புதன், 16 செப்டம்பர், 2015

விநாயகர் என்பது என்ன ?விநாயகர் என்பது என்ன ?

விநாயகர் என்பது என்ன ?

மனித உடம்பில் குண்டலி பை ஒன்று உண்டு .அதில் குண்டலி வட்ட நரம்பு ஒன்று உண்டு.அதில் மூன்று பிரிவு உண்டு .

மூலாதாரம் முதல் பிரமந்திரம் வரையில் இடம்,வலம்,நடு வென்று கத்திரிக் மாறலாய்ப் பிராண அபானனுக்கு இடங் கொடுத்துக் கொண்டு ஊடுருவி நிற்கும்

உடம்பின் தன்மைக்குத் தகுந்தவாறு உஷ்ணம், பிரகாசம் கொண்டு செல்வதால் அதற்கு சந்திரன்,சூரியன் அக்கினி நாடி என்று பெயர் .அந்தஉஷ்ணப்  பையின் தொடர்புள்ள நரம்புகளின்  வழியாக உடம்பு முழுதும் செல்வதால் உடம்பின் எல்லாப் பகுதிகளும் உணர்வு உள்ளதாக இருக்கின்றது.

விநாயகர் ! முருகன் !

அந்த குண்டலினி வட்ட நரம்பின் அடியில் இரண்டு நரம்புகள்  உண்டு....வலத்தில் ஐந்து கவருடைய தலையாய் ஒன்றும்...ஆறு கவருடைய தலையாய் உடைய நரம்பும் ஒன்றும் உள்ளன.

வலத்தில் உள்ளது கணபதி ( விநாயகர் ) என்றும்,இடத்தில் உள்ளது சுபரமணி (முருகன் ) என்றும் பெயர் வைத்துள்ளார்கள்.

மேற்படி ஐந்து கவருடைய நரம்பு இடைவிடாது அசைந்து கொண்டே இருக்கும்.அந்த அசைவால் 72000,எழுபத்திரண்டு நாடிகளும் அக்கிரமம் இன்றி நிலைப் பெற்று இயங்கிக் கொண்டே இருக்கும் .ஆதலால் அதற்கு சேனாதிபதி என்றும் .கணபதி என்றும்,விநாயகர் என்றும் சொல்லப் படுகின்றது.

இடைவிடாது அசைந்து கொண்டும் இயங்கிக் கொண்டும் உள்ளதால் அதற்கு யானையின் துதிக்கை போல் வைத்துள்ளார்கள் .யானையின் துதிக்கை அசைந்து கொண்டே இருக்கும்.எனவே யானை முகத்தை விநாயகருக்கு
வைத்துள்ளார்கள்.

குண்டலி வட்ட பையில் உள்ள இரண்டு நரம்புகளில் இடத்தில் உள்ளது விநாயகர் என்னும் நரம்பு...அது இடைவிடாது அசைந்து கொண்டே இருக்கும் ஆதலால் அதற்கு முந்தி முந்தி வினாயனே என்றுப் பெயர்.அந்த அசைவால் அக்கினிப் பைக்கு ஆதாரம் உண்டாவதால் கணபதி என்றும் பெயர்.

மேற்படி ஐந்து கவருடைய நாடிக்கு இடம் வலம் சித்தி தத்துவம்,.புத்தி தத்துவம் என இரண்டு துணை நாடிகள் உண்டு அதற்கு சித்தி,புத்தி என்று பெயராகும்.

முருகன்.;--

ஐந்து கவருடைய நாடிக்கு கீழ் ஆறு தலை உடைய நாடி ஒன்று உண்டு.அந்த நாடிக்கு ஆறு முகம் என்றும்,முருகன் என்றும் என்றும் பெயர் வழங்கப் படுகின்றது.

ஐந்து தலையுடைய விநாயகர் என்னும் நாடி இடைவிடாது அசைவால் .அதில் இருந்து உண்டாகும் உஷ்ணத்தைப் பெற்று,ஆறு தலையுடைய நாடி உடம்பு முழுவதும் கொண்டு செல்கின்றது.

எனவே விநாயகர் ஆண்ணன் ஆகவும்,அதைப் பெற்றுக் கொண்டு செல்வதால் முருகனை  தம்பி எனவும் சொல்லப்படுகின்றது.

அந்த உஷ்ணத்தை ஆறு ஆதாரங்களின் வழியாக சென்று வலம்,இடம் என்று இரண்டாகப் பிரித்து அனுப்புவதால் முருகனுக்கு ஆறு முகமாகவும்,பனிரண்டு கைகள் என்றும் பெயர் வைத்துள்ளார்கள்.

மனித உடம்பை இயங்குவதற்கு அந்த இரண்டு நரம்புகளும் மிகவும் முக்கியமானதால் .சிவன் ,பார்வதிக்கு இரண்டு குழந்தைகள் என்று பெயர் வைத்தார்கள்.

சிவன் என்பது ஆன்மா ,பார்வதி என்பது ஆன்மாவின்  உள் இருந்து தோன்றும் சக்தி என்னும் அருள் பிரகாசமாகும்..

ஆன்மாவில் இருந்து நேரடியாக உஷ்ணப் பிரகாசத்தை குண்டலிப் பையில்  அனுப்பி அதை இயங்க வைப்பதால் .முதற்பிள்ளை விநாயகர் என்றும் .அதைப் பெற்று உடல் முழுதும் அனுப்புவதால் முருகன் இரண்டாவது பிள்ளை என்றும் பெயர் வைத்துள்ளார்கள்.

அங்கேயே இயங்குவதால் விநாயகருக்கு பெருச்சாளி வாகனமாகவும்.உடம்பு முழுவதும் எடுத்துச்செலவதால் முருகனுக்கு மயில் வாகனம் என்றும் பெயர் வைத்துள்ளார்கள்.

வலது புற நாடிக்கு அறுபத்திரண்டு மாத்திரை உள்ளதால் விநாயகர் என்றும்.இடதுபுற நாடிக்கு நாற்பது மாத்திரையும்,அளவு வித்தியாசம் உள்ளதால் சகோதரர்கள் என்று பெயர் வைத்துள்ளார்கள்.

இன்னும் விரிக்கில் பெருகும்....வள்ளல்பெருமான் தத்துவங்களைப் பற்றி தெளிவாக விளக்கம் தந்து  உள்ளார்.

வள்ளல்பெருமான் எழுதியுள்ள திருஅருட்பா என்னும் அருள் நூலை படித்துப் பாருங்கள் தத்துவங்களின் உண்மை தெளிவாகும்.

உண்மைத் தெரியாமல் விநாயகர் சதுர்த்தி என்னும் விழாவில் கோடிக்கணக்கான விநாயகர் என்னும் மண் சிலைகளை ஆற்றிலும் கடலிலும் கரைத்து வீணாக்குகிறார்கள் .

அதற்கு வீணாகச் செலவு செய்யும் பணத்தை ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்தால் .இறைவன் அன்பையும் அருளையும் வழங்குவார்.

எனவே மனித உடம்பின் இயக்கங்களின் தத்துவங்களையே கோயிலாகவும்.ஆலயங்களாகவும்  சிலைகளாகவும்,உண்மையாக இருப்பது போலவே  வைத்து பக்தி மார்க்கமான வழிப்பாட்டு முறைகளை வைத்துள்ளார்கள்.

பக்தி மார்க்கத்தால் மனம் மகிழ்ச்சி அடையும் .ஆன்மாவும்,உயிரும் மகிழ்ச்சி அடையாது.இறைவனும் மகிழ்ச்சி அடைவதில்லை.

ஞான மார்க்கமாகிய வள்ளல்பெருமான் தோற்றுவித்த சுத்த சன்மார்க்கமே அருளைப் பெரும் சிறந்த வழியாகும்.

அருளைப் பெற்று உடம்பையும்,உயிரையும்,ஆன்மாவையும் காப்பாற்றுவதே மனிதன் கடைபிடிக்க வேண்டிய உண்மையான மார்க்கமாகும்.

பக்தி என்பது ஆன்மீகத்தின் முதற்படியாகும் .அதற்குமேல் பதினைந்து படிகள் உள்ளன.மனிதர்கள் ஆரம்பக் கல்வியிலே வாழ்க்கை முழுவதும் உள்ளார்கள்.அதற்கு மேலே சென்றால்தான் ஆன்மீகத்தின் உண்மையும். அருளின் உண்மையும்.கடவுள் யார் ? என்ற உண்மையும் விளங்கும்.

மக்களை எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்தான் காப்பாற்ற வேண்டும்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.     

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு