செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

அணிந்துரை !

 *அணிந்துரை !*


அகத்தே கருத்து புறத்து வெளுத்து இருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்துவதற்காக.

இயற்கை உண்மை வடிவினராகிய அருட்பெருஞ்ஜோதிஆண்டவரால் வருவிக்க 

உற்றவர்தான் வள்ளல்பெருமான் அவர்கள்.

அருள்நிறைந்து பிறந்து வாழ்ந்து கொண்டு இருப்பவர்.

*சாகாக்கல்வி கற்றவர் கற்றுகொடுக்க வந்தவர்.மரணத்தை வென்று முத்தேக சித்தி பெற்று வாழ்ந்து கொண்டு இருப்பவர்.*


உலக மக்களின் நன்மைக்காக.நலனுக்காக ஆறு திருமுறைகளை இறைமொழியான தமிழ்மொழியில் தந்தவர்.

*ஒன்றுமுதல் நான்கு திருமுறைகள் வரை இம்மை இன்ப லாபம் பெறும் வாழ்க்கை முறையையும்.* *ஐந்தாம் திருமுறை மறுமை இன்ப லாபம் பெறும் வாழ்க்கை முறையையும்.*

*ஆறாம் திருமுறை பேரின்ப லாபம் பெறும் வாழ்க்கை முறையை கற்பிக்கப்படும் அருள் நூல்களாகும்.* 


*இம்மை இன்ப லாபத்தை இந்திரிய கரண ஒழுக்கத்தினாலும்.*

*மறுமை இன்ப லாபத்தை*

*ஜீவ ஒழுக்கத்தினாலும்*

*ஆன்ம ஒழுக்கத்தினால் பேரின்ப லாபத்தையும் பெறலாம் என்ற ஒழுக்க நெறிகளை மக்களுக்கு போதித்து வழிகாட்டி வாழ்ந்தும் காட்டி உள்ளார்.*


 வள்ளலார் எழுதிய ஆறு திருமுறைகளுக்கும் விளக்கம் தருவது ஆறாம் திருமுறையில் உள்ள *அருட்பெருஞ்ஜோதி அகவலாகும்*. *1596 வரிகளைக் கொண்ட மிகப்பெரிய அருள்விளக்கம் நிறைந்த அருள் பொதிந்த அகவலாகும்* *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் அருளப்பட்டதால் அருட்பெருஞ்ஜோதி அகவல் என்று பெயரிடப்பட்டது.*


திரு அருட்பெருஞ்ஜோதிஅகவலுக்கு  சன்மார்க்க அன்பர்கள் சிலர் அவரவர்களுக்கு தெரிந்த விளக்க உரைகள் எழுதிஉள்ளார்கள். 


*சங்கராபுரம் செந்தமிழ் அந்தனர் சுத்த சன்மார்க்க சாது தவத்திரு மகாமந்திர கற்கண்டு சிவஞான அடிகள்* 


யாரை சந்தித்தாலும் முதலில் கற்கண்டு வழங்கிவிட்டுத்தான் பேசுவதற்கு தொடங்குவார்.

ஆதலால் கற்கண்டு அடிகளார்  என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப் படுபவராகும்.

தயவுத்திரு கற்கண்டு அய்யா அவர்கள் சங்கராபுரம் நடுநிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். திருக்குறள் மீதும்.திருஅருட்பா மீதும் அளவற்ற பற்றும் ஈடுபாடும் கொண்டுவர். மாணவ மாணவிகளுக்கு ஒழுக்க நெறிகளை போதித்து.உயிர்க்கொலை செய்யாமலும் புலால் உண்ணாமலும் இருக்க அறிவை விளக்கி. ஊக்கப்படுத்தி மேன்மை படுத்தி உயர்த்தி நல்வாழ்வு வாழ்வதற்கு வழிகாட்டியுள்ளார்.


1983 ஆண்டு முதல் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க ஒழுக்க நெறிகளை தீவிரமாக பின்பற்றி. சங்கராபுரம் வள்ளலார் மன்ற ஆலோசகராக பணியாற்றி கொண்டும் வருகிறார். இடைவிடாது ஜீவகாருண்ய உயிர்இரக்கத் தொண்டும் செய்து  வருகிறார். பல சுத்த சன்மார்க்கிகளை உருவாக்கி உள்ளார். பல சன்மார்க்க சங்கங்களைத் தோற்றுவித்துள்ளார்


*வள்ளலார்கொள்கைகள்*!


1.கடவுள் ஒருவரே! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்! 

2.சாதியும் மதமும் சமயமும் பொய்.

3.ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்.

4.சிறுதெய்வ வழிபாடுகள் கூடாது.

5.வேதம் ஆகமம் புராணம் இதிகாசம்.சாத்திரங்கள் உண்மையை தெரிவிக்காது.

6.புலால் உண்ணக்கூடாது.கொலை செய்யக்கூடாது.

7.எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் எண்ணும்

ஆன்மநேய ஒருமைப்பாடு உரிமையை கடைபிடிக்க வேண்டும்.

8.இறந்தவரை புதைக்க வேண்டும்.எரிக்க கூடாது.

9. கணவன் இறந்தால் மனைவி தாலிவாங்க கூடாது.

மனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம் செய்துகொள்ள கூடாது.

10.எதிலும் பொது நோக்கம் வேண்டும். 


மேலே கண்ட சுத்த சன்மார்க்க கொள்கைகளை தனது வாழ்க்கையில் அதி தீவிரமாக கடைபிடித்து வருபவர் தவத்திரு சாது கற்கண்டு அடிகளார் அய்யா அவர்கள்.


15 ஆண்டுகளாக என்னிடம் நெருங்கிய நட்பும் பற்றும் அன்பும் அரவணைப்பும் கொண்டவர்.

சங்கராபுரம் சன்மார்க்க விழாக்களில் ஒவ்வொரு ஆண்டும் 

என்னை மேடையில் பேசவைத்து அழகுபார்த்து ரசிப்பவர். அய்யா அவர்கள் எனக்கு கிடைத்த மாபெரும் சுத்த சன்மார்க்க பொக்கிஷமாக நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.


*அருட்பெருஞ்ஜோதி அகவலுக்கு எளிய நடையில் எளிய தமிழில் சுருக்கமாக விளக்கம் அளித்து மிகவும் அற்புதமாக* *அவரது அருள் அனுபவத்தை விளக்கமாக எழுதி வெளியிட்டுள்ளார்.* *படித்து பார்த்து அளவில்லாத மகிழ்ச்சி அடைந்தேன்*.


*அய்யா அவர்களின் அகவல் உரையின் அருள் நூலுக்கு அணிந்துரை வழங்குவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்*. 


இந்நூலை சன்மார்க்க உலகம் படித்து பயன் பெற்றிட எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டி விண்ணப்பம் செய்கிறேன்.


கற்கண்டு அய்யா அவர்கள் நீண்ட ஆயுள். நிறைந்த செல்வம். அழியாப்புகழும் அருளும் பெற்று மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழ்வதற்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் பூரண அருள் வழங்க வேணுமாய் வேண்டிக்கொள்கிறேன்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்.

கல்பட்டு அய்யா நகர் 

வடலூர்.

9865939896.

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

அருள் வாழ்க்கையும் ! பொருள் வாழ்க்கையும் !

 *அருள் வாழ்க்கையும்! பொருள் வாழ்க்கையும்!*


ஆன்மாவின் வாழ்க்கையானது *பொருள்வாழ்க்கை*.

*அருள்வாழ்க்கை* என இரண்டு வகையாக உள்ளன.


அதேபோல் ஆன்மாக்கள் வாழும் உலகமும் வாழப்போகும் உலகமும். பல வண்ணங்களாக பல  வடிவங்களாகவும் பலப்பல அடுக்குகளாக பல உலகங்களாக எண்ணில் அடங்காத  பிரிவுகளாக.

பலவகை தோற்றங களாக பரந்து விரிந்து ஒன்றோடு ஒன்று மோதாமல் தன்னைத்தானே இயங்கிக்கொண்டு உள்ளன. 


*( படைத்து காத்து இயக்கிக் கொண்டுள்ள இயற்கை உண்மைக்கடவுளை கண்டுபிடித்த ஒரே அருளாளர் திருஅருட்பிரகாச வள்ளலார்)*


*பொருள் வாழ்க்கை*


பொருள் நிறைந்த பஞ்சபூத  இவ்வுலகில் ஆன்மாக்கள் வந்ததால் பொருள் உடம்பு எடுத்துள்ளது. *பொருள் உடம்பு எடுத்துள்ளதால் பொருள் மீது ஆசை அதிகரித்துள்ளது.* அருளின் உண்மைத் தன்மை அறிந்து கொண்டு இருந்து இருந்தால் அருளின் மீது ஆன்மாவிற்கு ஆசையும் பற்றும் விருப்பமும் அதிகரித்திருக்கும்.


உயர்ந்த அறிவுள்ள மனிதநேகம் எடுத்த ஆன்மாக்கள் பஞ்ச பூத உலகமான *மாயை உலகில்* .

மண்.நீர்.

அக்கினி.காற்று.

ஆகாயம் கலந்த பொருள் உடம்பு  மட்டுமே பெற்று வாழமுடியும். 


மேலும் பொருள் உடம்பினால் இன்பம் துன்பம்.பிறப்பு இறப்பு.நினைப்பு மறைப்பு.வெற்றி தோல்வி. மண்ணாசை.

பெண்ணாசை.

பொன்னாசை மற்றும் ஆசை பேராசை. பாவம் புண்ணியம்.இரவு பகல் மற்றும் பசி. பிணி.தாகம்.இச்சை.எளிமை.பயம் கொலை போன்ற அவத்தைகள் சூழ்ந்து கொண்டே இருக்கும். 


ஆன்மாக்கள் தனித்து வாழமுடியாது உருவம் உள்ள *உபகாரத்தால் கிடைத்த* தாய் தந்தை குடும்பம் குழந்தைகள் உற்றார் உறவினர் நண்பர்களுடன் தொடர்பு கொண்டு வாழ்ந்து இறுதியில்  மாண்டு போவதே பொருள் உலகின் சிற்றின்ப வாழ்க்கையாகும். 


*ஆன்மாக்கள் பொருள் உடம்பு பெற்றதால் பொருள் மீது ஆசை அதிகமாயிற்று. ஆசை அதிகமானதால் பாவம் புண்ணியங்களுக்கு தகுந்தாற்போல் பிறந்து பிறந்து. இறந்து இறந்து முடிவு இல்லாமல் இன்பம் துன்பங்களை தொடர்ந்து அனுபவித்து இவ்வுலகில் வாழ்ந்து கொண்டே இருக்கின்றன*. 


மேலும் வாழ்க்கையில்  விருப்பு வெறுப்புடன் வாழ்ந்து.மேலும் நிலை இல்லாத அற்ப ஆசைகளான  பட்டம் பதவி புகழ்.ஆட்சி அதிகாரங்களுக்காக அலைந்து திரிந்து பெற்று முழுமையாக அனுபவிப்பதற்குள் வயது முதிர்ந்து நோய்வாய்பட்டு இறந்து மீண்டும் பிறந்து இறந்து கொண்டே வாழும் வாழ்க்கையே மாயை உலகின் வாழ்க்கை யாகும். மேலும் பஞ்சபூதங்கள் நிறைந்த நிரந்தரம் இல்லாத சிற்றின்ப வாழ்க்கையே பொருள் உடம்பு பெற்ற வாழ்க்கையாகும். 


*பொருளினால் உருவங்கள் மாற்றம் அடைந்து கொண்டே இருக்கும்.பொருள் உள்ள இடத்தில் அருள் இருக்காது.அருள் உள்ள இடத்தில் பொருள் தேவைப்படாது.* *அருள் வாழ்க்கையே அழியாத வாழ்க்கையாகும்* 


*அருள் பெறில் துரும்புமோர்* *ஐந்தொழில் புரியுந்*

*தெருளிது வெனவே செப்பிய சிவமே* !


*அருளறிவு ஒன்றே அறிவு மற்றெல்லாம்*

*மருளறிவு என்றே வகுத்த மெய்ச் சிவமே* !


*அருட்சுகம் ஒன்றே அரும்பெறற் பெருஞ்சுகம்*

*மருட்சுகம் பிறவென வகுத்த மெய்ச் சிவமே!* 


என்பதை அருட்பெருஞ்ஜோதி அகவலில் வள்ளலார் பதிவு செய்துள்ளார்.


*அருள் வாழ்க்கை*


உயர்ந்த அறிவு பெற்ற மனித தேகம் எடுத்த ஆன்மாக்கள் மட்டுமே  அருள் பெற்று அருள்வாழ்க்கை வாழும் தகுதி பெற்ற ஆன்மாக்களாகும்.  *அருள் பெற்ற

உடம்பிற்கு அருள் தேகம் என்றும்* *ஆன்மதேகம் என்றும் ஒளிதேகம் என்றும் பெயராகும்.*

*ஆன்மாக்களின் தந்தையாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு *அருள் பூரணம் பெற்று* *ஆண்டவர் போல் தனிப்பெருங் கருணையுடன்* பிறப்பு இறப்பு இல்லாமல்.

தோற்றம் மாற்றம் இல்லாமல்.

நினைப்பு மறைப்பு இல்லாமல்.

பகல் இரவு எதுவும் தெரியாமல்.  *எக்காலத்தும் நிரந்தரமான நிலையான  பேரின்ப சித்தி பெரு வாழ்க்கையே அருள் வாழ்க்கையாகும். அவற்றிற்கு முத்தேக சித்தி என்றும்.மரணம் இல்லாப் பெருவாழ்வு என்றும் சொல்லப்படுகிறது.*  

அந்த உயர்ந்த இன்பத்தை பற்றி விளக்குவதற்கு வார்த்தைகளே கிடையாது.

எண்ணால் எழுத்தால் வார்த்தைகளால் சொல்ல இயலாது.

*அருள் உணர்வுகளால்* அனுபவித்துதான் தெரிந்து கொள்ள முடியும்


*அதே நேரத்தில் அந்த தேகத்திற்கு ஐந்தொழில் செய்யும் பதவி உயர்வும்*

*அதற்குண்டான அருள் ஆற்றலும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் வழங்கப்படுகிறது*


மேலே கண்ட *அருள் வாழ்க்கையும் ஐந்தொழில் வல்லபமும் பெற்று வாழ்ந்துகொண்டு இருப்பவர்தான் நமது திருஅருட்பிரகாச வள்ளலார் என்பவராகும்.*  தான் பெற்ற பெரிய ஆன்ம இன்ப லாபத்தை எல்லா ஆன்மாக்களும் பெறவேண்டும் என்பதே வள்ளலாரின் பேராசையாகும். *என்போல் இவ்வுலகம் பெறுதல் வேண்டுவனே என்பார்*


அருள் பெற்ற ஆன்மாக்களின் தேகம் *அருள்தேகம் என்றும் ஞானதேகம் என்றும் சொல்லப்படுகிறது.* அந்த தேகத்தை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது.எந்த   தடையும் இன்றி எங்கு வேண்டுமானாலும் தன் விருப்பம்போல் நினைத்த மாத்திரத்தில் எங்கு வேண்டுமானாலும்  செல்லுவதற்கும் செயல்படுவதற்கும் அனுபவிப்பதற்கும்  தகுந்த அருள் ஆற்றல்  கொண்டதே அருள் தேகமாகும்.அருள் தேகத்திற்கு ஒளிதேகம் என்றும் சொல்லப்படும்.


*வள்ளலார் பெற்ற தேகத்தைப் பற்றி பதிவு செய்துள்ள பாடல் !*


காற்றாலே புவியாலே ககனம் அதனாலே

கனலாலே புனலாலே கதிராதி யாலே


கூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலே

கோளாலே பிறர் இயற்றும் கொடுஞ் செயல்களாலே


வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்

மெய்அளிக்க வேண்டும் என்றேன் விரைந்தளித்தான் எனக்கே


ஏற்றாலே இழிவென நீர் நினையாதீர் உலகீர்

என் தந்தைஅருட் பெருஞ்ஜோதி இறைவனைச்சார் வீரே.!  


மேலும் ஒருபாடல் !


ஆராலும் அறிந்து கொளற் கரியபெரும் பொருளே

அம்மே என் அப்பா என்ஐயா என் அரசே


காராலும் கனலாலும் காற்றாலும் ககனக்

கலையாலும் கதிராலும் கடலாலும் கடல்சூழ்


பாராலும் படையாலும் பிறவாலும் தடுக்கப்

படுதலிலாத் தனிவடிவம் எனக்களித்த பதியே


சீராலும் குணத்தாலும் சிறந்தவர் சேர் ஞான

சித்திபுரத்தமுதே என் நித்திரை தீர்ந் ததுவே.!


மேலே கண்ட பாடல்களில்  அருள் தேகத்தின் வல்லபத்தைப்பற்றி எளிய தமிழில் தெளிவாக விளக்கி பதிவு செய்துள்ளார். 


*அருள் வழங்கும் கடவுள் ஒருவரே அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்ற உண்மையை உலகிற்கு வெளிப்படையாக சுட்டிக்காட்டி  சொல்லியுள்ளார்.*

*காட்டியதோடு அல்லாமல் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையே தான் தங்கியிருந்த மேட்டுகுப்பத்திற்கு வரவைத்து அவருடன் கலந்து கொண்டவர்தான் வள்ளலார்.* 


*உயர்ந்த அறிவு பெற்ற மனித தேகம் எடுத்ததே இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப் பெற்று.ஊன  உடம்பான பொருள் உடம்பை அருள் உடம்பாக மாற்றம் அடையச் செய்ய வேண்டும் என்பதற்காகவே உயர்ந்த அறிவுள்ள மனித்தேகம் இறைவனால் கொடுக்கப் பட்டதாகும்.*


*சாகாக்கல்வி* 


மனிதகுலம் அருள் பெறும் வழியைத் தெரிந்து கொள்வதற்கு *சங்கம் சாலை சபையை வடலூரில் தோற்றுவித்துள்ளார்* சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்ற தலைப்பில் 1872 ஆம் ஆண்டு  வடலூரில்  தொடங்கியுள்ளார். சங்கத்தில் அங்கத்தினராக சேர்ந்து.வள்ளலார் சொல்லியுள்ள 

*இந்திரிய ஒழுக்கம்*.

*கரண ஒழுக்கம்.*

*ஜீவ  ஒழுக்கம்.*

*ஆன்ம ஒழுக்கம்*

போன்ற நான்கு ஒழுக்க நெறிகளை தடம் பிறழாமல் கடைபிடித்து அதில்

 *பயிற்சி பெறுவதற்காக சாகாக்கல்வி கற்கும் அருள் கல்வி கூடத்தை தொடங்கி வைத்துள்ளார்*. *அருள் பெற்றுக்கொள்ள விருப்பம் உள்ளவர்கள் அச்சங்கத்தில் பதிவு செய்து சட்ட திட்டங்களுக்கு கட்டுபட்டு  அவசியம் கற்று கொள்ள வேண்டும்*. 


*வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்*


சாகாத கல்வியே கல்வி ஒன்றே சிவம்

தான்என அறிந்த அறிவே

தகும்அறிவு 

மலம்ஐந்தும் வென்ற வல்லபமே

தனித்த 

பூரண வல்லபம்


வேகாத காலாதி கண்டுகொண்டு எப்பொருளும்

விளைய விளை வித்ததொழிலே

மெய்த்தொழில தாகும் இந் நான்கையும் ஒருங்கே

வியந்தடைந் துலகம்எல்லாம்


மாகாதலுற எலாம் வல்ல சித்தாகிநிறை

வான வரமே இன்பமாம்

மன்னும் இது நீ பெற்ற சுத்தசன் மார்க்கத்தின்

மரபு என்று உரைத்தகுருவே


தேகாதி மூன்றும் நான் தருமுன் அருள் செய்து எனைத்

தேற்றிஅருள் செய்தசிவமே

சிற்சபையின் நடுநின்ற ஒன்றான கடவுளே

தெய்வ நட ராஜபதியே.!  


மேலே கண்ட பாடல் வாயிலாக 1.சாகாக்கல்வி. 2.உண்மைஅறிவு. 3.மலத்தை வெல்லும்  தனித்த பூரண வல்லபம். 4.ஐந்தொழில் செய்யும் தொழிலே மெய்த்தொழில். 


மேலே கண்ட நான்கு வகையான மெய்பொருளைக் கற்கும் முறைகளையும் ஒருங்கே கற்று  காதல் கொண்டு எல்லாம்வல்ல சித்து வகைகள் யாவும் பெற்று.  நிறைவான பூரண வரம் பெற்று அனுபவிப்பதே பேரின்பமாகும்.

*பேரின்பத்தை பெறுவதற்கு கற்கும் கல்வியே சாகாக்கல்வி என்பதாகும்*.


சாகாக்கல்வி கற்கும் கலையை உலகிற்கு அறிமுகப் படுத்தியவர் வள்ளலார்.


உயர்ந்த அறிவுள்ள மனித தேகம் எடுத்துள்ள மக்கள் அருள்வாழ்க்கை வாழ்வதற்கு விருப்பமா ? பொருள் வாழ்க்கை வாழ்வதற்கு விருப்பமா ?  என்பதை அவரவர்களே விருப்பத்தோடு தேர்வு செய்து கற்கவேண்டும்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

9865939896.

வெள்ளி, 5 பிப்ரவரி, 2021

வடலூர் வள்ளலார் தோற்றுவித்த அமைப்புக்கள் !

 *வடலூரில் வள்ளலார் தோற்றுவித்த அமைப்புக்கள்*


வடலூர் வள்ளலார் தெய்வநிலையங்கள் என்ற பெயர் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை வைத்ததே தவிர வள்ளலார் வைக்கவில்லை. அந்த பெயர் சரியானதாக தோன்றவில்லை.

*சாதி சமயம் மதம் சார்ந்த பெயராகவே உள்ளது.*


*வள்ளலார் தோற்றுவித்த வடலூர் சங்கம். சாலை. சபை என்று பெயர் வைக்கலாம்*


உலக ஆன்மீக ஒற்றுமைக்காகவும்.உலக மனித சமுதாய முன்னேற்றத் திற்காகவும். 

உலக ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையின் உண்மையை வெளிப்படுத்தும் காரணத்திற்காகவும். *உலகில் உயர்ந்த அறிவுபெற்ற மனித சமுதாயம் மரணத்தை வென்று வாழவேண்டும் என்பதற்காகவும்*.சாதி சமயம் மதம் சாராத  மூன்று முக்கிய புதிய சுத்த சன்மார்க்க அமைப்புக்களை வடலூரில்  வள்ளலார் தோற்றுவித்துள்ளார் அவை

 1. *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்*.

2. *சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை* .

3. *சமரச சுத்த* *சன்மார்க்க சத்திய*

*ஞானசபை*  என்ற பெயரில் தான் அமைத்துள்ளார்.

மேலும் வடலூருக்கு அடுத்து நான்கு கிலோமீட்டர் தொலைவில்

வள்ளலார் *சித்திபெற்ற இடம் மேட்டுக்குப்பம்.*

*அதற்கு சித்திவளாக திருமாளிகை என்று பெயர் வைக்கப் பட்டுள்ளது.அங்கு வருடத்திற்கு ஒருமுறை மட்டும் திறக்கப்படுகிறது. அதற்கு திருவறை தரிசனம்  என்று பெயர் வைத்துள்ளார்கள்* இதுவும் வள்ளலார் சொல்லாத செயலாகும். என்பதை சன்மார்க்கிகள் கவனத்தில் கொள்ளவேண்டும்.


*முக்கிய இடங்கள்*


வள்ளலார் பெயரைச் சொல்லக்கூடிய முக்கிய இடங்கள்.

*1 .மருதூர்*

*2. சின்னகாவணம்*

*3.சென்னை*

*4.கருங்குழி*

*5.வடலூர்*

*6.மேட்டுக்குப்பம்.*

என்னும் ஆறு இடங்கள் மிகவும் முக்கியமான இடங்களாகும்.


*சங்கம் சாலை சபை என்ற மூன்று அமைப்புக்களும் வடலூரில் தலைமை இடமாகக்கொண்டு செயல்பட வேண்டும்* என்பதே வள்ளலாரின் முக்கிய குறிக்கோளாகும். இந்த மூன்று அமைப்புக்களுக்கும் *தலைவர் யார்? என்றால் இவைகளை படைத்த *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே தலைவராகும்.*

*செயல் தலைவர் யார்? என்றால் திருஅருட்பிரகாச வள்ளலார் ஆவார்கள்.*


*வள்ளலார் பாடல்*


உலகமெலாம் போற்ற *ஒளி வடிவனாகி*

இலகஅருள் செய்தான் இசைந்தே

 - திலகன் என

*நானே சன்மார்க்கம் நடத்துகின்றேன்* நம்பெருமான்

தானே எனக்குத் தனித்து*!


என்னும் பாடல் வாயிலாக தெளிவாக வள்ளலார் வெளிப் படுத்தியுள்ளார்.


வள்ளலார் தோற்றுவித்துள்ள சங்கம். சாலை.

ஞானசபைக்கு தலைவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகும். *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆணைப்படி சன்மார்க்க சங்க கொள்கைகளை உலகம் முழுவதும் கொண்டு செல்பவர் திருஅருட்பிரகாச வள்ளலார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.*


*வடலூர் வந்தால் என்ன பெறலாம்*


வருவார் அழைத்து வாடி வடலூர் வடதிசைக்கே வந்தால் பெறலாம் *நல்ல வரமே* என்று  வள்ளலார் அழைக்கின்றார்.

வடலூருக்கு வந்தால் நல்ல வரம் பெறலாம்  என்கிறார்.நல்ல வரம் என்றால் என்ன ? என்பதை இதுவரையில் எவரும் தெரிந்து கொள்ளவில்லை என்பது நிதர்சனமான உண்மையாகும். 


*வடலூர் வருபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது*.


உலகில் *அருள் வழங்கும் ஒரே இடம் வடலூர்* என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். *அருள் வழங்குபவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.  அருள் பெறுவது சுத்த சன்மார்க்க சங்கத்தை சார்ந்தவர்கள் மட்டுமே. ஆதலால் தான் *சாகாதவனே சன்மார்க்கி* என்று அழுத்தமாக சொல்லி உள்ளார். *நல்ல வரமான அருள் வழங்கும் இடமே வடலூர் என்பதால் வருவார் அழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே என்று அன்பு வேண்டுகோள் வைக்கிறார்*. 


*உலகம் எல்லாம் போற்றக் கூடிய ஒரே இடம் வடலூர்*


*வள்ளலார் பாடல் !*

உலகம் எலாம்  தொழ உற்றது எனக்கு உண்மை ஒண்மை தந்தே


இலக எலாம் படைத்து ஆருயிர் காத்தருள் என்றது என்றும்


கலகம் இலாச் சுத்த சன்மார்க்க சங்கம் கலந்தது பார்த்

திலகம் எனாநின்றது உத்தர ஞான சிதம்பரமே.!


என்னும் பாடல் வாயிலாக *உத்தர ஞான சிதம்பரம்* என்றும் வடலூருக்கு பெயர் மாற்றம் செய்து தெரிவிக்கின்றார்.


*வடலூருக்கு வருபவர்கள் வள்ளலார் சொல்லியுள்ள இந்திரிய.கரண.ஜீவ.ஆன்ம ஒழுக்கங்களை முழுமையாக பின்பற்றி கடைபிடித்தால் மட்டுமே* *வடலூரில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு     நல்ல வரமான அருளைப் பெற்று மரணத்தை வெல்லமுடியும்.* 


மேலே கண்ட உண்மைத் தெரியாமல் உலகியல் பற்று உள்ளவர்கள் வடலூருக்கு வந்து தருமச்சாலையில் உணவு உட்கொண்டுவிட்டு ஜோதி தரிசனம் பார்த்துவிட்டு செல்வதால் எந்த பயனும் இல்லை.


*வடலூர் வருபவர்கள் உண்ணுவது.உறங்குவது.ஜோதிதரிசனம் பார்ப்பது சென்றுவிடுவது இதுதான் நடைமுறையில் உள்ளது.* வள்ளலார் சொல்லியுள்ள ஒழுக்க நெறிகளை முழுமையாக எவரும் கடைபிடிக்காததால் எவராலும் மரணத்தை வெல்ல முடியவில்லை.


 வள்ளலார் சொல்லி உள்ள *ஜீவகாருண்யம் என்னும் உயிர்இரக்கம்*.

 *இறைவனை தொடர்பு கொள்ளும் சத்விசாரம்* என்னும் இரண்டும் சுத்த சன்மார்க்கத்தின் இரண்டு கண்கள் போன்றதாகும்.


*உயிரையும் உடம்பையும் அழிக்காமல் காப்பாற்றும் ஒரே இடம் உத்தரஞான சிதம்பரம் என்னும் வடலூராகும்*.


*மேலும் ஆன்ம இன்ப லாபம் பெற வேண்டிய ஒரே இடம் வடலூராகும்* 


உலக வாழ்க்கைக்கு தேவையான *மண்ணாசை.*

*பெண்ணாசை.*

*பொன்னாசை* போன்ற உலக ஆசைகளில் பற்று

உள்ளவர்கள் வடலூருக்கு  வருவதால் *அருள் பெறுவதற்கோ  *ஆன்ம இன்ப லாபம் பெற்றுக் கொள்வற்கோ* *மரணத்தை வெல்லுவதற்கோ* *துளிகூட வாய்ப்பே இல்லை.*


*சுத்த சன்மார்க்கத்தை சார்ந்தவர்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய கட்டளைகள்.* 


*ஞானசரியை* (மரணம் இல்லாப் பெருவாழ்வு) என்னும் தலைப்பில் 28 பாடல்கள் பதிவு செய்துள்ளார்

அதில் வள்ளலார் சொல்லியவாறு வாழ்க்கையில் தடம் பிறழாமல் கடைபிடிப்பவர்கள் மட்டுமே வடலூரில் வந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு. *நல்ல வரமான அருளைப்பெற்று* மரணத்தை வென்று *மரணம் இல்லாப் பெருவாழ்வு வாழமுடியும்.   மேலும் என்றும் அழியாத.எதனாலும் அழிக்க முடியாத  *பேரின்ப சித்திப் பெருவாழ்வு பெற்று கடவுள் நிலை அறிந்து அம்மயமாகி வாழ்வாங்கு வாழலாம்*.


*தற்போது வடலூர் உள்ள சூழ் நிலைகள் மிகவும் வேதனை அளிக்கிறது.*


வள்ளலார் தோற்றுவித்த சங்கம்.சாலை.சபை வள்ளலார் சொல்லியவாறு எதுவும் முறையாக நடைபெறவில்லை என்பது உலகமே அறியும்.


*கிராமவாசிகளின் ஆதிக்கம்*


அக்காலத்தில் ஒவ்வொரு ஊரிலும் அந்த அந்த கிராமத்தில் எந்த சாதிக்காரர்கள் அதிகம் உள்ளார்களோ அவர்களில் ஒருவரை நியமனம் செய்து பரிவட்டம் கட்டி அவர் தலைமையின் கீழ்  மாரியம்மன் விழா மற்றும் ஆன்மீக விழா எடுப்பது வழக்கம்.


அதே போல் வள்ளலார் தெய்வநிலையங்கள்  கிராமவாசிகளிடம் சிக்கி தவித்துக் கொண்டுள்ளன.


வள்ளலார் பிறந்த மருதூர் தங்கி இருந்த கருங்குழி வாழ்ந்த இடம். சங்கம் சாலை.சபை அமைத்த வடலூர். மற்றும் சித்திபெற்ற  இடமான மேட்டுகுப்பம் யாவும்  இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன. ஆட்சித்துறையின் துணை கொண்டு அந்த அந்த கிராமவாசிகளின் ஆக்கிரப்பின் கீழ் செயல்பட்டு வருகின்றன.


உதாரணத்திற்கு வள்ளலார் பிறந்த மருதூரில் மருதூர் கிராமவாசிகளின் தலைமையில் சன்மார்க்க கொடியேற்றி விழா எடுக்கப்படுகிறது.


கருங்குழியில் கருங்குழி கிராமவாசிகளின் தலைமையில் சன்மார்க்க கொடியேற்றி விழா எடுக்கப்படுகிறது.


வடலூரில் வடலூர் கிராமவாசிகளின் தலைமையில் சன்மார்க்க கொடியேற்றி விழா எடுக்கப்படுகிறது..


மேட்டுகுப்பத்தில் மேட்டுக்குப்பம் கிராமவாசிகளின் தலைமையில் சன்மார்க்க கொடி ஏற்றி விழா எடுக்கப்படுகிறது.


அடுத்து வள்ளலார் சித்திபெற்ற தினத்தன்று வடலூரில் இருந்து மேட்டுகுப்பத்திற்கு ஊர்மக்கள் புடைசூழ மாலை மரியாதையுடன்  பல்லக்கு எடுத்து பரிவாரங்களுடனும்.மேலதாளங்கள் முழங்க ஆட்டம் பாட்டம் கொண்டாடத்துடன் எடுத்துவந்து திருவறை தரிசனம் திறக்கும் நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது.


இவைகள் யாவும் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கைகளுக்கு நேர் விரோதமானது.என்பதை மக்கள் எப்போது புரிந்து கொள்ளப் போகிறார்களோ தெரியவில்லை.


*வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !*


சாதி சமயச் சழக்கெலாம் அற்றது


சன்மார்க்க ஞான சபைநிலை பெற்றது


மேதியிற் சாகாத வித்தையைக் கற்றது


மெய்யருட் சோதிஎன் உள்ளத்தில் உற்றது 


அற்புதம் அற்புதமே அருள் அற்புதம் அற்புதமே  என்று வடலூரை போற்றி புகழ்ந்து உலகுக்கு பறை சாற்றுகிறார்.


யார் வேண்டுமானாலும் கொடி ஏற்றி விழா எடுக்கட்டும் தவறில்லை.

வள்ளலார்  சொல்லிய சாதி.சமயம்.மதங்கள் அற்ற சுத்த சன்மார்க்க கொள்கையை காற்றில் பறக்க விட்டுவிட்டு அவரவர்கள் விருப்பம் போல் சாதி. சமய. மத ஆச்சார சங்கற்ப விகற்பங்களுடன் நடைபெற்று வருகிறது என்பதை சுத்த சன்மார்க்கிகளால் ஏற்றுக் கொள்ளவே முடியாது. 


எல்லா தவறுகளுக்கும் குற்றங்களுக்கும்  இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை நிர்வாக அதிகாரிகளே காரண காரியமாக துணையாக இருந்து செயல் பட்டுக்கொண்டு வருகிறார்கள் என்பதே உண்மையாகும்.


இவற்றை தட்டிக் கேட்கவும் சரிசெய்யவும் துணிவு தைரியம்  இல்லாமல் சன்மார்க்கிகள் மனம் வெந்து நொந்து  வேதனைப்பட்டுக் கொண்டு உள்ளார்கள். 


*வடலூர் திருந்தினால் உலகமே திருந்திவிடும்*


வடலூர் திருந்தினால் உலகமே திருந்திவிடும் என்ற உண்மை தெரிந்துதான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வடலூரை தேர்வு செய்து திருவருட்பிரகாச வள்ளலார் முன்னிலையில்  சங்கம் சாலை.சபையைத் தோற்றுவித்துள்ளார்.

*கொலை புலை தவிர்க்க வேண்டும்*


வள்ளலார் கொள்கையில் மிகவும் முக்கியமானது.

உயிர்க்கொலை செய்யக்கூடாது.

புலால் உண்ணக்கூடாது என்பதாகும்.


*மருதூர்.*

*கருங்குழி* 

*வடலூர்.*

*மேட்டுகுப்பம்* 

இந்த நான்கு கிராமங்களிலும் வள்ளலார் சொல்லியவாறு உயிர்க்கொலை செய்யாமலும்.புலால் உண்ணாமலும் வாழக்கூடிய மக்களை அக்கிராமவாசிகள் உருவாக்கினால் அவர்கள் காலில் விழுந்து வணங்க தயாராக உள்ளோம்.


மேலும் வள்ளலார் காட்டிய அருட்பெருஞ்ஜோதி வழிபாடு தவிர வேறு எந்த சமய மத தெய்வ வழிபாடுகளும் நடைபெற அனுமதி வழங்ககூடாது என்ற உண்மையை உணர்ந்து அக் கிராமவாசிகள் கடைபிடிக்க வேண்டும்.


அவ்வாறு அவர்கள் செய்தால் வள்ளலார் தோற்றுவித்த சங்கம்.சாலை.

சபையை அவர்களே முன்நின்று தலைமை ஏற்று நிர்வாகம் செய்ய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே துணையாக இருப்பார் என்பது சத்தியம். 


*சத்தியவான் வார்த்தை நிச்சயம் நடக்கும்*


சத்தியவான் வார்த்தை இது தான்உரைத்தேன் கண்டாய்

சந்தேகம் இலை இதனில் சந்தோடம் உறுவாய்


இத்தினமே அருட்சோதி எய்துகின்ற தினமாம்

இனிவரும் அத் தினங்கள்எலாம் இன்பம்உறு தினங்கள்


சுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும் எலா உலகும்

தூய்மைஉறும் நீஉரைத்த சொல்அனைத்தும் பலிக்கும்


செத்தவர்கள் எழுந்துலகில் திரிந்துமகிழ்ந் திருப்பார்

திருவருட்செங் கோல் எங்கும் செல்லுகின்ற தாமே.!


வள்ளலார் சொல்லியவாறு எல்லாம் செயல்கூடும் என் ஆணை அம்பலத்தே எல்லாம் வல்லான் தனையே ஏத்து ! 


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

9865939896.