வெள்ளி, 31 ஜூலை, 2015

என்னைப் படைத்த இறைவா !

என்னைப் படைத்த இறைவா !

இறைவா நான் எங்கு செல்ல வேண்டும் என்பது எனக்குத் தெரியவில்லை .

நான் கீழே செல்லவா ? அல்லது மேலே செல்லவா ?

கீழே சென்றால் அதற்கு மரணம் என்று பெயர் .மேலே சென்றால் மரணம் இல்லை என்பது தெரிந்து கொண்டேன் .

மண் எல்லாவற்றையும் தாங்குகிறது என்று சொல்லுகிறார்கள் .அதில் எனக்கு உடன்பாடு இல்லை.

என்னைத் தாங்கிக் கொண்டு உள்ளது ஆன்மா என்பதை உணர்ந்தேன் .

எல்லா உயிர்களையும் ஆன்மாதான் தாங்கிக் கொண்டு உள்ளது என்ற உண்மையை அறிந்தேன்.

உயிர் இல்லாத பொருள் கீழ் நோக்கி செல்கின்றது .

உயிர் உள்ளது யாவும் மேல் நோக்கியே செல்கின்றது.

உயிருக்கும் ஆன்மாவிற்கும் எடை இல்லை என்பதை அறிந்தேன்.

உடம்பிற்கு எடை உண்டு என்பதை அறிந்து கொண்டேன்

எடை இல்லாத உடம்பு மேல் நோக்கி செல்லும் .

எடை உள்ள உடம்பு கீழ் நோக்கி செல்லும்.

எடை உள்ள உடம்பை எடை இல்லாமல் ஆக்கும் வழியை சொல்லித் தரல் வேண்டும்.

கருவிகளை தாங்கி வாழும் ஆன்மா கருவிகள் இல்லாமல் வாழும் வகை அறிந்து கொண்டேன்.

கருவிகளுக்கு எடை உண்டு .ஆன்மாவிற்கும் உயிருக்கும் எடை இல்லை என்பதை அறிந்து கொண்டேன்/.

எடை உள்ள உடம்பை, எடை இல்லாத உடம்பாக மாற்றிக் கொள்வது எப்படி ?

ஒளிக்கு எடை இல்லை ,அதுபோல் உடம்பையும் ஒளியாக மாற்றிக் கொண்டால் எடை இல்லை என்பதை அறிந்து கொண்டேன்..

எடை உள்ள உடம்பை எடை இல்லாமல் மாற்றிக் கொண்டால் எங்கு வேண்டுமானாலும் தடை இல்லாமல் செல்லலாம் .என்பதை அறிந்தேன்

ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்றிக் கொண்டால் அதற்கு மரணம் இல்லை யென்பதை அறிந்து கொண்டேன் .

ஒளி என்பது வெளிச்சம் என்பது அல்ல .அது ஆற்றல் மிகுந்த அருள் ஒளி என்பதை அறிந்தேன்

அது சூடும் தரும் ஒளி அல்ல அது சுடாத ஒளி என்பதை அறிந்தேன்

கருவிகளைக் கொண்டு எரியும் ஒளி அல்ல .எந்தக் கருவிகளும் இல்லாமல் எரியும் ஒளி என்பதை அறிந்தேன் .

அருளைப் பெற்றால் உடம்பை எடை இல்லாமல் மாற்றிக் கொள்ளலாம் என்பதை அறிந்தேன் .

உயிர்கள் இடத்தில் இரக்கமும் .கடவுள் இடத்தில் அன்பும் செலுத்தினால் அருள் கிடைக்கும் என்பதை அறிந்து கொண்டேன் .

இரக்கமும் அன்பும் இயற்கையாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டேன்.

ஈரமும் அன்பும் கொண்டு இன்னருள் பெற்று இறவாமல் வாழும் வகையை அறிந்தேன்

எங்கே கருணை இயற்கையில் உள்ளதோ அங்கே விளங்கும் அருள் என்பதை அறிந்தேன் .

உயிருள் யாம் எம்முள் உயிர் இவை உணர்ந்தே உயிர் நலம் பரவுக என்பதை அறிந்து கொண்டேன் .

அறிவு என்பது எங்கு உள்ளது என்பதைத் தேடினேன் .

அருள் அறிவு ஒன்றே அறிவு மற்ற எல்லாம்
மருள் அறிவு என்பதை அறிந்தேன் .

அருள் நிலை ஒன்றே அனைத்தும் பெரும் நிலை என்பதை அறிந்தேன் .

அருள் வடிவே ஒளி வடிவம் என்பதை தெரிந்து கொண்டேன் .

அருள் அமுதை உண்டால் ஒளி வடிவம் பெறலாம் என்பதை அறிந்து கொண்டேன் .

ஒளி வடிவம் பெற்றால் மரணம் இல்லை என்பதை தெரிந்து கொண்டேன் .

அருளைப் பெருவதற்கு உன்னுடைய அருள் வேண்டும் என்பதை தெரிந்து உம்மை வேண்டுகின்றேன் .

அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்

ஆருயிர்க்கு எல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்.

எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே நினது அருட் புகழை இயம்பி இடல் வேண்டும்

தப்பேது நான் செய்யினும் நீ பொறுத்தால் வேண்டும் .தலைவா நினைப் பிரியாத நிலைமையும் வேண்டுவனே .

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.   

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு