ஞாயிறு, 17 ஜனவரி, 2016

ஒழுக்கம் ,உணவு ,வழிபாடு முக்கியமானது !

ஒழுக்கம் ,உணவு ,வழிபாடு முக்கியமானது !ஒழுக்கம் ,உணவு,வழிபாடு.... இந்த  மூன்றையும் முறையாக, சரியாக ,தெளிவாக கடைபிடிப்பவர்கள் வாழ்க்கையில் துன்பம் இல்லாமல் இன்பமாக வாழலாம்

ஒழுக்கம் என்பது ;--கடவுள் கொடுத்த இந்திரியங்களான கண் .காது,.மூக்கு,வாய் ,சிறுநீர் குழாய் .மலக்குழாய்.என்னும் ஒன்பது துவாரங்களை சிரமம் இல்லாமல்  பாதுகாப்பதே ஒழுக்கம் என்பதாகும்.

உணவு ;--ஒன்பது துவாரங்களில் வெளியே இருந்து உள்ளே அனுப்பும் துவாரம் வாய்.என்பதாகும் வாயின் வழியாகத்தான் உணவை உள்ளே அனுப்புகின்றோம்.வேறு எந்த வழியாலும் உடம்பிற்கு உணவை அனுப்பமுடியாது என்பது அனைவருக்கும் தெரியும்.

வயது முதிர்வதற்கும்,நோய் வருவதற்கும் மனம் மாற்றம் அடைவதற்கும் துன்பமும் தொல்லைகளும் ,இறுதியில் மரணம் வருவதற்கும் அடிப்படைக் காரணம் நாம் உண்ணும் உணவே காரணமாகும்.

எனவே தான் உணவே மருந்து ,மருந்தே உணவு என்று பெயர் வைத்துள்ளார்கள் .மாமிசம் அல்லாத ,இயற்கையால் கிடைக்கும் தாவர உணவை தினமும் காலை ஒன்பது மணிக்கும்,மாலை மூன்று மணிக்கும் .அரை வயிறு வரை சாப்பிட வேண்டும் .கால் வயிறு தண்ணீர் அருந்த வேண்டும்..இரவு உணவு எடுத்துக் கொள்ளக் கூடாது ..தினமும் இவற்றை கடைபிடிக்க வேண்டும்.

வழிபாடு ;--வழிபாடு என்பது இரண்டு வகையாகும் ஒன்று ஜீவ காருண்யம்,ஒன்று சத்விசாரம்,என்பதாகும்.

ஜீவ காருண்யம் என்பது;-- .நம்மால் முடிந்த அளவிற்கு பிற உயிர்களின் பசியைப் போக்க வேண்டும்.மேலும் துன்பப்படும் உயிர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும்.தயவும் கருணையும் உள்ளவர்களாக வாழ வேண்டும்.

சத்விசாரம் என்பது ;--நாம் யார் ? நமக்கும் நம்மைப் படைத்த இறைவனுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை விசாரிக்க வேண்டும்...அந்த விசாரிப்பு நம்முடைய ஆன்மாவை தொடர்பு கொண்டு விசாரிக்க வேண்டும்.,

புற உருவ வழிபாடுகள் செய்யக் கூடாது,வணங்கக் கூடாது . .கடவுள் ஆன்ம ஒளியாக இருந்து நம்மை இயக்கிக் கொண்டு உள்ளார் என்பதை நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து ,அவற்றின் மேல் இடைவிடாது அன்பு செலுத்த வேண்டும்.

கடவுளும் ஒளியாக உள்ளார் .ஆன்மாவும் ஒளியாக உள்ளது ,உயிரும் ஒளியாக உள்ளது,மனமும் ஒளியாக உள்ளது ,கண்களும் ஒளியாக உள்ளது ..ஆதலால் புறத்திலே கண்ணாடிக் கூண்டில்அகல் விளக்கு ஜோதியை ஏற்றிவைத்து ஒளி வழிபாடு செய்ய வேண்டும்.

அதன் முன்னாடி அமர்ந்து சிறுது நேரம் மெல்லென அருட்பா பாடல்களில் உள்ள ,வேண்டுதல்,விண்ணப்பம் முறையீடு போன்ற பாடல்களை படிக்க வேண்டும்,

அடுத்து இடைவிடாது கண்களைத் திறந்து ஒளியை நோக்கி பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும்.அப்படி செய்து கொண்டே இருந்தால்,புறத்தில் உள்ள ஒளி மறைந்து அகத்தில் உள்ள ஆன்மாவிற்கு கண்கள் சென்று விடும்.

ஒழுக்கம் உணவு வழிபாடு என்ற மூன்றையும் முறையாக சரியாக கடைபிடித்துக் கொண்டு வந்தால், துன்பம் இல்லாமல் இன்பமுடன் வாழலாம் .மேலும் முழுமையாக  தெரிந்து கொள்ள வள்ளல்பெருமான் எழுதிய திருஅருட்பா என்ற அருள் நூலில் தெளிவாக உள்ளது படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் விரிவான சந்தேகங்களைத் தெரிந்து கொள்ள தொடர்பு கொள்ளுங்கள் ..இலவசமாக வழங்கப்படும்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு