வியாழன், 12 நவம்பர், 2015

நீங்கள் வணங்கும் கடவுள் ஏன் காப்பாற்றவில்லை. !

நீங்கள் வணங்கும் கடவுள் ஏன் காப்பாற்றவில்லை. !

ஒருவார காலமாக தமிழகத்தில் அளவில்லா காற்றும் மழையும்  பெய்து உள்ளது .

மரங்களும்,பாலங்களும்,வீடுகளும் அழிந்து உள்ளது மேலும் பல இடங்களில் உயிர் சேதம் ஏற்பட்டு உள்ளது.

தீப ஒளி பண்டிகை வியாபாரம் நசுங்கி உள்ளது .மக்கள் அளவில்லா துன்பத்தில் அலைமோதிக் கொண்டு இருந்து உள்ளார்கள் .பண்டிகை கொண்டாட முடியவில்லை என்று மக்கள் வேதனைப் பட்டு கண்ணீரும் கம்பலையுமாக மாறி உள்ளார்கள் .

உங்களின் பல வேண்டுதலுக்காக கடவுளிடம் சென்று முறை இடுகின்றீர்கள் .வணங்கு கின்றீர்கள்,வழிபடு கின்றீர்கள்.

திருமணம்,  குழந்தை பிறப்பு ,...வேலை கிடைக்க,...தீராத நோய்கள் தீருவதற்கு ,...தொழிலில் வருமானம் பெருகுவதற்கு ,....தொழில் தொடங்க ...மேலும் பல காரியங்களுக்காக கடவுளிடம் சென்று முறையிட்டு அவை நிறைவேறி விட்டதாகவும் சொல்கின்றீர்கள் .

இப்போது வந்த காற்று, கனமழையால்  . உயிர் இழப்பு ,பொருள் சேதம் ,பயிர் சேதம் போன்ற அளவில்லா இழப்புகளை உண்டாக்கி உள்ளது .

நீங்கள் வணங்கும் தெய்வங்கள் ஏன் இதை எல்லாம் கண்டு கொள்ளாமல் காப்பாற்ற முடியாமல் அமைதியாக இருந்து உள்ளது.

எல்லா துன்பங்களுக்கும் கடவுளைத் தேடும் ...கடவுளை  வேண்டும்.. நீங்கள்..

இதை மட்டும் அரசு செய்யவேண்டும் .அதிகாரிகள் செய்ய வேண்டும் ..அரசியல் வாதிகள் செய்ய வேண்டும்...மக்கள் செய்ய வேண்டும்  ..தொண்டு நிறுவனங்கள் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்கள் முறையிடுகிறீர்கள் .

தெரிந்து கொள்ளுங்கள் நீங்கள் வணங்கும் கடவுள்கள் உங்களை ஒரு போதும் பாது காக்காது காப்பாற்றாது .

மனிதர்கள்தான் மனிதர்களை காப்பாற்ற முடியும்./

இதைத்தான் வள்ளலார் சொன்னார் .ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு என்றும் உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்றும் சொல்லி உள்ளார் .

உயிர்களுக்கு உபகாரம் செய்தால் .உயிர்களிடம் இரக்கம் காட்டினால், கடவுள் உயிர்களின் மூலமாக நன்மையை செய்வார்.

இது போன்ற துன்பங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள உயிர்களுக்கு நன்மையை செய்யுங்கள் .எந்த உயிர்களையும் அழிக்க நினைக்காதீர்கள்.

எல்லா உயிர்களிலும் கடவுள் இருக்கின்றார் என்பதை உணர்ந்து உயிர்களுக்கு வரும் துன்பத்தை போக்குங்கள்.

கற்பனைக் கடவுள்களை வணங்குவதால் எந்த பயனும் இல்லை.

உயிர்கள் மேல் அன்பு,தயவு,கருணை  கொள்ளுங்கள் கடவுள் உங்களை நிச்சயம் காப்பாற்றுவார் .

கருணை உள்ள நெஞ்சினிலே கடவுள் வாழ்கின்றார் ..

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு