சனி, 2 ஜனவரி, 2016

கடந்த ஆண்டு கனவாக போகட்டும் .இந்த ஆண்டு நினைவாக இருக்க வேண்டும் !.

கடந்த ஆண்டு கனவாக போகட்டும் .இந்த ஆண்டு நினைவாக இருக்க வேண்டும் !.

மனிதன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் மரணத்தை நெருங்கிக் கொண்டே இருக்கின்றான் .

காரணம் ;--சாதி ,சமயம்,மதம் போன்ற கற்பனைக் கதைகளின் கொள்கைகளை கடைபிடித்து வாழ்ந்து கொண்டு வருவதால் மனிதன்  மரணத்தை நோக்கி சென்று கொண்டே உள்ளான் .

உண்மையான சுத்த சன்மார்க்க பொது நெறியை தெரிந்து கொள்ளவும்,அந் நெறியைப் பின்பற்றி வாழ்ந்து  மரணத்தை வெல்லவும் வள்ளல்பெருமான் மனிதர்களை அன்புடன் அழைக்கின்றார்.....

குறித்து உரைக்கின்றேன் இதனைக் கேண்மின் இங்கே வம்மின்,

கோணும் மனக் குரங்க்காலே நாணுகின்ற உலகீர்

வெறித்த உம்மால் ஒரு பயனும் வேண்டுகிலேன் ,

எனது மெய் உரையைப் பொய்யுரையாய் வேறு நினையாதீர்

பொறித்த மதம் சமயம் எல்லாம் பொய் பொய்யே

அவற்றில் புகுதாதீர் சிவம் ஒன்றே பொருள் எனக் கண்டு அறிமின்

செறித்திடு சிற்சபை நடத்தைத் தெரிந்து துதித்திடுமின்

சித்தி எல்லாம் இத்தினமே சத்தியம் சேர்ந்திடுமே ....

ஞான சரியை பாடல்.

பொய்யான சமயம்,மதம் போன்ற கற்பனை கதைகளில் உருவாக்கப் பட்ட, கற்பனைக் கதாநாயக கதாநாயகி கடவுள்களின் வழிப்பாட்டு முறைகளை ஒழித்துவிட்டு வாருங்கள் என அழைக்கின்றார் வள்ளலார் .

உங்கள் மனம் பேய் பிடித்த குரங்குபோல் தாவி தாவி அலைந்து அலைந்து ,இறுதியில் ஒன்றும் புரியாமல் குருடன் போல் நாணி அழிந்து கொண்டு உள்ளீர்கள்.

மனித குலம் அருள் என்னும் சித்தியைப் பெற்று மரண பயம் இல்லாமல் வாழ்ந்து ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய பேரின்ப லாபமும் பெற்று, பேரின்ப வாழ்க்கையும் பெற்று  வாழலாம் வாருங்கள் என அழைக்கின்றார் .

''கடவுள் ஒருவரே !அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்'' என்ற உண்மையை அறிந்து கொண்டு,அவற்றை பின் பற்றி வாழ்வதற்கு,

உலகப் பொது நெறியாகிய, சாதி,சமயம்,மதம் அற்ற  ''சுத்த சன்மார்க்க பொது நெறியையும் அதன் கொள்கைகளும் வாழ்க்கை முறைகளையும் தெளிவாக படைத்துள்ளேன் வாருங்கள் என அன்புடன் அழைக்கின்றார் வள்ளலார்.

கடவுளை வெளியில் தேட வேண்டாம் அவர் கிடைக்க மாட்டார்

மனித தேகத்தில் புருவ மத்தியில் உள் ஒளியாக இருந்து இயங்கிக் கொண்டுள்ள ஆன்மாதான் கடவுளின் ஏகதேசம் என்பதை அறிந்து அதனுடன் தொடர்பு கொள்ளுங்கள் அதுதான் உண்மையான கடவுளாகும். அங்குதான் கடவுளின் அருள் இருக்கின்றது

தன்னிடம் உள்ள அருளைப் பெற்று மரணத்தை வெல்லத் தெரியாமல்  உண்மையை அறிந்து வாழத் தெரியாமல், கண்ட கண்ட இடங்களுக்கு சென்று பொய்யான சமய மதக் கற்பனைக் கடவுள்களை வழிபாடு செய்ய வேண்டாம் என்கின்றார் வள்ளலார் .

காலத்தையும் நேரத்தையும் பொருள்களையும் விரையம் செய்யாமல் இன்று இந்த நேரத்தில் இருந்தே முயற்சி செய்யுங்கள் ..இந்த நாளே உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும் .....அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் உங்களுக்கு துணையாக இருந்து நல்ல வழியைக் காட்டுவார் .

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் ..

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு