செவ்வாய், 28 ஜூலை, 2015

மரணத்தை வென்று வாழ முடியும் !

மரணத்தை வென்று வாழ முடியும் !

பட்டம் ,பதவி.பாதுகாப்பு ,அதிகாரம்,புகழ் எல்லாம் போச்சு !

மனித வாழ்க்கையில் எவ்வளவு படிப்பு,பதவி,பட்டம் ,ஆராய்ச்சி .புகழ் .பாதுகாப்பு .அனைத்தும் இருந்தும் .தன்னுடைய உடம்பில் உள்ள உயிரைக் காப்பாற்றி பாதுகாக்க முடியாமல் போய் விடுகின்றது .

இறுதியில் உயிர் நின்று விடுகின்றது மரணம் வந்து விடுகின்றது .

தன்னுடைய் உடம்பையும் உயிரையும் பாதுகாக்க முடியும் என்ற அணு ஆராய்ச்சியில் ஈடுபட்டு உயிரையும் உடம்பையும்,மரணம் வராமல்  காப்பாற்றிக் கொண்டவர் நமது தமிழ் நாட்டில் தோன்றிய அருளாளர் .''திரு அருட்பிரகாச வள்ளல்பெருமான்'' அவர்கள் .

வள்ளல்பெருமான் கொள்கைகளையும் அவருடைய உடம்பையும் உயிரையும் காப்பாற்றும் திசுக்களின் அணு ஆராய்ச்சிகளையும்,அறிவியல் ,வேதியல் நுணுக்கங்களையும்  இன்று வரை மக்கள் சிந்திக்கவும் இல்லை .பின் பற்றவும் இல்லை.

பெரிய மனிதர்கள் என்று போற்றப்படும் அனைவருமே இறுதியில் மரணத்தை தழுவி விடுகின்றார்கள்.

மரணத்தை வெல்ல முடியும் என்ற உண்மையைக் கண்டறிந்து அதன்படி,உயிரையும் உடம்பையும் காப்பாற்றி ,அழிக்காமல் அழியும் திசுக்களை அழிக்காமல் ,ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்றி  வாழ்ந்து காட்டி மரணத்தை வென்றவர் தான்  வள்ளல்பெருமான்.

உலகில் எவரும் கண்டுபிடிக்காத ,கண்டு பிடிக்க முடியாத ,உடம்பில் உள்ள உயிரை,உயிரை இயக்கம் ஆன்மாவை ,அதற்கு துணையாக இருக்கும் பஞ்ச பூத அணுக்களை அழிக்காமல் பாதுகாக்கும்  .அணு ஆராச்சியைக் கண்டு பிடித்தவர் தமிழ் நாட்டில் பிறந்து மரணத்தை வென்று வாழ்ந்து கொண்டு இருப்பவர் தான்

''நமது திரு அருட்பிரகாச வள்ளல்பெருமான்''.

சாகும் கல்வியை தடை செய்து ,சாகாக் கல்வியைப் போதித்தவர் .

வள்ளலார் மக்களுக்கு சொல்லிய கற்றுக் கொடுத்த சாகாக் கல்வியை .நமது முன்னாள் குடியரசு தலைவர் ''டாக்டர் அப்துல் கலாம்'' அவர்கள் கற்று இருந்தால் அவரால் மரணத்தை வென்று இருக்க முடியும்.

ஏன் என்றால் அவர் தன்னலம் கருதாமால மக்களுக்காக ,வருங்கால மாணவர்களுக்காக நல்வழியைக் கற்றுக் கொடுத்தவர்.வள்ளலார் சொல்லிய ஜீவ காருண்ய ஒழுக்கத்தைக் கடைபிடித்தவர் .

சாகாக் கல்வி என்னும் அணு ஆராய்ச்சியில் அவர் ஈடு பட்டு இருந்தால் நிச்சயம் அவரால் மரணத்தை வென்று இருக்க முடியும்.இவ்வளவு பெரிய சோகம் நமக்கு வந்து இருக்காது.

நான் ஒரு முறை அவருக்கு கடிதம் எழுதி இருந்தேன்.வள்ளலார் எழுதிய திருஅருட்பாவை நீங்கள் அவசியம் படியுங்கள் அதில் சாகாக் கல்வியைப் பற்றி அணு ஆராய்ச்சி வழியாகத் தெளிவாக எழுதி வைத்துள்ளார் உங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என்று எழுதி இருந்தேன்.

அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.அவர் படித்து இருந்தால் அவரால் மரணத்தை வென்று இருக்க முடியும் என நான் நினைக்கிறேன்.

ஏன் என்றால் அவரால் முடியும்..அந்த அளவிற்கு ஒழுக்கம் ,நேர்மை,சத்தியம்,விடா முயற்ச்சி,தன்னம்பிக்கை ,மக்கள் மீது அவர் வைத்துள்ள அன்பு,தயவு கருணை  அனைத்தும் அவரிடம் இருந்தது .

அவருடைய இழப்பு இந்திய மக்களுக்கும் .ஏன் உலக அணு ஆராய்ச்சி யாளர்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு என்பது அனைவரும் அறிந்ததே.

மீண்டும் அவர் மனித தேகம் எடுத்து மக்களுக்கு பயன் பட வேண்டும் என்று எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டிக் கொள்கிறேன்.

சாகாத கல்வித் தரம் அறிதல் வேண்டும் என்றும்
வேகாத கால் உணர்தல் வேண்டும் உடன் --சாகாத்
தலை அறிதல் வேண்டும் தனி அருளால் உண்மை
நிலை அடைதல் வேண்டும் நிலத்து.

கனம் உடையோம் கட்டு உடையோம் என்று நினைத்து இங்கே
களித்து இறுமாந்து இருக்கின்றீர் ஒளிப்பிடமும் அறியீர்
சினம் உடைய ''கூற்று '' வரும் செய்தி அறியீரோ
செத்த உமது இனத்தாரைச் சிறிதும் அறியீரோ
தினகரன் போல் சாகாத தேகம் உடையவரே
திருவுடையார் என அறிந்தே சேர்ந்திடுமின் நீண்டே
மனம் மகிழ்ந்து கேட்கின்ற வரம் எல்லாம் எனக்கே
வழங்குதற்கு  என் தனித் தந்தை வருகின்ற தருணம் தானே !

என்னும் பாடல் வாயிலாக வள்ளல்பெருமான் மக்களுக்கு தெரியப் படுத்தி உள்ளார் .

வள்ளலார் எழுதிய ''திருஅருட்பா'' முழுவதும் ''சாகாத கல்வி என்னும் மரணத்தை வெல்லும்'' வழியைப் போதிப்பதே யாகும்.

இனிமேலாவது மக்கள் அறிந்து தெரிந்து புரிந்து வாழ வேண்டும்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு