புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள் !
புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள் !
தமிழர் திருநாளான புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள் என்பது தமிழர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல .உலகில் உள்ள எல்லா விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கு உதவியாக இருக்கும் ஆடு மாடுகள் போன்ற உயிர் இனங்களுக்கும் சொந்தமானது.,
ஏன் என்றால் தமிழ் பேசும் இனத்தால் தைப்பொங்கல்,என்னும் பெயர் வழங்கப்பட்டது .
தமிழ் மொழி என்பது உலக மொழிக்கு எல்லாம் தந்தை மொழியாகும்.தமிழ் இறைவனால் தோற்றுவிக்கப் பட்ட மொழியாகும்.. மாதங்களும்,கிரகங்களும் நாட்களும் மனித வாழ்க்கைக்கு தகுந்தாற்போல்.தமிழ் மொழியால் வகுக்கப்பட்டதாகும்.
தமிழ் நாட்டில் இருந்து தைப்பொங்கல் என்பது படைக்கப்பட்டதால் தமிழர்களுக்கு மட்டும் சொந்தம் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம்.தமிழும் தமிழால் வகுக்குப்பட்ட பண்பாடுகளும் உலகில் உள்ள அனைவருக்கும் பொதுவானதாகும்.
அதேபோல் தைப்பொங்கல் எல்லா விவசாயிகளுக்கும் சொந்தமானது.
மனிதனாக பிறந்தவர்கள் மனிதனாக வாழ்ந்து மற்றவர்களையும் மகிழ்ச்சியுடன் வாழ வைக்க வேண்டும் என்பதை வகுத்து தந்த மொழி தமிழ் மொழியாகும்.
எல்லா உயிர்களுக்கும் உணவு மிகவும் முக்கியமானதாகும்.அதனால்தான் ''உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் ,மற்று எல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர்'' .என்பது சான்றோர்களின் வாக்கு .
உழவுத்தொழில் இல்லை என்றால் மனித உயிர்கள் வாழ்வதற்கு வழியே இல்லை .ஆதலால் நாம் வணங்குவதும் வாழ்த்துவதும் உழவுத் தொழில் செய்யும் மனிதர்களையே யாகும்.
உலகில் ஊழல் இல்லாத ஒரே தொழில் விவசாயம் மட்டுமே !
உணவு கொடுப்பவர்களே கடவுளாகும் ...
வருடம் முழுவதும் உழைக்கும் விவசாயிகளுக்கு தைமாதம் என்பது உழவர்களுக்கு ஒய்வு கொடுக்கும் காலமாகும்.ஆதலால் தைமாதத்தில் மக்கள் உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்பதை வெளிப்படுத்த தைப்பொங்கல் வைத்து கொண்டாடப்படுகிறது.
.''தைபிறந்தால் வழிபிறக்கும்'' என்பது... மறுபடியும் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு வழி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் வாழவேண்டும் என்பதாகும்.
வருகின்ற பொங்கல் திரு நாளில் அனைத்து தரப்பு மக்களும் புத்தாடை உடுத்தி,புதிய பானையில் பொங்கல் வைத்து,இன்ப்பான கரும்பை சுவைத்து அனைத்து மக்களுக்கும் கொடுத்து தங்கள் குடும்பமும் உண்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம் .
உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும், விவசாயிகளுக்கும் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இனிமையாக வாழ்வோம் இன்பமுடன் வாழ்வோம் .
ஆன்மநேயன்;--கதிர்வேலு ,ஈரோடு .

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு