ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

ஆன்ம அறிவு என்றால் என்ன ?

ஆன்ம அறிவு என்றால் என்ன ?


ஆன்மாவில் இருந்து விளங்குவது ஆன்ம அறிவு என்பதாகும்.

நமது உடம்பில் நான்கு அறிவு உள்ளன;---.

இந்திரிய அறிவு,...கரண அறிவு ,...ஜீவ அறிவு ,...ஆன்ம அறிவு என்பதாகும்.

ஆன்ம அறிவு ஆன்மாவில் இருந்து விளங்குவது.

ஆன்ம அறிவை அறிந்தவர் உண்மையை பேசுகின்றார் .

உண்மையை பேசுகின்றவர் மேலும் அருள் அறிவைப் பெறுகின்றார் .

அருள் அறிவைப் பெறுகின்றவர் கடவுள் அறிவு என்னும் பேரறிவைப் பெறுகின்றார் ..

பேரறிவைப் பெற்றவர் ஞானத்தில் ஞானம் என்னும் முழு பூரண அருள் ஆற்றலைப் பெறுகின்றார் .

அருள் ஆற்றலைப் பெற்றவர் மரணத்தை வேல்லுகின்றார் .

மரணத்தை வென்றவருக்கு ஐந்தொழில் வல்லபத்தை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மகிழ்ச்சியுடன் வழங்குகின்றார் .

அந்த ஐந்தொழில் வல்லபத்தைப் பெற்றவர் தான் வள்ளல்பெருமான் அவர்கள்  .

வள்ளலாரின்  சுத்த சன்மார்க்க கொள்கைகள் மனிதர்களின் ஆன்ம அறிவுக்கு வழிக் காட்டும்.

உலகிலே சுத்த சன்மார்க்க கொள்கைகள் ,எல்லா உலகிற்கும் பொதுவானது.

சாதி,சமய,மதம்,இனம்,நாடு, என்ற பேதம் இல்லாதது.

அதற்கு ஞான மார்க்கம் என்று பெயர்

வள்ளலார் தோற்றுவித்த மார்க்கம் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்'' என்ற பொது மார்க்கம்..

ஞான என்றால் சுத்தமான பேர் அறிவு என்று பெயராகும்.

ஆன்ம அறிவைப் பெறுவோம் ,என்றும் அழியாத அருளைப் பெறுவோம்.

ஆனந்தமாக வாழ்வோம்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.  

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு