.

இடைவிடாது அசைந்து கொண்டும் இயங்கிக் கொண்டும் உள்ளதால் அதற்கு யானையின் துதிக்கை போல் வைத்துள்ளார்கள் .யானையின் துதிக்கை அசைந்து கொண்டே இருக்கும்.எனவே யானை முகத்தை விநாயகருக்கு
வைத்துள்ளார்கள்.

குண்டலி வட்ட பையில் உள்ள இரண்டு நரம்புகளில் இடத்தில் உள்ளது விநாயகர் என்னும் நரம்பு...அது இடைவிடாது அசைந்து கொண்டே இருக்கும் ஆதலால் அதற்கு முந்தி முந்தி வினாயனே என்றுப் பெயர்.அந்த அசைவால் அக்கினிப் பைக்கு ஆதாரம் உண்டாவதால் கணபதி என்றும் பெயர்.

மேற்படி ஐந்து கவருடைய நாடிக்கு இடம் வலம் சித்தி தத்துவம்,.புத்தி தத்துவம் என இரண்டு துணை நாடிகள் உண்டு அதற்கு சித்தி,புத்தி என்று பெயராகும்.

முருகன்.;--

ஐந்து கவருடைய நாடிக்கு கீழ் ஆறு தலை உடைய நாடி ஒன்று உண்டு.அந்த நாடிக்கு ஆறு முகம் என்றும்,முருகன் என்றும் என்றும் பெயர் வழங்கப் படுகின்றது.

ஐந்து தலையுடைய விநாயகர் என்னும் நாடி இடைவிடாது அசைவால் .அதில் இருந்து உண்டாகும் உஷ்ணத்தைப் பெற்று,ஆறு தலையுடைய நாடி உடம்பு முழுவதும் கொண்டு செல்கின்றது.

எனவே விநாயகர் ஆண்ணன் ஆகவும்,அதைப் பெற்றுக் கொண்டு செல்வதால் முருகனை  தம்பி எனவும் சொல்லப்படுகின்றது.

அந்த உஷ்ணத்தை ஆறு ஆதாரங்களின் வழியாக சென்று வலம்,இடம் என்று இரண்டாகப் பிரித்து அனுப்புவதால் முருகனுக்கு ஆறு முகமாகவும்,பனிரண்டு கைகள் என்றும் பெயர் வைத்துள்ளார்கள்.

மனித உடம்பை இயங்குவதற்கு அந்த இரண்டு நரம்புகளும் மிகவும் முக்கியமானதால் .சிவன் ,பார்வதிக்கு இரண்டு குழந்தைகள் என்று பெயர் வைத்தார்கள்.

சிவன் என்பது ஆன்மா ,பார்வதி என்பது ஆன்மாவின்  உள் இருந்து தோன்றும் சக்தி என்னும் அருள் பிரகாசமாகும்..

ஆன்மாவில் இருந்து நேரடியாக உஷ்ணப் பிரகாசத்தை குண்டலிப் பையில்  அனுப்பி அதை இயங்க வைப்பதால் .முதற்பிள்ளை விநாயகர் என்றும் .அதைப் பெற்று உடல் முழுதும் அனுப்புவதால் முருகன் இரண்டாவது பிள்ளை என்றும் பெயர் வைத்துள்ளார்கள்.

அங்கேயே இயங்குவதால் விநாயகருக்கு பெருச்சாளி வாகனமாகவும்.உடம்பு முழுவதும் எடுத்துச்செலவதால் முருகனுக்கு மயில் வாகனம் என்றும் பெயர் வைத்துள்ளார்கள்.

வலது புற நாடிக்கு அறுபத்திரண்டு மாத்திரை உள்ளதால் விநாயகர் என்றும்.இடதுபுற நாடிக்கு நாற்பது மாத்திரையும்,அளவு வித்தியாசம் உள்ளதால் சகோதரர்கள் என்று பெயர் வைத்துள்ளார்கள்.

இன்னும் விரிக்கில் பெருகும்....வள்ளல்பெருமான் தத்துவங்களைப் பற்றி தெளிவாக விளக்கம் தந்து  உள்ளார்.

வள்ளல்பெருமான் எழுதியுள்ள திருஅருட்பா என்னும் அருள் நூலை படித்துப் பாருங்கள் தத்துவங்களின் உண்மை தெளிவாகும்.

உண்மைத் தெரியாமல் விநாயகர் சதுர்த்தி என்னும் விழாவில் கோடிக்கணக்கான விநாயகர் என்னும் மண் சிலைகளை ஆற்றிலும் கடலிலும் கரைத்து வீணாக்குகிறார்கள் .

அதற்கு வீணாகச் செலவு செய்யும் பணத்தை ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்தால் .இறைவன் அன்பையும் அருளையும் வழங்குவார்.

எனவே மனித உடம்பின் இயக்கங்களின் தத்துவங்களையே கோயிலாகவும்.ஆலயங்களாகவும்  சிலைகளாகவும்,உண்மையாக இருப்பது போலவே  வைத்து பக்தி மார்க்கமான வழிப்பாட்டு முறைகளை வைத்துள்ளார்கள்.

பக்தி மார்க்கத்தால் மனம் மகிழ்ச்சி அடையும் .ஆன்மாவும்,உயிரும் மகிழ்ச்சி அடையாது.இறைவனும் மகிழ்ச்சி அடைவதில்லை.

ஞான மார்க்கமாகிய வள்ளல்பெருமான் தோற்றுவித்த சுத்த சன்மார்க்கமே அருளைப் பெரும் சிறந்த வழியாகும்.

அருளைப் பெற்று உடம்பையும்,உயிரையும்,ஆன்மாவையும் காப்பாற்றுவதே மனிதன் கடைபிடிக்க வேண்டிய உண்மையான மார்க்கமாகும்.

பக்தி என்பது ஆன்மீகத்தின் முதற்படியாகும் .அதற்குமேல் பதினைந்து படிகள் உள்ளன.மனிதர்கள் ஆரம்பக் கல்வியிலே வாழ்க்கை முழுவதும் உள்ளார்கள்.அதற்கு மேலே சென்றால்தான் ஆன்மீகத்தின் உண்மையும். அருளின் உண்மையும்.கடவுள் யார் ? என்ற உண்மையும் விளங்கும்.

மக்களை எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்தான் காப்பாற்ற வேண்டும்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.     

ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

ஆன்ம அறிவு என்றால் என்ன ?

ஆன்ம அறிவு என்றால் என்ன ?


ஆன்மாவில் இருந்து விளங்குவது ஆன்ம அறிவு என்பதாகும்.

நமது உடம்பில் நான்கு அறிவு உள்ளன;---.

இந்திரிய அறிவு,...கரண அறிவு ,...ஜீவ அறிவு ,...ஆன்ம அறிவு என்பதாகும்.

ஆன்ம அறிவு ஆன்மாவில் இருந்து விளங்குவது.

ஆன்ம அறிவை அறிந்தவர் உண்மையை பேசுகின்றார் .

உண்மையை பேசுகின்றவர் மேலும் அருள் அறிவைப் பெறுகின்றார் .

அருள் அறிவைப் பெறுகின்றவர் கடவுள் அறிவு என்னும் பேரறிவைப் பெறுகின்றார் ..

பேரறிவைப் பெற்றவர் ஞானத்தில் ஞானம் என்னும் முழு பூரண அருள் ஆற்றலைப் பெறுகின்றார் .

அருள் ஆற்றலைப் பெற்றவர் மரணத்தை வேல்லுகின்றார் .

மரணத்தை வென்றவருக்கு ஐந்தொழில் வல்லபத்தை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மகிழ்ச்சியுடன் வழங்குகின்றார் .

அந்த ஐந்தொழில் வல்லபத்தைப் பெற்றவர் தான் வள்ளல்பெருமான் அவர்கள்  .

வள்ளலாரின்  சுத்த சன்மார்க்க கொள்கைகள் மனிதர்களின் ஆன்ம அறிவுக்கு வழிக் காட்டும்.

உலகிலே சுத்த சன்மார்க்க கொள்கைகள் ,எல்லா உலகிற்கும் பொதுவானது.

சாதி,சமய,மதம்,இனம்,நாடு, என்ற பேதம் இல்லாதது.

அதற்கு ஞான மார்க்கம் என்று பெயர்

வள்ளலார் தோற்றுவித்த மார்க்கம் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்'' என்ற பொது மார்க்கம்..

ஞான என்றால் சுத்தமான பேர் அறிவு என்று பெயராகும்.

ஆன்ம அறிவைப் பெறுவோம் ,என்றும் அழியாத அருளைப் பெறுவோம்.

ஆனந்தமாக வாழ்வோம்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.  

சனி, 12 செப்டம்பர், 2015

தமிழ் ! வள்ளலார் உரை !

தமிழ் ! வள்ளலார் உரை !

தமிழ் என்பது ;--த் +அ ;--ம் +இ ,என்னும் ஐந்து அலகு நிலை உடையது .

த், ம், ழ் ;--ஜட சித் கலை .

அ,இ,;-- சித் கலை.

அ ---அகண்டாகார சித்தை விளக்கும் ஓங்கார பஞ்சாக்கரத்துள்  பதிநிலை அக்கரமாம் .

இ.---பதியை விட்டு நீங்காத சித்தை விளக்கும் விவகாரத்தால் அனந்தாகார வியஷ்டி பேதங் காட்டும் ஜீவ சித்கலை யக்கரமாம் .

பத்தி ;-- சிதாத்ம கலைகளுக்கு ஆதாரமாகி உயிர்களுக்கு உடலை யொத்துக் குறிக்கப்படும்.

த்,ம்,ழ்,எழுத்துக்களுக்கு உரை ..;--

த் ---ஏழாவது மெய்
ம் ----பத்தாவதாகும்
ழ் ----பதினைந்தாவது இயற்கை உண்மை சிறப்பிய லக்கரமாம்.

ஐந்து அலகு நிலையம்,உபய கலை நிலையம்,முன்று மெய் நிலையம் அமைந்துள்ளதும் ,

சம்பு பஷ்த்தாரால் அனாதியாய் சுத்த சித்தாந்த ஆரிஷ் ரீதிப்படி கடவுள் அருள் ஆணையால் கற்பிக்கப் பட்டதும்,

எப் பாஷை களுக்கும் அதாவது எல்லா மொழிகளுக்கும் பிதுர் பாஷை என்று ..அதாவது தந்தை என்று ஆன்றோர்களால் கொண்டாடப்பட்டதும்.

இனிமையான மொழி என்றும் போற்றப் பட்டதாகும்.

தமிழ் மொழி இறைவனால் சம்பு பட்சம் என்ற முறையில் தோற்றுவிக்கப் பட்டதாகும்.

மற்ற உலக மொழிகள் யாவும் மனிதர்களால் படைக்கப் பட்ட மொழிகளாகும்.

எனவே தமிழ் மொழி எக்காலத்தும் அழியாத ,அழிக்கமுடியாத மொழியாகும்.

மேலும் விளக்கம்.;--    

த ..என்பது இயற்கை உண்மை என்பதாகும்.

மி ..என்பது இயற்கை விளக்கம் என்பதாகும் .

ழ் ..என்பது இயற்கை இன்பம் என்பதாகும்.

மேலும் தமிழுக்கு ;--

த்,..என்பது தன்னைப் பற்றி தெரிந்து கொள்வது.தன்மை என்பதாகும்.

மி ..என்பது தமக்கு முன்னாடி கண்களுக்குத் தெரிந்ததைப் பற்றி தெரிந்து கொள்வதாகும்.அதற்கு முன்னிலை என்பதாகும்.

ழ் ..என்பது படர்ந்து உள்ள உலகத்தையும் உலகத்தில் உள்ள அனைத்தையும் அறிந்து கொள்வதாகும்.அதற்கு படர்கை என்பதாகும்.

மேலும் உருவத்தையும் .அருவத்தையும்,உரு அருவத்தையும் குறிப்பதாகும்.

மேலும் ,,ஆன்மா உயிர் ,உடம்பைப் பற்றித் தெரிந்து கொள்வதாகும்.

வள்ளல்பெருமான் சொல்லியது ;--

தன்மை .முன்னிலை,படர்கை என்பது ...

தமிழில் தன்மை ,முன்னிலை ,படர்கை என்பவை யாவை ? அவற்றின் கருத்து யாது ?

தன்மை ---பண்புச் சொல்,சார்பு மயமாய் இருத்தலைப் பற்றி ,தனக்கு மேல் ஒன்றினைச் சார்ந்து இருப்பதனால்--பண்புச் சொல்ஆகிறது ,

முன்னிலை என்பது -- முன் + நிலை ,முன் இடம் கூறினது.

படர்கை என்பது என்ன எனில் --படர்--படரும் படியான, .கை --இடம் ,நிலை அகண்ட இடம், கை என்பது குறுகிய இடம்  

ஆதலால் பேதாபேதம் குறிக்கும் .நிமித்தம் இரண்டாம் இடத்திற்கு முன்னிலை என்றும் .மூன்றாம் இடத்திற்குப் படர்கை என்றும் பெயர்கள் வந்தன என அறியவும்.

தமிழ் மொழியால் மட்டுமே இறைவனையும் .இறைவனால் படைக்கப்பட்ட .உயிர்களையும்,பொருள்களையும்,மற்றும் இயற்கை  உண்மைகளையும்,ரகசியங்களையும் தெரிந்து கொள்ளமுடியும்.என்கின்றார்.

ஆதாலால் உலக மொழிகளுக்கு எல்லாம் தந்தை மொழி தமிழ் மொழி என்கின்றார்.

மாயையால் சிக்குண்டவர்கள் உருவாக்கிய மொழிகள் உலகில் உள்ள மொழிகள்.

இறைவன் அருளைப் பூரணமாக பெற்ற அருளாளர்களால் தோற்றுவிக்கப் பட்ட மொழி தமிழ் மொழியாகும்.

தமிழ் நாட்டிலும் தமிழ் மொழியைப் பின்பற்றி வாழ்பவர்கள் மட்டுமே உயர்ந்தவர்கள்.

தமிழ் மொழியில் மட்டுமே அருளைப் பெரும் வழி உள்ளது.மரணத்தை வெல்லும் வழி உள்ளது.கடவுள் நிலை அறிந்து அம்மயமாகும் வழி உள்ளது.

பிறப்பு இறப்பு இல்லாமல் வாழும் பேரின்ப வாழ்க்கை வாழும் வழிமுறைகள் தமிழ் மொழியில் மட்டுமே உள்ளது.

இன்னும் விரிக்கில் பெருகும்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

மனித குணம் மிருக குணமாக மாறியதற்கு காரணம்.!

மனித குணம் மிருக குணமாக மாறியதற்கு காரணம்.!

இயற்கையாக மனித குணம் என்பது  அன்பு ,தயவு,கருணை உள்ளது...கடவுளின் குணங்கள்  யாவும் மனிதனக்கு உண்டு.

மனித குணம் மிருக குணமாக மாறுவதற்கு அடிப்படைக் காரணம் அவரவர்கள் உண்ணும் உணவே காரணமாகும்.

தாவர உணவு உண்பவர்கள் அதிகம் தவறு செய்ய மாட்டார்கள் .தவறு செய்ய துணிவு வராது.அப்படியே வந்தாலும் அதை அவர்களால் தடுத்துக் கொள்ளமுடியும்.

ஆனால் மிருக மாமிசம் அதிகமாக உண்பவர்கள் தவறு செய்து கொண்டே இருப்பார்கள்.அவர்கள் உண்ணும் அந்த மிருக மாமிச உணவானது அவர்களை கொலைக் குற்றம் செய்வதற்கு தூண்டு கோலாக மாற்றி விடும்.

தீவிர வாதிகள் யார் ?

இன்று உலகில் உள்ள ,தீவிர வாதிகள் ,நக்சல் பார்ட்டிகள்,..பயங்கர வாதிகள்,...கொள்ளை அடிப்பவர்கள்,...கொலை செய்பவர்கள்,...கற்பழிப்பு செய்பவர்கள்,...நாட்டை அழிப்பவர்கள்,...போன்ற துன்மார்க்க செயல புரிபவர்கள் ...அனைவருமே புலால் என்னும் மாமிசத்தை உண்பவர்கள் தான் ...

அதிகம் புலால் உண்ணும் முஸ்லீம்கள் தான் தீவிர வாதிகளாகவும்,பயங்கர வாதிகளாகவும்,நக்சல் பார்டிகளாகவும் உள்ளார்கள் .

அவர்கள் ஆறுகாலம் இறைவனைத் தொழுது என்னபயன் .?   நாட்டை அழிக்கும் நச்சுக் கிருமிகளாக உள்ளார்கள்.

அதேபோல் புலால் உண்ணும் கிருத்தவர்கள்,,இந்துக்கள் பலரும்.மிருக குணம் உள்ளவர்களாகவே இருப்பார்கள்.

ஒரு மதமோ,சமயமோ,சாதியோ புலால் உண்பவர்களுக்கு தூண்டுதலாக,துணையாக  இருந்தால் அந்த மதத்தையும் சமயத்தையும்,சாதியையும்,அதன் கொள்கைகளையும் அதன் துன்மார்க்க செயல்களையும்,

அதற்கு காரண காரியமாக உள்ள தெய்வங்களையும்.இருக்கும்  இடம் தெரியாமல் அழித்து விடுங்கள் என்று இறைவனிடம் கேட்கின்றார்,  வள்ளல்பெருமான்.

திருஅருட்பா

கொள்ளை வினைக் கூட்டுறவால் கூட்டிய பல் சமயக்
கூட்டமும் அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும்
கள்ளமுறும் அக்கலைகள் காட்டிய பல் கதியும்,
காட்சிகளும் காட்சிதரும் கடவுளரும் எல்லாம்
பிள்ளை விளையாட்டு என நன்கு அறிவித்து இங்கு எனையே
பிள்ளை எனக் கொண்டு பிள்ளைப் பெயரிட்ட பதியே
தள்ளரிய மெய்யடியார் போற்ற மணி மன்றில்
தனினடஞ் செய் அரசே என் சாற்றும் அணிந்து அருளே.!

கொலை கொள்ளை அடிக்கும் கூட்டம் என்கின்றார்.வள்ளலார்

சமயம் ,மதங்கள் யாவும்,கொலைக்காரக் கூட்டமாக ,கொள்ளைக் காரக் கூட்டமாக.இருந்து கொண்டு உள்ளது .குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் போல் கடவுளை வைத்து விளையாடிக் கொண்டு உள்ளார்கள்.

அவர்களுக்கும் நல்ல அறிவைக் கொடுத்து மிருக குணம் உள்ள மனிதர்களை  நல்ல மனித குணம் உள்ளவர்களாக மாற வேண்டும் .மாற்ற வேண்டும் என்பதற்காக எனக்கு அனுமதிக் கொடுத்து நல்லப் பிள்ளையாக தேர்வு செய்து உள்ளீர்கள் .
இனி சாதி,சமய,மதங்களை  அழித்து புனிதமுறு சுத்த சன்மார்க்க நெறியில் அனைவரையும் சேர்த்து.மிருக குணம் உடையவர்களை மனித குணம் உடையவர்களாக , மனிதர்களாக மாற்றிவிடுவேன் .என்கின்றார் வள்ளலார்

உண்மையான ''ஒரேக் கடவுள் அவரே அருட்பெருஞ் ஜோதியர்'' என்ற உண்மையை மக்கள் முதலில் புரிந்து கொண்டால் எல்லாம் சரியாகிவிடும்..

எனவே மனிதனை மிருக குணமாக மாற்றும் புலால் உணவை நிறுத்தி,மனித குணமாக மாற்றும் தாவர உணவை புசித்து அன்பு,தயவு,கருணை உடைய மனிதர்களாக வாழ்வோம்,

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .

வெள்ளி, 11 செப்டம்பர், 2015

புலால் உண்பவர்கள் கண் இருந்தும் குருடர்கள் !

புலால் உண்பவர்கள் கண் இருந்தும் குருடர்கள் !

பொய் விளக்கப் புகுகின்றீர் போது கழிக்கின்றீர்
புலை கொலைகள் புரிகின்றீர் கலகல என்கின்றீர்
கை விளக்குப் பிடித்து ஒரு பாழ் கிணற்றில் விழுகின்ற
களியர் எனக் கழிக்கின்றீர் கருத்தும் இருந்தும் கருதீர்
ஐ விளக்கு மூப்பு மரண ஆதிகளை நினைத்தால்
அடி வயிற்றை முருக்காதோ கொடிய முயற்று உலகீர்
மெய் விளக்க எனது தந்தை வருகின்ற தருணம்
மேவியது ஈண்டு அடைவீரே ஆவி பெறுவீரே !

கொலை செய்பவரும் புலால் உண்பவரும்,கண் இருந்தும் குருடர்கள் என்கின்றார் வள்ளலார் .

குருடன் விளக்குப் பிடித்துக் கொண்டு பாழ் கிணற்றில் விழுவது போல் விழுந்து அழிந்து கொண்டு உள்ளார்கள்.

அறிவு இருந்தும் அறிவு தெளிவு இல்லாமல் ,இறைவன் படைத்த  உயிர்களை கொன்று  அதன் மாமிசத்தை உண்கிறார்கள்.

அதனால் அவர்களுக்கு வரும் தீராத துன்பம் வரும் என்பதை அறியாமல் உள்ளார்கள்.

அதனால்தான் அவர்களது உடம்பிற்கு துன்பம் வரும் என்பதை கொஞ்சம் நினைத்துப் பார்த்தால் அவர்கள் விட்டு விடுவார்கள்  .

அதனால் வரும் தீராத துன்பங்களில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

இனிமேலாவது உண்மையை உணர்ந்து அறிவைப் பயன் படுத்தி தவறு செய்வதில் இருந்து விளக்கிக் கொள்ளுங்கள் என்கின்றார் நமது கருணை வள்ளல் திரு அருட்பிரகாச வள்ளலார்.

நாம் அடையப்போகும் துன்பத்தை நினைந்து வள்ளலார் வருந்துகின்றார்.

அதனால் நமக்கு அறிவு இருந்தும் ,கண் இருந்தும்,தெளிவு இல்லாத, புரியாத.அறியாத குருடர்களாக இருக்கின்றோம்.

மக்களை அறியாதவர்களாக ,குருடர்களாக மாற்றியது சாதி,சமயம்,மதங்கள் போன்ற குருட்டுத் தனமான,பொய்யான  கொள்கை களாகும்.

அவற்றை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு உண்மையை அறிந்து .கண் உள்ளவர்களாக கருணை உள்ளவர்களாக மாறுங்கள் என்கின்றார் .வள்ளலார் .

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல். 

மக்கள் மனம் ஏன் கல்லானது.?

மக்கள் மனம் ஏன் கல்லானது.?

மக்கள் கல்லான தெய்வங்களை வணங்குவதால் அவர்களின் மனம் கல்லானது.

எனவே தான் வள்ளல்பெருமான் கல்லை வணங்கி கல்லான மனிதர்களுக்கு .அவர்களது மனத்தைக் கரைய வைக்கும் உண்மையான இறைவனை அறிமுகப்படுத்தினார்.

திரு அருட்பா !

கல்லுங் கனியத் திரு நோக்கம் புரியும்
கருணைக் கடலே நான்
அல்லும் பகலும் திருக் குறிப்பை எதிர் பார்த்து
இங்கே அயர்கின்றேன்
கொல்லுங் கொடியார்க்கு உதவுகின்ற
குறும்புத் தேவர் மனம் போலச்
சொல்லும் இரங்கா வண்மைக் கற்க
எங்கே ஐயோ துணிந்தாயோ !.......வள்ளலார் .

கல்லையும் கரைய வைக்கும் அருள் நிறைந்த கருணைக் கடல் போன்றவனே ! அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே !

இரவும் பகலும் இடைவிடாது உன்னை நினைத்து வருவாய் வருவாய் என்று ஏங்கிக் கொண்டு இருக்கின்றேன்.

கல்லான தெய்வங்களை வணங்கி, மனிதர்கள் கருணை இல்லாமல் .நீ படைத்த உயிர்களை ,கொலை செய்தும் ,அதன் புலாலை,உண்டும் இரக்கமில்லாத குணம் உடையவர்களாக வாழ்ந்து கொண்டு உள்ளார்கள்.

அதற்கு என்ன காரணம்.!

உங்களுடைய உண்மையான உருவத்தைக் காட்டாமல் இருப்பதால்தான் .அவர்கள் கல்லையும் ,மண்ணையும் வணங்கிக் கொண்டு உள்ளார்கள்.

எனவே உங்களுடைய உண்மையான உருவமான அருட்பெருஞ்ஜோதி உருவத்தை,உலக மக்களுக்கு காட்டுவதற்கு அருள் புரிய வேண்டும் என வள்ளல்பெருமான் கேட்டுக் கொள்கின்றார்,

அருட்பெருஞ்ஜோதி !

ஆண்டவரின் அனுமதியை பெற்றுத்தான் உலக மக்களுக்கு உண்மையான ''அருட்பெருஞ்ஜோதியை''

வடலூர் பெருவெளியில் உள்ள சத்திய ஞானசபையில்,அறிமுகப் படுத்தி உள்ளார் .

ஆதலால் கல்லை வணங்கிக் கல்லான மனம் படைத்த மனிதர்கள் அருட்பெருஞ்ஜோதி என்னும் உண்மை ஒளியை வணங்கி கருணை உள்ளவர்களாக வாழுங்கள். ,

உண்மையை உணர்ந்து வணங்கினால் ,வழிபட்டால் ,
உங்களுக்கு வரும் அச்சம் ,பயம்,துன்பம் துயரம் மரணம்,போன்ற தீராத துன்பங்களில் இருந்து விடைப் பெற்று ,என்றும் துன்பம் இல்லாமல் .இன்பமுடன் மகிழ்ச்சியுடன் வாழலாம் .

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

வியாழன், 3 செப்டம்பர், 2015

சாத்திரங்களை நம்பாதீர்கள் !

சாத்திரங்களை நம்பாதீர்கள் !
சாத்திரங்கள் எல்லாம் தடுமாற்றம் சொல்வது அன்றி
நேத்திரங்கள் போற் காட்ட நேராவே --நேத்திரங்கள்
சிற்றம்பலவன் திரு அருள் சீர் வண்ணம் என்றே
உற்று இங்கு அறிந்தேன் உவந்து .....வள்ளலார் பதிவு..

இயற்கையின் கிரகங்களின் கணக்கை எவராலும் துல்லியமாக கணக்குப் போட்டு சொல்ல முடியாது.

முன்பு கணக்குப் போட்டவர்கள் எல்லோரும் தவறாகவே  கணக்குப் போட்டு எழுதி வைத்துள்ளார்கள் .இயற்கையின் உண்மையை எவரும் முழுமையாக அறிந்து கொள்ள முடியவில்லை.

சாத்திரங்களை நம்பிக் கேட்டு அதன்படி சென்று  அழிந்து போனவர்கள் அளவில் அடங்காது.

அதுபோல் தான் வாஸ்து என்பதும்,வாஸ்துவை நம்பிக் கேட்டவர்கள் ஏராளம்.

உங்களின் உடம்பிலே அனைத்து கிரகங்களும் உள்ளன.

ஒழுக்கமும்  வாழ்க்கை முறைகளையும் ஒழுங்காக வைத்துக் கொண்டால் எந்த கிரகமும்,வாஸ்த்தும் ஒன்றும் செய்யாது.

தவாறன வழியில் செல்வதால் துன்பம்,துயரம் அச்சம்,பயம்,போன்ற தீராத துன்பங்கள் வந்து சேர்ந்து விடுகின்றன.

உயிர்க்கொலை செய்வதும் அதன் மாமிசத்தை உண்பதுமே பெரிய தண்டனைக்கு உரிய குற்றமாகும்.

அவற்றைப் போக்க ஒரே வழி ஜீவ காருண்யம் என்னும் உயிர் இரக்கம் மட்டுமே தேவை .

உயிர் இல்லாத தெய்வங்களை சுற்றுவதை விட்டுவிட்டு உயிர் உள்ள ஜீவர்களுக்கு உதவி செய்யுங்கள் உங்கள் துன்பம் எல்லாம் குறைந்துவிடும்.

சாத்திரங்களை,வாஸ்துவை  நம்பி வீண் செலவு செய்ய வேண்டாம் .அதனால் எந்த நன்மையையும் கிடைக்காது .
சாத்திரங்கள்,வாஸ்து என்பது  எல்லாம் இப்போது வியாபாரம் ஆகி விட்டது.பணத்தைக் கொடுத்து துன்பத்தைப் போக்க முடியாது.மேலும் துன்பத்தை வாங்கிக் கொள்கிறீர்கள் .

உயர்களின் மேல் அன்பும் தயவும்,கருணையும் இருந்தால் மட்டுமே துன்பங்கள் தீரும்.,துன்பங்கள் தொலைந்து விடும்.

இறைவன் அருள் பார்வை இருந்தால் மட்டுமே துன்பங்கள் தீரும்.அதற்கு ஜீவ காருண்யம் என்னும் ஏழைகளின் பசியைப் போக்குங்கள் .இறைவன் அருள் கிடைத்து துன்பம் தொலைந்து விடும்.

அதற்கு வள்ளலார் சொல்லும் வழியைக் கேளுங்கள் ;--

சூலை,குன்மம் ,குஷ்டம் முதலிய தீராத வியாதிகளால் வருந்துகின்ற சமுசாரிகள் ,தங்களின் தரத்திற்கு தகுந்தாற் போல் பசித்தவர்களுக்கு பசி யாற்றுவிப்பதே விரதமாக அனுசரித்தார்கள் ஆனால் அந்த ஜீவ காருண்ய அனுசரிப்பே நல்ல மருந்தாக அந்த வியாதிகளை நிவர்த்தி செய்து,விஷேச சவுகரியத்தை உண்டு பண்ணும் என்பது உண்மை .

அதேபோல் பலநாள் குழந்தை இல்லாதவர்கள்,.

அற்ப வயது என்று குறிப்பினால் அறிந்து கொண்டு இறந்து விடுவார்கள் என்று நினைப்பவர்கள்.

கல்வி,அறிவு,செல்வம்,போகம்,முதலியவைக் குறித்து வருந்து கின்றவர்கள்.

பலநாள் குழந்தை இல்லாமல் வருந்துகிறவர்கள்,

விலை நிலத்தில் விளைவு இல்லாமல் வருந்துகின்றவர்கள் ,

எந்த நேரத்திலும் ஆபத்துக்கள் வரும் என்று நினைப்பவர்கள்,

மேலும் எதுவாக இருந்தாலும்.எந்த துன்பமாக இருந்தாலும்.ஊழ் வகையால் வந்தாலும் ,அஜாக்கிரத்தையாக வந்தாலும்.

பசித்தவர்களுக்கு பசியாற்று வித்து அவர்களுக்கு இன்பத்தை உண்டு பண்ணுகின்ற மேலான விரதமானது.

எல்லா துன்பங்களையும் போக்கி விடும். இதுதான்
உண்மையான விரதமாகும். ,

கண்களுக்குத் தெரியாத கடவுளுக்கு ,கொடுப்பதாலும், பேசாத சிற்ப சிலைகளை வணங்குவதாலோ ,அவைகளுக்கு பரிகாரம் செய்வதாலோ எந்த பயனும் கிடைக்காது.

பேசுகின்ற ,பேசாத உயிர் உள்ள ஜீவர்களுக்கு உபகாரம் செய்யுங்கள் .அதுதான் கடவுள் வழிபாடு..அதுதான் துன்பத்தைப் போக்கும்.

எனவே சாத்திரம்,வாஸ்து போன்ற பொய்யான செய்திகளைக் கேட்டு அதன்படி நடந்து ,உங்கள் வாழ்க்கையை வீணாக்கிக் கொள்ளாதீர்கள்.பணத்தை விரயம் செய்யாதீர்கள்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

புதன், 2 செப்டம்பர், 2015

ஒரு மனிதன் நல்லவரா ? கெட்டவரா ?

ஒரு மனிதன் நல்லவரா ? கெட்டவரா ?

ஒருமனிதன் நல்லவரா ? கெட்டவரா ? என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் அவருடைய மரணம் தான் முடிவு செய்கின்றது.

எவ்வளவு பட்டம் பதவி,புகழ் இருந்தாலும் அவர்களுக்கு  மரணம் வருவதற்கு முன்  .நோய் இல்லாமல் ,மருத்துவமனையில் படுத்த படுக்கை இல்லாமல், சிகிச்சை இல்லாமல்,மருந்து உட்கொள்ளாமல்  உடலுக்கும் உயிருக்கும் துன்பம் இல்லாமல் மரண வேதனை இல்லாமல் உயிர் போக வேண்டும்.

மனித சமுதாயத்திற்கு நல்லதை செய்பவர்களுக்கு விகாரமான துர் மரணம் வரவே வராது.

அப்படி சென்றவர்கள்  தான் உயர்ந்தவர்கள் நல்லவர்கள் என்று இயற்கையால் போற்றப் படுவார்கள் .

மரணம் இல்லாமல் வாழ்பவர்கள் எல்லோரையும் விட உயர்ந்தவர்கள்.அவர்கள் எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் பாவிப்பவர்கள்.அவர்களுக்கு இறைவன் மரணத்தைக் கொடுக்க மாட்டார்.

அந்த வரிசையில் உயர்ந்து நிற்பவர் தான் திரு அருட் பிரகாச வள்ளலார் .அவருக்கு இயற்கையாலும் செயற்கையாலும் மரணம் கிடையாது.

அவர் என்றும் மறைமுகமாக மக்களுக்கும் எல்லா உயிர்களுக்கும் நன்மை செய்து கொண்டே இருப்பார்.

அவரது கொள்கைகளுக்கும் கருத்துக்களுக்கும் செயல்களுக்கும்,என்றும் அழிவு கிடையாது நிலைத்து நிற்கும். அதுவே இறைவன் கொடுத்த நல் வரவாகும்.

மக்களுக்கும் உயிர்களுக்கும் துன்பம் செய்யாமல் வாழ்ந்தால் மகிழ்ச்சியுடன் இன்பமுடன் வாழலாம் .

அவர்களது மரணம் நீட்டிக்கப்படும்,துர்மரணம் எக்காலத்தும் வரவே வராது.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

எது பிடிக்கும் !

எது பிடிக்கும் !

என்னைப் பிடித்தால் என்னுடைய கருத்தும் பிடிக்கும்.!

என்னைப் பிடிக்கவில்லை என்றால் என்னுடைய கருத்தும் பிடிக்காது.!

அகம் சுத்தமாக இருந்தால், அனைத்தும் சுத்தமாக இருக்கும்.!

அகம் கருத்து இருந்தால் அனைத்தும் கருத்துத் தான் இருக்கும்.!

எண்ணங்கள் எப்போதும்  நல்லதையே நினைக்க வேண்டும் !

நல்ல எண்ணங்களே நல்ல மருந்தாகும் !

தீய எண்ணங்கள் தீராத துன்பங்களைத் தரும்.!

அன்புள்ள செயல் அனைத்தும் அரும் பெரும் செயலாகும் !

அன்பு இல்லாத செயல் அனைத்தும் விரயம் ஆக்கி விடும்.!

பிறர் துன்பத்தைப் போக்கும் செயல், நம்மை தூய்மைப் படுத்தி விடும் !.

பிறரை இன்பம் அடையச் செய்தால்  நாம் இன்பம் அடைவோம்,!

புன்னகையோடு வாழ்ந்தால் பொன் நகைத் தேடி வரும்.!

அச்சத்தை தவிர்த்தால் இச்சை விலகி விடும்.!

எதிரிகள் இல்லாத வாழ்க்கை இன்பமான வாழ்க்கை !

உயிர்க் கொலை செய்தால் உன் உயிர் போய் விடும்.!

தன்னுடைய அறிவே தனக்குத் துணையாகும்.!

மனதை அடக்கினால் மடமை நீங்கி விடும். !

புத்தி விரிந்தால் பூமியும் விரியும் !

சித்தம் விரிந்தால் சத்தம் அடங்கி விடும்.!

அகங்காரம் அடங்கினால் அனைத்தும் அடங்கிவிடும் !

தயவு உள்ள இடத்தில் தர்மம் நிலைக்கும் !

கருணை உள்ள இடத்தில் கடவுள் வருவார் !

கடவுள் உள்ள இடத்தில் கர்மங்கள் நடைபெறாது.!

அருள் பெரும் நிலையே அனைத்தும் பெரும் நிலை !

அருள் பெற்ற ஆன்மாவுக்கு அழிவு என்பதே இல்லை !

அருளே மருந்து அதுவே மரணத்தை நீக்கும் !

நல்லதை நினைப்போம் நலம் பெற வாழ்வோம்.!

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்..