வியாழன், 18 ஆகஸ்ட், 2016

சுத்த சன்மார்க்க சாகாக் கல்வி !

தொடர்ச்சி :--3. ஆம் பாகம்

வள்ளலார் சொல்லிய சுத்த சன்மார்க்க நெறியை கடைபிடிக்க , முக்கியமான படித்தரங்கள்

ஞான சரியை
ஞான கிரியை 
ஞான யோகம் 
ஞானத்தில் ஞானம் 

என்னும் அறிவு சார்ந்த வழிமுறைகளைக் கண்டு கொண்டு அதன் உண்மையான வழியைப் பின்பற்றி வாழ்ந்தால் மட்டுமே இறை அருளைப் பூர்வமாக பெற்று மரணத்தை வெல்ல முடியும் எனபதைத் தெளிவாக விளக்கம் தந்து உள்ளார் வள்ளலார் .

முன்பு ஞான சரியை ,ஞானகிரியை என்றால் என்ன என்பதைப் பார்ததோம் .

இப்போது ஞான  யோகம் எனபதைப் பார்ப்போம் ! 

ஞான யோகம் என்பது ஜீவ ஒழுக்கத்தைக் குறிப்பதாகும் .

ஜீவன் என்றால் உயிர் , உயிர் உடம்பை விட்டு பிரியாமல பாதுகாக்கும் வழியைக் கற்பிக்கம் கல்வி தான் சாகாக்கல்வி என்பதாகும் .

ஞான சரியை என்னும் இந்திரிய ஒழுக்கம் ஜீவ காருண்யம் என்னும் பரோப காரத்தால் மட்டுமே அன்பும் அறிவும் வெளிப்படும் .

ஞான கிரியை என்னும் கரண ஒழுக்கத்தால் சத்விசாரம் என்றால் என்ன எனபதை அறிந்து ,புருவ மத்தியில் உள்ள ஆன்மா என்னும் உள் ஒளியை இடைவிடாமல் தொடர்பு கொள்வதே சத்விசாரம் எனபதை அறிந்தோம் .

 இப்போது உயிரைப் பாதுகாப்பது எப்படி எனபதைப் பார்ப்போம் .அதற்கு ஜீவ ஒழுக்கம் என்று பெயர் வைத்து உள்ளார் .அவைதான் ஞான யோகம் என்று பெயராகும் 

வள்ளலார் சொல்லும் ஜீவ ஒழுக்கம் ! 

ஆண்மக்கள் பெண்மக்கள் முதலிய யாவர்கள் இடத்திலும் ,சாதி், சமயம் ,ஆச்சிரமம் ,சூத்திரம் ,கோத்திரம் ,குலம் ,சாத்திர சம்பந்தம் ,தேசம் மாரக்கம் , உயர்ந்தோர் .தாழ்ந்தோர் 

என்னும் பேதம் நீங்கி எல்லவரும் தம்மவர்களாய் சமமாக அறிவதே ஜீவ ஒழுக்கம் என்று சொல்லுகின்றார் . 

நாம் இப்போது எந்த ஒழுக்கத்தில் உள்ளோம் எனபதை நம்மை நாமே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் . 

மேலும் வள்ளலார் சொல்லுவது . சாகாக்கல்வி கற்பதற்கு எவை எவை தடையாக இருக்கின்றதோ அவற்றை நீக்க வேண்டும் என்கிறார் .நாம் நீக்கி உள்ளோமா ? என்பதை நமக்கு நாமே சிந்திக்க வேண்டும் .

சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத்  தடையாகிய சமயங்கள் ,மதங்கள் ,மார்க்கங்கள் என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும் ,வருணம் ,ஆசிரமம் முதலிய உலக ஆச்சார சங்கற்ப விகற்பங்களும் எங்கள் மனத்தில் பற்றாத வண்ணம் அருள் செய்தல் வேண்டும் என்கிறார் .

எதில் பற்றாத வண்ணம் என்கிறார் மனதில் பற்றாத வண்ணம் என்கின்றார் ,எனவே மனம் எவ்வளவு வலிமை உள்ளது என்பதை அறிய வேண்டும் .

அதனால் தான் மனதை அலைய விடாமல் சிற்சபையில் தொடர்பு கொள்ள வேண்டும் என்கிறார் .அங்கே தொடர்பு கொண்டால் மட்டுமே மனம் அடங்கும் .சொன்னபடி கேட்கும் .வேறு வழியால் அடக்கவே முடியாது .

ஏன் ?மேலே உள்ளவைகளை பற்றாது இருக்க வேண்டும் என்கிறார் எனபதை நாம் சிந்திக்க வேண்டும் . அதுவும் சாதாரண தடை என்று சொல்ல வில்லை ."முக்கிய தடை " என்கிறார் .அப்படி என்றால் என்ன? 

சமயங்கள் ,மதங்களும் .மற்றைய மார்க்கங்கள எதுவாக இருந்தாலும் அவர்கள் சொல்லி உள்ள .தியானம் ,தவம் ,யோகம் ,மந்திரங்கள் போன்ற எதுவானாலும் உங்கள் உயிரைக் காப்பாற்ற முடியாது எனபதை தெளிவாக ஞான சரியை 28, பாடல்களின் வாயிலாக பதிவு செய்து உள்ளார் .

அதனால் தான் மேட்டுகுப்பம சித்தி வளாகத் திருமாளிகையில் இறுதியாக ,
உள் இருந்த விளக்கைத் திருமாளிகைப் புறத்தில வைத்து "தடைபடாது ஆராதியுங்கள் "என்று சொல்லி விட்டு ,நினைந்து நினைந்து என்னும் தொடக்கம் உடைய பாடல்கள் 28, ல் கண்டு உள்ளபடி தெய்வ பாவனையை இந்தத் தீபத்தில் செய்யுங்கள் .என்கிறார் .

அதன் உண்மை என்ன ? என்று தெரிந்தவர்கள .சமயம் மதங்கள் சொல்லிய தியானம் தவம் யோகம் போன்ற பொய்யான வழிகளில் செல்ல மாட்டார்கள் .

ஏன் அவர்களுக்கு உண்மை விளங்கவில்லை என்றால் ,அன்பு தயவு கருணை இல்லை அதாவது வள்ளலார் சொல்லி உள்ள உண்மையான ஜீவ காருண்யம் இல்லை . உண்மையான சத்விசாரம் இல்லை என்பது தெளிவாகிறது ,

சாகாக்கல்வி என்பது உயிரைக் காப்பாற்றுவது அந்த உயிரைக் காப்பாற்ற அகவலில் வள்ளலார் சொல்லியது 

உயிருள் யாம் எம்முள் உயிர் இவை உணர்ந்தே 
உயிர் நலம் பரவுக என்று உரைத்த மெய்ச்சிவமே !

எங்கே கருணை இயற்கையில் உள்ளன 
அங்கே விளங்கிய அருட்பெருஞ் சிவமே !

யாரே என்னினும் இரங்குகின்றார்க்கு 
சீரே அளிக்கும் சிதம்பர சிவமே !
உயிர் எலாம் பொதுவில் உளம் பட நோக்குக 
செயிரெலாம் விடுக எனச் செப்பிய சிவமே !

என்று சொல்லி விட்டு . . . 
பொய்ந்நெறி அனைத்தினும் புகுதாது எனை அருட் 
செந்நெறி செலுத்திய சிற்சபைச் சிவமே !

எல்லாமே பொய் நெறி என்கிறார் .அதில் என்னை செலுத்தாமல் உண்மை நெறியான சுத்த சன்மார்க்க அருள் நெறியில் செலுத்திய எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே !

அருள் நெறி ஒன்றே தெருள் நெறி மற்று எல்லாம் 
இருள் நெறி என எனக்கு இயம்பிய சிவமே । 

உலகில் உள்ள அத்தனை நெறிகளும் இருள் நெறி என்பதை அறிவால் அறிந்து ,உள்ளத்தால் உணர்ந்தால் மட்டுமே உயிரைக் காப்பாற்ற  முடியும் .

 ஞான சரியை என்னும் இந்திரியங்களும் .ஞான கிரியை என்னும் கரணங்களும் ஞான யோகம் என்னும் உயிரும் இடைவிடாது ,ஆன்மா என்னும் உள் ஒளியை இடைவிடாமல் தொடர்பு கொண்டால் மட்டுமே 

ஆன்மாவை மறைத்துக் கொண்டு உள்ள திரைகள் விளகி அருள் சுரக்கும .அருள் பூரணமாக கிடத்தால் மட்டுமே !உடம்பையும் உயிரையும் ஒளியாக மாற்றி மரணத்தை வெல்ல முடியும்.

மேலும் ஞான யோகம் என்பது ?
ஜீவ காருண்ய ஒழக்கத்தில சொல்லுவார்

ஜீவ காருண்யமே விரதமாக கொண்டு பசித்த  ஏழைகளுக்கு பசியை ஆற்றுவித்தால் .ஜீகாருண்யம் உள்ள  சமுசாரிகளுக்கு எப்படிப்பட்ட ஆபத்துக்களும் .அஜாக்கிறதையாலும் ஊழ்வகையாலும் சத்தியமாக வராது என்று சத்தியம் வைத்து சொல்லுகின்றார் .

அதேபோல்  ஞான யோகம் என்பது இந்திரியங்களையும் கரணங்களையும அடக்கி ஆன்மாவில் தொடர்பு கொள்வதே விரதமாக எடுத்துக் கொள்ள வேண்டும் . அதாவது விடாமுயற்ச்சி என்பதாகும் .

இதுவே ஞான யோகம் என்பதாகும் அதாவது ஆன்மாவிடம் ஒன்றுபடுதல் ,இணைத்தல் தொடர்பு  கொள்ளுதல் என்பதாகும் .

ஒழக்கம் நிறைந்து கருணையே வடிவமாவது ஞான யோகம் என்னும் ஜீவ ஒழுக்கமாகும் .

இன்னும் விரிக்கில் பெறுகும் .

அடுத்து ஞானத்தில் ஞானம் என்ன ? என்பதை பார்ப்போம் .

அன்புடன்  ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல் .0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு