செவ்வாய், 17 நவம்பர், 2015

பொய்யான சமய மதங்கள் !

ஆன்மா அழியாது ,உடம்பு அழிந்து விடும் என்பது சமய மதக் கொள்கைகள்.!

ஆன்மாவை இறைவன் அனுப்பி வைக்கின்றார் !

இறைவன் படைத்த இந்த உலகத்தைப் பார்ப்பதற்கும்,உலகத்தில் வாழ்வதற்கும் .வாழ்ந்து பின் வந்த இடத்திற்கே  திரும்ப செல்வதற்கும் ஆன்மாவை இறைவன் அனுப்பி வைக்கின்றார்..

ஆன்மாவின் தந்தைதான் இறைவன் என்பதாகும்.அந்த உண்மையான இறைவன்தான் அருட்பெருஞ்ஜோதி என்பதாகும்.

ஆன்மா இந்த உலகத்தில் வந்து வாழ்வதாகவும் அனுபவிப்பதற்கும் .இந்த பஞ்ச பூத உலகத்தில் உயிரும் உடம்பும் மாயையால் கட்டிக் கொடுக்கப் படுகின்றது.உயிரும் உடம்பும் ஆண்டவரால் கொடுப்பதல்ல .என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும் .

நம்முடைய உடம்பு ஒரு வாடகை வீடாகும் ...வாடகை என்பதுதான் நாம் தினமும் கொடுக்கும் உணவாகும் ..

தாவரம் முதல் மனித பிறப்பு கிடைக்கும் வரை ஆன்மா பல கோடி பிறப்புக்கள் எடுத்துக் கொண்டே வருகின்றது .

மனித பிறப்பில் தான் நான் யார் ? நமது தந்தையார் ? நாம் எங்கு இருந்து  வந்தோம் ? .எதற்க்காக வந்தோம் ? இன்பம் துன்பம் என்றால் என்ன  ? மரணம் ஏன் வருகின்றது ? மரணத்தை வெல்ல முடியுமா முடியாதா  ? என்ற கேள்வியும் அறிவும்  வேலை செய்ய ஆரம்பிகின்றது .

உயிர் எப்படி எடுத்தோம் .உடம்பு என்னும் வீடு எப்படி கட்டிக் கொடுக்கப்பட்டது ? உடம்போடும் உயிரோடும் இந்த உலகத்தை விட்டு  திரும்பி செல்ல முடியுமா ? ஆன்மா மட்டும் தான் செல்ல முடியுமா என்ற கேள்விகளுக்கு விடைக் கொடுக்கப் படுகின்றது.

சமய மத வாதிகள் ;--உடம்பும் உயிரும் அழிந்து விடும் .பாவங்களும் புண்ணியங்களும் ஆன்மாவுக்கு இல்லை .உயிருக்கும் உடம்பிற்கும் தான் .என்னும் புளுகு மூட்டையைக் கட்டிக் கற்பனையான கதைகளை எழுதி மக்கள் மத்தியிலே பரப்பி விட்டார்கள் .

அதனால்தான் வள்ளலார் ''கலையுரைத்த கற்பனையை நிலை எனக் கொண்டாடும் கண் மூடிப் பழக்கம் எல்லாம் மண் மூடிப் போக''' என்னும் சாபம் கொடுக்கின்றார்.

புண்ணியம் செய்தால் சொர்க்கம்,வைகுண்டம் கைலாயம்,பரலோகம்,போன்ற இடங்களுக்கு ஆன்மா சென்று மகிழ்ச்சியுடன் இருக்கும் என்றும் .

பாவங்கள் செய்தால் நரகம் என்ற கொடுமையான இடங்களுக்கு ஆன்மா சென்று துன்பங்களை அனுபவிக்கும் என்றும் கதைகளை கட்டி விட்டு விட்டார்கள்.

மக்களும் அதையே உண்மை என்று நம்பி உண்மைத் தெரியாமல் வாழ்ந்து கொண்டு உள்ளார்கள் .

வள்ளலார் சொல்லியது ;--

ஆன்மா வாழ்வதற்கு உயிரும் உடம்பும் மாயையால் கட்டிக் கொடுக்கப் பட்ட வீடாகும் .

வீட்டை அழிப்பது என்பது மரணம் ...எனவே வீட்டை அழிக்க கூடாது / உடம்பு என்னும் வீட்டை ஏழு விதமான அணுக்களால் மாயையால் கட்டிக் கொடுக்கப்பட்டு உள்ளது .

வீட்டை அழிக்காமல் அணுக்களை தனித்தனியாக பிரித்து மாயையிடம் கொடுத்தால் மட்டுமே ஆன்மா வெளியே செல்ல முடியும் .

மரணம் வந்தால் ஆன்மா இந்த உலகத்தை விட்டு வெளியே செல்ல அனுமதி இல்லை..மறுபடியும் பிறப்பும் இறப்பும் தொடர்ந்து கொடுத்துக் கொண்டேதான் இருக்கும் என்பதை வள்ளல் பெருமான் கண்டு பிடித்தார் .

ஆன்மா உயிரையும் உடம்பையும் விட்டால் மறுபடியும் வேறு ஒரு உயிரும் உடம்பும் கொடுக்கப்படும் .இது மாயை என்னும்  பஞ்ச பூதங்களின் சட்டம்.

இந்த உலகத்தில் நன்மை தீமைகள்,  பாவம் புண்ணியங்களை  எல்லாம் அனுபவிப்பது ஆன்மாதான் அனுபவிக்கின்றது .

தண்டனை என்பது உயிருக்கோ ,உடம்பிற்கோ கிடையாது .எது நடந்தாலும் அவை ஆன்மாவிற்கே வந்து சேரும்...ஆன்மாவில் பதிவாகி விடும் .

எதையும் உயிரும் உடம்பும் அனுபவிப்பது இல்லை ...உயிரும் உடம்பும் அணுக்களால் கட்டிக் கொடுக்கப் பட்ட உணர்வு அற்ற  ஜடப் பொருள்களாகும்.
ஆன்மா இருக்கும் வரை உணர்வு இருக்கும் .ஆன்மா வெளியேறி விட்டால் எந்த உணர்வும் இருக்காது ..இவற்றை மனித அறிவு தெரிந்து கொள்ள வேண்டும் .

ஒரு வீட்டில் குடியிருப்பவன் அவனுக்கு வரும் துன்பங்களை அவன் அனுபவிப்பானா ?அவன் குடியிருக்கும் வீடு அனுபவிக்குமா ? சிந்தித்து பாருங்கள் விடை கிடைக்கும்.

சாகாக் கல்வி ! மரணம் இல்லாப் பெருவாழ்வு !

உடம்பையும் உயிரையும் அழிக்காமல் .அணுக்களை பிரித்து எடுக்கும் ரகசியத்தைக் கண்டு பிடித்தவர் வள்ளல்பெருமான்.அதற்கு ''சாகாக் கல்வி'',என்றும்''மரணம் இல்லாப் பெருவாழ்வு'' என்றும் பெயர் வைத்துள்ளார் வள்ளலார்.

அணுக்களை எப்படி பிரித்து எடுக்க முடியும் ?

அணுக்களை ,இறைவன் அருளால் வேதியல் முறைப்படி
பிரிக்க முடியும்.   என்பதை அறிந்து ..ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்றியவர் வள்ளலார் .

அவர் அடைந்த அந்த உண்மையை மக்களுக்கு போதிக்கவே ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை '' 1865,ஆம் ஆண்டு வடலூரில் நிறுவினார் வள்ளலார்.

அருள் என்பது எல்லாவற்றையும் மாற்றும் .அனைத்தையும் வெல்லும் ஆற்றல் படைத்தது .அருளின் தன்மை என்ன வென்று தெரியாமல் சமய மத வாதிகள் உளறிக் கொண்டு உள்ளார்கள்.

இந்த உலகத்திற்கு வாழ வந்த ஆன்மா ...தான் மீண்டும் திரும்பி செல்வதற்கு  வசதியாக ஆன்மாவில் அருளை வைத்துதான் இறைவன் அனுப்பி உள்ளார் .

அந்த அருளை எடுக்க முடியாமல் மறைத்துக் கொண்டு இருப்பதுதான் அஞ்ஞானம் என்னும் ஏழு  மாயா  திரைகள் என்பதாகும் .

அந்த திரைகளை நீக்க வேண்டுமானால் ஜீவ காருண்யத்தாலும்  சத் விசாரத்தாலும் மட்டுமே நீக்க முடியும் .வேறு எந்த வழியாலும் நீக்க முடியாது என்பதை தெளிவாக தெரியப்படுத்தி உள்ளார்.

ஆன்மா ஆணவம் என்னும் துணையைக் கொண்டு ஒளியாக தனியாக வந்தது ,

இங்கே மாயை,கன்மம் என்னும் மலங்கள் ஆன்மாவைப் பற்றிக் கொண்டது .

மாயை என்பது;;;-- ஆன்மா வாழ்வதற்கு அணுக்களால் கட்டிக் கொடுக்கப்பட்ட உடம்பும் என்னும் வீடாகும்

கன்மம் என்பது;-- ஆன்மா, தான் செய்யும் ஒவ்வொரு காரியங்களுக்கும்.பிறப்பிற்கும் கன்மம் என்று பெயராகும்.

ஆன்மா;--  அருளைப் பெற்று ஆணவம் மாயை கன்மம் என்னும் கருவிகளை பிரித்து எடுத்து மாயையிடம் ஒப்படைத்து விட்டு அருள் என்னும் ஒளி உடம்பாக மாற்றினால் மட்டுமே இறைவனிடம் செல்ல முடியும்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு