புதன், 23 செப்டம்பர், 2015

ஆட்சி செய்ய அரசியல்வாதிகள் அலைகின்றார்கள்.!

ஆட்சி செய்ய அரசியல்வாதிகள் அலைகின்றார்கள்.

நீங்கள் வந்து என்ன செய்யப் போகின்றீர்கள் இதற்கு முன்னாடி இருந்தவர்கள் என்ன செய்து விட்டார்கள்.

பல்லாயிரம் ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்கள் என்ன செய்து கிழித்து விட்டார்கள்.

அவர்கள் எல்லாம் இப்போது எங்கே இருக்கின்றார்கள் .என்ன செய்து கொண்டு இருக்கின்றார்கள் என்பதாவது  உங்களுக்குத் தெரியுமா ?

இறைவன் படைத்த  உலகத்தில் யார் ஆட்சி செய்வது, யாரை ஆட்சி செய்ய வைப்பது என்பது இறைவனுக்குத் தெரியாதா ? நீங்கள் ஏன் வீணே அலைந்து கொண்டு உள்ளீர்கள்.

உங்களின் உயிரையோ உடம்பையோ, நோயையோ,துன்பத்தையோ  உங்களால் காப்பாற்ற முடியாத போது மக்களின் துன்பத்தை எப்படி உங்களால் காப்பாற்ற முடியும்.

உங்களால் மழை வரவழைக்க முடியுமா ?மழை வந்தால் நிறுத்த முடியுமா ?

உங்களால் கடலை உருவாக்க முடியுமா ? கடல் கொந்தளிப்போ புயலோ வந்தால் அதை நிறுத்தி விட முடியுமா ?

உங்களால் பூமியை உருவாக்க முடியுமா .பூகம்பம் உண்டானால் அதை தடுத்து நிறுத்தி விட முடியுமா ?

உங்களால் அக்கினியை உருவாக்க முடியுமா ? சூரியன் ,சந்திரன்,நட்சத்திரங்களை உருவாக்க முடியுமா ? அதன் ஒளியை தடுத்து நிறுத்திவிட முடியுமா ?

உங்களால் காற்றை உருவாக்க முடியுமா ? காற்றை உங்களால் நிறுத்திவிட முடியுமா ?

உங்களால் ஆகாயத்தை உருவாக்க முடியுமா ? ஆகாயத்தில் உள்ள அணுக்களை கணக்குப் போட முடியுமா ? அணுக்களைத் தான்  மாற்ற முடியுமா >

உங்களால் எதையும் உருவாக்கவும் முடியாது .உருவாக்கியதை அழிக்காமல் இருந்தால் அதுவே நல்லது.

உங்களால் என்ன செய்து விடமுடியும் .அப்பாவி மக்களை ஏமாற்ற முடியும்.அற்ப ஆசைகளுக்காக மக்களை ஏமாற்றிக் பணத்தை கொள்ளை அடிக்க முடியும்..

நான்தான் தலைவன் என்று ஏசி ரூமில் உட்கார முடியும்.அப்பாவி மக்களை காலில் விழ வைக்க முடியும்.

அழிந்து போகும் மாலை மரியாதைகளைப் பெற முடியும் ,அற்ப புகழை ஏற்றுக் கொள்ள முடியும்.,

ஓசி பணத்தில் உலக நாடுகள் எல்லாம் சுற்றிப் பார்க்க முடியும்.

அப்பாவின் மக்களின் பணத்தை வைத்து திட்டம் தீட்ட முடியும்.ஆதிலே பாதிப் பணத்தைக் கொள்ளை அடிக்க முடியும்.

இறுதியில் மனம் கெட்டு ,உடல் கெட்டு ,நோய் வந்து மாண்டு போவீர்கள் .

உங்களையே உங்களால் காப்பாற்ற முடியாதவர்கள் ,மக்களை எப்படி காப்பாற்றுவீர்கள் .

உலகத்தைப் படைத்த இறைவன் .உயிர்களைப் படைத்த இறைவன் .உயிர்களின் வாழ்க்கையைப் பற்றியும்,அவைகளின் நன்மை தீமைகளையும் அறிந்து காப்பாற்றத் தெரியாதா ?

நீங்கள் வீணாக அலைய  வேண்டாம் எல்லாம் இறைவன்  பார்த்துக் கொள்ளுவார் .

அவரவர்கள் அவரவர்கள் வேலைப் பாருங்கள்.எல்லாம் நல்லதே நடக்கும்.

ஆண்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு