செவ்வாய், 14 ஜூலை, 2015

நம்மைப் பற்றிக் கொண்டு உள்ளது !

நம்மைப் பற்றிக் கொண்டு உள்ளது !

காமம், கோபம்,  லோபம்,  மோகம்,  மதம்,  மாச்சரியம்,
கொலை .  இந்த எழுவரும்,அவர்களுக்கு உற்ற உறவானவர்களும் ,ஒவ்வொரு மனிதர்களையும் பற்றிக் கொண்டு உள்ளனர் .

இந்தப் பற்றை நீக்கிக் கொண்டு வாழ்பவனே சிறந்த மனிதன்.என்பதை வள்ளல்பெருமான் விளக்கமாக பதிவு செய்துள்ளார்.

காமப் உட் பகைவனும் கோப வெங் கொடியனும்
கனலோப முழு மூடனும்
கடுமோக வீணனும் கொடு மதம் எனுந் துட்ட
கண்கெட்ட ஆங்காரியும்
ஏமம் அறு மாச்சரிய விழலனும் கொலை என்
இயம்பிய பாதகனும் இவ்
எழுவரும் இவர்குற்ற உறவான பேர்களும்
எனைப் பற்றிடாமல் அருள்வாய்

1,உட்பகைவன் ..காமம்
2,வெங்கொடியன்...கோபம்
3,முழு மூடன்...லோபம்
4,வீணன் ..மோகம்
5,கண்கெட்ட ஆங்காரி ...மதம்
6,விழலன் ...மாச்சரியம்
7,பாதகன் ....கொலை .

மேலே உள்ள ஏழு கொடிய குற்றவாளிகளும் ஆன்மாவைப் பற்றிக் கொண்டு உள்ளன்.மேலும் அதற்குத் துணையான உறவினர்களும் பற்றிக் கொண்டு உள்ளனர் .

இவர்களை எப்படி விரட்டுவது ?

இந்த பற்றுகளை நீக்க வேண்டுமானால் ஜீவ காருண்ய ஒழுக்கத்தைக் கடைபிடித்து ,அம்பலப் பற்றை பற்றவேண்டும்.அதாவது அருட்பெருஞ்ஜோதியை தொடர்பு கொள்ள வேண்டும்.

பற்று அற்றான் பற்றினை பற்றி இடல் வேண்டும்
பற்று அற்றால் அன்றி பலியாது .

பற்றிய பற்று அத்தனையும் பற்று அற விட்டு அம்பலப் பற்றே பற்றுமினோ என்றும் இறைவீரே !

வள்ளல்பெருமான் ஆன்மாவைப் பற்றியுள்ள பற்றுகள் அனைத்தையும் பற்று அற விட்டு வாழ்ந்ததால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஏற்றுகொண்டு தன்னை .அருட்பெருஞ்யாக மாற்றிக் கொண்டார்.ஐந்தொழில் வல்லப்பத்தையும் தந்தார்.

நாமும் அப்படி வாழலாம்

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு