சனி, 14 நவம்பர், 2015

ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் திரைகள் !

ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் திரைகள் !

இன்பம் துன்பங்களை அனுபவிப்பது ஆன்மா !

உலகில் உள்ளதை எல்லாம் கண்கள்  பார்க்கின்றது.

பார்ப்பதை தன்வசமாக மாற்றிக் கொள்வது மனம்....

மனதின் நினைவுகளை பூர்த்தி செய்வது புத்தி...

பூர்த்தி செய்வதை அங்கிகாரம் அளிப்பது சித்தம் ...

அங்கிகாரத்தை செயலாக்கம் செய்வது அகங்காரம்....

அனுபவிப்பது ஜீவன் என்னும் உயிர் ....

அதனால் வரும் இன்பம் துபங்க்களை அனுபவிப்பது ஆன்மா என்னும் உள் ஒளி ..

புறக் கருவிகளால் சேர்க்கப்படும் குப்பைகள் யாவும் ஆன்மாவை மறைத்துக் கொள்கின்றன.

அந்தக் குப்பைகளைத்தான் திரைகள் என்கின்றார் வள்ளலார்.

அறியாமையாலும் அஞ்ஞானத்தாலும் .பழக்கத்தாலும் கண்,மனம்,ஜீவன் வழியாக உள்ளே சென்று ஆன்மாவை ஏழு திரைகளாக ஏழு அடுக்குகளாக மாயா திரைகள் ஆன்மாவை மறைத்துக் கொண்டு உள்ளது.

அந்த திரைகளின் விபரம்.;---

கரைவின் மா மாயைக்  கரும் பெரும் திரையால்
அரைசது மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !

பேருறு நீலப் பெருந்திரை அதனால்
ஆருயிர் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !

பச்சைத் திரையால் பரவெளி அதனை
அச்சுற மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !

செம்மைத் திரையால் சித்துறு வெளியை
அம்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !

பொன்மைத் திரையால் பொருள் உறு வெளியை
அன்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !

வெண்மைத் திரையால் மெய்ப்பதி வெளியை
அண்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !

கலப்புத் திரையால் கருது அனுபவங்களை
அலப்புற மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !

ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் திரைகளை நீக்கிக் கொள்ளும் அறிவும் ஆற்றலும் உள்ளவர்கள் மட்டுமே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைக் காணமுடியும்.

திரைகளை நீக்கும் ஒரே வழி ;--ஜீவ காருண்யம்,.. சத்விசாரம் என்னும் இரண்டு வழிகள் தவிர வேறு எந்த வழியாலும் திரைகளை நீக்க முடியாது .

திரைகள் நீங்கினால்தான் ஆன்மாவில் இருந்து அருள் அமுதம்.சுரக்கும்.அந்த அருள் அமுதம் உடம்பு முழுவதும் நிறைந்து பூரணமாகும் போதுதான் ஊன உடம்பு ஒளி உடம்பாக  மாற்றம் பெரும் .

ஒளி உடம்பாக மாற்றம் அடைந்தால் மட்டுமே மரணத்தை வெல்ல முடியும்.,மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதும் பேரின்ப சித்திப் பெருவாழ்வு என்பதும் கிடைக்கும்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு