வெள்ளி, 11 செப்டம்பர், 2015

புலால் உண்பவர்கள் கண் இருந்தும் குருடர்கள் !

புலால் உண்பவர்கள் கண் இருந்தும் குருடர்கள் !

பொய் விளக்கப் புகுகின்றீர் போது கழிக்கின்றீர்
புலை கொலைகள் புரிகின்றீர் கலகல என்கின்றீர்
கை விளக்குப் பிடித்து ஒரு பாழ் கிணற்றில் விழுகின்ற
களியர் எனக் கழிக்கின்றீர் கருத்தும் இருந்தும் கருதீர்
ஐ விளக்கு மூப்பு மரண ஆதிகளை நினைத்தால்
அடி வயிற்றை முருக்காதோ கொடிய முயற்று உலகீர்
மெய் விளக்க எனது தந்தை வருகின்ற தருணம்
மேவியது ஈண்டு அடைவீரே ஆவி பெறுவீரே !

கொலை செய்பவரும் புலால் உண்பவரும்,கண் இருந்தும் குருடர்கள் என்கின்றார் வள்ளலார் .

குருடன் விளக்குப் பிடித்துக் கொண்டு பாழ் கிணற்றில் விழுவது போல் விழுந்து அழிந்து கொண்டு உள்ளார்கள்.

அறிவு இருந்தும் அறிவு தெளிவு இல்லாமல் ,இறைவன் படைத்த  உயிர்களை கொன்று  அதன் மாமிசத்தை உண்கிறார்கள்.

அதனால் அவர்களுக்கு வரும் தீராத துன்பம் வரும் என்பதை அறியாமல் உள்ளார்கள்.

அதனால்தான் அவர்களது உடம்பிற்கு துன்பம் வரும் என்பதை கொஞ்சம் நினைத்துப் பார்த்தால் அவர்கள் விட்டு விடுவார்கள்  .

அதனால் வரும் தீராத துன்பங்களில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

இனிமேலாவது உண்மையை உணர்ந்து அறிவைப் பயன் படுத்தி தவறு செய்வதில் இருந்து விளக்கிக் கொள்ளுங்கள் என்கின்றார் நமது கருணை வள்ளல் திரு அருட்பிரகாச வள்ளலார்.

நாம் அடையப்போகும் துன்பத்தை நினைந்து வள்ளலார் வருந்துகின்றார்.

அதனால் நமக்கு அறிவு இருந்தும் ,கண் இருந்தும்,தெளிவு இல்லாத, புரியாத.அறியாத குருடர்களாக இருக்கின்றோம்.

மக்களை அறியாதவர்களாக ,குருடர்களாக மாற்றியது சாதி,சமயம்,மதங்கள் போன்ற குருட்டுத் தனமான,பொய்யான  கொள்கை களாகும்.

அவற்றை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு உண்மையை அறிந்து .கண் உள்ளவர்களாக கருணை உள்ளவர்களாக மாறுங்கள் என்கின்றார் .வள்ளலார் .

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு