வியாழன், 24 செப்டம்பர், 2015

இன்று இஸ்லாம் மதத்தின் பக்ரீத் திருநாள் !

இன்று இஸ்லாம்  மதத்தின் பக்ரீத் திருநாள் !

வள்ளலார் சொல்லியுள்ள ஒழுக்கங்கள் யாவும்.வழிபாட்டு முறைகள் யாவும், இஸ்லாம் மதம்  பின் பற்றி  வருகின்றது.

ஆனால் முக்கியமான ஒன்றில் எல்லாம் அடைப்பட்டுப் போகின்றது.

உயிர்க்கொலை செய்வதும் அதன் புலால் உண்பதும் தவறானது என்றும் மன்னிக்க முடியாத குற்றம் என்றும் வள்ளலாரின்  சுத்த சன்மார்க்கம் சொல்லுகின்றது.

அவற்றை விட்டுவிட்டால் இஸ்லாம் மதம் புனிதமான சன்மார்க்கமாகும்.

இஸ்லாத்தில் உள்ள  முக்கிய  ஆராய்ச்சி யாளர்கள் வள்ளலார் கொள்கைகளை உணர்ந்து ,வள்ளல்பெருமான் சொல்லியது உண்மையானது தான் என்று ஏற்றுக் கொண்டு வள்ளலார் கொள்கைகளைப் பின்பற்றி வாழ்ந்து கொண்டும் வருகின்றார்கள்.

இறை தூதரான இப்ராகீம் இறைவன் கட்டளையை ஏற்று நீண்ட நாட்களுக்குப் பிறகு பிறந்த தமது மகன் இஸ்மாயிலை பலி கொடுக்க முன் வந்தபோது வான் தூதரை அனுப்பி அதை தடுத்து இறைவன்

மகனுக்குப் பதிலாக ஆட்டை பலிக் கொடுக்கும் படி கூறினார் என்பது வரலாறு ,மேலும் இப்ராமீன் தியாகத்தையும் இறைவன் பாராட்டினார் .

இதை குறிக்கும் வகையில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப் படுகின்றது என்பது வரலாறு .

எல்லா உயிர்களும் ஒன்றே !

உயிர்கள் என்பது இறைவனால் படைக்கப் பட்டது ,அதில் பெரிய உயிர் சிறிய உயிர் என்ற வேறுபாடுகள் கிடையாது .அவற்றை அழிக்கும் உரிமையை இறைவன் யாருக்கும் கொடுக்கவில்லை என்பது வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம் சொல்லுகின்றது.

மனிதனால் படைக்கமுடியாத ,உண்டாக்க  முடியாத எதையும் அழிக்கும் உரிமையை மனிதன் எடுத்துக் கொள்ளக் கூடாது,  கடைபிடிக்க கூடாது என்பது வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கைகளாகும்.

எல்லா உயிர்களும் ஒன்று என்பதை மக்கள் புரிந்து கொள்ள ''மனு முறை கண்ட வாசகம்'' என்ற வரலாற்றை மக்களுக்கு வழங்கி  உள்ளார் வள்ளல்பெருமான்.அதைப் படித்தால் அனைத்து மதத்தினரும் நன்கு புரிந்து கொள்வார்கள்.

கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக !
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

என்பது இறைவன் வாக்கு மூலம் ,வாக்கு மூலம் இறைவன் கட்டளை என்பதை உணர்ந்து இஸ்லாம் அன்பர்கள் சகோதர சகோதரிகள் கடை பிடித்தால் இஸ்லாம் மதம் சிறந்த ,உயர்ந்த மதமாகக் கருதப்படும்,ஏற்றுக் கொள்ளப்படும்.

அன்புடன் வாழ்த்துக்கள் .

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல். .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு