ஞாயிறு, 15 நவம்பர், 2015

மாட்டு இறைச்சி உண்பதா வேண்டாமா !

மாட்டு இறைச்சி உண்பதா வேண்டாமா !


இந்து இந்திய அரசியலில் மாட்டு இறைச்சி பிரச்சனை அதிகமாகப் பேசப்படுகின்றது

ஜனநாயக நாட்டில் விரும்பியதை எதையும் உண்ண ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு .பசிக்காகவோ ,அல்லது ருசிக்காகவோ உண்ணப்படும் உணவை வெறும் உணவாகவே பார்க்க வேண்டும் அதில் குற்றம் காண்பது ஒரு மதச் சார்பு அற்ற நாட்டுக்கு எதிரானது என்பது சில பேருடைய கருத்து .

பால் கொடுக்கும் பசுவும் உழவுக்கு பயன் படும் காளைகள் மற்றும் எருமைகளும் மனிதனுக்கு மிகவும் நெருக்கமானது .என்றும்

பசுக்களை தங்கள் தாயாகவும் தெய்வமாகவும் இந்துக்கள் வணங்குகிறார்கள் ஆதலால் பசுக்களின் உணவை உட்கொள்ள கூடாது என்றும் சொல்லப்படுகின்றது..

ஒரு பிரிவினர் உண்ணலாம் என்றும் ஒரு பிரிவனர் உண்ணக் கூடாது என்றும் ,நாடு முழுவதும் பயங்கர எதிர்ப்பும் ஆதரவும் இருந்து வருகின்றது.

வள்ளல்பெருமான் சொல்லுகின்றார் !

ஒரு உயிரைக் கொள்வதும் குற்றம் .அதன் புலாலை உண்ணுவதும் குற்றம் என்கின்றார் வள்ளல்பெருமான்.

ஒருஉயிரைக் கொன்று, அதன் புலாலை உண்பது கொடிய பாவங்களிலே பெரிய கொடிய பாவம் என்கின்றார்.

திருவள்ளுவரும் கொலை செய்வதும் அதன் புலால் உண்பதும் இயற்கைக்கு விரோதமானது,அதனால் அளவில்லாத் துன்பம் உண்டாகும்  என்றும். கொல்லாமை, புலால் உன்னமைப் பற்றி இரண்டு அதிகாரங்கள் எழுதி வைத்துள்ளார்.

எந்த மதங்களாக இருந்தாலும்,எந்த சமயங்களாக இருந்தாலும் .எந்த மக்களாக இருந்தாலும் ஒரு உயிரைக் கொள்ளுவதும் தவறு ,அதன் மாமிசத்தை உண்பதும் தவறு .என்பதை புரிந்து கொண்டும் வாழ்வதுதான் சிறந்த வாழ்க்கை அதுதான நல்லது .

மாட்டு இறைச்சி மட்டும் அல்ல ..காளைகள் மட்டும் அல்ல ...இறைவனால் படைக்கப் பட்ட வாயில்லாத, பேசமுடியாத,பேச தெரியாத  எந்த உயிர்களாக இருந்தாலும்,அதனைக்  கொல்லுவதும் அதன் புலாலை உண்பதும் இறைவன் ஏற்றுக் கொள்ளுவதில்லை என்கின்றார் வள்ளலார் .

ஒரு உயிரை உண்டாக்க முடியாத எவருக்கும் அந்த உயிரை அழிப்பதற்கு இயற்கை சட்டத்தில் இடம் இல்லை.

மனிதனால் உருவாக்கப் பட்ட சட்டத்தைவிட இறைவனால் உண்டாக்கப் பட்ட சட்டம் நிரந்தரமானது நேர்மையானது உண்மையானது ..அவற்றை  மாற்றவும்  அழிக்கவும் எவருக்கும் அதிகாரம் இல்லை .

மதவாதிகளுக்கும் அறிவு இல்லை,.சமயவாதிகளுக்கும் அறிவு இல்லை.அரசியல் வாதிகளுக்கும் அறிவு இல்லை.அறிவியல் வாதிகளுக்கும் அறிவு இல்லை , மக்களுக்கும் அறிவு இல்லை என்கின்றார் வள்ளலார் .

நாக்கு ருசி கொள்ளுவது நாறிய புண்ணாக்கு என்கின்றார் .வள்ளலார் .அதன் விளக்கம் .;--

நாக்கு ருசிக்காக மாமிசம் தின்பவன் மலம் தின்பதற்கு சமம் என்கின்றார் .

மாமிசம் தின்பவன் அவன் கழிக்கும் மலத்தையே தின்னலாமே என்கின்றார்.வள்ளலார் .

உயிர்க்கொலையும் புலைப் புசிப்பும் உடையவர்கள் எல்லாம்
உறவினத்தார் அல்லர் அவர் புற இனத்தார்என்கின்றார் .

உயிர்க் கொலை செய்பவர்களும் அதன் புலாலை உண்பவர்களும் கடவுளை வணங்கவும் ,வழிபடவும், நினைக்கவும் தகுதி அற்றவர்கள் என்கின்றார்.கடவுளின் அருள் அவர்களுக்கு எக்காலத்தும் கிடைக்காது ..என்கின்றார் .

அவர்கள் அகம் கருத்து புறம் வெளுத்து இருக்கின்றது .அதனால் உண்மையை அறியாமல் தவறு செய்கிறார்கள் என்கின்றார்.

மக்களே தயவு செய்து ,எந்த உயிரையும் கொலை செய்யாதீர்கள் அதன் புலாலையும் உண்ணாதீர்கள்

இறவன் எல்லா உயிர்களுக்கும் பொதுவாக தாவர உணவுகளை படைத்து உள்ளார் .தாவர உணவே உங்கள் உயிருக்கும் உடம்பிற்கும் மிகவும் நல்லது .

எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கின்றான் .உயிர் இல்லாத இடத்தில் இறைவன் இல்லை.ஆகவே எந்த உயிர்களையும் அழிக்காதீர்கள்.

உண்மையை அறிந்து நல்லதை பின் பற்றுங்கள் நல்லதே நடக்கும்.

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் ;--

நலிதரு சிறிய தெய்வம் என்று ஐயோ
நாட்டிலே பல பெயர் நாட்டிப்
பலிதர ஆடு பன்றி குக்குடங்கள்
பலிகடா முதலிய உயிரைப்
பொலி உறக் கொண்டே போகவும் கண்டே
புந்தி நொந்து உளம் நடுகுற்றேன்
கலியுறு சிறிய தெய்வ வெங் கோயில்
கண்ட காலத்திலும் பயந்தேன் .......என்கின்றார் .

கடவுளின் பெயரால் ஆடு,மாடு,பன்றி,கோழி முதலிய உயிர்களை கொண்டு போய் பலி இடுகின்றார்கள் .இவை எவ்வளவு அறியாமை என்பதை நினைந்து என் உளம் நடுக்குற்றேன் .என்கின்றார் .

இந்த கோயில்களால் இன்னும் எத்தனை உயிர்களை பலி வாங்குமோ .என்று பயந்தேன் என்கின்றார்.

இந்த கொலையால் மக்களுக்கு அளவில்லாத துன்பம் வருமே என்று பயப்படுகின்றார்.

இந்த உலகத்தில் மக்களுக்கு உண்மையை எடுத்துச் சொன்ன ஒரே அருளாளர் வள்ளல்பெருமான் ஒருவரே .

அவர் சொல்லியது ஆண்டவர் சொல்லியதாகும். அவற்றை மதித்து அவர் சொல்லிய வண்ணம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வீர்கள்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு