வியாழன், 17 செப்டம்பர், 2015

அறிவு உள்ளவர்கள் ! அறிவு இல்லாதவர்கள் !

அறிவு உள்ளவர்கள் ! அறிவு இல்லாதவர்கள் !

அறிவு உள்ளவர்கள் அறிவு இல்லாதவர்கள் என்பதை அவர்கள் வழிபடும் முறையை வைத்து அறிந்து கொள்ளலாம்.

1,விக்கிரங்களை அதாவது தத்துவ பொம்மைகளை வைத்து கடவுளாக நினைந்து வழிபாடு செய்பவர்கள்,பக்தி காண்டிகள் என்று பெயராகும்.

2,அக்கினியை கடவுளாக நினைந்து வழிபாடு செய்கிறவர்கள் கர்ம காண்டிகள் என்று பெயராகும்.

3,இருதயத்தில் கடவுளாக நினைந்து வழிபாடு செய்கிறவர்கள் யோகிகள் என்று பெயராகும்.

4,எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கின்றார் என்று அறிந்து உயிர்களுக்கு உபகாரம் செய்பவர்கள் ஞானிகள் என்று பெயராகும்.

மேலே கண்ட நான்கு வழிப்பாட்டு முறைகளில் அறிவில் உயர்ந்தவர்கள் யார் ? என்றால் எல்லா உயிர்களிலும் கடவுள் இருக்கின்றார் என்பதை அறிந்தவர் ,தெரிந்தவர் அறிவில் உயர்ந்தவராகும்.

ஐம்புலன்கள் என்னும் இந்திரியங்களைக் கொண்டு வழிபாடு செய்பவர்கள் இந்திரிய அறிவு என்னும் நான்காம் அறிவு உடையவர்கள் .

கரணங்கள் என்னும் மனம் புத்தி சித்தம் அகங்காரம் என்னும் கருவிகளைக் கொண்டு வழிபாடு செய்கிறவர்கள் கரண அறிவு என்னும் முன்றாம் அறிவு உடையவர்கள்.

ஜீவன் என்னும் உயிரை நினைந்து வழிபாடு செய்கிறவர்கள் ஜீவ அறிவு என்னும் இரண்டாம் அறிவு உடையவர்கள் .

ஆன்மா என்பது எல்லா உடம்புகளையும்,உயிர்களையும்  இயக்கம் சக்தி வாய்ந்தது,அதுவே கடவுளின் கூறு,.. அதுவே கடவுளின் குழந்தைகள் ,அதுவே முதன்மையானது  என்பதை அறிந்து ஆன்மாவை வழிபாடு செய்கிறவர்கள் முதன்மை அறிவு உடையவர்கள்.

மேலே கண்ட வழிபட்டு முறைக் கொண்டு  அறிவு உள்ளவர்கள் .அறிவு இல்லாதவர்கள் யார் ? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

இதற்கு படித்தவர்கள் படிக்காதவர்கள் என்ற வேறுபாடுகள் இல்லை .

வள்ளலார் பதிவு செய்த பாடல்.;--

கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே
காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே
நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலம் கொடுக்கும் நலமே
எல்லார்க்கும் பொதுவில் நடமிடுகின்ற சிவமே
என்னரசே யான் புகலும் இசையும் அணிந்து அருளே !

படித்தவர்கள் ,படிக்காதவர்கள்,என்ற வேறுபாடுகள் இல்லாமலும் சாதி,சமயம்,மதம் என்ற வேறுபாடுகள் இல்லாமலும் எல்லா உலகத்திற்கும் பொதுவாக இயங்கிக் கொண்டு இருப்பவர்தான் கடவுள்.

அந்தக் கடவுள் எல்லா அண்டங்களையும் எல்லாத் தத்துவங்களையும், எல்லாத் தத்துவிகளையும்,எல்லா கிரகங்களையும்  எல்லா உயிர்களையும் மற்றைய எல்லா வற்றையும் இயக்கிக் கொண்டு உள்ளவர்தான் பொதுவான கடவுள். ஒரேக் கடவுள்...  அவர்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பதாகும் .என்பதை யார் உணர்ந்து வழிபாடு செய்கின்றார்களோ அவர்களே மதி உள்ளவர்கள் அவர்களே அறிவு முழுமைப் பெற்றவர் களாகும் .

அவரே அறிவு உள்ளவர்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு