வியாழன், 23 ஜூலை, 2015

ஆண் பெண் உறவு கொள்வது எப்படி !

பகலில் ஆண் பெண் உறவு கொள்ளக் கூடாது !

பெண்கள் ஆண்கள் உடல் உறவு எப்படி கொள்ள வேண்டும் என்பதை வள்ளல்பெருமான் விளக்கமாக விளக்கி உள்ளார் .

பகலில்;-- காலைப் புணர்ச்சி ..பகல் புணர்ச்சி ...இரவு முன் புணர்ச்சி இல்லாது இருத்தல் வேண்டும்.

பகலில் உடல் உறவு கொள்வதால் உடலில் உள்ள அணுக்கள் சோர்வு உற்று உடம்பை பாதிக்க செய்யும் .பகலில் உள்ள வேலைகளை செய்யமுடியாமல் திசுக்கள் சோம்பல் உண்டாக்கி சுறு சுறுப்பு குறைந்து மந்தம் உண்டாக்கும் .

இரவு 10-00 மணிக்கு மேல் கணவன் மனைவி உடல் உறவு வைத்துக் கொள்ள வேண்டும்.

இரவில் இருட்டில் இருக்க கூடாது சிறிது வெளிச்சம் அவசியம் வேண்டும் .

தேக சம்பந்தம் செய்வதற்கு முன் சுமார் பத்து நிமிடம் மனத்தை தேக சம்மந்தத்தில் வையாது வெறு  இடத்தில் வைத்துப் பின் தேக சம்பந்தம் செய்வதற்குத் தொடங்குதல் வேண்டும்.

தொடங்கிய போது அறிவு விகற்பியாமல் --மனம் முதலிய கரணங்களின் சுதந்திரத்தோடு ,தேகத்திலும் கரணங்களிலும் ,சூடு தோன்றாமல் உடல் உறவு கொள்ள வேண்டும்.

இடது புறம் !

பெண்களை இடது புற சாய்வாகப் படுக்கவைத்து தேக சம்பந்தம் செய்ய வேண்டும் .

குழந்தை வேண்டும் என்பதை குறித்து தேக சமபந்தம் செய்ய வேண்டும்.

மற்ற நேரங்களில் சுக்கிலம் வெளியே வராமல் இருக்கத்தக்க உபாயத்தோடு தேக சம்பந்தம் செய்தல் வேண்டும்.

அந்த உபாயம் என்னவென்றால் ;--பிராணவாயுவை உள்ளேயும் அடக்காமல்,வெளியேயும் விடாமல் நடுவே உலாவச்செய்து உடல் உறவு கொள்ள வேண்டும்.

ஒரு முறை அன்றி அதன் மேலும் மேலும் செய்யப்படாது.

தேக சம்பந்தம் செய்தபின் தேக சுத்தி செய்து (குளித்துவிட்டு ) விட்டு படுக்கையில் அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்து விட்டு அமைதியாக படுத்து உறங்க வேண்டும்.

படுத்தல் ;--

எந்தக் காலத்திலும் எங்கு படுத்தாலும் இடது கைப் பக்கமாகவே படுத்து உறங்குதல் வேண்டும்.மூன்று அல்லது நான்கு மணிக்கு மேல் நித்திரை செய்யக் கூடாது.அதன்பின் விழித்துக் கொண்டு நல்ல சிந்திப்புடன் இருத்தல் வேண்டும்.

பகலில் உணவு உட்கொண்டு சிறிது நேரம் ஒய்வு எடுக்க வேண்டும்..எக்காரணத்தைக் கொண்டும் பகலில் நித்திரை செய்யக் கூடாது.

நான்கு நாளைக்கு ஒருதரம் உடல் உறவு கொள்ளலாம்...எட்டு நாளைக்கு ஒருதரம் கொள்ளலாம்.பதினைந்து நாளைக்கு ஒருதரம் கொள்ளலாம் .

அதற்குமேல் செய்தால் சுக்கிலம் ஆபாசப்பட்டு தானே கழியும்.

நான்கு நாளைக்கு ஒருதரம் செய்தால் சுக்கிலம் நெகிழ்ச்சி பட்டுச் சந்ததி விருத்தியைக் கெடுக்கும்.

எட்டு நாளைக்கு ஒருதரம் செய்தால் சுக்கிலம் நெகிழ்ச்சி பட்டு சந்ததி விருத்தியை பாதி அளவு குறைக்கும்.

பதினைந்து நாளைக்கு ஒருதரம் செய்தால் நல்ல அறிவுள்ள குழந்தைப் பிறக்கும்.

பதினைந்து நாளைக்கு ஒருதரம் உடல் உறவு கொள்வதே சிறந்த செயலாகும்.

மேற்படி சொல்லிய வண்ணம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் ,உடல் உபாதைகள் வராமல் நீண்ட ஆயுளுடன் வாழலாம்..நமக்கு வரும் துன்பங்கள் யாவும் தொலைந்து விடும்.

சுக்கிலத்தின் அளவு ;--

சுக்கிலம் அதிகம் வெளிப்பட்டால் அறிவு விளக்கம் குறைந்து விடும்.அருள் விளக்கமும் குறைந்து விடும்.

நாம் உண்ணும் உணவினால் மூன்று வகையான சுக்கிலம் உறபத்தியாகின்றது .சுக்கிலத்தின் அளவு இரண்டரை வராகன் எடை அளவு உள்ளதாய் இருக்கும் .

அதில் விஷம பாகமாகிய சத்தி ஒரு வராகன் எடை அளவு   ....சாதாரணம் என்னும் பூதமாகிய அறிவு ஒரு வராகன்  எடை அளவு ...அசாதாரண அமுதமாகிய விந்து அரை விராகன் எடை அளவு  ...ஆக மொத்தம் இரண்டரை வராகன் அளவாகும் .அதாவது இரண்டரை ஸ்பூன் அளவு என்று வைத்துக் கொள்ளுங்கள் .

மேலே கண்ட அளவு ,ஆண். பெண் இரண்டு பேரிடமும் சமமாகவே உள்ளன .

உடல் உறவின் போது கோசத்தின் முன் வருவது விஷம் என்னும் பாகமாகும்...இரண்டாவது வருவது பூதமாகிய பாகமாகும் .மூன்றாவது வருவது அமுதம் என்னும் பாகமாகும்.

புணர்ச்சி காலத்தில் விஷபாகமாகிய விந்து  வெளிப்பட்டால் தேக நஷ்டம் உண்டாகும்...பூதமாகிய விந்து வெளிப்பட்டால் வியாதி உண்டாகும்...அமுத பாகமாகிய விந்து வெளிப்பட்டால் சந்ததி (குழந்தை ) விருத்தி உண்டாகும்..

இறை சிந்தனையால் காலச்சக்கரம் போல் இறை உணர்வால் ஏக தேசத்தில் கோச உபஸ்தங்களில் (உறுப்புகளில் ) அமுத அமுதபாக நாடியை முன்னே தள்ளி ,விஷத்தையும்,பூதத்தையும்.பின்னே சேர்த்துக் உடல் உறவு கொண்டு கருத்தரிக்க செய்ய வேண்டும்.

இந்த ஞாயத்தால் இடைவிடாது புணர்ச்சிக் கொள்பவர்களுக்கு கர்ப்பம் உண்டாகாது .

மேலும் .விந்து வளம்,இடவளம்.வன்னி.கிருமி மோக விசேடம் ---இவற்றாலும் கர்ப்பம் உண்டாகாது.

சப்த தாதுக்களின் விபரம் ;--

ஆண்களிடத்தில் மூன்றும்  ....பெண்களிடத்தில் நான்கும் உள்ளன .

ஆணில் மூன்று யாதெனில் .

ஆகாசம் ...பிரகிருதி ..ஆன்ம உணர்ச்சி என்ற தாதுக்கள் மூன்றும் ஒருமித்துப் சுக்கிலமாகத் தடித்துக் கோசத்தின் (ஆண் உறுப்பில்)அடியில் செம்பரத்தம் பூ இதழ் மூன்றும் ஒன்றாக அடிக்கியது போல் இருக்கும்.

பெண்ணிடத்தில் ;--

பிருதிவி ..அப்பு..தேயு ..இயமானன் என்னும் வாயு ஆக நான்கு உள்ளது .அவை ஒருமித்துப் பல்லி முட்டைபோல் நாலு பாகமாகப் பிரிந்து ஒரே வண்ணமாய் யோனிக்குள் (பெண் உறுப்பில் ) இருக்கும்

ஆக இந்த ஏழு தாதும் கூடி ஒருமித்துச் சுக்கில சுரோணித சம்பந்தப்பட்டு உறவு கொள்ளும் போது,கரு உற்பத்தியாகி பிண்டமாகும் .இதுதான் சப்த தாது என்பதாகும்.

தாதுக்களின் பெயர் ;--

தோல் ..அஸ்தி....தசை...மூளை...சுக்கிலம் ..இரத்தம்...இரசம் .ஆக ஏழு ..

மேற்படி சத்துக்கள் ஆண் இடத்தில் உள்ள இடங்கள் ;--மூளை..தொப்புள் ..லிங்கத்தடி .ஆகிய மூன்று இடத்தில் உள்ளது .

பெண் இடத்தில் ;--மூளை...தொப்புள் ..லிங்கத்தடி ...உபஸ்தத் தடி ...ஸ்தனத்தின் கீழ் ..ஆக நான்கு இடங்களில் உள்ளது.

ஆண் பெண் புணர்ச்சிக் காலத்தில் இந்தச் சத்து சேர்ந்து வெளிப்பட்டால் கர்ப்பம் உண்டாகும்.

இடைவிடாமல் விந்தை விட்டவன் நொந்து கெட்டான் என்பது பழமொழியாகும் .....

அடிக்கடி தேக சம்பந்தம் கொள்ளும் போது.அமுத பாகமாகிய விந்து வெளிப்பட்டு .தாதுக்கள் மெலிவடைந்து உடம்பிற்கும் உயிருக்கும் சீக்கிரம் அழிவு உண்டாகும்  அதுதான் மரணம் என்பதாகும்.

நீண்ட ஆயுளுடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டுமானால் சுக்கிலத்தை விரையம் செய்யக் கூடாது என்கின்றார் நமது வள்ளல்பெருமான் .

ஆதலால் இந்த உடம்பை அலஷியம் செய்யாமல் பொன்னைப்போல் பாதுகாக்க வேண்டும் ..

மேலே கண்ட உண்மைகளை உணர்ந்து ஆண் பெண் .இல்லற வாழ்க்கையில் கடைபிடித்தால் இல்லறம் நல்லறமாக இயங்கும். நல்லறம் அருள் அறமாக மாறும் ...அருள் அறம் கடவுள் வாழும் இடமாக மாற்றம் அடையும் .

ஆன்மநேயன்  ஈரோடு கதிர்வேல்.

.   
6 கருத்துகள்:

10 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 6:51 க்கு, Blogger Hakim Bohari கூறியது…

எஉஇஎஉஃ

 
10 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 6:51 க்கு, Blogger Hakim Bohari கூறியது…

எஉஇஎஉஃ

 
27 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 4:04 க்கு, Blogger Arun Kumar கூறியது…

நன்பா சூப்பர்

 
27 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 10:02 க்கு, Blogger Kathir Velu கூறியது…

நன்றி வாழ்த்துக்கள்

 
27 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 10:16 க்கு, Blogger Arun Kumar கூறியது…

நன்பா சூப்பர்

 
26 டிசம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 7:08 க்கு, Blogger pasumai yugam கூறியது…

ஆண்மை குறைபாடு நரம்பு தளர்ச்சி குணமடைய ஆணுறுப்பு வளர்ச்சி பெற மூலிகை

நத்தைச்சூரி 50 கிராம்
ஓரிதழ்தாமரை 50
நீர்முள்ளி 50 கிராம்
ஜாதிக்காய் 50 கிராம்
நெருஞ்சி 50 கிராம்
அஸ்வஹந்தா 50 கிராம்
பூனைக்காலி 50 கிராம்
தண்ணீர் விட்டான் கிழங்கு 50கிராம் கருவேலம்பிசின்50
பாதாம்பிசின்50
ஆலவிதை 50
அரசவிதை50
நாகமல்லி இலை 50
சாலாமிசிரி 50
முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் நரம்பு தளர்ச்சி இவை அனைத்தும் குணமாகும்
கருஞ்சீரக எண்ணெய்
வெள்ளைஎள் எண்ணெய்
நாகமல்லி எண்ணெய்
மூன்றயும் கலந்து மூன்று மாதம் ஆண் உறுப்பில் தடவி வர ஆண் குறி நீளம் தடிமன் கிடைக்கும் பக்கவிளைவுகளற்றது பத்தியம் கிடையாது எங்களிடம் ஏற்றுமதி தரத்தில் கிடைக்கும் தொடர்புக்கு: 9600299123 Export quality

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு