வெள்ளி, 6 நவம்பர், 2015

வெந்நீரின் (சூடு தண்ணீர்) பயன்கள் !


நம் நாட்டில் நீர் நிலைகள் பல உண்டு .

மழைநீர் ,...பனி நீர் ...கிணற்று நீர்,...குளத்து நீர் ,..வாய்க்கால் நீர், ..ஆற்று நீர்,..தேக்க நீர்,...கடல் நீர் ...கழுவு நீர் என பல வழிகளில் நீர் இருக்கின்றது ,கிடைக்கின்றது .

எல்லா நீர் நிலைகளும் ஒரே சுவையை  தருகின்றதா என்றால் இல்லை என்றுதான் சொல்லுவோம் .

எல்லா நீர்களும் மழையினால்தான் பூமிக்கு வருகின்றது.மழை நீரை பூமிக்கு வராமல் பூமியைத் தொடாமல் நேராக பிடித்து அவற்றை சுவைத்தால் ஒரே சுவையாகத்தான் இருக்கும்.

பூமிக்கு வந்த பிறகு மண்ணின் தன்மைக்குத் தகுந்தாற் போல் ,மலைகளின் தன்மைக்குத் தகுந்தாற்போல் ,அருவிகளின் தன்மைக்குத் தகுந்தாற் போல் .அதன் தன்மை சுவைகள் எல்லாம் மாற்றம் அடைந்து உள்ளதாக இருக்கும் .
ஏன் என்னக் காரணம் ?
இந்த உலகில் ஐந்து வகையான பூதங்களான்  நீர்,மண்,அக்கினி ,காற்று ,ஆகாயம், என்பவை கடவுளால் படைக்கப் பட்டுள்ளன.அதற்குத் தகுந்தாற் போல் ஐந்து வகையான வண்ணங்கள் உண்டு , 
அந்த ஐந்து வகையான பூதங்களின் கலப்பிற்கு தகுந்தாற் போல் தான், தாவரம் ஊரவன்,பறப்பன ,மிருகம் தேவர்,அசுரர் மனிதர்கள் போன்ற உயிர் இனங்கள் பல வண்ணங்கள் வடிவங்களாக  எல்லாம் தோன்றுகின்றன.
எல்லா உயிர் இனங்களுக்கும் முக்கியமாக தண்ணீர்தான் ஆதாரமாக இருக்கின்றது.ஆகாரம் இல்லாமல் இருந்தாலும் இருக்கலாம் தண்ணீர் இல்லாமல் குடிக்காமல் இருக்க முடியாது.
இந்த உலகத்தில் உள்ள தண்ணீரில் நான்கு வகையான கலவைகள் உள்ளன்,.அவை 
பூதம்,அசுத்தம் விஷம்,உஷ்ணம் ,அமுதம் என்ற ஐந்து வகைகள் உண்டு இவை காற்றினால் நீரில் கலக்கப் படுகின்றன .
நாம் தினமும் அருந்தும் நீரில்  பூதம்,அசுத்தம் விஷம்,உஷ்ணம் என நான்கு பங்கும் (பாகம் ) அமுதம் என்பது ஒரு பங்கும்(பாகம் )  உள்ளது .அந்த அமுதபாகம் இல்லை என்றால் உயிர்கள் ஜீவிக்காது . 
நாம் உண்ணும் உணவில் நீருடன் கலந்து விஷம்,பூதம்,அசுத்தம்,உஷ்ணம் அமுதம் போன்ற ஐந்தும் உடம்பிற்குள் செல்கின்றது.
நமக்கு வரும் நோய்களுக்கு அடிப்படைக் காரணம் தண்ணீர்தான்...தண்ணீரின் வழியாகத்தான் எல்லா நோய்களும் வருகின்றன.
வள்ளலார் சொல்லியது.!
நாம் குடிக்கும் தண்ணீரை தினமும் கொதிக்க வைத்து மிதமான சூட்டில் தான் குடிக்க வேண்டும் என்கின்றார்.அதேபோல் குளிக்கவும் வெந்நீரில் தான் குளிக்க வேண்டும் என்கின்றார்.
அதற்கு காரணம் ;--
தண்ணீரை அடுப்பிலோ அல்லது கேஸ் அடுப்பிலோ வைத்து சூடு செய்யும் போது அந்த சூட்டினால் பூதம் அசுத்தம்,விஷம் போன்ற கிருமிகள் வெளியே சென்று விடும் .உஷ்ணம் அமுதம் என்ற இரண்டும் அந்த தண்ணீரிலேயே இருக்கும் .இவை இரண்டும் உடம்பையும் உயிரையும் பாது காக்கும் சக்தி வாய்ந்தது.
எனவே எப்போதும் தண்ணீரை கொதிக்க வைத்து ,ஆரிய பின்னரும் குடிக்கலாம் .இருந்தாலும் இளஞ் சூட்டுடன் குடிப்பது மிகவும் நன்று .
குடிக்கவும் குளிக்கவும் வெந்நீரைப் பயன் படுத்தினால் தொற்று நோய்களும் பிற நோய்களும் மேலும் எந்த வியாதிகளும் நம்மை நெருங்காது.
கொதிக்க கொதிக்க குடித்தவர் வள்ளலார் ;--
வள்ளல்பெருமான் வாழ்நாள் முழுவதும் உணவை நிறுத்தி விட்டு தினமும் வெந்நீரையே அருந்திக் கொண்டு வந்தார் 
யாராலும் தொடமுடியாத அளவிற்கு இருக்கும் கொதிக்கும் வெந்நீரை அப்படியே வாங்கி மிகவும் சாதாரணமாக குடிப்பார் .அந்த அளவிற்கு அவருடைய உடம்பு உஷ்ணம் உள்ளது அவரை யாராலும் தொட்டே முடியாது,தொட்டால் வெந்து விடுவார்கள் .
அதே உஷ்ணத்தை அருள் உஷ்ணமாக மாற்றியவர் வள்ளலார் .அவருடைய ஆன்மா கோடி சூரிய பிரகாசம் உடையது 
அருள் உஷ்ணம் என்பது மற்றவர்களை அழிக்காது காப்பாற்றும் ஆற்றல் உடையது.  
எனவே நாம் அந்த அளவிற்கு போகா விட்டாலும் நமக்கு நோய் வராமல் காப்பாற்ற நாம் தினமும் வெந்நீரில் குளிக்க வேண்டும்.வெந்நீரைக் குடிக்க வேண்டும்.

வெந்நீரின் பயன்கள் ;--
நம்மில் பலர், உடல்நிலை சரியில்லை என்றால் மட்டுமே, வெந்நீர் குடிக்கும் பழக்கத்தை கொண்டிருக்கிறோம். இதன் வாயிலாக, வெந்நீர் உடல் ஆரோக்கியத்துக்கு, மிகவும் உதவுகிறது என்று நாம் அறிந்திருக்கிறோம். சுடு தண்ணீரின் முழு பயன்கள் என்னென்ன என்பது உங்களுக்கு தெரியுமா?
அளவுக்கு அதிகமான உணவோ அல்லது ஏதாவது எண்ணெய் பலகாரம், மற்றும் சுவீட், அல்லது பூரி வடை ,போண்டா பஜ்ஜி ,போன்ற பலகாரங்கள் சாப்பிட்ட பிறகு, நெஞ்சு கரித்துக் கொண்டிருந்தால் ஒரு டம்ளர் வெந்நீரை எடுத்து பருகுங்கள். கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் போய்விடும். உணவும் செரித்து விடும்.
காலையில் சரியாக மலம் கழிக்க முடியவில்லை என்று பீல் பண்ணுகிறவர்கள், ஒரு தம்ளர் வெந்நீரை உடனே குடியுங்கள்.கொஞ்ச நேரத்தில்  மலப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். வெந்நீர் குடித்தால் உங்கள் உடலில் உள்ள கொழுப்பு,அதிகப்படியான சதை, குறையவும் வாய்ப்பிருக்கிறது.
வெந்நீரில் தேன் கலந்து அருந்தினால் உடம்பில் உள்ள சதைகள் யாவும் சுருங்கி விடும்.

உணவு சாப்பிட்டு முடித்ததும் சுடுதண்ணீர் பருகினால், இதயத்துக்கு மிகவும் நல்லது. ஏனெனில் கொழுப்புகளை சேரவிடாமல், கரைத்துவிடும் சக்தி வெந்நீருக்கு உள்ளது. 
வீட்டில் வேலை செய்யும் பெண்கள் தாங்களே பாத்திரம் தேய்த்து, துணி துவைக்கும் பெண்கள், வாரத்திற்கு ஒரு முறையேனும் உங்கள் கைகளை வெந்நீரில் கொஞ்ச நேரம் வைத்திருங்கள். இதன் மூலம் நக இடுக்கில் இருக்கும் அழுக்குகள் நீங்கி, உங்கள் கைகள் சுத்தமானதாக, ஆரோக்கியமாக இருக்கும்.
உடம்பு வலிக்கிற மாதிரி இருந்தால் நன்றாக வெந்நீரில் குளித்துவிட்டு, வெந்நீரில் கொஞ்சம் சுக்குத்தூள், பனங்கற்கண்டு போட்டு சூடாக அருந்துங்கள். நன்றாகத் தூக்கம் வருவதோடு, வலியும் பறந்துவிடும். மேலும் சுக்கு வெந்நீரையும் குடித்துவிட்டுப் படுத்தால், பித்தத்தினால் வரும் வாய்க்கசப்பு மறைந்து விடும்.
வெளியில் சென்று அலைந்துவிட்டு வந்தால், கால் பாதங்கள் வலிக்கும். அவ்வாறு வலிக்கும் போது, பெரிய பிளாஸ்டிக் டப்பில் கால் சூடு பொறுக்கும் அளவுக்கு வெந்நீர் ஊற்றி அதில் உப்புக்கல்லைப் போட்டு, கொஞ்ச நேரம் அதில் பாதத்தை வைத்து எடுங்கள். கால் வலி குறையும்.
காலில் அழுக்கு இருப்பது போல் தோன்றினால், வெந்நீரில் கொஞ்சம் டெட்டால் ஊற்றி அதில் பாதத்தை வைத்தால், பாதமும் சுத்தமாகிவிடும். 

மூக்கு அடைப்புக்கு சிறந்த மருத்துவர் வெந்நீர்தான். வெந்நீரில் விக்ஸ் அல்லது அமிர்தாஞ்சனம் போட்டு அதில் முகத்தைக் காண்பித்தால், மூக்கடைப்பு குணமாகும்.
வெயிலில் அலைந்து விட்டு வந்து உடனே சில்லென்று ஐஸ்வாட்டர் அருந்துவதைவிட, சற்றே வெதுவெதுப்பான வெந்நீர் அருந்துவது, தாகம் தீர்க்கும் நல்ல வழி. 

ஈஸினோபீலியா, ஆஸ்துமா,அலர்ஜி ,போன்ற உபாதைகள் இருப்போர், தாகம் எடுக்கும் போதெல்லாம் கண்டிப்பாக வெதுவெதுப்பான வெந்நீர் குடியுங்கள். அதுபோலவே, ஜலதோஷம் பிடித்தவர்களும் வெந்நீர் குடித்தால், நல்ல இதமாக இருக்கும்; விரைவில் குணமாகும்,

வெளியில் சென்று மழையிலோ ,குளிரிலோ .பனியிலோ நனைந்து வீட்டிற்கு வந்தால் .தலையை உடம்பை துடைத்து விட்டு இரண்டு டம்பளர் வெந்நீரைக் குடியுங்கள் ..சளி,இருமல்,ஜலதோஷம் போன்ற தொல்லைகள் வராமல் நின்று விடும் 

வெந்நீர் நோய் தீர்க்கும் ஒரு அருமருந்து .அசட்டை செய்யாமல் கடைபிடியுங்கள் ஆரோக்கியம் உங்களைத் தேடிவரும் .

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு