வெள்ளி, 8 ஜனவரி, 2016

உண்மையான மகா மந்திரம் !

உண்மையான மகா மந்திரம் !

அருபெருஞ்ஜோதி         அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை   அருட்பெருஞ்ஜோதி

என்னும் மகா வாக்கியத்தை வள்ளல்பெருமான் ''மகா மந்திரம்' என்று பெயர் வைத்துள்ளார் .

இந்த மந்திரத்தை நான் சொல்லவில்லை ,எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னுள் இருந்து வெளிப்படுத்தி உள்ளார் என்பதை தெளிவாக விளக்கி உள்ளார் .

வள்ளல்பெருமான் ..இந்த மகா மந்திரத்தை '',சித்திவளாகத்தில்'' ..இது கடைசி வார்த்தை என்று ஒரு பெரிய நீண்ட பேருபதேசம் செய்கின்றார் .

ஐம்பது வருடங்களாக வெளிப் படுத்தாத அந்த ''மகா மந்திரத்தை'' தன்னுடைய ஐம்பத்து ஒன்றாவது வருடத்தில் சித்திப் பெறுவதற்கு முன் வெளிப்படுத்துகின்றார்.

இந்த மகா மந்திரத்தில் என்னதான் உள்ளது என்பதை தெரியப்படுத்து கின்றார்.

இந்த மந்திரத்தை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வெளிப்படையாக வெளிப்படுத்த ஆணை இட்டு உள்ளார் என்பதையும் தெளிவு படுத்தி உள்ளார் .

இந்த மந்திரத்தில் /தயவு,கருணை, அருள்,,என்னும்
மூன்றும் அடங்கி உள்ளது .அதுதான் இறைவனுடைய இயற்கை உண்மை ,இயற்கை விளக்கம்,இயற்கை இன்பம் என்பதாகும்...

மேலும் ஒப்பற்ற பெரும் தயவுடைய அறிவே பூரண இன்பமாம் ..அது ஒப்பற்ற பெரும் தயவு உடைய பேரறிவேயாம் .

இஃது வாச்சியார்த்தம் .இவ்வண்ணம் சாதனம் முதிர்ந்தால் ..முடிவான இன்ப அனுபவம் பெறுவதற்குத் எந்த தடைகளும் இல்லை என்கின்றார்.

உண்மையான கடவுளின் முழு பெயர் ,முழு வடிவம்தான் இந்த மகா மந்திரம் என்பதாகும்...

இந்த மந்திரத்திற்குள் .உலகில் உள்ள எல்லா மந்திரங்களும் அடங்கி விடுகின்றன...ஆதலால் இவை மகா மந்திரம் என்பதாகும்.இதற்குமேல் எந்த மந்திரம் இல்லை..

உலகில் உள்ள மந்திரங்களைப் பற்றி வள்ளல்பெருமான் சொல்லியது ..இதுகாறும் தெய்வத்தின் உண்மையைத் தெரிய வொட்டாது அசுத்த மாயா காரிகளாகிய சித்தர்கள் மறைத்து விட்டார்கள்.

சுத்த மாயா காரிகளாகிய தெரிந்த பெரியோரும் இல்லை .சுத்த சன்மார்க்கமும் இல்லை,சுத்த சன்மார்க்கம் இருந்து இருந்தால் அனுபவித்து அறியாத அனுபவமும்,கேட்டு அறியாத கேள்வியும் நாம் கேட்டு இருப்போம் .

மேலும் இறந்தவர்கள் மீளவும் எழுந்து வந்து இருப்பார்கள்.ஆதலால் கேட்டு அறியாத கேள்விகளைக் கேட்கும்படி அருட்பெருஞ்சோதி ஆண்டவர் செய்தது இத்தருணமே ,,ஆதலால் இத்தருணம் இக்காலமே சுத்த சன்மார்க்க காலம் என்கின்றார்.

அசுத்த மாயா காரிகள்,சுத்த மாயா காரிகள் என்று இரண்டு பிரிவினர்களை சொல்லுகின்றார் .

ஆதாவது சுத்த தேகத்தில்  உள்ளவர்கள்  ,பிரணவ தேகத்தில்  உள்ளவர்கள் .என்பதாகும்.அவர்களுக்கு மீண்டும் பிறப்பு உண்டாக்ய்ம்,

ஞான தேகம், கிடைத்தவர்களுக்கு மட்டுமே சுத்த சன்மார்க்கம் விளங்கும்...சுத்த சன்மார்க்கம் என்பது இறைவனுடைய மார்க்கமாகும்...மரணத்தை வென்று ஒளி உடம்பாக மாற்றிக் கொண்டவர்களுக்கு மட்டுமே, ''அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்'' தன்னுடைய உண்மையான மார்க்கத்தையும்,உண்மையான கொள்கைகளையும்,உண்மையான உருவத்தையும்  ஒளிவு மறைவு இல்லாமல் காட்டுவார் .

உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைக் கண்டவர், களித்தவர், கலந்து கொண்டவர்..வள்ளல்பெருமான் ஒருவரே !

எனவேதான் ''அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் உண்மைப் பெயரான மகா மந்திரத்தை'' வள்ளல்பெருமான் மூலமாக,உலகிற்கு அறிமிகப் படுத்தி உள்ளார்.  

இத்தருணம் உண்மைக் கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின உண்மையான, அழைப்பை குறிப்பதுதான் மேலே சொல்லப்பட்ட,,

,''அருட்பெருஞ்ஜோதி ..அருட்பெருஞ்ஜோதி ..தணிப்பெருங்கருணை ..அருட்பெருஞ்ஜோதி''

என்னும்  மகா மந்திரம் என்பதாகும்.

மேலும் இத்தருணம் ஆண்டவரும் தெரிவித்தார் ,தெரிவிக்கின்றார்,தெரிவிப்பார் .நீங்கள் எல்லவரும் உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள் ,இப்போது நான் சொல்லி வந்த பிரகாரம் ஜாக்கிரதையுடன் உண்மை அறிவாய் விசாரம் செய்து கொண்டு இருங்கள் அதாவது மகா மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருங்கள் .என்கின்றார் ..

மகா மந்திரத்தை தொடர்ச்சியாக சொல்லவேண்டும். பிரித்து சொல்ல வேண்டாம் ,இது ரொம்ப முக்கியமானதாகும்.

மகா மந்தரத்தை சொல்லுவதற்கு ..அதற்கு காரணமான ஜீவ காருண்யம் என்னும் தயவு அவசியம் வேண்டி உள்ளது .அந்த தயவு வருவதற்கு தடையாக இருக்கும் சாதி,சமயம்,மதங்கள்,அவற்றின் ஆச்சார சங்கற்ப விகற்பங்கள் போன்ற பொய்யான செயல்பாடுகளை தூக்கி எரிந்து விடவேண்டும்...

அப்படி தூக்கி எரிந்தால்தான் உங்களுக்கு ஒருமை என்னும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை என்னவென்பது விளங்கும் என்கின்றார் .

அந்த ஒருமை வருவதற்கு தயவு என்னும் பொது உரிமையும் இருக்க வேண்டும்.அப்படி முயற்சியுடன் இருந்து கொண்டு இருந்தால் ஆண்டவர் வந்த உடனே எல்லா நன்மையையும் பெற்றுக் கொள்வீர்கள்

எல்லோருக்கும் ,தாய் தந்தை அண்ணன் ,தம்பி,முதலான உறவுகளினால் செய்யப்பட உதவிகள் எவ்வளவோ ,அதற்குக் கோடி கோடி பங்கு அதிகமாக கொடுக்கும்படியான இடம் இந்த இடம்.என்று ''சித்தி வளாகம்'' என்னும் இடத்தில் கொடிக் கட்டிக் கொண்டு,நீண்ட பேருபதேசம் செய்கின்றார்.

எனவே ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை உள்ள சகோதர சகோதரிகளே ..வள்ளல்பெருமான் அறிமுகப் படுத்திய ''மகா மந்திரமான அருட்பெருஞ்ஜோதி மந்தரத்தை'' ,இடைவிடாது உச்சரித்துக் கொண்டும் ,நினைத்துக் கொண்டும் இருந்தாலே ,அளவில்லாத அருள் ஆற்றல் பெருகும்.அதியங்கள் நடக்கும் ஆச்சரியங்கள் உண்டாகும்

நமக்கு உண்டாகும் துன்பம்,துயரம்,அச்சம்,பயம்,மரணம் போன்ற உடல் தொல்லைகள் வராமல் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் காப்பாற்றப் படும் இது சத்தியம்...

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896,

1 கருத்துகள்:

26 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 8:02 க்கு, Blogger pravin kumar R கூறியது…

அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு