வெள்ளி, 11 செப்டம்பர், 2015

மக்கள் மனம் ஏன் கல்லானது.?

மக்கள் மனம் ஏன் கல்லானது.?

மக்கள் கல்லான தெய்வங்களை வணங்குவதால் அவர்களின் மனம் கல்லானது.

எனவே தான் வள்ளல்பெருமான் கல்லை வணங்கி கல்லான மனிதர்களுக்கு .அவர்களது மனத்தைக் கரைய வைக்கும் உண்மையான இறைவனை அறிமுகப்படுத்தினார்.

திரு அருட்பா !

கல்லுங் கனியத் திரு நோக்கம் புரியும்
கருணைக் கடலே நான்
அல்லும் பகலும் திருக் குறிப்பை எதிர் பார்த்து
இங்கே அயர்கின்றேன்
கொல்லுங் கொடியார்க்கு உதவுகின்ற
குறும்புத் தேவர் மனம் போலச்
சொல்லும் இரங்கா வண்மைக் கற்க
எங்கே ஐயோ துணிந்தாயோ !.......வள்ளலார் .

கல்லையும் கரைய வைக்கும் அருள் நிறைந்த கருணைக் கடல் போன்றவனே ! அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே !

இரவும் பகலும் இடைவிடாது உன்னை நினைத்து வருவாய் வருவாய் என்று ஏங்கிக் கொண்டு இருக்கின்றேன்.

கல்லான தெய்வங்களை வணங்கி, மனிதர்கள் கருணை இல்லாமல் .நீ படைத்த உயிர்களை ,கொலை செய்தும் ,அதன் புலாலை,உண்டும் இரக்கமில்லாத குணம் உடையவர்களாக வாழ்ந்து கொண்டு உள்ளார்கள்.

அதற்கு என்ன காரணம்.!

உங்களுடைய உண்மையான உருவத்தைக் காட்டாமல் இருப்பதால்தான் .அவர்கள் கல்லையும் ,மண்ணையும் வணங்கிக் கொண்டு உள்ளார்கள்.

எனவே உங்களுடைய உண்மையான உருவமான அருட்பெருஞ்ஜோதி உருவத்தை,உலக மக்களுக்கு காட்டுவதற்கு அருள் புரிய வேண்டும் என வள்ளல்பெருமான் கேட்டுக் கொள்கின்றார்,

அருட்பெருஞ்ஜோதி !

ஆண்டவரின் அனுமதியை பெற்றுத்தான் உலக மக்களுக்கு உண்மையான ''அருட்பெருஞ்ஜோதியை''

வடலூர் பெருவெளியில் உள்ள சத்திய ஞானசபையில்,அறிமுகப் படுத்தி உள்ளார் .

ஆதலால் கல்லை வணங்கிக் கல்லான மனம் படைத்த மனிதர்கள் அருட்பெருஞ்ஜோதி என்னும் உண்மை ஒளியை வணங்கி கருணை உள்ளவர்களாக வாழுங்கள். ,

உண்மையை உணர்ந்து வணங்கினால் ,வழிபட்டால் ,
உங்களுக்கு வரும் அச்சம் ,பயம்,துன்பம் துயரம் மரணம்,போன்ற தீராத துன்பங்களில் இருந்து விடைப் பெற்று ,என்றும் துன்பம் இல்லாமல் .இன்பமுடன் மகிழ்ச்சியுடன் வாழலாம் .

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு