சனி, 25 ஜூலை, 2015

ஆன்மா தனித்து இருக்க வேண்டும் !

ஆன்மா தனித்து இருக்க வேண்டும் !

ஆன்மா என்பது ஒளியானது அந்த ஆன்மாவை இந்த உலகத்தில் வாழ்வதற்காக இறைவன் அனுப்பி வைக்கின்றார் .

ஆன்மா இந்த உலகத்தில் பல கோடி பிறவிகள் எடுத்து வாழ்ந்து இறுதியாக மனித தேகம் எடுத்து ,மேற்கொண்டு பிறவி எடுக்காமலும் இறந்து போகாமலும் வாழ்வதுதான் மனிதப் பிறவியின் நோக்கம் ,இறைவனின் சட்டம் .

ஆனால் ஆன்மா அழியாது உடம்பும் உயிரும் அழிந்துவிடும் .ஆன்மா யோகத்தின் பயனாக முக்தி அடைகின்றது என்றும் .மேலும் சொர்க்கம் கைலாயம் .வைகுண்ட பதவி அடைகின்றது என்றும் சமய மதங்கள் சொல்லுகின்றன .

ஆன்மா அழியாது என்பதும் அழிக்க முடியாது என்பதும்  எல்லோருக்கும் தெரியும் .

இதற்கு வள்ளல்பெருமான் வந்துதான் ஆன்மாவின் தன்மை என்னவென்றும் ,அது எங்கு இருந்து வந்தது என்றும்.ஏன் வந்தது என்றும் ,எப்படி வாழ்ந்தது என்றும்.அதன் இறுதி முடிவு என்னவென்றும்.அது எப்படி இறைவனிடம் செல்லமுடியும் என்பதை, ஓர் உண்மையான வழியைக் காட்டுகின்றார்.

இதுவரை சமய மதங்கள் சொல்லி வந்த பாதைக்கும்,வள்ளல்பெருமான் சொல்லிய பாதைக்கும் ந நிறைய வேறுபாடுகளும் வித்தியாசமும் மாறுபாடும் உள்ளன .

மனித தேகம் எடுத்த ஆன்மா பிறப்பு இல்லாமலும் .இறப்பு இல்லாமலும் .தன்னுடைய உயிரையும் உடம்பையும் ஆன்மாவின் தன்மைக்கு ஒளியாக மாற்றிக் கொண்டால் மட்டுமே இறைவன் இடத்திற்கு செல்லமுடியும் .

வேறு எந்த வழியாலும் செல்லமுடியாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார் .சொல்லியது மட்டும் அல்ல .அவரே வாழ்ந்து வழியும் காட்டி உள்ளார்

இதுவரையில் ஆணவம் மாயை,கன்மம்,போன்ற மலங்கள் ஆன்மாவைப் பற்றிக் கொண்டு உள்ளன.

இந்த மலங்களை ஒழுக்கத்தினாலும்,ஜீவ காருண்யத்தாலும் ,அதாவது சத் விசாரத்தாலும்,பரோபகாரத்தாலும் .விளக்க வேண்டும்

அப்படி விலகினால் மட்டுமே ஆன்மா இறைவனுடைய அருளைப் பெற்று ,தன்னுடைய ஊன உடம்பை ஒளியான ஒளி உடம்பைப் பெற்று எங்கு வேண்டுமானாலும் செல்லும் ஆற்றலைப் பெரும்.

இறைவன் எப்படி எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கின்றாரோ அப்படி ஆன்மாவும் எங்கும் நீக்க மற நிறைந்து இருக்கும் .அதுவே பேரின்ப வாழ்வு என்பதாகும்.

அதுவே மரணம் இல்லாப் பெருமாழ்வு என்பதாகும்.இறைவனுக்கு எப்படி பிறப்பு இறப்பு இல்லையோ அப்படி பிறப்பு இறப்பு இல்லாமல் வாழ்வதுதான் ஆன்மாவின்  இறுதி முடிவாகும்.

ஆன்மா உயிருடனும்,உடம்புடனும் மரணம் அடைந்தால்,அதன் வாழ்க்கையின் தன்மைக்குத் தகுந்தாற் போல்  பிறப்பு நிச்சயம் உண்டு.

ஆன்மா உயிரும் உடம்பும் எடுக்காமல் தனித்து இருக்க வேண்டும்.

ஆன்மா தன்னுடைய் அருள் ஆற்றலால் ஒளி உடம்பாக மாற்றாது வரை இந்த உலகத்தில் பிறந்து பிறந்து ,இறந்து இறந்து,பிறவிகள் எடுத்துக் கொண்டே  இருக்க வேண்டியதுதான் .

வேறு எந்த வழியாலும் ஆன்மா இந்த உலகத்தை விட்டு வெளியே செல்லவே முடியாது.இதுதான் இயற்கையின் சட்டம்.

ஆன்மா இந்த உலகத்தில் எத்தன்மையாக வந்ததோ ,அதே தன்மையாக தன்னை மாற்றிக் கொண்டு திரும்பிச் செல்ல வேண்டும் .

இதுதான் வள்ளல்பெருமானின் முடிந்த முடிவான உண்மையாகும் .

வள்ளல்பெருமான் சொல்லியதைக் கேட்டு அதன்படி வாழ்ந்தால் நிச்சயம் நன்மைப் பயக்கும்.

வையத்தீர் வானகத்தீர் மற்றகத்தீர் உமது
வாழ்க்கை எல்லாம் வாழ்க்கை என மதித்து மயங்காதீர்
மையகத்தே உறும் மரண வாதனையைத் தவிர்த்த
வாழ்க்கை அதே வாழ்க்கை என மதித்து மயங்காதீர்

மெய் அகத்தே விரும்பி இங்கே வந்திடுமின் எனது
மெய்ப் பொருளாம் தனித் தந்தை இத் தருணம் தனிலே
செய் அகத்தே வளர் ஞான சித்திபுரம் தனிலே
சித்தாடல் புரிகின்றார் திண்ணம் இதுதானே .

என்று தெளிவாக விளக்கம் தந்துள்ளார் .

மண்ணில் மறைந்தவர்களும்,வானத்தில் மறைந்தவர்களும்,மற்றும் எங்கு எங்கு ,எப்படி எப்படி மறைந்து இருந்தாலும் .அதுவெல்லாம் வாழ்க்கை என்பது அல்ல .

முத்தி என்பது வாழ்க்கை அல்ல ..சித்திப் பெறுவதே வாழ்க்கை

முத்தி என்பது நிலை முன்னுறு சாதனம்
சித்தி என்பது நிலை சேர்ந்த அனுபவம்

முத்திக்கும் சித்திக்கும் உள்ள வேறு பாட்டைப் புரிந்து கொள்ளவேண்டும்...

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு