செவ்வாய், 12 ஜனவரி, 2016

உலகம் எங்கும் ஒளி வழிபாடுதான் !

உலகம் எங்கும் ஒளி வழிபாடுதான் !


உலகம் எங்கும் ,வள்ளல்பெருமான் சொல்லிய, காட்டிய ஒளி வழிபாடுதான் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும்.

இது அருட்பெருஞ்ஜோதி வள்ளல்பெருமானின் வாக்கு ...

உலகம் எலாம் போற்ற ஒளி வடிவனாகி
இலக அருள் செய்தான் இசைந்து ---திலகன் என
நானே சன்மார்க்கம் நடத்துகின்றேன் நம் பெருமான்
தானே எனக்குத் தனித்து .....

உண்மையான ஒளி !

எல்லா மதங்களும் சமயங்களும் ஒளி வழிப்பாட்டை ஏற்றுக் கொள்கின்றார்கள் .ஆனால் அவர்கள் காட்டிய ஒளி வேறு ,வள்ளல்பெருமான் காட்டிய ஒளி வேறு ,என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளல்பெருமான் காட்டிய ஒளி ....சமயங்கள், மதங்கள், காட்டிய அக்கினி,சூரியன்,சந்திரன் ,நட்சத்திரங்கள் போன்ற ஒளிகள் அல்ல ..இவைகள் யாவும் ''இயற்கை உண்மை என்னும் அருட்பெருஞ்ஜோதி ஒளியால்'' படைக்கப்பட்ட ஒளிகள்.

வள்ளல்பெருமான் காட்டிய ஒளி ''அருட்பெருஞ்ஜோதி என்னும்'' ஒளியாகும்.இவைதான் அனைத்தையும் படைக்கும் ஒளியாகும்.

பலகோடி அண்டங்களையும் ,அதில் உள்ள பொருள்கள் அனைத்தையும் படைத்தல்,,காத்தல்,;;குற்றம் நீக்குவித்தல், ,பக்குவம்வருவித்தல்,;;விளக்கஞ் செய்வித்தல் ;;;போன்ற ஐந் தொழில் முதலிய பெருங் கருணைப் பெரும் தொழில்களை ..

இயக்கு விக்கின்றவர் என்றும் ,,.எல்லாம் ஆனவர் என்றும்,,,ஒன்றும் அல்லாதவர் என்றும், சர்வ காருண்யர் என்றும்,....சர்வ வல்லபர் என்றும் ..எல்லாம் உடையராய் ..தமக்கு ஒரு வாற்றானும் ஒப்பு உயர்வு இல்லாத தனிப்பெரும் தலைமை...

''அருட்பெருஞ்ஜோதியர்'' என்பதை ,சத்திய அறிவால் (உண்மை அறிவு ) அறியப்படுகின்ற ''உண்மைக் கடவுள் ஒருவரே''என்பதை வள்ளல்பெருமான் உலக மக்களுக்கு காட்டி உள்ளார்

அவர் அகம் புறம் முதலிய எவ்விடத்தும் நீக்கம் இன்றி நிறைந்த ''சுத்த மெய்யறிவு என்னும் பூரணப் பொது வெளியில்( அருள்வெளியில் ) அறிவார் அறியும் வண்ணங்கள் எல்லாமாகி விளங்குகின்றார் என்பதை அனைத்து மக்களும் தெரிந்து கொள்ளும் பொருட்டு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார் .

அந்த ஒளியின் ஏகதேசம் தான்.. ஆன்மா என்பதாகும் .அதுதான் உள் ஒளி என்பதாகும்...எல்லா உயிர்களின் இயக்கத்திற்கும் அதுவே காரண காரியமாய் உள்ளதாகும்.

எனவே மக்கள் தத்துவ ஒளிகளை,உருவங்களை  வழிபாடு செய்யாமல் உண்மையான அருட்பெருஞ்ஜோதி ஒளியை வழிபாடு செய்யுங்கள் என்பதின் அடையாளமாக ..வடலூர் பெருவெளியில் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையை அமைத்து ஒளி வழிப்பாட்டை ,உலக மக்களுக்கு அறிமுகப் படுத்தி உள்ளார் ....

இவை உலகம் முழுவதும் மக்கள் பின்பற்ற வேண்டும் என்பது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் ஆணை கட்டளை என்பதை வள்ளலார் விளக்கி உள்ளார் ..

ஆண்டவர் கட்டளை என்பதால் மக்கள் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் இனி கொஞ்சம் காலத்தில் உலகம் முழுவதும் தடையற்ற உண்மையான ஒளி வழிபாடு தழைத்து ஓங்கும்...

முன்னுள்ள மார்க்கங்கள் நிலை ;--

முன்னுள மார்க்கங்கள் யாவும் முடிந்தன
மன்னுள சுத்த சன்மார்க்கம் சிறந்தது
பன்னுளம் தெளிந்தன பதிநடம் ஓங்கின
என்னுளத்து அருட்பெருஞ்ஜோதியார் எய்தவே ...

பன்மார்க்கம் எல்லாம் பசை அற்று ஒழிந்தனவே
சன்மார்க்கம் ஒன்றே தழைத்ததுவே --சொன்மார்க்கத்
எல்லா உலகும் இசைந்தனவே எம்பெருமான்
கொல்லா நெறி அருளைக் கொண்டு....

கண் கொண்ட பூதலம் எல்லாம் சன்மார்க்கம் கலந்து கொண்டே
பண்கொண்ட பாடலில் பாடிப்பாடி படித்துப் பரவுகின்றார்
விண்கொண்ட சிற்சபை ஒன்றே நிறைந்து விளங்குகின்ற
தென்கொண்ட மற்றை மார்க்கங்கள் யாவும் இறந்தனவே !

உலகில் உள்ள,பொய்யான  அனைத்து மார்க்கங்களும் இருக்கும் இடம் தெரியாமல் இறந்து ,அழிந்து ,மறைந்து போய்விடும்.

அருட்பெருஞ்ஜோதியால தோற்றுவிக்கப்பட்ட ,''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்''என்ற மார்க்கம் உலகம் முழுவதும் நிறைந்து விளங்கும்..ஒளிவழிபாடு   ஒன்றே உலகம் எல்லாம் ஒளி வீசும் ....

அனைத்து இல்லங்களிலும் ஒளிவழி பாடு நிலைத்து நிற்க வேண்டும்.எல்லா மக்களும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்.இதுவே இறைவன் பெருங் கருணையாகும் .

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .
9865939896 ...

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு