புதன், 31 ஆகஸ்ட், 2016


சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை !

மலேசியாவில் உள்ள சன்மார்க்க அன்பர் செல்வம் அய்யா அவர்கள் கேட்டு உள்ள கேள்வி ?

 வடலூரில் வள்ளலார் தோற்று வித்த சபைக்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை என்று பெயர் வைத்து உள்ளார் .
ஒவ்வொரு ஊரிலும் மாநிலங்களிலும் வெளி நாடுகளிலிலும் சன்மார்க்க அன்பர்கள் கட்டிடங்கள் கட்டி அதற்கு ஞான சபை என்று பெயர் வைத்து உள்ளார்கள் அது சரியா ? தவறா ? என்று புரியவில்லை விளக்கம் கொடுங்கள் என்று கேட்டு இருந்தார் .

பதில்

 உலகத்திற்கே ஒரே "சத்திய ஞான சபை " வடலூர் மட்டுமே என்பதை அனைத்து சன்மார்க்க சங்கம் சார்ந்த அன்பர்கள் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும் .

வடலூரில் வள்ளலார் தோற்று வித்துள்ள சத்திய ஞான சபை யானது  ,அருட்பெரும்ஜோதி ஆண்டவர் அறிவித்த வண்ணம்  எழுப்பபட்டதாகும் .அதற்கு வரை படமே ஆண்டவர் தான் வரைந்து கொடுத்து உள்ளதாகும .

மேலும் உண்மைக் கடவுளான  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ,இந்த உலகத்திற்கு வந்த ஒரே இடம் வடலூர் .

 வள்ளலாரை ஆண்டவர் ஆட்கொண்ட இடம் மேட்டுக்குப்பம் சித்தி வளாகம் .

 ஆண்டவர் ஆட்சி செய்யும் இடம் வடலூரில் உள்ள "சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை யாகும்"

வள்ளலார் எல்லா இடங்களிலும் "சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் "என்று தான் பெயர் வைத்து சன்மார்க்க கொள்கையை மக்களுக்கு போதிக்கச் சொல்லி உள்ளார் .

இறைவன் இருக்கும் இடத்திற்கு மட்டுமே ஞான சபை என்று பெயர் வழங்குதல் வேண்டும் .

மேலும் எல்லா உலகத்தில் உள்ளவர்களையும் வடலூருக்கு அழைத்து  வாருங்கள் என்றும், வந்தால் பெறலாம் நல்ல வரமே ! என்றும் தெளிவாக பதிவு செய்து உள்ளார் .  

மேலும் வடலூர் சத்திய ஞான சபைக்கும் ,மேட்டுக்குகுப்பம்  .சித்தி வளாகத்திற்கும் வந்து வந்து தரிசிக்க வேண்டும் என்கிறார் .

எல்லோருக்கும் தாய் ,தந்தை ,அண்ணன் ,தம்பி முதலான ஆப்தர்கள் செய்யப்பட்ட உதவி எவ்வளவோ ,அதற்குக் கோடி கோடிப்பங்கு அதிகமாக உதவி கொடுக்கும் படியான இடம் ,இரண்டு .அதுதான் வடலூர் ஞான சபை. மேட்டுக்குப்பம் சித்தி வளாகம் என்னும் இடங்களாகும் .

எனவே சன்மார்க்க அன்பர்கள் கட்டிடங்கள் கட்டி ஜீவ காருண்ய பணி செய்யவும் .விளக்கு வைத்து அருட்பாக்களை மெல்லென வாசித்து தோத்திரம் செய்யவும் . தெய்வத்தை இடைவிடாமல் நினைக்கவும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் .

சன்மார்க்க சங்கத்தின் சார்பில் சன்மார்க்க கொள்கைகளை வள்ளலார் சொல்லிய வண்ணம் ,போதித்து நம்மவர்களாக மாற்ற வேண்டும் .அவைகள் தான் சன்மார்க்க பணியாகும் .

உத்தர ஞான சிதம்பர மான்மியம் ! பாடல் !

உலகம் எலாம் தொழ உற்றது எனக்கு உண்மை யொண்மை தந்தே

இலக எல்லாம் படைத்து ஆருயிர் காத்து அருள் என்றது என்றும்

கலகம் இலாச் சுத்த சன்மார்க்க சங்கம் கலந்தது பார்த்

திலகம் எனா நின்றது உத்தர ஞான சிதம்பரமேே !

என்று 11, பாடல்களிலே விரிவான விளக்கம் தந்து உள்ளார் .

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் பற்றிய பாடல் !

மார்க்கம் எல்லாம் ஒன்றே ஆகும் மாநிலத்தீர் வாய்மை இது

தூக்கம் எல்லாம் நீக்கித் துணிந்து உளத்தே . . ஏக்கம் விட்டுச்

சன்மார்க்க சங்கத்தைச் சார்நதிடுமின் சத்தியம் நீர்

நன்மார்க்கம் சேர்வீர் இந்நாள் !

என்றும் ,

துன்மார்க்கம் எல்லாம் தொலைத்து விட்டேன் சுத்த சிவ

சன்மார்க்க சங்கம் தலைப் பட்டேன் . . . என்மார்க்கம்

நன் மார்க்கம் என்றே வான் நாட்டார் புகழ் கின்றார்

மன் மார்க்கதாலே மகிழ்ந்து  !

 என்று பல பாடல்களில் சன்மார்க்க அன்பர்களுக்கும் உலகத்தவர்களுக்கும் தெரியப் படுத்தி உள்ளார் .

மேலும் சன்மார்க்க அன்பர்களுக்கு ஒரு கட்டளையிட்டுடு உள்ளார் .

ஆடாதீர் சற்றும்  அசையாதீர் வேறு ஒன்றை

நாடாதீர் பொய் உலகை நம்பாதீர . .  வாடாதீர்

சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர் விரைந்து இனி இங்கு
என்மார்க்கமும் ஒன்றாமே !

 எனவே சன்மார்க்க சங்கம் வைத்து இருப்பவர்கள் ,அவற்றை சார்ந்து இருப்பவர்கள் மிகவும் ஜாக்கிரதையாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் .நமக்கு காலம் இல்லை .

ஜீவ காருண்யமும் ,ஜோதி (ஒளி ) வழிபாடும் மிக மிக முக்கியமானது .

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்றுதான் பெயர் வைக்க வேண்டும் .அதுதான் வள்ளலார் கட்டளை .

வேறு பெயர் எதுவும் வைக்க  வேண்டாம் .அப்படி வைத்தால் வள்ளலார் சொல்லியதை மீறிய செயலாகும் .

ஞான சரியை பாடல் !

 சன்மார்க்கப் பெருங் குணத்தார் தம் பதியை என்னைத்

தாங்குகின்ற பெரும் பதியைத் தனித்த சபாபதியை

நன்மார்க்கம் எனை நடத்திச் சன்மார்க்க சங்கம்

நடு இருக்க அருள் அமுதம் நல்கிய நாயகனைப்

புன் மார்க்கற்கு அறிவு அரிதாம் புண்ணியனை ஞான

பூரண மெய்ப் பொருளாகி பொருந்திய மா மருந்தை

அன் மார்க்கம் தவிர்த்து அருளி அம்பலத்தே நடஞ் செய்

அருட்பெருஞ்ஜோதியை உலகீர் தெருட் கொளச் சார்வீரே !

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல் .0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு