செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

[23/08, 8:48 a.m.] Kathir Velu: காரணம் என்றால் என்ன? காரியம் என்றால் என்ன ?

என்று ஒரு அன்பர் கேட்டு இருந்தார் .

 காரணம் காரியம் காட்டிடு வெளி எனும்
ஆரணச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி !

 என்று அகவலில் வள்ளலார் பதிவு செய்து உள்ளார் .

காரண காரிக் கல்விகள் எல்லாம் கற்பித்து என் உள்ளே கலந்து கொண்டு என்னை

நாரணர் நான்முகர் போற்றி மேல் ஏற்றி நாதாந்த நாட்டுக்கோர் நாயன் ஆக்கி

பூரணமாய் இன்பம் பொங்கித் ததும்பப் புத்தமுதமாம் போனகம் தந்தே

ஆரண வீதியில் ஆடச் செய்தீரே அருட்பெருஞ்ஜோதி என் ஆண்டவரே !

எனறும் சொல்லுகின்றார் .அடுத்து .

 காரண இது காரியம் இது மேற் காரண காரியக் கரு இது பலவாய்

ஆரணம் ஆகமம் இவை விரித்து உரைத்தே அளந்திடு நீ அவை அடைந்திடு என் மகனே

பூரண நிலை அனுபவமும் உறிற் கணமாம் பொழுதினில் அறிதி எப்பொருளின் நிலைகளுமே

தாரணி தனில் என்ற தயவு உடைய அரசே தனி நடராஜ என் சற்குரு மணியே !

என்றும் சொல்லுகின்றார் .

காரணம் என்பது உருவம் இல்லாதது . . .

காரியம் என்பது உருவம் உள்ளது .

காரணம் என்பது நிர்ணயம் செய்வது .

காரியம் எனபது அதை நிறைவேற்றுவது . . . .

மேலும் ,காரணம் ,காரியம் .காரண காரியம் என்று சொல்லுவார் .

அதேபோல் ஏகமாக இறைவன் இருப்பது காரணம் ,அநேக ஆன்மாக்களாய் இருப்பது காரியம் ,

அநேக உயிர் உடம்பாக இருப்பது காரண காரியம் .

மேலும் காரணம் இல்லாமல் காரியம் இல்லை , இதற்காகத்தான் இந்த வேலை செய்கிறேன் என்று சொல்லுகிறோம் .எதற்காக ?  என்று கேட்டால், அப்பா சொன்னார் அதனால்  செய்கிறேன் என்று சொல்லுவார் .

அப்பா என்பது காரணம் .செய்கிறேன் என்பது காரியம் .செய்து முடிப்பது காரண காரியம் என்பதாகும் .

அதேபோல் இறைவன் படைத்தல் காரணம் .காத்தல் காரியம் , பக்குவம் வருவித்தல் காரண காரியம் என்பதாகும் .

 இன்னும் எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் ,   திருமணம் செய்வது காரணம் .கணவன் மனைவி இணைவது காரியம் ,குழந்தை உண்டாவது காரண காரியம் என்பதாகும் .

மேலும் இயற்கை உண்மை என்பது காரணம் .

இயற்கை விளக்கம் என்பது காரியம் .

இயற்கை இன்பம் என்பது காரண காரியம் .

அதேபோல் :-
தன்மை என்பது காரணம் .

முன்னிலை என்பது காரியம் .

படர்க்கை என்பது காரணம் காரியம் .என்றும் சொல்லலாம் .

அதேபோல் கடவுள் காரணம் ,ஆன்மா காரியம் .உயிரும் உடம்பும் காரண காரியம் என்பதாகும் .

எனவேதான் காரணம் இல்லாமல் எந்த காரியமும் நடைபெறாது.

 வள்ளலார் சொல்லுவார்

என்ன காரணத்திற்காக இறைவன்  உலகத்தைப் படைத்தார ,ஆன்மாக்களை அனுப்பினார்,உயிரைக் கொடுத்து உடம்பை கொடுத்து  வாழ்க்கையைக் கொடுத்துள்ளார் என்பதை தெரியாமல் .சமய மதங்கள் சொல்லி உள்ள பொய்யான காரணத்தையும் காரியத்தையும் இறைவன் எனக்கு காட்டி உள்ளார் அதனால் சமய மதங்கள் காட்டிய காரணம், காரியம் எதனிலும் லட்சியம் வைக்க வேண்டாம் என்கிறார் வள்ளலார் .

மேலும் :-எல்லாவற்றுக்கும் காரணம் அருட்பெருஞ்ஜோதி ! அதுதான் சர்வ சாட்சி .ஞான தேகம் .

காரண காரிய ரூபத்தோடு  உள்ளது பிரணவதேகம் ,

காரிய ரூபத்தோடு உள்ளது சுத்த தேகம் .

இன்னும் சொல்ல வேண்டுமானால் .

காரணம் எனபது உண்மை !

 காரியம் என்பது பொய் .

காரண காரியம் என்பது பொய்யும் மெய்யும் கலந்தது .

காரணத்திற்கு உருவம் இல்லை .ஆனால் எல்லாவற்றுக்கும அதுவே காரணமாகவும், காரியமாகவும் .காரண காரியமாகவும் ,உள்ளதாகும்,

் காரணம் என்பது கடவுள், காரியம் என்பது அருள் ் காரணகாரியம் என்பது  இன்பம் .

அவற்றைத்தான் இயற்கை உண்மை ,இயற்கை விளக்கம் ,இயற்கை இன்பம் என்பார்.

 ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல் .

1 கருத்துகள்:

14 டிசம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 3:41 க்கு, Blogger raja ganesh கூறியது…

super

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு