வெள்ளி, 25 செப்டம்பர், 2015

ஆண்டவரை தேடிச் சென்றால் புண்ணியம் கிடைக்காது !

ஆண்டவரை தேடிச் சென்றால் புண்ணியம் கிடைக்காது !

ஆண்டவர் உங்களைத் தேடிவந்து புண்ணியம் வழங்க வேண்டும்.

உங்களை ஆண்டவர் தேடி வரும் அளவிற்கு புனிதர்களாக ஒழுக்கம்  உள்ளவர்களாக உயிர்க்கொலை செய்யாதவர்களாக,புலால் உன்னாதவர்களாக  ஜீவ காருண்யம் உள்ளவர்களாக வாழ வேண்டும்.

வள்ளலாரைத் தேடி ஆண்டவர் வந்தார் .

பாதி இரவில் எழுந்தருளிப்
பாவி எனை எழுப்பி அருட்
சோதி அளித்து என் உள்ளகத்தே
சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்
நீதி நடஞ் செய் பேரின்ப
நிதி நான் பெற்ற நெடும் பேற்றை
ஓதி முடியாது என் போல் இவ்
உலகம் பெறுதல் வேண்டுவனே !

அருட்பெருஞ் ஆண்டவர் வள்ளலாரைத் தேடிவந்து அருளை வழங்கி மரணத்தை வெல்லும் வழியைக் காட்டி மரணத்தையும் வெல்ல வைத்தார்.

அப்படி வழங்கியபோதும் எனக்குக் கொடுத்தது போதாது எனக்குக் கொடுத்தது போல் உலகில் உள்ள  எல்லா ஆன்மாக்களுக்கும் கொடுக்க வேண்டும்  என்று ஆண்டவரிடம் வேண்டுகின்றார்.

அவருடைய பெருங்கருணை இவ்வுலகில் எந்த அருளாளர் களுக்கும் கிடையாது.

உண்மையான அருளாளர்களையும்.அவர்களுடைய போதனைகளையும் பின் பற்றுபவர்களுக்கு எக்காலத்திலும் துர்மரணங்கள் வரவே வராது.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு