வெள்ளி, 31 ஜூலை, 2015

சாதி,சமய மத சடங்குகள் விடவில்லை.!


சாதி,சமய மத சடங்குகள் விடவில்லை.!

முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல்கலாம் அவர்களையும் சாதி,சமய மத சடங்குகள் விடவில்லை.!

உலகில் கோடிக்கணக்கான மக்களின், மாணவர்களின் இதயங்களின் குடியிருக்கும் முன்னாள் குடியரசுத் தலைவர் ''அப்துல் கலாம் ''அவர்கள் .மேகலாயா தலைநகர் ஷில்லாங்கில் கடந்த திங்கட் கிழமை 27--7--2015.அன்று மாணவர்களின் பொதுக் கூட்டத்தில் பேசிக் கொண்டு இருக்கும் போதே மாரடைப்பால் மரணம் அடைந்தார் .

அங்கிருந்து அவரது உடல் ஹெலிகாப்டர் மூலம் செவ்வாய்க் கிழமை காலை அசாம் தலைநகர் கவுகாத்தி கொண்டு வரப்பட்டு .பின்னர் அங்கிருந்து விமானப்படை விமானத்தில் டெல்லி கொண்டு செல்லப்பட்டது.

டெல்லி பாலம் விமான நிலையத்தில் அப்துல்கலாமின் உடலுக்கு ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி ,துணை ஜனாதிபதி,ஹமீதுஅன்சாரி,பிரதமர் நரேந்திரமோடி ,மற்றும் தலைவர்கள்.அதிகாரிகள் மரபுகளை மீறி அஞ்சலி செலுத்தினார்கள்.

அதன் பிறகு அப்துல்கலாம் உடல் டெல்லி ராஜாஜி மார்க்கில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு மத்திய ஆட்சியாளர்கள் அரசியல் தலைவர்கள்,அரசு அதிகாரிகள்  பொதுமக்கள்  அஞ்சலி செலுத்தினார்கள் .

சொந்த ஊருக்கு கொண்டு சென்றனர் .

அப்துல்கலாம் ''இறுதிச்சடங்கை அவரது மதத்தின்'' அடிப்படையில் செய்வதற்கு அவர்களது உறவினர்களின் விருப்பத்திற்கு இணங்க,டெல்லியில் இருந்து விமானம் மூலம்,  மத்திய அரசு அனுமதியுடன் மதுரையில் உள்ள விமான நிலையத்தில் இறக்கினார்கள் .

அவரது சொந்த ஊரான ராமநாதபுரம் ராமேஸ்வரத்திற்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது .

விமானம் தரை இறங்கியதும்அதில் இருந்து அப்துல்கலாமின் உடல் வைக்கப்பட்டு இருந்த தேசியக்கொடி போர்த்தப்பட்ட கண்ணாடி பேழை இறக்கப்பட்டது.இந்திய அரசின் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையுடன் அப்துல்கலாமின் உடலை தமிழக கவர்னர் கே,ரோசய்யா ,தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன் ஆகியோர் பெற்றுக் கொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். .

 அதன் பிறகு அப்துல்கலாம் உடல் அங்கு இருந்து ராணுவ ஹெலிகாப்டர்
மூலம் ராமநாதபுரம் மாவட்டம் மணடபம் கடற்படை முகாமில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் இறக்கி வைக்கப்பட்டது. பொதுமக்கள் பார்வைக்காக அஞ்சலி செலுத்துவற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த தனி மேடையில் அப்துல்கலாம் உடல் வைத்துஅஞ்சலி செலுத்தினார்கள் .

ராமேஸ்வரம் பஸ்நிலையம் அருகில் உள்ள கிழகாடு மைதானத்தில் வைத்து,ஆட்சியாளர்களும் அரசியல் தலைவர்களும்,உயர் அதிகாரிகளும்,மற்றும் மாணவ மாணவியர்கள்,லட்சகணக்கான பொது மக்கள் அனைவரும் இறுதி மரியாதை செலுத்தினார்கள்.

அப்துல்கலாம் உடலை அடக்கம் செய்ய,அவரது வீட்டில் இருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ''பேய்கரும்பு'' என்னும் இடத்தில்  தமிழக அரசு சார்பில் 1-32,ஏக்கர் நிலம் ஒதுக்கித் தரப்பட்டுள்ளது. அந்த இடத்தில் பாரத பிரதமர் மோடிஅவர்கள் ,மற்றும் மத்திய ,மாநில அமைச்சர்கள்,அரசியல் தலைவர்கள்  .அதிகாரிகள் உறவினர்கள் இறுதி மரியாதை செய்து உடல் அடக்கம் செப்பய்ப்பட்டது.

சமய மத சடங்குகள் சம்பிரதாயங்கள் !

அப்துல்கலாம் அவர்கள் சாதி,சமயம்,மதங்களைத்  தாண்டி எவ்வுயிரும் ஒன்று என்று உணர்ந்து மக்களின் நலனுக்காக இடைவிடாது பாடுபட்டவர் என்பது உலகமே அறிந்த உஅனமையாகும்.

அப்துல்கலாம் விஞ்ஞானி மட்டும் அல்ல .அவர் ஒரு சிறந்த தேசபக்தர்.அவர் இந்திய நலனுக்காகவே இறுதி மூச்சு உள்ளவரை, நாட்டுக்காகவும்,நாட்டு மக்களுக்காகவும்,மேலும் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை எப்படி அமையவேண்டும் என்று மாணவர்களுக்காகவே அயராது உழைத்தவர்,.மாணவர்களின்  உயர்ந்த நோக்கத்திற்காக ,இந்தியாவின் வளர்ச்சிக்காக ''கனவுகான'' வைத்தவர் .சிறந்த ஆசிரியர் .சிறந்த பேச்சாளர் உலகமே போற்றும் உத்தமர் .ஒழுக்கம் நிறைந்த உயர்ந்த பண்பாளர் .அளவில்லா உயர்ந்த பட்டங்களைப் பெற்றவர் .

அப்துல்கலாம் மரணம் அடைந்ததும் ,அவருடைய பெருமையும் புகழையும் உணர்ந்து  ,மத்திய அரசும்  ,மாநில அரசும் பொறுப்பு ஏற்றுக் கொண்டு அவருக்கு  மத்திய அரசு சார்பில் எல்லா மரபுகளையும்,முறைகளையும் மரியாதைகளையும்,மரபுகளையும் மீறி .எல்லோரும் மதிக்கத் தக்க வகையில் மத்திய மாநில அரசு தரப்பில் முறையாக மக்கள் எதிர்ப் பார்க்காத வகையில் மரியாதை செய்துள்ளது பாராட்டுக் குறியதாகும்

அதற்காக நம்முடைய மத்திய அரசையும் மாநில அரசையும் இந்திய மக்கள் பாராட்டியே ஆக வேண்டும்.

சாதி ,மதம் சமயம் என்ற கட்டுப்பாடு இல்லாமல் அப்துல்கலாம் அவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தியும் .அவரது உடல் மதத்தின் அடிப்படையில் ஆச்சார சங்கற்பங்களில் சிக்கிக் கொண்டுள்ளது .

பொது உடமை யாக்கப்பட்ட அவரின் உடலை அவரது உறவினர்கள் மதத்தின் வழியில் அவரது வீட்டிற்கு கொண்டு சென்று இறுதி சடங்குகள் செய்யப்பட்டது.மிகவும் வேதனைப் படக் கூடிய ஒன்றாகும்.

அரசு உடமை யாக்கப்பட வேண்டிய அவரது உடல் அவரது மதத்தின்
அடிப்படையில்.மதக் கொள்கையின் அடிப்படையில்  அவரது உறவினர்கள் அவரது இல்லத்திற்கு கொண்டு சென்றனர் ..கொண்டு சென்றாலும் பாரவாயில்லை சாதி,சமய ,மத சடங்குகள் செய்து இறுதியில் அரசிடம் ஒப்படைத்துள்ளார்கள்.

இப்படி இருந்தால் சாதி ,சமய மத நல்லிணக்கம் எப்படி வரும்.சாதி,சமயம்,மதம் எப்படி ஒழியும்.

அப்துல்கலாம் அவர்கள் ''யாதும் ஊரே யாவரும் கேளீர்'',என்று உலகம் முழுவதும்  குரல் கொடுத்தவர்.சாதி,சமயம்,மதம் அற்ற ''திருக்குறளை'' மிகவும் கையாண்டவர் அவர் எங்கும் நான் இஸ்லாம் மதத்தை சார்ந்தவன் என்று பெருமையாக சொன்னவர் இல்லை. நான் ஒரு இந்தியன் என்று சொல்வதிலே பெருமைக் கொண்டவர் .

வாய்ப்பேசாத,பேசத்தெரியாத, எதிர்த்து போராட முடியாத ,உணர்வு உள்ள உயிர்களை உயிரைக் கொலை செய்து அதன் புலாலை உண்ணும் மதம் இஸ்லாம் மதமாகும் .

அப்துல்கலாம் அவர்கள் இஸ்லாம் மதக் கொள்கையைத் தாண்டி புலால் உண்ணாமல் தாவர உணவை உட்கொண்டு வாழ்ந்தவர் ..

மதக்கொடி !

தேசியக் கொடியைப்  போர்த்தி, அரசு மரியாதையுடன் கொண்டுவந்த அப்துல்கலாம் அவர்கள் உடலுக்கு,அவரது வீட்டிற்கு கொண்டு சென்று ,தேசியக் கொடியை அகற்றி விட்டு அவரது மதக் கொடியைப் போர்த்தி மதச்சடங்குகள் செய்து கொண்டு வந்த காட்சி மக்களை அதிர்வு அடையச் செய்துள்ளது.

மக்கள் மதங்களை விட்டாலும், மதங்கள் மக்களை விடுவதில்லை

இறுதியில் மதமும் அதனுடைய சடங்குகளும் விட்டபாடில்லை என்பதை நினைக்கும் போதுதான் வள்ளல்பெருமான் சொல்லிய உண்மைகள் புலனாகிறது.

சாதியும்,சமயமும்,மதமும்,ஒவ்வொரு ஆன்மாவிலும் ஆழமாக பதிவாகி விட்டது.ஆகவேதான் வள்ளல்பெருமான் .

சாதியும் மதமும் சமயமும் பொய் என
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி ...என்றும்

எங்குலம் எம் இனம் என்பது தொண்ணுற்று ஆறு
அங்குலம் என்றருள் அருட்பெருஞ்சோதி ...என்றார் வள்ளலார் .

வள்ளலாரின் பாடல் ;--

சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே
சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே
ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர்
அலைந்து அலைந்து வீணே அழிதல் அழகலவே
நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த
நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர் அவர் தாமே
வீதியிலே அருட்ஜோதி விளையாடல் புரிய
மேவுகின்ற தருணம் இது கூவுகின்றேன் உமையே !

எத்தனை தலைவர்கள் வந்தாலும், போதித்தாலும், மக்கள் சாதி ,சமய மதத்தின் ஆச்சார சங்கற்ப கொளகைகளை விட்டபாடில்லை.

என்றைக்கு வள்ளலார் சொல்லிய கருத்துக்களை கொளகைகளை மக்கள் பின்பற்றி வாழ்கிறார்களோ அப்போதுதான் சாதி,சமயம்,மதம் என்ற பேய் மக்களை விட்டு அகலும்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு