ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

உடல் உறுப்புக்களை தானம் செய்யலாமா ?


உடல் உறுப்புக்கள் தானம் செய்யலாமா ?

உடல் உருப்புக்களை மரணம் அடைந்த பிறகு சன்மார்க்கிகள் தானம் செய்யலாமா என்ற கேள்வி ஒரு  நண்பர் கேட்டு உள்ளார் !

நல்ல கேள்வி

நாம் என்னும் ஆன்மா வாழ்வதற்கு மாயையால் கட்டிக் கொடுக்கப்பட்ட "வாடகை " வீடு தான் உடம்பும் அதில் உள்ள உருப்புக்களும் ஆகும் .

வாடகை வீட்டில் குடி இருக்கும் நாம் .வீட்டில் உள்ள பொருள்களை பிரித்து  மற்றவர்களுக்கு கொடுத்தால் .வீட்டுக்காரன் சும்மா விடுவானா ?

வாடகை வீட்டில் குடி இருக்க வரும் போதே ,வீட்டின் உரிமையாளர் வீட்டில் என்ன என்ன உள்ளது என்பதை பட்டியல் போட்டு தெரிவித்து எழுத்து மூலமாகவும் அல்லது வாய் பேச்சு மூலமாகவும் தெரிவித்து வீட்டை ஒப்படைக்கின்றார .

வீட்டை காலி செய்து வேறு வாடகை வீட்டிற்கோ அல்லது சொந்த வீட்டிற்கோ செல்லும் போது ,

வீட்டின் உரிமையாளர் என்ன செய்வார் .

வாடகை விடும் போது வீட்டில் என்ன என்ன இருந்ததோ அவைகள் அப்படியே இருந்தால் ,ஒன்றும் சொல்ல மாட்டார் .

எதாவது பழுது அடைந்து இருந்தால் அதை சரிசெய்து கொடுத்து விட்டு போங்கள் என்பார் .அல்லது அதற்கு உண்டாகும் செலவுத் தொகையை கொடுத்து விட்டு வீட்டை காலி செய்யுங்கள் என்று சொல்லுவார் .

இதுதான் உலகியலில்  வாடகை வீட்டில் குடி இருக்கும் நடை முறை செயல்களாகும் .

அதேபோல் தான் நாம் உடம்பு என்னும் வாடகை  வீட்டில் குடி இருக்கிறோம் .

வாடகை வீடு என்னும் உடம்பின் உருப்புகளை நாம் தானமாக கொடுக்க நமக்கு உரிமை இல்லை என்பதை சுத்த சன்மார்க்கிள் தெரிந்து கொள்ள வேண்டும் .

நாம் உழைத்து சம்பாதித்த பொருளை தானமாக கொடுக்கலாம் .

அடுத்தவருக்கு உரிமை உள்ள பொருளை எடுத்து தானமாக கொடுப்பது குற்றமாகும் .

 அருட்பெருஞ்ஜோதி ஆண்டவா் ஏற்றுக் கொள்ள மாட்டார் .

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு