சனி, 12 செப்டம்பர், 2015

தமிழ் ! வள்ளலார் உரை !

தமிழ் ! வள்ளலார் உரை !

தமிழ் என்பது ;--த் +அ ;--ம் +இ ,என்னும் ஐந்து அலகு நிலை உடையது .

த், ம், ழ் ;--ஜட சித் கலை .

அ,இ,;-- சித் கலை.

அ ---அகண்டாகார சித்தை விளக்கும் ஓங்கார பஞ்சாக்கரத்துள்  பதிநிலை அக்கரமாம் .

இ.---பதியை விட்டு நீங்காத சித்தை விளக்கும் விவகாரத்தால் அனந்தாகார வியஷ்டி பேதங் காட்டும் ஜீவ சித்கலை யக்கரமாம் .

பத்தி ;-- சிதாத்ம கலைகளுக்கு ஆதாரமாகி உயிர்களுக்கு உடலை யொத்துக் குறிக்கப்படும்.

த்,ம்,ழ்,எழுத்துக்களுக்கு உரை ..;--

த் ---ஏழாவது மெய்
ம் ----பத்தாவதாகும்
ழ் ----பதினைந்தாவது இயற்கை உண்மை சிறப்பிய லக்கரமாம்.

ஐந்து அலகு நிலையம்,உபய கலை நிலையம்,முன்று மெய் நிலையம் அமைந்துள்ளதும் ,

சம்பு பஷ்த்தாரால் அனாதியாய் சுத்த சித்தாந்த ஆரிஷ் ரீதிப்படி கடவுள் அருள் ஆணையால் கற்பிக்கப் பட்டதும்,

எப் பாஷை களுக்கும் அதாவது எல்லா மொழிகளுக்கும் பிதுர் பாஷை என்று ..அதாவது தந்தை என்று ஆன்றோர்களால் கொண்டாடப்பட்டதும்.

இனிமையான மொழி என்றும் போற்றப் பட்டதாகும்.

தமிழ் மொழி இறைவனால் சம்பு பட்சம் என்ற முறையில் தோற்றுவிக்கப் பட்டதாகும்.

மற்ற உலக மொழிகள் யாவும் மனிதர்களால் படைக்கப் பட்ட மொழிகளாகும்.

எனவே தமிழ் மொழி எக்காலத்தும் அழியாத ,அழிக்கமுடியாத மொழியாகும்.

மேலும் விளக்கம்.;--    

த ..என்பது இயற்கை உண்மை என்பதாகும்.

மி ..என்பது இயற்கை விளக்கம் என்பதாகும் .

ழ் ..என்பது இயற்கை இன்பம் என்பதாகும்.

மேலும் தமிழுக்கு ;--

த்,..என்பது தன்னைப் பற்றி தெரிந்து கொள்வது.தன்மை என்பதாகும்.

மி ..என்பது தமக்கு முன்னாடி கண்களுக்குத் தெரிந்ததைப் பற்றி தெரிந்து கொள்வதாகும்.அதற்கு முன்னிலை என்பதாகும்.

ழ் ..என்பது படர்ந்து உள்ள உலகத்தையும் உலகத்தில் உள்ள அனைத்தையும் அறிந்து கொள்வதாகும்.அதற்கு படர்கை என்பதாகும்.

மேலும் உருவத்தையும் .அருவத்தையும்,உரு அருவத்தையும் குறிப்பதாகும்.

மேலும் ,,ஆன்மா உயிர் ,உடம்பைப் பற்றித் தெரிந்து கொள்வதாகும்.

வள்ளல்பெருமான் சொல்லியது ;--

தன்மை .முன்னிலை,படர்கை என்பது ...

தமிழில் தன்மை ,முன்னிலை ,படர்கை என்பவை யாவை ? அவற்றின் கருத்து யாது ?

தன்மை ---பண்புச் சொல்,சார்பு மயமாய் இருத்தலைப் பற்றி ,தனக்கு மேல் ஒன்றினைச் சார்ந்து இருப்பதனால்--பண்புச் சொல்ஆகிறது ,

முன்னிலை என்பது -- முன் + நிலை ,முன் இடம் கூறினது.

படர்கை என்பது என்ன எனில் --படர்--படரும் படியான, .கை --இடம் ,நிலை அகண்ட இடம், கை என்பது குறுகிய இடம்  

ஆதலால் பேதாபேதம் குறிக்கும் .நிமித்தம் இரண்டாம் இடத்திற்கு முன்னிலை என்றும் .மூன்றாம் இடத்திற்குப் படர்கை என்றும் பெயர்கள் வந்தன என அறியவும்.

தமிழ் மொழியால் மட்டுமே இறைவனையும் .இறைவனால் படைக்கப்பட்ட .உயிர்களையும்,பொருள்களையும்,மற்றும் இயற்கை  உண்மைகளையும்,ரகசியங்களையும் தெரிந்து கொள்ளமுடியும்.என்கின்றார்.

ஆதாலால் உலக மொழிகளுக்கு எல்லாம் தந்தை மொழி தமிழ் மொழி என்கின்றார்.

மாயையால் சிக்குண்டவர்கள் உருவாக்கிய மொழிகள் உலகில் உள்ள மொழிகள்.

இறைவன் அருளைப் பூரணமாக பெற்ற அருளாளர்களால் தோற்றுவிக்கப் பட்ட மொழி தமிழ் மொழியாகும்.

தமிழ் நாட்டிலும் தமிழ் மொழியைப் பின்பற்றி வாழ்பவர்கள் மட்டுமே உயர்ந்தவர்கள்.

தமிழ் மொழியில் மட்டுமே அருளைப் பெரும் வழி உள்ளது.மரணத்தை வெல்லும் வழி உள்ளது.கடவுள் நிலை அறிந்து அம்மயமாகும் வழி உள்ளது.

பிறப்பு இறப்பு இல்லாமல் வாழும் பேரின்ப வாழ்க்கை வாழும் வழிமுறைகள் தமிழ் மொழியில் மட்டுமே உள்ளது.

இன்னும் விரிக்கில் பெருகும்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு