வியாழன், 14 ஜனவரி, 2016

உயிர்களை துன்புறுத்துவது இயற்கைக்கு விரோதமானது !

உயிர்களை துன்புறுத்துவது இயற்கைக்கு விரோதமானது !


ஒரு வாரத்திற்கு முன்பே நண்பர்களுக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தேன்.

ஜல்லிக் கட்டு விளையாட்டுகள் வேண்டாம் என்று...மக்கள் கேட்கவில்லை,அரசியல் வாதிகளும் கேட்கவில்லை  உச்ச நீதி மன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து உள்ளது மிகவும் பாராட்டுக்கு உரியது.

குழந்தைகள் போல் அன்புடன் ஆதரவு காட்டி வளர்த்த ஆடுமாடுகளை ,கொலை செய்வதும் ,அதன் புலாலை உண்பதும் .துன்புறுத்துவதும் இயற்கைக்கு விரோதமான செயலாகும்.

ஜல்லிக் கட்டுக்காக வளர்த்த காளைகளை ஜல்லிக் கட்டு நடைபெற வில்லை என்றால் அடிமாட்டுக்கு விற்கப்படும் என்று அதன் உரிமையாளர்கள் சொல்லுகிறார்கள் ..இது எவ்வளவு பாவச்செயலாகும்..

காலை மாடுகளை வளர்த்தால் அதை துன்புறுத்த வேண்டுமா ? அடிமாட்டுக்கு விற்கப்பட வேண்டுமா என்று சுப்ரீம் கோர்ட் கேட்டு உள்ளது .

தமிழ் நாட்டில் பொங்கல் விளையாட்டுகள் நிறைய  இருக்கின்றது அவற்றை மக்கள் விளையாடி மகிழ்ச்சியுடன் கொண்டாடலாமே .

பாரம்பரிய விளையாட்டு என்று ஜல்லிக் கட்டு விளையாட்டை  மட்டும் பேசிக் கொண்டு இருக்கும் அரசியல்வாதிகள்,மற்றும் பொதுமக்கள் மற்ற விளையாட்டுகளை பற்றி பேசாமல் இருப்பது ஏன்? என்ற கேள்வி ஜீவ காருண்யம் உள்ள,,, உயிர் இறக்கம் உள்ள,,  அறிவாளிகள் மத்தியில் எழுந்துள்ளது.

மக்களே சிந்தியுங்கள் உயிர்களை துன்புறுத்தாமல் நல்ல விளையாட்டுகள் நிறைய உள்ளது .அதில் கவனம் செலுத்துங்கள்..

பாரம்பரியம் என்ற பெயரில் உயிர்களை வதைப்பது ..கடவுளின் முன் நிறுத்தி தண்டனைக் கொடுக்கும் குற்றமாகும்....

மேலும் உயிர்களைக் கொள்வது,அதன் புலாலை உண்பது,உயிர்களை துன்புறுத்துவது பெரிய பாவச்செயலாகும் ....இந்த தவறுக்கு மனிதன் தண்டனை கொடுக்க முடியாது.இறைவன்தான் தண்டனைக் கொடுப்பார் .

இயற்கைக்கும் இறைவனுக்கும் பயந்து கட்டுப்பட்டு வாழ்வதே சிறந்த வாழ்க்கையாகும் ,இந்த பொங்கல் நாளின் சிறந்த மகிழ்ச்சி பொங்கும் நாளாகும்...

சிந்திப்பீர் செயல்படுவீர்கள் ..

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு