சனி, 16 ஜனவரி, 2016

நடிகர் சிவகுமார் !

நடிகர் சிவகுமார் !

சிவகுமார் சிறந்த மனிதர் ,சிறந்த நடிகர், சிறந்த ஞாபக சக்தி உடையவர் ,சிறந்த ஒழுக்கம் உள்ளவர் /சிறந்த சொற்பொழிவு செய்பவர்.சினிமா உலகில் நல்ல பெயர் பெற்றவர் .

அவர்மீது எனக்கு நல்ல மதிப்பும் மரியாதையும் உண்டு அதனால் இதை எழுதுகிறேன்...

இவ்வளவு இருந்தும் கற்பனைக் கதையான ''மகா பாரதத்தில்'' அதிக கவனம் செலுத்தி உள்ளார் வாழ்க்கையில் பெற வேண்டிய முக்கிய ஆற்றலையும் சக்தியும் பெற வாய்ப்பு இருந்தும் பெற முடியாமல் கற்பனைக் கதைகளையே கற்பனைகளாக சொல்லி வருகின்றார் .

கதைகளை சொல்லிய காலத்தை கழித்துக் கொண்டே இருப்பது வாழ்க்கை நெறி அல்ல ,

மகா பாரதக் கதையின் உட்கருத்து என்னவென்றே தெரியாமல் .உண்மையாக நடந்தது போலவே மக்களை குழப்பிக் கொண்டு வருகின்றார்கள் .அவர்மட்டும் அல்ல அனைத்துப் பேச்சாளர்களும் அப்படித்தான் பேசிக் கொண்டு வருகின்றார்கள்.

தமிழ் நாட்டில் தோன்றி உலக உண்மைகளை ஒளிவு மறைவு இல்லாமல் போதித்தவர்..''திருஅருட்பிரகாச வள்ளலார்'' மரணத்தை வென்ற மாபெரும் அருளாளர் .

மனிதன் எப்படி வாழ வேண்டும் என்ற வாழ்க்கை நெறியை போதித்தவர் வள்ளல்பெருமான்.

அவர் போதித்த உண்மை நெறியான சுத்த சன்மார்க்க ஒழுக்க நெறியை .நடிகர் சிவகுமார் கடைபிடிக்க தவறியது ஏன் என்பது எனக்கு புரியவில்லை ..

வள்ளலார் எழுதிய ''திரு அருட்பா''என்ற அருள் நூலை அவர் படிக்கவில்லையா ? அவருக்கு அந்த அருள் நூல் கிடைக்கவில்லையா ?
தயவு செய்து சிவகுமார் அவர்கள் வள்ளலார் எழுதிய அருல்நூலான ''திருஅருட்பா''வை படிக்க வேண்டும் .

அப்படி அவருக்கு வாய்ப்பு கிடைத்து படித்துப் பார்த்தால் மற்ற பொய்யான நூல்களை.தூக்கி எரிந்து விடுவார் .

அப்படி கிடைக்கவில்லை என்றால் அவர் சாதாரணமான மனிதர் என்ற வரிசையில் உள்ளவர் என்பது தெளிவாகும் .

திருஅருட்பா என்ற நூல் கிடைக்கவில்லை என்றால் இந்த பிறவியில் அவருக்கு இறைவன் கருணை இல்லை என்பதை தெரிந்து கொள்ளலாம் .
இறைவன் கருணை உள்ளவர்களுக்கு மட்டுமே திருஅருட்பா என்னும் அருள் நூல் கிடைக்கும் மற்றவர்களுக்கு கிடைக்காது என்பதுதான் உண்மையாகும்.

எங்கே கருணை இயற்கையில் உள்ளன
அங்கே விளங்கிய அருட்பெருஞ்ஜோதி !....வள்ளலார் .

அவருக்கு திருஅருட்பா கிடைக்க வேண்டும்,அவர் அவற்றை முழுமையாக படிக்க வேண்டும்

அவர் இந்த பிறவியில் கிடைக்க வேண்டிய அருளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896,

3 கருத்துகள்:

19 ஜனவரி, 2016 அன்று PM 7:08 க்கு, Blogger திருமந்திரம் உபதேசம் விளக்கம் கூறியது…

வணக்கம, மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்

 
28 ஜூலை, 2020 அன்று AM 3:20 க்கு, Blogger கணேசன் இளங்கோவன் கூறியது…

உண்மைதான் ஐயா. கற்பனைக் கதையானபோதும் தர்மத்தை அதர்மத்தின் மூலம் நிலைநிருத்திய கொள்கை சற்றும் பொருந்தாத நெறி. தமிழர்களுக்கு என்றுமே ஏற்றுக்கொள்ள முடியாத விழுமியங்கள்.

 
10 மே, 2021 அன்று AM 10:44 க்கு, Blogger Unknown கூறியது…

எங்கே கருணை இயற்கையில் உள்ளன
அங்கே விளங்கிய அருட்பெரும் சிவமே .

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு