சனி, 26 செப்டம்பர், 2015

யாரும் வருத்தப் பட வேண்டாம் !

யாரும் வருத்தப் பட வேண்டாம் !


உண்மையான கடவுள் இருக்கும் இடம் என்றால் .அவை புண்ணிய ஸ்தலம் என்றால் .அவற்றை நம்பி செல்பவர்களுக்கு ஆபத்தோ,துர்மரணமோ வரக் கூடாது.

அப்படி அவருகிறது என்றால் அங்கு கடவுள் இல்லை .அங்கு கடவுளின் அருள் என்பதும் இல்லை என்பதுதான் உண்மை.

மனிதர்கள் உண்மையான அருள் இருக்கும் இடம் என்று நம்பி வருபவர்களுக்கு ,மனித பாது காப்பு தேவையே இல்லை.கடவுள் பாது காப்புத்தான் மிகவும்முக்கியம் அவசியம்.

கடவுள் அருள் இல்லாத வெற்று இடங்களுக்குச் செல்வதால் துன்பம், துயரம் .அச்சம்,பயம்,ஆபத்து, மரணம் வருகின்றது.

நம் உள்ளே இருக்கும் கடவுளைத் தேடாமல்.வெளியில் தேடி எந்த பயனும் இல்லை.

நாம் செய்யும் ஒவ்வொரு தவறான செயல்களுக்கும். நாம் எங்கு சென்றாலும் தண்டனை நிச்சயம் உண்டு.

அவை கடவுள் கொடுப்பதில்லை .என்பதை புரிந்து,தெரிந்து அறிந்து கொண்டு,தவறு செய்யாமல் .பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாமல் .மற்றவர்களுடைய பொருளை அவர்களுக்குத் தெரியாமல் ஏமாற்றி அபகரிக்காமல் வாழ்ந்து பழக வேண்டும்.

நீங்கள் வணங்கும் வழிபடும் கடவுள்கள் எல்லாம் தத்துவங்கள்.,அவை ஜடப்பொருள்கள் அவற்றை வணங்குவதால்,வழிபடுவதால் எந்த பயனும் கிடைக்காது.

கடவுள் கருணை உள்ளவர் அவர் ஒவ்வொரு ஆன்மாவிலும் உள் ஒளியாக உள்ளார் .அவருக்குத் தெரியாமல் நீங்கள் எதையும் செய்து விட முடியாது.

அந்தக் கடவுளைத்தான் வள்ளல்பெருமான் அருட்பெருஞ்ஜோதி என்கின்றார் .

அந்தக் கடவுள் இயற்கை விளக்கமாக ''வடலூரில் சத்திய ஞான சபையில்'' ஒளி வடிவமாக இயங்கிக் கொண்டு உள்ளார்.

இருளைப் போக்கும் ஒளியே கடவுள் ! அவை ஆன்மாவை மறைத்துக் கொண்டும் அஞ்ஞான இருளைப் போக்குவதாகும்.

அந்த பேரொளியை வணங்குங்கள் வழிபடுங்கள் .எல்லா துன்பமும்
தொலைந்து மகிழ்ச்சியுடன் வாழலாம்.

அங்கே சாதி,சமயம்,மதம் என்ற வேறுபாடுகள் கிடையாது.உலகில் உள்ள அனைவருக்கும் உண்மையான பொது வழிப்பாட்டு முறையை வள்ளல்பெருமான் வகுத்துத் தந்துள்ளார்.

வாருங்கள் வடலூருக்கு வந்தால் பெறலாம் நல்ல வரமே.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு