நிவாரணம் ! எச்சரிக்கை !
நிவாரணம் ! எச்சரிக்கை !
மழை நீரால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு தமிழக அரசும் மத்திய அரசும் நிவாரண நிதி வழங்கி உள்ளது ,மேலும் வழங்க உள்ளது .
அந்தப்பணம் முறையாக மக்களுக்கும் ,நிவாரண பணிக்கும் செலவிடப்படுமா ? அல்லது அதையும் மந்திரிகளும் அதிகாரிகளும் பங்குப் போட்டு கொள்ளை அடிப்பார்களா,முறையாக செப்பனிடுவார்களா என்று தெரியவில்லை.
இனிமேலாவது மழை நீர் தங்கும் இடத்தில்,வீட்டு மனைகள் போடாமல்,வீடு கட்ட அனுமதி வழங்காமல் மக்களை அரசாங்கம் காப்பாற்ற வேண்டும்.
குளம் இடத்தில் குளம் தான் இருக்க வேண்டும்,
குட்டைகள் உள்ள இடத்தில் குட்டைகள் தான் இருக்க வேண்டும்.
ஏரிகள் உள்ள இடத்தில் ஏரிகள் தான் இருக்க வேண்டும்.
வாய்க்கால் உள்ள இடத்தில் வாய்க்காலதான் இருக்க வேண்டும்,
ஆறுகள் உள்ள இடத்தில் ஆறுகள்தான் இருக்க வேண்டும்.
நதிகள் உள்ள இடத்தில் நதிகள்தான் இருக்க வேண்டும்.
அணைகள் உள்ள இடத்தில் அனைகளதான் இருக்க வேண்டும் .
கடல் உள்ள இடத்தில் கடல்தான் இருக்க வேண்டும்.
தண்ணீர் உள்ள இடத்தில் தண்ணீர்தான் இருக்க வேண்டும்.
மண் உள்ள இடத்தில் மண் தான் இருக்க வேண்டும்.
காடுகள் உள்ள இடத்தில் காடுகள்தான் இருக்க வேண்டும் .
காற்று உள்ள இடத்தில் காற்றுதான் இருக்க வேண்டும்.
அக்கினி இடத்தில் அக்கினிதான் இருக்க வேண்டும்.
ஆகாயம் உள்ள இடத்தில் ஆகாயம்தான் இருக்க வேண்டும்.
எங்கு எங்கு உயிர்கள் வாழ வேண்டுமோ அங்கு அங்குதான் உயிர்கள் வாழ வேண்டும்.
மனிதன் எங்கு வாழ வேண்டுமோ அங்குதான் வாழ வேண்டும்.
என்பதை இயற்கையின் சட்டப்படி ..
மேலே கண்ட அனைத்தும் முறையாக ,சரியாக இறைவன் படைத்துள்ளார் .
இவை யாவற்றையும் முறை இல்லாமல் சரி இல்லாமல் மாற்றியவன் மனிதன் .
மனிதன் செய்த குற்றங் களினால் மனிதன் துன்பம் அனுபவிக்கின்றான் .
மனித வாழ்க்கையை ஒழுக்குபடுத்தி மக்களை நல்வழியில் கொண்டு செல்லத் தான் அரசாங்கம் என்னும் ஆட்சி பீடத்தில் அரசியல் வாதிகளை தேர்வு செய்து அமர்த்தி உள்ளார்கள்.
வெளியே பயிரை அழிப்பதுபோல் ,ஆட்சியாளர்களே மக்களை அழித்துக் கொண்டு உள்ளார்கள்.
மக்களை காப்பாற்ற வேண்டிய ஆட்சியாளர்கள் .மேலே கண்ட நீர் நிலைகளில் பிளாட் போட்டு விற்கலாமா ?
வீடு கட்ட அனுமதி வழங்கலாமா ? மக்களை குடி இருக்க அனுமதிக்கலாமா ? மக்கள் துன்பப் படலாமா ?
மக்களின் துயர் நீக்க, துன்பத்தை துடைப்பதற்காக நிதியைத் தேடி அலையலாமா ?
சிறிய தவறு செய்வதால் பின்னால் பெரிய நட்டம் உண்டாகும் என்பது ஆட்சியாளர்களுக்கு தெரிய வேண்டாமா ?
எதுவும் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் துன்பம் வருமா ?
தீதும் நன்றும் பிறர்தர வாராது என்பதைக் கருத்தில் கொண்டு இனி வருங் காலத்திலாவது நன்மையைச் செய்து மக்களுக்கு நல்வழிக் காட்டுவது அரசின் கடமையாகும் .கட்டாயமாகும்.சட்டமாகும் மேலும் மக்களின் கடமையாகும்.
இல்லையேல் இதுபோன்ற இயற்கை சீற்றங்களால் மனித வாழ்க்கைக்கு துன்பங்களும் துயரங்களும், அச்சமும்,பயமும், வந்து மக்களை அழித்துவிடும்.
இதைக் கருத்தில் கொண்டுதான் ஆட்சியாளர்கள் மீது வள்ளலார் கடுமையாக சஷ்டி உள்ளார்.
கருணை இல்லா ஆட்சி கடுகி ஒழிக
அருள் நயந்த நன்மார்க்கர் ஆள்க--தெருண் நயந்த
நல்லோர் நினைத்த நலம் பெருக நன்று நினைத்து
எல்லோரும் வாழக இசைந்து .......
அச்சம் தவிர்த்தே அருளில் செலுத்துகின்ற
விச்சை அரசே விளங்கிடுக ---நச்சு அரவ
மாதிக் கொடிய உயிர் அத்தனையும் போய் ஒழிக
நீதிக் கொடி விளங்க நீண்டு ...
என்று ஆட்சி யாளர்களுக்கு அறிவுறுத்துகின்றார்
மக்களுக்கு துன்பம் தரக் கூடிய ஆட்சி இருப்பதைவிட அழிந்து விடுவதே நல்லது என்று ,,ஆங்லேயர்கள் ஆட்சி காலத்திலேயே வள்ளலார் சாபம் இடுகின்றார்.
அதேபோல் அவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் அழிந்து விட்டார்கள் .
பதவிக்காக ,பட்டத்திற்காக பணத்திற்காக ,அதிகாரத்திற்காக ,புகழுக்காக .ஆட்சிக்கு வரக் கூடாது
மக்களைக் பாதுகாக்க வேண்டும், மக்களுக்கு நன்மை செய்யவேண்டும் ,என்ற பெருங் குணத்தோடு ஆட்சிக்கு வரவேண்டும் ஆட்சியில் அமரவேண்டும்.
இல்லையேல் எவராக இருந்தாலும் இறைவனால் தண்டிக்கப் படுவீர்கள்.
ஆட்சியில் அமருபவர்கள் .மக்கள் மீது அன்பு,தயவு,கருணை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
இது எக்காலத்துக்கும் பொருத்தமானது என்பதை ஆட்சியாளர்கள் தெரிந்து கொண்டு நல்லாட்சியைத் தரவேண்டும்..மக்களை காப்பாற்ற வேண்டும்.
ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு