சனி, 19 செப்டம்பர், 2015

காதல் என்றால் என்ன ?

காதல் என்றால் என்ன ?

இறைவன் படைத்த பொருள்கள் உயிர்கள் அனைத்தும் அழகுதான்.

அழகு இல்லாத உயிர்கள் பொருள்களே இவ்வுலகில் இல்லை

இறைவன் படைப்பில் எத்தனை வண்ணங்கள், வடிவங்கள் .உருவங்கள் அப்பப்பா அளவில் அடங்காது.

மனிதர்கள் மட்டுமே அதை ரசிக்கவும்,நேசிக்கவும் அன்பு செலுத்தவும் முடியும்..மற்ற உயிர் இனங்களுக்கு அவற்றை ரசிக்கும் அறிவு இல்லை.

அதனால்தான் மனிதர்களுக்கு மட்டுமே உயர்ந்த அறிவு வழங்கப் பட்டுள்ளது.

உயர்ந்த அறிவு படைத்த மனிதர்கள் காதல் என்ற பெயரில் பெண்கள் ஆண்கள் மீதும்,ஆண்கள் பெண்கள் மீதும் காதல் கொள்கின்றனர்.

காதல் என்பது புனிதமானது.எல்லாப் பொருள்கள் மீதும் உயிர்கள் மீதும் அன்பு செலுத்துவது தான் உண்மையான காதல்...

அவற்றை அழிப்பது அல்ல .அலங்கோலப் படுத்துவது அல்ல .அசிங்கப் படுத்துவது அல்ல !

அன்பு,அவா .ஆசை,காமம்,மோகம்,வெறி ;---

அன்பு என்பது ஒரு பொருளின் மீது பற்றுதல் வைப்பது அவா !,

அதை அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பது ஆசை,!

அதை அனுபவிக்க வேண்டு என நினைத்துக் கொண்டே இருப்பது காமம்.!

அதை எந்த வழியாலும் எப்படியும் தன் வசப் படுத்துவது மோகம் !

அதை அனுபவிப்பது வெறி !

மனிதர்கள் காதல் என்ற பெயரில் வெறி கொண்டு அலைவது காதல் அல்ல .

எவ்வளவு அழகாக இருந்தாலும் அதன்மேல் அவாவாய் இருக்க வேண்டும் .அன்பு செலுத்த வேண்டும்.அதுதான் காதல்.அப்படி இருந்தால் அவை நீடிக்கும் இல்லையே துண்டிக்கப்படும்.

காதல் என்பது நீட்டிக்க வேண்டும் துண்டிக்க கூடாது .

காதல் என்பது இறுதி வரை நிலைத்து இருக்க வேண்டும் அதுதான் உண்மையான காதல் ,உண்மையான அன்பு என்பதாகும்.

மேலே கண்ட அன்பு,அவா,ஆசை,மோகம் காமம்,வெறி ,அனைத்தையும் ஆண்கள் பெண்கள் அனைவரும் ஆண்டவர் இடத்தில் செலுத்த வேண்டும்.

பெண்கள் ஆண்கள் அனைவரும் ஆண்டவர் இடத்தில் .அவரை அனுபவிக்க வேண்டும் என்ற வெறி இருக்க வேண்டும்..

மனிதர்கள் இடத்தில் காட்டும் அன்பு அவா ,ஆசை,காமம், மோகம்,வெறி, என்பதை ஆண்டவரிடத்தில்  காட்டுங்கள் .
உங்களிடம் இருந்து உங்கள் ஆன்மாவில் இருந்து அருள் என்ற அமுதம் சுரக்கும் .அவை என்றும் அழியாத பேர் இன்பத்தைத் தரும்.அவை நிலையானது .

ஆண்கள்  பெண்கள் இடத்தில் இரண்டு விதமான முக்கிய சுரப்பிகள் உண்டு .

ஒன்று ஆணும் பெண்ணும் சேரும்போது சுரப்பது விந்து என்னும் சுக்கிலமாகும்.

மற்றொன்று .ஆண்டவரும் ஆன்மாவும் சேரும்போது சுரப்பது அமுதம் என்னும் அருளாகும்..

ஆண்டவர் மீது காதல் கொண்டு அருளைப் பெறுங்கள் அதுவே உண்மையானக் காதல்.என்றும் அழியாதக் காதல்.

அழிந்துபோவது காதல் அல்ல .அழியாமல் இருப்பதே காதல்.

நீங்கள் கண்ட கண்ட தெய்வங்களை காதலிக்காதீர்கள் அது உண்மையான காதல் அல்ல !

உலகைப் படைத்த ,உயிர்களைப் படைத்த ,பொருள்களைப் படைத்த மற்றும் அனைத்தையும் படைத்த உண்மையான ஆண்டவர் ஒருவரே !

அவர்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் .அவரைத்தான் உண்மையான அன்பால் நேசத்தால் பாசத்தால் இடைவிடாது  காதலிக்க வேண்டும்.

வள்ளல்பெருமான் அவரைத்தான் காதலித்தார் .அருளைப் பெற்றார்...மரணத்தை வென்றார். பேரின்பத்துடன் வாழ்ந்து கொண்டு உள்ளார்.

மனித குலத்திற்கு உண்மையான இறைவனைக் காதலிக்கும் வழியைக் கண்டு, காதலித்து ,அதன் இன்பத்தை அனுபவித்து மனித குலத்திற்கு காட்டி உள்ளார்.

நான் அப்படித்தான் காதலிக்கிறேன் மகிழ்ச்சியாக உள்ளேன்  நீங்களும் அப்படி காதலியுங்கள் மகிழ்ச்சி பெறுவீர்கள் .

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு