சனி, 9 ஜனவரி, 2016

உண்மையான ஆன்மீகம் அறிந்து கொள்ள வாருங்கள் !உண்மையான ஆன்மீகம் அறிந்து கொள்ள வாருங்கள் !


ஆன்மீகம் வெகு தொலைவில் உள்ளது ..


மக்கள் பக்தி தியானம் யோகம் தவம் செய்து கொண்டு உள்ளார்கள்

இவற்றிற்க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்ற வரையில் ஆன்மீக வாழ்க்கையில் வெகு தொலைவில் பின் தங்கி இருக்கின்றார்கள் என்பது தெளிவாகின்றது .

சாதாரண உலக விஷயங்களில் ஈடுபட்டு தங்களுடைய வாழ்க்கையை அழித்துக் கொண்டு உள்ளார்கள் .

ஆன்மீகம் என்ற பெயரில் எழுதியவர்கள் படித்தவர்கள் நகைச்சுவை ததும்ப பேசி பொன்னான நேரத்தை வீண் அடித்துக் கொண்டு உள்ளார்கள் .மக்களை முட்டாள்களாக மாற்றிக் கொண்டு வருகின்றார்கள்.

வாய் கிழிக்க தத்துவங்களைப் பற்றி பேசி பேசி அனைவரும் காலத்தை வீணாக்கிக் கொண்டு உள்ளார்கள் .

மனதை நேரடியாக இறைவனிடம் செலுத்த வழி தெரியாமல் கோமாளிகளின் கூத்தை பார்த்தும்,கேட்டும், ஆடிக் கொண்டும் உள்ளார்கள் .

மனத்தைக் கொண்டு போய் ஆன்மாவிடம் செலுத்த வழி தெரியாமல் புரத்திலே குரங்கு போல் அலைய விட்டுக் கொண்டு உள்ளார்கள்.

இவர்களால் ஆன்மீகத்தின் அருகில் செல்லக் கூட முடியாது.இவர்கள் பல கோடி  பிறவிகள் எடுத்தாலும் ஆன்மீகத்தின் ஆழத்தையும் உண்மையையும் அறிந்து கொள்ளவே  முடியாது.

ஆன்மீகத்தின் உண்மையான வழியைத் தெரிந்து கொள்ள, வள்ளல்பெருமான் சொல்லிய ''சுத்த சன்மார்க்க கொளகைகளை'' தெரிந்து ,அவற்றை வாழ்க்கையில் பின்பற்றி வாழ்ந்தால் மட்டுமே கடைத்தேற முடியும்.

வள்ளல்பெருமான் வகுத்து தந்த ''சுத்த மார்க்கம்,ஞான மார்க்கமாகும்'' அறிவு சார்ந்த மார்க்கமாகும்.அருளைத் தரும் மார்க்கமாகும் . இறைவனை நேரடியாக தொடர்பு கொள்ளும் மார்க்கமாகும்.

நீங்கள் கடைத்தேற வேண்டுமானால் இங்கே வாருங்கள் என்று வள்ளல்பெருமான அழைக்கின்றார்..

ஞான சரியை பாடல் ...5,

இன்புறலாம் எவ்வுலகும் ஏத்திட வாழ்ந்திடலாம்

எல்லாஞ் செய்ய வல்ல சித்தி இறைமையும் பெற்றிடலாம்

அன்புடையீர் வம்மின் இங்கே சமரச சன்மார்க்கம்

அடைந்திடுமின் அக வடிவு அனக வடிவாகிப்

பொன்புடை நன்கு ஒளிர் ஒளியே புத்தமுதே ஞான

பூரணமே ஆரணத்தின் பொருண் முடிமேல்  பொருளே

வன்பு உடையார் பெறற் கரிதாம் மணியே சிற்சபையின்

மாமருந்தே என்று உரைமின் தீமை எலாம் தவிர்ந்தே

என்று அன்பு கூர்ந்து அழைக்கின்றார் .துன்பத்தை தொலைத்து,இன்பத்தைப் பெற்று புண்ணியத்தை பெற வேண்டுமானால் வாருங்கள் .

ஆன்மீகம் என்பது அருளைப் பெரும் மார்க்கம். .

அருளைப் பெறுவதற்கும் ,அருளைக் கொடுப்பதற்கும் ஒரே இடம் வள்ளலார் வகுத்து தந்த ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்'' என்னும் புதிய புனித மார்க்கமாகும் .ஆசை உண்டேல் வாருங்கள் ...

ஞான சரியை பாடல் ...10

ஆசை உண்டேல் வம்மின் இங்கே அருட்ஜோதிப் பெருமான்

அம்மையுமாய் அப்பனுமாய் அருளும் அருளாளன்

எசற நீத்து எனை ஆட்கொண்டு எண்ணியவாறு அளித்தான்

எல்லாஞ் செய் வல்ல சித்தன் என்னுயிரில் கலந்தான்

தேசுடைய பொதுவில் அருட் திரு நடனம் புரியத்

திருவுளங் கொண்டு எழுந்து அருளும் திருநாள் இங்கு இதுவே

மோச உரை என நினைத்து மயங்காதீர் உலகீர்

முக்கலத்தினும் அழியா மூர்த்தம் அடைந்திடவே !.....

எக்காலத்தினும் அழியாமல் வாழும் வழியைக் கட்டுகிறேன் வாருங்கள் வாருங்கள் என அழைக்கின்றார்

ஆன்ம லாபம் அடைய விருப்பம் உள்ளவர்கள்,ஆன்ம இன்பத்தை அடைய விருப்பம் உள்ளவர்கள்  வாருங்கள்......

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.... 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு