செவ்வாய், 22 செப்டம்பர், 2015

அரசியல் வாதிகள்,அதிகாரிகள் மட்டுமே குற்றவாளிகள் அல்ல !

அரசியல் வாதிகள்,அதிகாரிகள் மட்டுமே குற்றவாளிகள் அல்ல !

உலகத்தில் அனைவருமே குற்றவாளிகள் தான் .

ஒவ்வொரு மனிதரும் அவரவர்களுக்கு முடிந்த குற்றங்கள் செய்து கொண்டே உள்ளார்கள்..

ஒவ்வொருவரும் தங்களுடைய குற்றங்களை உணராமல் மற்றவர்களுடைய குற்றங்களையே பேசிக் கொண்டும் சிந்தித்துக் கொண்டும் உள்ளார்கள்.

குற்றங்கள் தோன்றியது இன்று நேற்று அல்ல ,பல்லாயிரம் ஆண்டுகளாக உலகத்தில் குற்றங்கள் நடந்து கொண்டே உள்ளது.

எல்லா குற்றங்களுக்கும் அடைபடைக்  காரணம் ஆன்மீகம்தான் .

கடவுள்களே ;--போர் செய்பவர்களாக ,களவு செய்பவர்களாக,குடிக்காரர்களாக ,காமம் கொள்பவர்களாக ,கொலை செய்பவர்களாக,கொள்ளை  அடிப்பவர்களாக, பெண்ணை சிறைப்படுத்து பவர்களாக,பெண்ணை மான பங்கம் படுத்துபவர்களாக சூது ஆட்டம் ஆடுபவர்களாக,நாட்டை அழிப்பவர்களாக, ,கன்னிப் பெண்களை கற்பு அழிப்பவர்களாக .லஞ்சம் கொடுத்து நாட்டைப் பிடிப்பவர்களாக ,

காதல் செய்பவர்களாக,கன்னிப் பெண்ணை கற்பழிப்பவர்களாக , திருட்டுத் திருமணம் செய்பவர்களாக ,,குடும்பம் நடத்துபவர்களாக ,குழந்தை குட்டிகளைப் பெற்றுக் கொள்பவர்களாக,மாற்றான் பெண்டாட்டியை சிறை பிடிப்பவர்களாக ,

சூது செய்து நாட்டை பிடித்து ஆள்பவராக... போன்ற குற்றவாளிகளாக படைத்து வைத்து உள்ளார்கள்.

பெண்கள் குளிக்கும்போது மறைவாக இருந்து பார்ப்பவர்களாக ,அவர்களுக்குத் தெரியாமல் துணிகளை தூக்கிக் கொண்டு ஓடுபவர்களாக படைத்து உள்ளார்கள்.

பெண்களை காந்தர்வ மணம் செய்து கொள்வது .

போன்ற கொடுரமான குற்றங்களை செய்யும் கடவுள் நம்முடைய நாட்டிலே நிறைந்து இருக்கின்றன.

மேலும் உயிர்களைப் பழிவாங்கும் கடவுள்,பலி கொடுக்கும் கடவுள்....பலி வாங்கும் கடவுள் என்ன அநியாயம் இது.இப்படியும் கடவுள்களா ?

அவர்களை வழிபாடு செய்பவர்கள் எப்படி இருப்பார்கள் ,அவர்களின் குணம் எப்படி குற்றம் இல்லாமல் இருக்கும்.
.
அவர்களைப் பின்பற்றி வாழோவர்கள் அவர்கள் செய்யும் குற்றங்களை தாங்களும் செய்து கொண்டு வருகின்றார்கள் .

கடவுள் கையில் பாருங்கள்,.வேல் ,கத்தி,கம்பு,கடப்பாரை ,மம்முட்டி .அரிவாள்,  சூலாயுதம்,போன்ற அழிக்கும் கருவிகளே வைத்துள்ளார்கள்.

அவர்களின் வாகனங்களைப் பாருங்கள் ,மிருகங்களின் வாகனங்களாகவே இருக்கும்.

கடவுளை மனிதர்கள் தூக்கிக் கொண்டு மனிதர்கள் ஊர்வலமாக செல்லுவதும் உண்டு,

கடவுள் இப்படி எல்லாமா இருப்பார் .? இப்படி எல்லாமா கடவுளுக்கு பல உருவங்கள் உண்டு.அறிவு உள்ளவர்கள் சிந்திக்க வேண்டாமா !

கொலைக்காரக்  கடவுள்களைப் பாருங்கள்  நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு வெறிப் பிடித்த,பயங்கரமான  காட்சியாக வைத்து இருப்பார்கள்.அதற்கு காவல் தெய்வம் என்று பெயர் வைத்துள்ளார்கள்.

இதுபோன்ற மூட நம்பிக்கைகள் ஒழிந்து தனிமனித ஒழுக்கம் வந்தால்தான் அறிவு தெளிவு உண்டாகும்.அறிவு தெளிவு வந்தால் மட்டுமே குற்றவாளிகள் நாட்டிலே இருக்க மாட்டார்கள்.

உலகில் நடக்கும் குற்றங்களுக்கு அடிப்படையான வேர்
சாதி,சமயம்,மதம் போன்ற பொய்யான கற்பனைக் கதைகள் .அதன் கொள்கைகள் தான் காரணம் .

மனிதன் செய்யும் குற்றங்கள் யாவும் கடவுளின் பெயரால் மறைந்து இருக்கின்றது .அதை விட்டுவிட்டு கிளைகளையும்,தலைகளையும் வெட்டிப் பயன் இல்லை.அதன் ஆணி வேரைப் பிடுங்கி எரிய வேண்டும்.

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்.

கூறுகின்ற சமயம் எல்லாம் மதங்கள் எல்லாம் பிடித்துக்
கூவுகின்றார் பலன் ஒன்றும் கொண்டு அறியார்
நீறுகின்றார் மண்ணாகி நாறுகின்றார் அவர்போல
நீடுலகில் அழிந்துவிட நினைத்தேனோ ....என்கின்றார்.

சாதியும் மதமும் சமயமும் பொய்யென
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் ஜோதி.

சாதியும் மதமும் சமயமும் காணா
ஆதி அனாதியாம அருட்பெருஞ்ஜோதி .

இருட் சாதித் தத்துவ சாத்திரக் குப்பை
இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிக் போட்டு
மருட் சாதி சமயங்கள் மதங்கள் ஆசிரம
வழக்கெல்லாம் குழிக் கொட்டி மண் மூடிபொட்டு

புதைத்து விடுங்கள் என்கின்றார் வள்ளலார் .

இதுபோல் ஆயிரக்கணக்கான பாடல்கள் சமய மதங்களை சாடி எழுதி உள்ளார் .

துன்மார்க்கங்கள் எல்லாம் தொலைந்து வள்ளலார் தோற்றுவித்த சுத்த சன்மார்க்க நெறியை மக்கள் பின் பற்றினால் மட்டுமே குற்றம் செய்யாமல் தனித்தனி மனிதர்கள் அனைவர்களும் புனிதர்களாக வாழ முடியும்.

நாடும் நலம் பெரும் நாட்டை நல்லவர்கள் .ஆட்சி செய்வார்கள்.நல்ல அதிகாரிகள் நிலைத்து இருப்பார்கள்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு