செவ்வாய், 21 ஜூலை, 2015

பிராணாயாமம் ;;;PART 1...

பிராணாயாமம் ;;;PART 1...
பிராணாயாமம் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய இருப்பினும் அவை அனைத்தையும் கற்றுக்கொண்ட பின் அல்லது புரிந்து கொண்டபின்தான் பிராணாயாமப் பயிற்சி செய்ய வேண்டும் என்ற விதியினை எவரும் சொல்லவில்லை என்றே தோன்றுகிறது.
ஏனென்றால் எண்ணிலடங்காப் பிராணாயாம முறைகள் மற்றும் அதன் சாரம் பிற உத்திகளோடு ஒன்றுபடுத்தியோ அல்லது வேறுபடுத்தியோ பார்ப் பதற்கும் கூட ஏதாகிலும் ஒன்றையாவது பின்பற்றி கற்றபின்பே மற்றவைகளைப் பற்றி ஒரு முடிவுக்கு வர முடியும். எந்தப் பிராணாயாமம் எந்த அடிப்படைக்குள் வருகிறது. எந்த முறை சாதகர்களுக்குச் சிறந்தது என்பதை விட, எது ஏற்றது எனவும் அவரவர்கள் நிலைக்கு ஏற்ப குருவின் தீர்மானமே சிறந்ததாகும் என பல சித்த புருஷர்கள் ஒன்று போலக்கூறுவதை அறியலாம்.
ஜாதகத்தில் கோள் நிலைகள் சாதகனின் பிறப்புக் காலத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாய் இருப்பது போலவும் கர்ப்பகாலம் நீக்கி வரும் திசைகளில் காலக் கணக்கு போலவும் ஒவ்வொரு சாதகனுடைய பல்வேறு பிறவிகளில் கற்றது போக மற்றதைத் தொடர்வது அல்லது எதை எதிலி ருந்து தொடர்வது என்பதையும் குருவால் தீர்மானிக்கப் படுவதாகும்.
திறமையான சாதகர்கள் கற்றுக்கொள்ளும் போதே தனக்குரிய வழிமுறைகளை காலப்போக்கில் உணர்ந்து கொள்வான். அவ்வமயம் அவனுக்குப் பலப்பல உண்மைகள் புரியத்துவங்கும்.
பிராணாயாமம் என்பது ஒரு வெறும் மூச்சுப்பயிற்சி மட்டுமே என்று பலரும் நினைத்துக் கொண்டிருப்பது தவறாகும். இயல்பான சுவாசத்திலிருந்து அது வேறுபடுகிறது என்பதோடு வேறுபடுத்தப்படுகிறது ஒழுங்குபடுத்தப்படுகிறது. மேம்படுத்தப்படுகிறது. சக்தியூட்டப்படுகிறது. மேலும் கால நிர்ணயம் மற்றும் அவை ஒரு கணிதத்திற்கு உட்படுகிறது என்றெல்லாம் கூறலாம்.
ஓடுதல், குதித்தல், தாண்டுதல், நீந்துதல், பளு தூக்குதல், அதிக நிறை உள்ளவற்றை நகர்த்துதல் நீண்ட நேரம் களைப்படையாமல் பணிபுரிதல் ÷ பான்றவற்றை எந்தவிதப் பயிற்சியும் இல்லாத சாதாரண ஒரு மனிதனை விட யோகப்பயிற்சியினை பெற்ற ஒருவரின் மேற்கண்ட செயல்பாடுகள் மிகச்சுலபமாகவும் விரைவாகவும் அதிசயத் தக்க வகையில் செய்யக்கூடியதாகவும் இருக்கும்.
உதாரணமாக பயிற்சி பெற்ற ஒரு சர்க்கஸ்காரன் (வித்தைக்காரன்) செய்யும் சாகசங்களைப் பயிற்சியற்ற மற்ற ஒருவர் செய்ய இயலாது என்பதைப் போல இயல்பான மூச்சை பிராணாயாமத்தின் மூலம் வகைப்படுத்தப்படும் போது மனிதனின் உடல் ஆற்றல் மற்றும் உள்ள ஆற்றல் பல மடங்கு பெருகுகிறது. எனவே பிராணாயாமம் என்பது ஆற்றல்களைப் பெருக்கும் ஒரு வித்தையும் ஆகும்.
இந்த வித்தையினை மூச்சுக்கலை, சரகலை, வாசிக்கலை, என பல பெயர்களை கொண்டதாகும். பிராணாயாமம் என்பதற்கு அடக்குதல் என்பது ஒரு பொதுப்பெயர், பொதுச்சொல் ஆகும். சாதகாணீன் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வருவதாகும்.
சற்குரு ஸ்ரீ பதஞ்சலி மஹரிஷி பகன்ற பிராணனும் பிராணாயாமமும்
பிராணன்
மனிதன், தான் இயங்குவதற்கு இப்பிரபஞ்சத்திலிருந்தே சக்தியினை மூச்சாக இழுத்துக கொள்கிறான், அந்தச் சக்தி தான் பிராணண் எனக் கூறப் படுவதாகும். உயிரற்ற ஒருவனால் மூச்சை இழுத்து வெளிவிட முடியாது. எனவே, உயிர் என்பது வேறொன்றாகிறது. எனவே பிராணண் என்பதும் உயிர் என்பதும் ஒன்றல்ல. வேறு வேறு என்பது புலனாகிறது.
பிராண இயக்கத்திற்குப் பிராண வாயு தேவைப்படுகிறது. உடல் இயக்கத்திற்குப் பிராணனும், அப்பிராணனுக்கு பிராணவாயுவும், என இம்மூன்றும் சேர்ந்து தொழிற்படுவதே மனித உடலியக்கமாகும். இது எல்லா உயிர்களுக்கும் பொதுவானதாகும்.
உயிர்
உயிர் என்பது பற்றி விஞ்ஞானம் இதுவரை ஒரு சரியான முடிவுக்கு வரவில்லை அல்லது வரமுடியவில்லை.
உடல் இயங்கும் வரை உயிர் இருப்பதாவும், அது இயக்கமற்று நின்று போனவுடன் உயிர் போய்விட்டதாகவும் கூறுகின்றனர். அதை மரணம் என்று கூறும் முன்பாக, அம்மரணத்தை நிகழாதிருக்கச் செய்யமுடியவில்லை.
உயிரைத் தனியாக அடையாளம் கண்டுவிட்டால், உடலில் அது எங்கிருக்கிறது என முடிவு செய்துவிட்டால் அது வெளிப்போகாமல் தடுத்திடலாம் அல்லவா?
உடலுள்ளுறுப்புகள் செயல்திறமை குறைபாட்டில் அல்லது செயல்திறன் முற்றும் கோளாறுடையவர்கள் இறக்கும் நிலைக்குப்போய் பிழைத்து விடுவதும் மிகச்சிறிய கோளாறு காரணமாக இறப்பதும் ஏன்?
மரணத்தை கிளினிக்கல் டெத், பிரைன்டெத் என்று கூறுகிறது விஞ்ஞானம்
உடல்
ஒரு சிசு கற்பத்தில் தோன்றியது முதல் இயல்பான வளர்ச்சிக்குப்பின் வயிற்றினின்றும் வெளிவரும் வரை அச்சிசு வேறு ஒரு உயிரைச் சார்ந்தே வளர்கிறது. வெளிவந்த பின் சுவாசிக்கத்தொடங்கியது முதல் தன் உடல் வளர்ச்சிக்கு வித்திடுகிறது எனலாம்.
அதன் உடல் வளர்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக நடைபெறுகிறது., அதற்கு வளர்சிதை மாற்றப்பண்புகளின் இயக்க இயல்பும் அடிப்படையாகிறது. இந்த மாற்றப்பண்புகளுக்கு உணவும் காற்றும் தொடர்ந்து தேவைப்படுகிறது.
இவ்வுடல் வளர உயிரின் பங்கு என்ன? உயிருக்குப் பரிமாணம் உண்டா? விஞ்ஞானத்தில் இதற்கு சரியான பதிலில்லை. வளர்ச்சி ஒரு இயற்கை நியதி என்று மட்டும் தற்கால அறிவியல் கூறுகிறது.
பிராணண்
காற்று (வாய்வு-ஆக்சிஜன்) என்ற ஒரு குதிரையின் மீது சவாரி செய்து கொண்டிருப்பதே பிராணனாகும். இப்பிரபஞ்ச உயிர்கள். அசையும் அணுப் பொருட்கள் என அனைத்து உயிரிகளுக்கும் இன்றியமையாத்தேவை காற்று Oதுதூஞ்ஞுண ஆகும்.
இக்காற்று. உயிரிகளுக்கு தக்கவாறு எடுத்துக் கொள்ளும் அளவு மாற்றம் இருக்கலாம், ஆனால் அது இன்றி பிராணண் செயல்பட முடியாது. உயிரை ஜீவன் என்று கூறப்புகுவோமெனில், பிராணண் ஜீவசக்தி என்று கூறுதல் சரியாகும்.
மனிதனில் பிராணண்
புலன் உணர்வுகள் தூண்டப்படுவதற்கும், அதற்கேற்றபடி செயல்படவைப்பது பிராணனே. அறிவு, புத்தி, சித்தம், மனம், உடலனுபவம் அனைத்தும் பிராணண் இயங்குவதாலயே இயக்கம்பெறுகிறது.உணரப்படுகிறது.
கோள்களில் பிராணண்
பிரபஞ்சத்தில் எண்ணற்ற கோள்களின் இந்த இயக்கத்திற்கும் காற்று, மழை, மின்னல், இடியோசை என அத்தனை இயற்கையின் இயக்க நிகழ்வுகளுக்குள்ளும் பிராணணின் செயல்பாடு. அல்லது பிராணச்சலனமே காரணமாகும்.
பிரபஞ்சத்தோற்றத்தில் பிராணண்
ஏதுமற்ற ஒன்றிலிருந்து எதுவும் தோன்ற முடியாது. எத்தோற்றத்திற்கும் ஒரு (முன்) இருப்பு இருந்ததாலயே தோற்றம் நிகழ்ந்தது. நாம் குறிப்பிடும் முக்கிய கோள்கள். மில்க்கிவேஸ், கேலக்ஸி அனைத்தும் உருவாகும் முன்பு காண முடியாத அணுப்பிரமாணமாக, பரமாணுக்கூறாக இருந்தது என்கிறது வேதம்.
இறைவனின் சித்தத்தால் அணுக்கள் அத்தனையும் உயிர்ப்பெற்று பிராண சக்தியினை வெளிப்படுத்தத் துவங்கியது. அணுச்சலனமும், அணுக்கூட்டச் சேர்க்கை யால், பிரபஞ்சத்தில் (வெட்டவெளியில்) திடப்பொருட்களும், அத்திடப் பொருட்களின் திரட்சியின் காரணமாக வெடிப்புகளும், அவ்வெடிப்பின் பிரிவுகளே கோள்கள் எனவும், அவ்வெடிப்பின்போது ஏற்பட்ட ஒளி, வெப்பம், தொடர்சலனம், ஈர்ப்பு போன்ற பல நிகழ்வுகளை அதனுள்ளிருந்து, நிகழ்வுறச்செய்ததும், என அனைத்துமாய் இருப்பது பிராணணே.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு