ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் சமுகத்திற்கு வந்தனம்.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் சமுகத்திற்கு வந்தனம்.

15-9-2015,அன்று எம் ஜி  ஆர் சமாதி அருகில் சன்மார்க்க சங்கங்களின் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதிப்பேரணி நடத்தி தங்களுக்கு கோரிக்கை மனுவை அனுப்பி வைத்துள்ளோம்

தங்களின் மேலான பார்வைக்கு வந்ததா என்று தெரியவில்லை.

ஐந்து அம்ச கோரிக்கை ;--

திருஅருட்பிரகாச வள்ளலார் அவர்களின் பெயரில் .திரு வள்ளுவருக்கு வள்ளுவர் கோட்டம் அமைத்து இருப்பதுபோல் வள்ளலார் கோட்டம் அமைத்திடவும்,,

சென்னை ஏழு கிணறு வீராசாமி தெருவில் வள்ளலார் 33,ஆண்டுகள் வாழ்ந்த வீட்டை அரசு உடைமையாக்கி நினைவிடமாக மாற்றக் கோரியும்.

வள்ளலார் வருவிக்க உற்ற அதாவது பிறந்த தினமான அக்டோபர் ஐந்தாம் தினத்தன்று தமிழகம் முழுவதும்,மதுக்கடைகளையும்,மாமிசக் கடைகளையும்,அடைத்து அன்றைய தினம் அரசு விடுமுறை தினமாக அறிவிக்கக் கோரியும்,

வள்ளலார் பிறந்த தினமான அக்டோபர் ஐந்தாம் நாளை உலக ஒருமைப் பாட்டு தினமாக ,உயிர்கள் பாது காப்புத் தினமாக ஐநா சபையில் அறிவிக்க மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டியும்..கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகம் தந்த அருளாளர் ,மரணத்தை வென்ற மகான்,ஏழைகளின் பசிப்பிணியை போக்கிய அருள் வள்ளல்,.கடவுள் ஒருவரே அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னும் உண்மைக் கடவுளை உலகுக்கு காட்டிய உத்தமர்.

சாதி,சமயம்,மதம்,அற்ற வழிப்பாட்டு முறையை வடலூரில் சத்திய ஞான சபையில் ஒளி வழிப்பாட்டு முறையைக் கொண்டு வந்தவர்.

ஏழைகளின் பசிப்பிணியைப் போக்க வடலூரில் சத்திய தருமச்சாலை தோற்றுவித்தவர்..இன்னும் அடுப்பு அணையாமல் .ஏழைகளின் பசிப்பிணியை போக்கிக் கொண்டு வருகின்றது.உங்களுக்கும் தெரியும்.

எனவே எங்கள் கோரிக்கையை ஏற்று .தாயியினும் தயவுடைய தாயாக ,தமிழக மக்களைக் காப்பாற்றி வரும் உங்கள் பார்வைக்கு அனுப்பி வைக்கின்றோம் .

தயவு கூர்ந்து எங்கள் கோரிக்கை ஆவன செய்யுமாறு அன்புடனும்,பணிவுடனும் மகிழ்ச்சியுடனும் கேட்டுக் கொள்கிறோம்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
திரு அருட்பா ஆராய்ச்சி மையம்,ஈரோடு.
9865939896,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு