செவ்வாய், 21 ஜூலை, 2015

பிரபஞ்சம் பேரண்டம்--PART 2....

பிரபஞ்சம் பேரண்டம்--PART 2....
பகுத்தறிவுள்ள யாரும் பரிணாம தத்துவவாதிகளுடன் வாதிட முடியாது. ஆனால் நாம் இன்னும் ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்.அது என்ன ஒவ்வொரு விரிவுக்கும் முன்னால் ஒரு ஒடுக்கம் உண்டு என்பதுதான் அது. விதைதான் மரத்திற்கு தந்தை.அந்த விதைக்கு இன்னொரு மரம் தந்தையாக இருந்திருக்கிறது. விதை என்ற நுட்பமான உருவத்திலிருந்துதான் பெரிய மரம் வெளிவந்திருக்கிறது.பின்னால் மனிதனாகப் போகின்ற ஒரு சிறிய உயிரணு, உண்மையில் ஒடுங்கிய நிலையிலுள்ள மனிதனே.அது விரிவடைந்து முழு மனிதனாகிறது.இதை மட்டும் தெளிவாக புரிந்து கொண்டால் நமக்கும் தத்துவவாதிக்கும் இடையே கருத்து வேற்றுமை இருக்காது.ஆகவே சூன்யத்திலிருந்து எதுவும் தோன்ற முடியாது என்பதை நாம் தெரிந்து கொள்கிறோம்.எல்லாம் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கும்.இந்த ஒடுக்கமும் விரிவும் இயற்கை முழுவதிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.மிகவும் சிறிய உயிர் முதல் முழுமையடைந்த மனித வெளிப்பாடுவரை எல்லா பரிணாம வளர்ச்சியுமே,வேறு ஏதோ ஒன்றின் ஒடுக்கமாகவே இருக்க வேண்டும்.எதனுடைய ஒடுக்கம்?எது ஒடுங்கியிருந்தது என்பதுதான் கேள்வி.அது கடவுள்தான் என்ற நம் கருத்து தவறு என்று பரிணாம தத்துவ வாதிகள் கூறுவார்கள் ஏன்?.ஏனெனில் கடவுள் அறிவு வடிவானவர் என்று நாம் சொல்கிறோம்.ஆனால் பரிணாம வளர்ச்சியில் அறிவு மிகவும் தாமதமாக அல்லவா தோன்றுகிறது என்று பரிணாமவாதிகள் சொல்கி றார்கள். மனிதனிடமும் உயர் நிலையிலு ள்ள மிருகங்களிடமும்தான் அறிவு காணப்படுகிறது.எனவே உயிர் தோன்றிப் பலகோடி வருடங்கள் கழிந்த பின்னரே,இந்த அறிவு தோன்றியிருக்கிறது என்றும் பரிணாமவாதிகள் சொல்கிறார்கள்.மரம் விதையிலிருந்து தோன்றி மறுபடியும் விதைக் குள்ளே ஒடுங்குகிறது.ஆரம்பமும் முடிவும் ஒன்றாகத்தான் இருக்கிறது.பூமி அதன் காரணத்திலிருந்து வெளிவந்து அதற்குள்ளே ஒடுங்கிவிடுகிறது.ஆரம்பம் தேரிந்தால் முடிவும் தெரிந்துவிடும்.அதே போல் முடிவு தெரிந்தால் ஆரம்பமும் தெரிந்து விடும். அப்படியானால்,ஒரு முனையில் முதல் உயிரணுவும், மற்றொரு முனையில் நிறைநிலை (முழுஅறிவு) அடைந்த மனிதனும் உள்ள பரிணாம வளர்ச்சிதொடரைஎடுத்துக்கொள்ளுங்கள். இந்தத் தொடர் முழுவதும் ஒரே உயிர்தான்.பரிணாம வளர்ச்சியில் நிறை மனிதன் இருப்பதால்,தொடக்கத்திலும் நிறைமனிதன் தான் இருந்திருக்க வேண்டும்.ஆகவே மிக உயர்ந்த அறிவின் ஒடுக்கமே முதல் உயிரணுவாக இருக்கவேண்டும்.அது நமக்கு தெரியாமல் இருக்கலாம்.ஆனால் அந்த ஒடுங்கிய அறிவு சிறிதுசிறிதாக தன்னை விரிவுபடுத்தி,கடைசியில் நிறைமனிதனாக வெளிப்படுத்துகிறது.இதை கணித முறையில் நிரூபிக்க முடியும்.சக்தியின் அளவு எப்போதும் மாறுவதில்லை என்ற நியதி உண்மையானால் (Energy can neither be created nor it is destroyed, however energy can be converted from one form energy to any other form of energy) புதிதாக எந்த சக்தியையும் உருவாக்க முடியாது, ஒருசக்திதான் இன்னொரு சக்தியாக மாறுகிறது),முதலில் ஓர் இயந்திரத்தில் எதையும் செலுத்தாமல் அதிலிருந்து எதையும் வெளிக்கொணர முடியாது.அப்படியானால் இந்த அறிவு என்பது என்ன? ஏற்கனவே அது முதல் உயிரணு வுக்குள் ஒடுங்கி இருந்திருக்கா விட்டால்,திடீரென்று சூன்யத்திலிருந்து தோன்றியிருக்க வேண்டும் .இது அபத்தம். ஆரம்பத்தில் இந்த அறிவு ஒடுங்கியிருந்தது.முடிவில் அது முற்றிலும் விரிந்து நிற்கிறது.ஆகவே பிரபஞ்சத்தில் வெளிப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கின்ற அறிவு முழுவதுமே,பிரபஞ்ச தோற்றத்திற்கு காரணமான முதல் கருவில் அடங்கியிருந்த அறிவின் விரிவே ஆகும்.பிரபஞ்சம் முழுதும் பரவி நிற்கும் இந்த அறிவைத்தான் கடவுள் என்கிறோம்.வேறு எந்தப்பெயரால் வேண்டுமா னாலும் அழையுங்கள். ஆரம்பத்தில் இருந்தது. இந்த எல்லையற்ற அறிவுதான் என்பது நிச்சயம்.பிரபஞ்சம் முழுவதும் நிறைந்த இந்த அறிவு, முதல் கருவில் ஒடுங்கிநின்று,பின்னர் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு விரிவடைந்து கடைசியில்,முக்தன் என்று அழைக்கப் படும் நிறைமனிதனாக பரிணமிக்கிறது.பிறகு இந்த அறிவு மூலகாரணத்திற்குள்ளே மீண்டும் ஒடுங்கி விடுகிறது. அதனால்தான் எல்லா சாஸ்த்திரங்களும் நாம் வாழ்வது, இயங்குவது,இருப்பது எல்லாம் அவருள்தான் என்றுசொல் கின்றன.நாம் கடவுளிலிருந்து வந்தோம் கடவுளிடமே திரும்பிசெல்கிறோம். பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கும் இந்த அறிவையே தத்துவவாதிகள் கடவுள் என்று சொல்கிறார்கள்.மனித அறிவைத் திருப்தி செய்கின்ற பிரபஞ்சத்தைப் பற்றிய கருத்து இரு ஒன்றுதான்.ஒரே வார்த்தையில் சொல்லப்போனால் நாம் அவரிலிருந்தே தோன்றினோம்.அவரிலேயே வாழ்கிறோம், அவரிடமே திரும்புவோம். .....சுவாமிவிவேகானந்தர்;

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு