வியாழன், 3 செப்டம்பர், 2015

சாத்திரங்களை நம்பாதீர்கள் !

சாத்திரங்களை நம்பாதீர்கள் !
சாத்திரங்கள் எல்லாம் தடுமாற்றம் சொல்வது அன்றி
நேத்திரங்கள் போற் காட்ட நேராவே --நேத்திரங்கள்
சிற்றம்பலவன் திரு அருள் சீர் வண்ணம் என்றே
உற்று இங்கு அறிந்தேன் உவந்து .....வள்ளலார் பதிவு..

இயற்கையின் கிரகங்களின் கணக்கை எவராலும் துல்லியமாக கணக்குப் போட்டு சொல்ல முடியாது.

முன்பு கணக்குப் போட்டவர்கள் எல்லோரும் தவறாகவே  கணக்குப் போட்டு எழுதி வைத்துள்ளார்கள் .இயற்கையின் உண்மையை எவரும் முழுமையாக அறிந்து கொள்ள முடியவில்லை.

சாத்திரங்களை நம்பிக் கேட்டு அதன்படி சென்று  அழிந்து போனவர்கள் அளவில் அடங்காது.

அதுபோல் தான் வாஸ்து என்பதும்,வாஸ்துவை நம்பிக் கேட்டவர்கள் ஏராளம்.

உங்களின் உடம்பிலே அனைத்து கிரகங்களும் உள்ளன.

ஒழுக்கமும்  வாழ்க்கை முறைகளையும் ஒழுங்காக வைத்துக் கொண்டால் எந்த கிரகமும்,வாஸ்த்தும் ஒன்றும் செய்யாது.

தவாறன வழியில் செல்வதால் துன்பம்,துயரம் அச்சம்,பயம்,போன்ற தீராத துன்பங்கள் வந்து சேர்ந்து விடுகின்றன.

உயிர்க்கொலை செய்வதும் அதன் மாமிசத்தை உண்பதுமே பெரிய தண்டனைக்கு உரிய குற்றமாகும்.

அவற்றைப் போக்க ஒரே வழி ஜீவ காருண்யம் என்னும் உயிர் இரக்கம் மட்டுமே தேவை .

உயிர் இல்லாத தெய்வங்களை சுற்றுவதை விட்டுவிட்டு உயிர் உள்ள ஜீவர்களுக்கு உதவி செய்யுங்கள் உங்கள் துன்பம் எல்லாம் குறைந்துவிடும்.

சாத்திரங்களை,வாஸ்துவை  நம்பி வீண் செலவு செய்ய வேண்டாம் .அதனால் எந்த நன்மையையும் கிடைக்காது .
சாத்திரங்கள்,வாஸ்து என்பது  எல்லாம் இப்போது வியாபாரம் ஆகி விட்டது.பணத்தைக் கொடுத்து துன்பத்தைப் போக்க முடியாது.மேலும் துன்பத்தை வாங்கிக் கொள்கிறீர்கள் .

உயர்களின் மேல் அன்பும் தயவும்,கருணையும் இருந்தால் மட்டுமே துன்பங்கள் தீரும்.,துன்பங்கள் தொலைந்து விடும்.

இறைவன் அருள் பார்வை இருந்தால் மட்டுமே துன்பங்கள் தீரும்.அதற்கு ஜீவ காருண்யம் என்னும் ஏழைகளின் பசியைப் போக்குங்கள் .இறைவன் அருள் கிடைத்து துன்பம் தொலைந்து விடும்.

அதற்கு வள்ளலார் சொல்லும் வழியைக் கேளுங்கள் ;--

சூலை,குன்மம் ,குஷ்டம் முதலிய தீராத வியாதிகளால் வருந்துகின்ற சமுசாரிகள் ,தங்களின் தரத்திற்கு தகுந்தாற் போல் பசித்தவர்களுக்கு பசி யாற்றுவிப்பதே விரதமாக அனுசரித்தார்கள் ஆனால் அந்த ஜீவ காருண்ய அனுசரிப்பே நல்ல மருந்தாக அந்த வியாதிகளை நிவர்த்தி செய்து,விஷேச சவுகரியத்தை உண்டு பண்ணும் என்பது உண்மை .

அதேபோல் பலநாள் குழந்தை இல்லாதவர்கள்,.

அற்ப வயது என்று குறிப்பினால் அறிந்து கொண்டு இறந்து விடுவார்கள் என்று நினைப்பவர்கள்.

கல்வி,அறிவு,செல்வம்,போகம்,முதலியவைக் குறித்து வருந்து கின்றவர்கள்.

பலநாள் குழந்தை இல்லாமல் வருந்துகிறவர்கள்,

விலை நிலத்தில் விளைவு இல்லாமல் வருந்துகின்றவர்கள் ,

எந்த நேரத்திலும் ஆபத்துக்கள் வரும் என்று நினைப்பவர்கள்,

மேலும் எதுவாக இருந்தாலும்.எந்த துன்பமாக இருந்தாலும்.ஊழ் வகையால் வந்தாலும் ,அஜாக்கிரத்தையாக வந்தாலும்.

பசித்தவர்களுக்கு பசியாற்று வித்து அவர்களுக்கு இன்பத்தை உண்டு பண்ணுகின்ற மேலான விரதமானது.

எல்லா துன்பங்களையும் போக்கி விடும். இதுதான்
உண்மையான விரதமாகும். ,

கண்களுக்குத் தெரியாத கடவுளுக்கு ,கொடுப்பதாலும், பேசாத சிற்ப சிலைகளை வணங்குவதாலோ ,அவைகளுக்கு பரிகாரம் செய்வதாலோ எந்த பயனும் கிடைக்காது.

பேசுகின்ற ,பேசாத உயிர் உள்ள ஜீவர்களுக்கு உபகாரம் செய்யுங்கள் .அதுதான் கடவுள் வழிபாடு..அதுதான் துன்பத்தைப் போக்கும்.

எனவே சாத்திரம்,வாஸ்து போன்ற பொய்யான செய்திகளைக் கேட்டு அதன்படி நடந்து ,உங்கள் வாழ்க்கையை வீணாக்கிக் கொள்ளாதீர்கள்.பணத்தை விரயம் செய்யாதீர்கள்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு