வியாழன், 26 நவம்பர், 2015

வள்ளல்பெருமானின் உடம்பு !

வள்ளல்பெருமானின் உடம்பு !

வள்ளல்பெருமான் வடலூர் சத்திய தருமச்சாலையில் தங்கி இருந்த காலம் .

வள்ளலார் தருமச்சாலையில் இருப்பார் ,திடீர் என்று யாருக்கும் தெரியாமல் வெளியே சென்று விடுவார் ,எங்கு போகிறார் என்பது எவருக்கும் தெரியாது .

ஒருநாள் வெளியே சென்ற வள்ளல்பெருமான் அதிக நேரமாகியும் திரும்பி வரவில்லையே என்று நினைந்து வேலூர் சண்முகம் அவர்கள் சாலையை விட்டு வெளியே சென்று தேடினார் .

மேட்டுக்குப்பம் செல்லும் வழியில் மரங்கள் நிறைந்த இடத்தில் வள்ளல்பெருமானின் அங்கங்கள் எல்லாம் தனித்தனியாக கிடந்தன .

''கைவேறு ,கால்வேறு,தலைவேறு,உடம்பு வேறாக இருக்கக் கண்டார் .''

அதைக் கண்ட சண்முகம் உடல் நடுங்க உயிர் நடுங்க ''அந்தோ'' ''ஐயோ '' அய்யா இவ்வாறு ஆகிவிட்டாரே ! யாரோ நம் பெருமானாரை இப்படி கண்ட துண்டமாக வெட்டிப் போட்டு விட்டார்களே இனிமேல் என்ன செய்யப் போகிறோம்.என்று கதறி புலம்பி துடிக்கின்ற வேளையில் .

வள்ளல்பெருமான் திடீர் என்று அவருடைய முன்னே தோன்றினார் .அவர் மெய் மறந்து பயந்து நின்றார் .

சண்முகத்தை பார்த்து வள்ளல்பெருமான் ''நீர் இனி இம்மாதிரி என்னைப் பின் தொடர்வதோ பார்ப்போதோ கூடாது என எச்சரித்தார் ''

மேலும் இங்கு நடந்த சம்பவத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கட்டளை இட்டார் .

அவரால் சொல்லாமல் இருக்க முடியவில்லை தருமச்சாலையில் உள்ள அவருக்கு நெருங்கிய நண்பர்களிடம் சொல்லியதால் இச்செய்தி வெளியாயிற்று ..

வள்ளல்பெருமான் ஏன் அப்படி செய்தார் !

வள்ளல்பெருமான் கொள்கையில் மிகவும்  முக்கியமானது ''மரணம் இல்லாப் பெருவாழ்வு'' வாழ்வது என்பதாகும் .

பஞ்ச பூதங்களால் கட்டிக் கொடுக்கப்பட்ட உடம்பை தன்னுடைய அருட் சித்தி வல்லபத்தால் எப்படி எல்லாம் பிரிக்கலாம் ,சேர்க்கலாம்  என்பதை ஒத்திகை பார்த்துள்ளார் .என்பது தெரியவருகின்றது.

தன்னுடைய் உடம்பை எவராலும் எந்த சக்தியாலும் எப்போதும் அழிக்கக் கூடாது ,அழிக்க முடியாது,அதே வேளையில் மரணம் என்பதும் வந்து விடக்கூடாது  என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார் .

அவர் எண்ணிய வாறே, ''அருட்பெருஞ்ஜோதி'' இறைவன் அவருக்கு என்றும் அழியாத அருள் தேகம் என்னும் ஒளி தேகத்தைக் கொடுத்துள்ளார் .

வள்ளல்பெருமான் பதிவு செய்துள்ள பாடல் !

''காற்றாலே புவியாலே ககனம் அதனாலே
கனலாலே புனலாலே கதிர் ராதியாலே
கூற்றாலே பிணியாலே கொலைக் கருவியாலே
கோளாலே பிறர் இயற்றும் கொடுஞ் செயல்களாலே
வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்
மெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்து அளித்தான் எனக்கே
ஏற்றாலே இழிவு என நினையாதீர் உலகீர்
என் தந்தை அருட்பெருஞ்ஜோதி இறைவனைச் சார்வீரே''.

என்று ஒரு பெரிய பட்டியலே போட்டு,தான் அடைந்த வல்லபத்தை  மக்களுக்கு தெரியப்படுத்தி உள்ளார் .

மண்,நீர்,அக்கினி ,காற்று,ஆகாயம்,கிரகங்கள்,இடி மின்னல் போன்ற கதிர்கள் ,எமன் என்னும் கூறறுவன்,மேலும் கொலை செய்யும் கருவிகள் ,தீங்கு செய்யும் கொடுஞ் செயல்கள்,

மேலும் அழிப்பதற்கு கண்டு பிடிக்கும் அணு ஆயுத கருவிகள் போன்றவைகள் ,.இன்மேல் அழிப்பதற்கு கண்டுபிடித்தால் அதனாலும் ,எக்காலத்தும் அழியாமல் வாழும் உடம்பு எனக்குத் தரவேண்டும் என்று இறைவனிடம் கேட்டாராம்.

அதற்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் காலம் தாழ்த்தாமல் உடனே விரைந்து.. என்றும் அழியாத அருள் தேகம் அதாவது ஒளிதேகம்'' வழங்கினார் என்று மிகவும் தெளிவாக விளக்கி பாடலில் பதிவு உள்ளார் .

மேலும் நான் சொல்லுவதை நீங்கள் நம்பாமல் இருக்கின்றீர்கள் இழிவாக நினைக்கின்றீர்கள் ./நான் தொடர்பு கொண்டது போல் ''அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம்'' சார்பு கொண்டு /நீங்கள் தொடர்பு கொள்ளுங்கள் நிச்சயமாக சத்தியமாக உங்கள் அனைவருக்கும் எனக்கு கிடைத்த அதே தேகம் உங்களுக்கும் கிடைக்கும் என்கின்றார் .

சித்திகள் அனைத்தையும் தெளிவித்து எனக்கே
சத்திய நிலைதனைத் தயவினால் தந்தனை

சுத்த சன்மார்க்க சுக நிலை பெருக
உத்தமன் ஆகுக ஓங்குக எந்தனை

போற்றி நின் பேரருள் போற்றி நின் பெருஞ் சீர்
ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி !

சுத்த சன்மார்க்க அன்பர்களே ! வள்ளலார் காட்டிய பாதை புனிதமான  புதியபாதை,முடிவு உங்கள் வாழ்க்கையில் உள்ளது .

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு