வெள்ளி, 8 ஜனவரி, 2016

ஜல்லிக் கட்டு விளையாட்டு !

ஜல்லிக் கட்டு விளையாட்டு !


வாய் உள்ள ஜீவர்களை அடக்கத் தெரியாமல்

வாயில்லாத ஜீவனை அடக்குவதில் என்ன லாபம்.

தமிழர்களின் வீர விளையாட்டுகள் என்று காளை மாட்டை அடக்குவதும் ,அதை துன்புறுத்துவதும் பாவத்தின் சம்பளமாகும்.

அதனால் பல உயிர்கள் துன்ப்படுகின்றது ,உயிர்களை துன்பப் படுத்துவது வீர விளையாட்டா ? சிந்தித்துப் பாருங்கள் .

ஜல்லிக் கட்டை வைத்து அரசியல்வாதிகள் அரசியல் நாடகம் நடத்துகின்றார்கள் .

ஒரு காலத்தில் மனிதனுக்கு அறிவு விளக்கம் இல்லாத போது,வீர விளையாட்டுகள் என்று உயிர்களை வதைப்பது பாவம் என்று தெரியாமல் செயல்பட்டதாகும்.

இப்போது மனிதனின் அறிவு அண்டங்கள் அண்டங்களை கடந்தும் செல்கின்றது .இக்காலக் கட்டத்தில் மனிதன் அறிவுக்கு சம்பந்தம் இல்லாமல் ஆட்டையும் மாட்டையும் அடக்குவதனால் எந்த பயனும் இல்லை.

மனதை அடக்கத் தெரியாதவன் மாட்டை அடக்கி என்ன பயன் ?

பாவச்செயலை செய்யாதீர்கள் ...

காட்டிலே வாழும் சிங்கத்தை கொண்டு வந்து ஓட விட்டு அடக்குங்கள் பார்க்கலாம் /...சிங்கத்திடம் உங்களின் வீர தீர விளையாட்டுகளை காட்டுங்கள் அதுதான் வீர தீர விளையாட்டுகள் .

மனிதனை மனிதன் அடக்குங்கள் அதில் உங்கள் வீர தீர விளையாட்டுகளைக் காட்டுங்கள்.

வாய் இல்லாத அப்பாவி உயிர்களைத் துன்புறுத்துவதும் துன்பப்டுத்துவதும் .அவற்றைக் கொன்று அதன் புலால் உண்பதும் .பாவங்களிலே கொடிய பாவங்களாகும்.

அந்தப் பாவங்களை எத்தனைப் பிறவிகள் எடுத்தாலும் உங்கள் ஆன்மாவில் இருந்து நீக்க முடியாது.துன்பங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும் ..

வாடிய பயிரைக் கண்டபோது எல்லாம் வாடினேன் என்கின்றார் வள்ளல்பெருமான் .ஓர் அறிவு உள்ள பயிரைக் கண்டு வாடியவர் ,ஐந்து அறிவு உள்ள மிருகங்களை வதைப்பதால் எப்படி வாடுவார்,வருத்தப் பட்டு இருப்பார் என்பதை சிந்திக்க வேண்டும்.

மாபெரும் அருளாளர் பிறந்து வாழ்ந்து மரணத்தை வென்ற வள்ளலார் வாழ்ந்த இந்த தமிழ் நாட்டில் .மிருகங்களை துன்புறுத்துவது மன்னிக்க முடியாத குற்றங்களாகும்.

படித்தவர்கள் படிக்காதவர்கள் அனைவரும் இந்த வீர விளையாட்டுகளை விரும்புகிறார்கள் .அதுதான் என்னவென்றே தெரியவில்லை ..உயிர்களை துன்புறுத்துவது வீர விளையாட்டா ? நல்லதை சிந்தியுங்கள் நல்லதை நினைத்து செயல்படுங்கள் ...

மண்ணு உலகத்திலே உயிர்கள் தாம் வருந்தும்
வருத்தத்தை ஒரு சிறிது எனினும்
கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும்
கணமும் நான் சகித்திட மாட்டேன்
எண்ணுறும் எனக்கே நின் அருள் வல்த்தால்
இசைத்த போது இசைத்த போது எல்லாம்
நண்ணும் அவ் வருத்தம் தவிர்க்கும் நல் வரந்தான்
நல்குதல் எனக்கு இச்சை காண் எந்தாய் ...''திருஅருட்பா ''

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

உங்கள் வாழ்க்கை வளம் பெருகும் ...

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் ..

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு