செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

ஆன்ம நேய உடன் பிறப்புகளே வந்தனம்

ஆன்ம நேய உடன் பிறப்புகளே வந்தனம்

மேலே ஒரு நண்பர் அனைவரையும் குறை சொல்லி பேசுகிறார் அவரும் நம்முடைய சோதரர் தான்

உலகில் உள்ள ஆன்மீக நூல்களை எல்லாம் படித்து உள்ளீர்களா என்று கேட்கின்றார் .

அவர் படித்து இருந்தால் எது உண்மை எது பொய் என்பது அவருக்கு தெரிந்த இருக்கும் .

அது ஒரு புறம் இருக்கட்டும் .

வள்ளலார் எழுதிய திரு அருட்பாவைப் முழுவதும் படித்தாலே போதும் .எல்லா அருளாளர் எழுதிய உண்மைக்கு புறம்பான கருத்துக்களை எல்லாம் வள்ளலார் சொல்லி விட்டார் .

எல்லா நூல்களில் உள்ள கருத்துக்கள் யாவும் திரு அருட்பாவில் உள்ளது .

திரு அருட்பாவில் உள்ள உண்மை கருத்துக்கள் வேறு நூல்களில் எதிலுமே இல்லை எனபதை ,அன்பர்கள் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும் .

கதிர்வேல் எங்கோ போய் விட்டார் அவரைக் காணோம் என்று சொல்லி உள்ளார் .

நான் எங்கும் போகவில்லை உங்கள் உடன் தான் உள்ளேன் .

யாரையும் குறை சொல்லி பேசுவதை அவ்வளவு நல்லது அல்ல .

எல்லோருக்கும் எல்லாம் தெரிய வேண்டிய அவசியம் இல்லை .

உண்மை ஒழுக்கம் நேர்மை அன்பு தயவு கருணை இருந்தால் போதும் .அதுவே அவர்களை மேலே ஏற்றி விடும் .

அவர்களை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவா் ஏற்றுக் கொள்வார் .

வள்ளலார் நாம் எல்லோருக்கும் பொதுவாக ஒரு பாடலை பதிவு செய்து உள்ளார் அவற்றை ஊன்றி படியுங்கள் . . .

கண்டது எல்லாம் அநித்தியமே கேட்டது எல்லாம் பழுதே

கற்றது எல்லாம் பொய்யே நீர் களித்தது எல்லாம் வீணே

உண்டது எல்லாம் மலமே உட் கொண்டது எல்லாம் குறையே

உலகியலீர் இது வரையும் உண்மை அறிந்திலிரே

 விண்டதினால் என் இனி நீர் சமரச சன்மார்க்க

மெய் நெறியைக் கடைபிடித்து மெய் பொருள் நன்கு உணர்ந்து

எண்டகு சிற்றம்பலத்தே என் தந்தை அருள் அடைமின்

இறவாத வரம் பெறலாம் இன்பம் உறலாமே !

 என்று சொல்லுகின்றார் வள்ளலார் .

எனவே உங்கள் பேச்சை கேட்பதா ? வள்ளலார் சொல்லியதை கேட்பதா ?

நீங்களே பதில் சொல்லுங்கள் .

மேலும் வள்ளலார் சொல்லுகின்றார .

இதுகாறும் தெய்வத்தின் உண்மையைத் தெரிய வொட்டாது , அசுத்த மாயா காரிகளாகிய சித்தர்கள் மறைத்து விட்டார்கள் .

சுத்த மாயா காரியாகிய தெரிந்த பெரியோரும் இல்லை .சன்மார்க்கமும் இல்லை .

சன்மார்க்கம் இருந்து இருந்தால் அனுபவித்து அறியாத அனுபவமும் ,கேட்டு அறியாத கேள்வியும் நாம் கேட்டு இருப்போம் என்கிறார் வள்ளலார் .

மேலும் இறந்தவர்கள் மீளவும் எழுந்து வந்து இருப்பார்கள் .ஆதலால் கேட்டு அறியாத கேள்விகளைக் கேட்கும் படி ஆண்டவா் செய்தது இத்தருணமே !

ஆதலால் இத்தருணம் . . . இக்காலமே சன்மார்க்க காலம் என்று தெளிவாக உலக மக்களுக்கு தெரிவிக்கின்றார .

வள்ளலார் கொள்கையை பின் பற்றுபவர்கள் பழைய குப்பைகளை பின் பற்றிக் கொண்டு சுத்த சன்மார்க்கத்தின் உண்மைகளை தெரிந்து கொள்வது மிகவும் சிரமம் .

 ஆத்திரம் அடையாமல் கோபம் கொள்ளாமல் வள்ளலார் சொல்லி உள்ள கருத்துக்களை நன்கு பின் பற்றுங்கள் ,அதில் உண்மைகள் தானே விளங்கும் .

வள்ளலார் இருதியாக உபதேசித்த பேர்உபதேசம் மிகவும் முக்கிய மானது .அதை பல முறை படியுங்கள் அப்போது தான் அதில் உள்ள உண்மையான விளக்கம் யாவும் தெரிந்து கொள்ளலாம் .

நீங்கள் எப்போதும் என்னை தொடர்பு கொள்ளலாம் .சந்தேகம் தெளிவு பெறலாம் .நேரில் கலந்தும் பேசலாம் .

கருத்து பரிமாற்றம் தானே !

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு