வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

படிக்காதவர்கள் சுத்த சன்மார்க்க கொள்கையை பின் பற்ற முடியுமா ?

படிக்காதவர்கள் சுத்த சன்மார்க்க கொள்கையை பின் பற்ற முடியுமா ?

ஒரு நண்பர் கேட்டு உள்ளார் ;--

படிப்பு அறிவு இல்லாதவர்கள் ,எழுத படிக்க தெரியாதவர்கள்,கை  எழுத்துக் கூட போடத்  தெரியாதவர்கள் ,வள்ளலார் எழுதி வைத்துள்ள அருட்பாவை படித்து தெரிந்து கொள்ளாமல் சன்மார்க்க கொள்கையைப் பின் பற்ற முடியுமா என்று கேட்டு உள்ளார் .

வள்ளலாரே சொல்லுகின்றார் ;--

பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும் படிக்கப்
பக்கம் நின்று கேட்டாலும் பரிந்து உள் உணர்ந்தாலும்
ஈர்த்தாலும் பிடித்தாலும் கட்டி அணைத்தாலும்
இத்தனைக்கும் தித்திக்கும் இனித்த சுவைக் கரும்பே
வேர்த்தாவி மயங்காது கனிந்த நறுங்கனியே
மெய்ம்மை அறிவு ஆனந்தம் விளக்கும் அருள் அமுதே
தீர்த்தா என்று அன்பர் எலாம் தொழப் பொதுவில் நடிக்கும்
தெய்வ நடத்து அரசே என் சிறு மொழி ஏற்று அருளே !

அருளைப் பெறுவதற்கும் திரு அருட்பாவில் உள்ள உண்மைக் கருத்துக்களை தெரிந்து கொள்வதற்கும் ,இறைவன் வேண்டியும் (பார்த்தாலும் ) அறிந்து கொள்ளலாம் ,மனதில் நினைத்தும் அறிந்து கொள்ளலாம்,படித்தும் தெரிந்துக் கொள்ளலாம் ,படிப்பவர்கள் அருகில்(பக்கம் ) இருந்து கேட்டும் தெரிந்து கொள்ளலாம்,, உள்ளத்தின் உள்ளே உணர்ந்தும் தெரிந்து கொள்ளலாம்,இறைவனை இடைவிடாது நினைத்தும் தெரிந்து கொள்ளலாம் .

சுத்த சன்மார்க்கத்தைப் பின் பற்றுவதற்கு படிப்பு அவசியம் என்பது இல்லை,..முக்கியமானது ''ஒழுக்கமும்,விசாரமும் "'இருந்தால் போதும்..அருளைப் பெறுவதற்கு படிப்பு தேவை என்பது  இல்லை.

மேலும் வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் ;---

கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பு அருளும் களிப்பே
காணார்க்கும் கண்டவர்க்கும் கண் அளிக்கும் கண்ணே
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரம் அளிக்கும் வரமே
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதி கொடுக்கும் மதியே
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே
நரர்களுக்கும் சுரர் களுக்கும் நலங் கொடுக்கும் நலமே
எல்லார்க்கும் பொதுவில் நடம் இடுகின்ற சிவமே
என்னரசே யான் புகலும் இசையும் அணிந்து அருளே !

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கு படித்தவர் படிக்காதவர் என்ற வேறுபாடுகள் கிடையாது.கண்டவர் காணாதவர் என்ற வேறுபாடு கிடையாது ,எல்லா ஜீவன்களுக்கும் கண் இருப்பது போல ,கண் ஒளி கொடுப்பது போல ,எல்லார்க்கும் பொதுவாக இருப்பவர்தான் கடவுள்.

ஒழுக்கம் நிறைந்தவர்களுக்கு மட்டுமே இறைவன் அருள் வழங்குவார் அதுதான் உண்மை.

கடவுளை மதித்தாலும்,மதிக்கா விட்டாலும் அறிவு கொடுப்பவர் தான் கடவுள்,நல்லவர்களாக இருந்தாலும்,பொல்லாதவர்களாக இருந்தாலும்,நரகராக இருந்தாலும் தேவர்களாக இருந்தாலும்,நலம் கொடுப்பதுதான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் செயலாகும்,அதனால்தான் அவருக்குத் ''தனிப்பெருங் கருணை உள்ளவர் ''என்று சொல்லப்படுவதாகும்...

வள்ளலார் எந்த பள்ளியிலும் சென்று படிக்க வில்லை ,..ஒழுக்கம் நிறைந்து கருணையே வடிவமானால் கல்வி தானே தானே வரும்,இறைவனே கல்வியைக் கற்றுக் கொடுப்பார் ..நாம் படிப்பது உலகியல் கல்வி .ஒழுக்கம் நிறைந்து கருணையே வடிவமானால் அருள் கல்வி என்னும் சாகாக் கல்வியை இறைவன் சொல்லிக் கொடுப்பார் ..

மேலும் வள்ளலார் சொல்லுவார் ;--

கற்றேன் சிற்றம்பலக் கல்வியைக் கற்று கருணை நெறி
உற்றேன் எக்காலமும் சாகாமல் ஓங்கும் ஒளி வடிவம்
பெற்றேன் உயர் நிலை பெற்றேன் உலகில் பிற நிலையைப்
பற்றேன் சிவானந்தப் பற்றே என் பற்று எனப் பற்றினனே !

படிப்பிற்கும், அறிவுக்கும்,அருளுக்கும்  சம்பந்தம் இல்லை,படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு, பாடம் ,படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு என்பதை  உணர்ந்து கொள்ள வேண்டும்.

எனவே சன்மார்க்கத்தை பின் பற்ற உலகியல் படிப்புத் தேவை இல்லை..என்னுடைய நண்பர்கள் நிறைபேர் படிக்காமலே சன்மார்க்கத்தைப் பின் பற்றி வருகிறார்கள்,என்னுடைய பேச்சைக் கேட்டே சன்மார்க்கத்திற்கு வந்து சாதனைப் படைத்து வருகின்றார்கள் ..

சன்மார்க்கத்திற்கு அடிப்படையானது ,இந்திரிய ஒழுக்கம் ,கரண ஒழுக்கம் .இந்த இரண்டு ஒழுக்கத்தையும் கடைபிடித்தவர்களே சுத்த சன்மார்க்கிகள் .ஒழுக்கம் என்பதுதான் சிறந்த படிப்பு....இன்னும் விரிக்கில் பெருகும்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு