வெள்ளி, 13 நவம்பர், 2015

பாம்பு கடிக்காமல் நின்றது !

பாம்பு கடிக்காமல் நின்றது !


அன்பர் ஒருவர் குறிஞ்சி பாடியில் இருந்து செவ்வாய்க் கிழமை தோறும் வடலூர் வந்து வள்ளலாரைத் சந்தித்து சொற்பொழிவு கேட்டு தரிசனம் செய்வது வழக்கம் ,

ஒரு நாள் ஞாயிற்றுக் கிழமை விடியற் காலையில்,அங்கு உள்ள  குளக்கரையில் ஒரு செடியின் அருகே காலைக் கடனுக்காக உட்கார, ஒரு பாம்பு அந்த அன்பரைத் தீண்ட முற்பட்டது .

உடனே இராமலிங்கத்தின் மேல் ஆணை என்றார் அந்த அன்பர் .அந்தப்பாம்பு வாயைத் திறந்தது திறந்தபடியே அப்படியே நின்று கொண்டது .

இரண்டு நாடகள் கழித்து  அந்த அன்பர் வடலூருக்கு சென்று இராமலிங்க வள்ளலார் பிரசங்கம் செய்யும் இடத்திற்கு வந்து அமர்ந்தார் .

வள்ளலார் பிரசங்கத்தை நிறுத்தி விட்டு ''ஐயோ ''ஒரு உயிர் இரண்டு நாட்களாக உணவு இல்லாமல் பட்டினியாய் இருக்கின்றது என்று கூறி ''பிச் உடனே சென்று ஆணையை விடுதலை செய் ''என்று அந்த அன்பருக்கு கட்டளை இட்டார் .

அந்த அன்பர் ;--இரண்டு நாட்களுக்கு முன் நடந்த சம்பவம் அய்யாவுக்கு தெரிந்து உள்ளது என்று அறிந்து ,அவசரமாக கிளம்பி குறிஞ்சிபாடிக்கு சென்று பார்த்தார் .அவ்விடம் அந்த பாம்பு வாய் திறந்த நிலையில் அப்படியே அமர்ந்து இருந்தது .

நான் ஆணையை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன் என்று சொன்னதும் அந்த பாம்பு பின்னோக்கி புதருக்குள் சென்றது .

வள்ளல்பெருமான் பெயரைச் சொல்லி ,இதுபோல் பல அற்புதங்கள் நடந்து உள்ளன.

கடவுள்மேல் உண்மையான அன்பும் ..உயிர்கள் மேல் உணமையான இரக்கமும் ,தயவும் உள்ளவர்கள் கடவுளுக்கு சமமானவர்கள் .

வள்ளல்பெருமான் கடவுளுக்கு நிகரானவர் அவர் பெயரைச் சொன்னாலே எல்லாத் துன்பங்களும் நீங்கிவிடும்.என்பது இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும்,

வள்ளல்பெருமான் அன்பு,தயவு,கருணையே வடிவமானவர் .இரக்கம் நீங்கில் என் உயிர் நீங்கும் என்பார் .

அவர் காட்டிய கடவுள் உண்மையானக் கடவுள் ஒருவரே .அவர்தான் ''அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ்ஜோதி   தனிப்பெருங்கருணை   அருட்பெருஞ்ஜோதி '' என்னும் கடவுளாகும்.

அந்த ஒப்பற்ற எல்லாம் வல்ல தனித் தலைமைப் பெரும்பதியான கடவுளைத்  தொடர்பு கொள்ளுங்கள் அவர் சொல்லிய ஜீவ காருண்யத்தைக் கடைபிடியுங்கள் உங்கள் வினைகள் எல்லாம் தீர்ந்து ,துன்பம், துயரம், அச்சம்,பயம்,மரணம் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழலாம்.

பக்தி வரும் பழ வினைகள் பறந்தோடும் மூலமலப் பகுதி மாயும் .

புத்தி வரும் புலைகொலைகள் புறம்போகும் ஆனந்தம் பொங்கும் சாந்த முத்தி வரும்

அழியா நன் மோக்கம் முறும் அமுத கடல் சூழ் உலகில் எல்லாச் சித்தி வரும்

 இராமலிங்க தேசிகன் தன் அருட்பாவைச்
சிந்திப்போற்கே .....

வாராத வல்வினை நோய் வந்தாலும் வன்மையோடு
சேராத பாவம் எல்லாம் சேர்ந்தாலும் --தீராது என்று
யார் சொன்னார் எங்கள் அருட்பிரகாசப் பெருமான்
பேர் சொன்னால் போமே பிணி .

இயற்றியது கடலூர் சிவ துரைசாமி தேசிகர்;---

நாம் எந்தக் கடவுளை தேடிச்சென்றாலும் அந்தக் கடவுள் நம்மை காப்பாற்ற வேண்டும் .அப்படி அந்தக் கடவுள் நம்மைக் காப்பாற்ற வில்லை எனில் அந்தக் கடவுள் உண்மையான கடவுள் அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளலார் அழைக்கின்றார் !

வருவார் அழைத்து வாடி வடலூர் வட திசைக்கே வந்தால் பெறலாம் நல்ல வரமே ! .

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு