வெள்ளி, 18 செப்டம்பர், 2015

மனிதன் முன்று பற்று களினால் அழிகின்றான் !

மனிதன் முன்று பற்று களினால் அழிகின்றான் !

மண்ணில் பற்று உள்ளவன் மண்ணினால் அழிகின்றான்.

பணத்தில் பற்றுள்ளவன் பணத்தினால் அழிகின்றான்.

பெண்ணின் மேல் பற்றுள்ளவன் பெண்ணினால் அழிகின்றான்.....

குடி இருக்க வீடு என்னும் இடம் வேண்டும் .

வாழ்க்கைக்கு போதுமான பணம் வேண்டும்,

இன்பம் பெற, படுக்க,அணைக்க, குழந்தைப்  பெற்றுக் கொள்ள  ஒரு பெண் வேண்டும்.( பெண்ணாக இருந்தால் ஆண் வேண்டும் )

இந்த மூன்றும் தேவைக்கு மேல் இருந்தால் துன்பம் அவர்களைத் தேடிவரும்.

அளவிற்கு அழிவில்லை ,அளவுக்கு மீறினால் அழிவு தானே வரும்.

புரிந்து வாழுங்கள் புண்ணியம் பெறுங்கள்,
அறிந்து வாழுங்கள் அன்புடன் வாழுங்கள்.
தெரிந்து வாழுங்கள் தெளிவுடன் வாழுங்கள்
கனிந்து வாழுங்கள் கருணையுடன் வாழுங்கள்
பணிந்து வாழுங்கள் பரமன் துணை இருப்பான் .

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு