திங்கள், 27 ஜூலை, 2015

உலகில் உள்ள மந்திரங்கள் அனைத்தும் பொய்யே !

உலகில் உள்ள மந்திரங்கள் அனைத்தும் பொய்யே !

சிவாயநம .என்றும் நமசிவாய என்றும்,ஓம் என்றும்.அல்லா என்றும்.பரமபிதா என்றும்.ஆதி சக்தி என்றும்.பராசக்தி என்றும்.சரணம் கச்சாமி என்றும்,

இப்படி பல வர்ணங்களையும்,வண்ணங்களையும் சேர்த்து ஒன்று,..இரண்டு,..மூன்று,..ஐந்து ,..ஆறு ...எட்டு ,1O,பத்து,..13.பதின்மூன்று,,14,பதினைந்து,.16,.பதினாறு..,
24,இருபத்திநான்கு,..முதலிய சங்கையில் மந்திரங்களாக அமைத்து வழங்கி வருவிக்க விட்டு அதை உண்மை என்று நம்பி மக்கள் பின் பற்றி வருகின்றார்கள்.

அந்த அந்த மந்திரங்களின் அர்த்தத்தை பிரித்தால் பலவாக விரியும்.

எல்லாமே சடப் பொருள் களான தத்துவத்தையே குறிக்கின்றது.உண்மையான கடவுளை குறிக்கப்பட வில்லை

எந்த சமய மதங்களும்,உண்மையான ஆன்மாவைப் பற்றியோ .உண்மையான இறைவனைப் பற்றியோ மந்திரங்ககளாக சொல்லவில்லை .அந்த மந்திரங்களை உச்சரிப்பதால் எந்த பயனும் கிடைப்பதில்லை என்பதை வள்ளல்பெருமான் தெளிவாக விளக்கம் தந்துள்ளார்.

வள்ளல்பெருமான் உண்மையான மகா மந்திரம் எதுவென்பதை மக்களுக்கு தெரிவித்துள்ளார் .

வள்ளல்பெருமான் சொல்லியது .;--

இத்தருணம் ஆண்டவர் எல்லாவற்றையும் நீக்கி எல்லோரும் மேலான இன்பத்தை அடையும் பொருட்டு ,முடிவான இன்ப அனுபவத்திற்குச் சாதக சகாயமான திருவருள் மகா வாக்கியத்தை (

தத் தமது உண்மையை வெளிப்படையாக காட்டும் மகா மந்திரத்தை .

ஆண்டவர் எனக்கு வெளியிட்ட அவ்வண்ணம் எனது மெய் அறிவின் கண் அனுபவித்து எழுந்த ,உண்மை அறிவு அனுபவ ஆனந்த இன்பத்தை ,நீங்கள் எல்லாவரும் என்போல் ஐயம் திரிபு மயக்கம் இன்றி அறிந்து கொள்ள வேண்டும்.

ஏன் சொல்லுகிறேன் என்றால் ;--என்னுள்ளே எழுந்து பொங்கிய ஆன்ம நேய ஓரிமைப் பாட்டு உரிமையினால் .உங்களுக்கு குறிப்பித்தேன்,குறிப்பிக்கின்றேன்..
குறிப்பிப்பேன் .

இது நமது ஆண்டவர் கட்டளை இட்டது யாதெனில் ;--நமக்கு முன் சாதனம் ''கருணை '' ஆனதினாலே ஆண்டவர் முதற் சாதகமான ,

''''அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங் கருணை   அருட்பெருஞ்ஜோதி !'''

என்னும் திரு மந்திரத்தை ,வெளிப்படையாக எடுத்துக் கொண்டார் .

அன்பு,தயவு,கருணை .அருள் என்பவை ஒரு பொருளையே குறிக்கும்.ஆதலால் பெரிய தயவு உடைய அறிவே பூரண இன்பமாம் .

அது ஒப்பற்ற பெருந்தயவு உடைய பேரறிவேயாம் ...இது இஃது வாச்சியார்த்தம் .என்கின்றார் .

இவ்வண்ணம் சாதனம் முதிர்ந்தால் முடிவான இன்ப அனுபவம் பெறுவதற்குத் தடையில்லை.

எனவே ஆண்டவரைப் பற்றி ஆண்டவரே வெளியிட்ட மகா வாக்கியமான .''அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி ..தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி '' என்னும் மகா மந்தரம்தான் உண்மையான மந்திரமாகும்.

இந்த மந்திரம் எல்லோருக்கும் பொதுவானது ..சாதி ,சமயம்,மதம் போன்ற எந்த கொள்கைகளுக்கும் சம்பந்தம் இல்லாதது.

அந்த மகா மந்தரத்தை தினமும் உச்சரித்து வந்தோமானால் .நமக்கு கிடைக்க கூடிய ஆற்றல் களுக்கும் மகிழ்ச்சிகளுக்கும் அளவே இல்லை .

ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதி என் உள்ளத்தே

நீதியிற் கலந்து நிறைந்தது நானும் நித்தியன் ஆயினன்
உலகீர்

சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தே சத்திய சுத்த சன்மார்க்க

வீதியில் உமைத்தான் நிறுவுதல் உண்மை விளம்பினேன் வம்மினோ விரைந்தே !

என்று மகா மந்திரத்தை தெரிந்து உணர்ந்து சொல்லுங்கள் உங்கள் வாழ்க்கை வளம் பெரும் என்று மக்களை அழைக்கின்றார்.

அடுத்து;--

ஆதியும் அந்தமும் இல்லதோர் அம்பலத்தாடும்
ஜோதி தன்னையே நினைமின்கள் சுகம் பெற விழைவீர்
நீதி கொண்டு உரைத்தேன் இது நீவீர் மேலேறும்
வீது மற்றைய வீதிகள் கீழ்ச் செல்லும் வீதி..

என்றும்  உண்மையான மகா மந்திரத்தின்  தன்மையைப் பற்றி சொல்லி ...இந்த மந்திரத்தினால் நீங்கள் மேன்மை அடைவீர்கள் .மற்றைய பொய்யான மந்திரங்களினால் கீழே இறங்கி துன்பம் அடைவீர்கள் .

உண்மையான மகா மந்திரத்தின் ஆற்றலையும் சக்தியையும் உணர்ந்து பின் பற்றி மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.  

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு