திங்கள், 20 ஜூலை, 2015

உயிர்க் கொலை செய்யாதீர்கள் ! துன்பத்திற்கு ஆளாகாதீர்கள் !

உயிர்க் கொலை செய்யாதீர்கள் ! துன்பத்திற்கு ஆளாகாதீர்கள் !

உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் இறைவனால் படைக்கப் பட்டதாகும்.
ஆன்மா வாழ்வதற்கு இறைவனால் கட்டிக் கொடுக்கப்பட்ட வாடகை வீடுதான் உடம்பாகும்.

வாடகை வீட்டில் குடி இருக்கும் உயிருக்கும் உடம்பிற்கும் எந்த தீங்குகளும் ,கொலைகளும் செய்வது பெரிய குற்றமாகும்.

உன்னுடைய வீட்டில் குடி இருக்கும் உன்னை கொலை செய்தால் நீ தாங்கிக் கொள்வாயா ? ஏற்றுக் கொள்வாயா ? சும்மா விட்டு விடுவார்களா ? சிந்திக்க வேண்டும்.

நம்முடைய உயிர்போல்தான் மற்ற எல்லா உயிர்களும் என்பதை,உயர்ந்த அறிவுள்ள மனிதன் தெரிந்து கொள்ள வேண்டாமா ?

இந்த உணமையைத் தெரியாமல் அறிவுள்ள மக்கள் வாய் பேசாத உயிர்களைக் கொன்று அதன் மாமிசத்தை உண்ணுகின்றார்கள் .

மாமிசம் உண்பதால் வரும் தீமைகளைப் பற்றி,எந்த ஞானிகளும் தெளிவாக சொல்லவில்லை .

அதனால் மக்கள் ஞானிகளின் போதனைகளைக் கேட்டு தவறு செய்து கொண்டு வருகின்றார்கள்.

இறைவன் உண்மையை அறிந்து இருந்தால் அப்படி சொல்லி இருக்க மாட்டார்கள் .ஏன் என்றால் அவர்களுக்கு இறைவன் அருள் கிடைக்கவில்லை .ஆதலால் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை,அறிவு தெளிவு இல்லாமல் மக்களுக்கு போதித்து உள்ளார்கள்.

வள்ளல்பெருமான் வந்துதான் உண்மை நிலையை மக்களுக்கு போதித்து உள்ளார் .,ஏன் என்றால் இறைவன் அருளைப் பெற்றவர் .இறைவனை நேரிலே கண்டவர் மரணத்தை வென்றவர்.

ஆன்மா .உயிர்,உடம்பு யாரால் படைக்கப்பட்டது என்ற உண்மையை தெரிந்து .எந்த உயிர்களையும் அழிக்கும் உரிமை யாருக்கும் இறைவன் கொடுக்கவில்லை என்பதை அறிந்து,தெரிந்து உணர்ந்து மக்களுக்கு உண்மையைத் தெரியப்படுத்துகின்றார்.

உயிர்க்கொலை செய்வதாலும்.அதன் மாமிசத்தை உண்பதாலும் அளவில்லா துன்பங்களும்,துயரங்களும்,அச்சம் ,பயம் போன்ற வேதனைகளும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.

ஆதலால் எந்த மதத்தை சார்ந்தவர்களும் சமயத்தை சார்ந்தவர்களும்,சாதியைத் சார்ந்தவர்களும் ,உயிர்களை கொல்லாமல்,அதன் புலாலை அதாவது மாமிசத்தை உண்ணாமல் ,மனிதர்களாக வாழுங்கள்.

மிருகங்களாக மாறிவிடாதீர்கள் .

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு